பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரித்தெடுத்தலும் கையாளுதலும்

மருத்துவக் கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் கையாளுதல் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கழிவு மேலாண்மையில் பிரித்தெடுத்தலும் கையாளுதலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.  1998ம் ஆண்டு மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் மேலாண்மை விதிகள் - பட்டியல் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைப்படி கழிவுகள் சுத்திகரிக்கப்படுமுன் பிரித்தெடுக்க சட்டம் அறிவுறுத்துகிறது.  முறையான பிரித்தெடுத்தலால், கழிவுகளை கையாளுதல் மற்றும் அகற்றதலுக்கான செலவு கணிசமாக குறைகிறது.

கழிவுகள் பிரித்தெடுக்கப்படும்போது கவனிக்க வேண்டியவை

கையுறைகளை உருசிதைத்து அகற்றுதல்

இரட்டை குப்பைத் தொட்டியில் கழிவுகளை இடுதல்

பிளாஸ்டிக்கை தனியாக பிரித்தெடுத்தல்

மஞ்சள் குப்பைத் தொட்டியில் தொற்றுநோய்க் கழிவுகளை இடுதல்

குப்பைத் தொட்டியில் முக்கால்பாகம் நிரம்பியவுடன் கழிவுப்பையைக் கட்டுதல்.

நார்த்துணியை மாற்றுதல்

பிரிக்கப்பட்ட கழிவுகள் அவற்றின் பிரிவுகளுக்கு ஏற்றவாறு நிறக்குறியீடப்பட்ட தொட்டிகளில் இடவேண்டும். அவை கீழ்கண்டவாறு:

நிறக்குறியீடு முறை

மருத்துவக் கழிவுகளை அகற்ற பயன்படும் குப்பைத் தொட்டிகளுக்கு உகந்த நிறக்குறியீடு மற்றும் குப்பைதொட்டி வகைள் கீழ்க்கண்டவாறு.

கழிவுகள் கையாளப்படும்போது பயன்படும் முக்கிய உபகரணங்கள்

கழிவுகளை கையாளுபவர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

கையுரை: தடிமனான ரப்பரால் செய்யப்பட்ட கையுறைகள் கழிவுகளை கையாளும் போது பயன்படுத்த வேண்டும்.  இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.  கழிவுகளை கையாண்ட பிறகு கையுரைகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.  இந்த கையுரையை ஒவ்வொரு பயன்பாட்டிற்க பிறகும் கிருமிநாசினி சோப்பால் கழுவ வேண்டும்.  கையுரையின் அளவு பயன்படுத்துபவர்க்கு பொருந்துமாறு இருக்க வேண்டும்.

மேலங்கி பிற உடைகள்

தோலை பாதுகாக்க, துணிகள் மாசுபடாமல் இருக்க இந்த உடைகள் அணியப்படுகின்றன.  இவை துணி அல்லது ஊடுருவும் தன்மையற்ற பொருட்கள் அதாவது பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆனதாக இருக்க வேண்டும்.  தன்வெப்பக்கலன்களில் வேலை செய்பவர்கள் அணியும் மேலங்கி தீப்பிடிக்காத பொருளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

முகமூடி

முகமூடி, கண்ணாடி போன்றவை முகத்தை வெப்பம் மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க அணியப்படுகிறது.  இவை மூக்கு மற்றும் வாயை மூடும் படியாகவும் தூசி, நச்சுக்காற்றை வடிகட்டும் தன்மையுடையதாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலுரைகள்

காலுரை அதிக அளவு நோய் தொற்றிய அல்லது தொற்றும் தன்மையுடைய கழிவுகளை கையாளும்போது கால் தோலிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன.  காலுரைகள் வழுக்கும் தன்மையற்றதாக இருக்க வேண்டும்.

சுத்தம் செய்யும் கருவி

துடைப்பம்

துடைப்பம் குறைந்தபட்சம் 1.2 மீ நீளம் உடையதாக இருக்க வேண்டும். துடைப்பத்தின் பருமன் கையாள ஏதுவாக இருக்க வேண்டும்.  தரையின் வகையை பொருத்து பயன்படுத்தும் துடப்பத்தின் பெருக்கும் பகுதி கடினமாகவோ அல்லது மென்மைகயாகவோ இருத்தல் வேண்டும்.

தூசி வாரிகள் பெருக்கும் பொழுது சேரும் குப்பைகளையும் தூசிகளையும் சேகரிப்தற்க்கு இது பயன்படுகின்றது.  இவை பிளாஸ்டிக்களாலோ அல்லது முலாம் பூசப்பட்ட உலோகத்தாலானதாகவோ இருக்கலாம்.  குப்பை சேகரிக்கும் பகுதி ஏற்ற இறக்கம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும்.  இந்த அமைப்பு அதன் புறப்பகுதியில் தூசி ஒட்டாமல் இருக்க உதவுகின்றது.  இவை பயன்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்து உலர வைக்கப்பட வேண்டும்.

துடைப்பான்

இவை நீண்ட கைபிடி உடையவை தரையை துடைப்பதற்க்கு பயன்படுகிறது.  துடைப்பான்கள் துணி அல்லது ரப்பர் வகையாக இருக்கலாம். துடைப்பான்கள் தேய்வது மற்றும் கிழிவதை பொறுத்து மாற்றிக்கொள்ளலாம்.  இயந்திரதிருகு வகை துடைப்பான்கள் நீரை உறிஞ்சி பிழிவதற்கு ஏதுவாக இருக்கிறது.

வெற்றகத் துப்புரவாக்கி

அறையின் அளவை பொருத்து வெற்றகத் துப்புரவாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

சேகரிக்கும் கருவி

குப்பைத் தொட்டிகள்

ஒவ்வொரு இடத்திலும் சேரும் கழிவுகளின் அளவை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்றவாறு குப்பைத் தொட்டிகளின் கொள்ளளவு இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.  குப்பை சேகரிக்கும் நாட்களுக்கிடையே குப்பைத் தொட்டி நிரம்பி வழிவதாக இருக்கக் கூடாது.  ஒவ்வொரு முறையும் குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகள் சேகரித்த பின்பு குப்பைத் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்.

தற்காலிக கொட்டகை () சேமிப்பு அறை

இந்த அறைகள் (அ) கொட்டகைகள் கழிவு சேகரிக்கப்படும் இடத்திலிருந்து தொலைவில் இருக்க வேண்டும்.  இவை குறிப்பாக வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.  இவ்வாறு அமைப்பதினால் மாசுபடுத்தும் பொருட்கள் காற்றில் அடித்துச் செல்லாதவாறு தடுக்கலாம்.

சுத்திகரிக்கப்படாத கழிவுகளை 48 மணி நேரத்திற்க்கு மேல் இந்த அறையி;ல் வைக்க கூடாது.  இவ்றைகள் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருட்களுள்ள இடங்களின் அருகில் இல்லாதவாறு அமைக்கப்பட வேண்டும்.  முள்கம்பி வேலி, அமைத்து விலங்குகள் மற்றும் பறவைகள் வராதவாறு பாதுகாக்க வேண்டும்.  பாதுகாவலர்களை வைத்து அனுமதியற்ற நபர்களை அப்பகுதியில் நுழையாதவாறு பார்த்துகொள்ள வேண்டும்.  இதன் மூலம் அனுமதியற்ற கழிவுப் பொருட்களின் மறுவிற்பனையை தடுக்கலாம்.

கையாளும் கருவி

தண்டவாள தள்ளுவண்டிகள்

நோய் தொற்றும் தன்மையுடைய கழிவுகளை உருவாகும் இடத்திலிருந்து நேரடியாக அகற்ற இவ்வண்டிகள் பயன்படுகின்றன.

தள்ளுவண்டி

இவை கழிவு உண்டாகும் இடத்திலிருந்து அவற்றை சேகரிக்கும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.    நேரடியாக கழிவுகள் இதில் குவிக்கப்படாதவாறு பார்த்துகொள்ள வேண்டும்.  குப்பைத்தொட்டிகளிலிருந்து எடுக்கப்படும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் பாலிதீன் பைகளில் இடப்பட்ட பின்னரே இவ்வண்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு

மருத்துவக் கழிவுகள் ஐந்துவிதமான தொழில்நுட்பங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.

இரசாயன சுத்திகரிப்பு: நோய் தொற்றாமல் இருப்பதற்காக இரசாயனங்களை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.

அனல் வழி சுத்திகரிப்பு: கழிவுகளை அழிப்பதற்கும் மாசகற்றுவதற்கும் வெப்ப ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

குறைவு-அனல் முறை : (930சி - 1970சி) நீராவி, சுடுநீர், மின்காந்த கதிரியக்கம் மூலம் வெப்பமுண்டாக்கி, மாசகற்றி தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முறையாகும்.

தன்வெப்பகலன்: நீராவி மூலம் மாசகற்றுதல்

தன்வெப்பக்கலன்

மருத்துவ கழிவுகளை பக்குவம் செய்யவும், கழிவுகளின் நோய் தொற்றும் தன்மையை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

ஈர்ப்புப்பாய்வு தன்வெப்பக்கலனை பயன்படுத்தும்போது மருத்துவ கழிவுகளை கீழ்கண்ட முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

வெப்பநிலை 1210சிக்கு குறைவாக இருக்க கூடாது மற்றும் ஒரு சதுர இன்ஞ்சிக்கு 15 பவுண்டு அழுத்தம் இருக்க வேண்டும்.  கழிவுகள் இக்கலன்களில் சுத்திகரிக்கப்படும் நேரம் 60 நிமிடத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்; அல்லது

வெற்றிட தன் வெப்பகலனை பயன்படுத்தும்பொழுது மருத்துவக் கழிவுகள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்கு வெற்றிடத்துடிப்பிற்க்கு உட்படுத்தப்பட வேண்டும்.  இதன் மூலம் தன்வெப்பகலனில் காற்ற நீக்கப்படுகிறது.  கழிவுகள் கீழ்கண்ட முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது.

மருத்துவக்கழிவுகளை கையாளும்பொழுது எக்காரணம் கொண்டும் சுத்திகரிக்கும் கால அளவு, அழுத்தத்தையோ, வெப்பநிலையையோ குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் மாற்றக் கூடாது.  மாற்றினால் மொத்த மருத்துவக்கழிவுகளை மீண்டும் சரியான கால, வெப்ப அழுத்த நிலைகளை பயன்படுத்தி சுத்திகரிப்புச் செய்ய வேண்டும்.

நுண்ணலை அடுகலன்: நுண்ணலை ஆற்றல் மூலம் உண்டான நீராவி மூலம் மாசகற்றுதல்

 1. மிகுதி - அனல் முறை: (540 - 83000சி) அதிக வெப்பத்தை பிரயோகித்து மாசகற்றி, கழிவுகளை அழிக்கும் முறையாகும்.
 2. நீர் வெப்பகலன்: நீராவி கொண்டு கழிவுகளை துண்டாக்கி காய வைத்தல்.
 3. சாம்பலாக்குதல்: கழிவுகளை முழுவதுமாக எரிக்கும் தொழில்நுட்பமாகும்.

சாம்பலாக்கி

 1. வெளிவரும் புகை அளவுக்குள் இருக்குமாறு சாம்பலாக்கிகளை வடிவமைக்க வேண்டும்.
 2. சாம்பலாக்க வேண்டிய கழிவுகளை வேதி பொருட்கள் மூலம் பக்குவம் செய்யக்கூடாது.  குறிப்பாக குளோரின் கொண்ட தொற்றுத்தடையன் பயன்படுத்த கூடாது.
 3. கழிவுகள் சாம்பலாக்கப்பட்டபின் அவற்றிலுள்ள உலோகங்கள் தரநிர்ணய அளவுக்குள் இருக்க வேண்டும்.
 4. டீசல் போன்ற குறைந்த சல்பர் கொண்ட எரிபொருட்களை சாம்பலாக்கியில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
 5. பொறி நுட்பமுறைகள்: கழிவுகளை கையாளுவதற்கு ஏற்றவாறு உரு சிதைக்கும் முறைகளாகும்.  இதில் கெட்டிப்படுத்துதல் மற்றும் சிறு துண்டாக்குதல் என இரு முக்கிய முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கெட்டிப்படுத்துதல்: கழிவின் கொள்ளளவை குறைத்தல்:

 1. சிறுதுண்டாக்குதல்: தொற்றுநோய் பரவ இயலாத பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகளை மறுஉபயோகத்திலிருந்து தடுப்பதற்கு துண்டுகளாக்கி அழித்தல்.
 2. கதிர்வீச்சு முறை: மூடிய அறையில் புறஊதாக்கதிர் அல்லது அயனியாக்கத்திற்கு உட்படுத்தி மாசகற்றுதல்.  இம்முறை முக்கியமாக, சிறுதுண்டுகளாக்கிய பிறகே பின்பற்றப்படுகிறது.
 3. உயிரியல் முறை: உயிரியல் நொதி பொருட்களைக் கொண்டு மாசகற்றும் முறையாகும்.  பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருட்கள் தவிர, அனைத்து கழிவுகளையும் மாசகற்றுவதோடு, அழிக்கவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

 

ஆழப் புதைத்தல்

 1. சிலவகை மருத்துவக் கழிவுகள் அகற்ற பயன்படுத்தப்படுகிறது. குறைந்தது 2 மீட்டர் ஆழம் இருக்குமாறு எடுக்க வேண்டும் இதில் பாதி அளவிற்க்கு கழிவுகளைக் கொட்டி அவற்றைச் சுற்றி சுண்ணாம்பை 50 செ.மீ. அளவிற்க்கு இட்டு, அதன் பிறகு மண்ணால் மூட வேண்டும்.
 2. புதைக்கப்பட்ட பகுதிகளில் கண்டிப்பாக விலங்குகள் மேய்ச்லுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 3. பாதுகாப்பு வேலி அமைக்க இரும்பு மின்முலாம் பூசப்பட்ட கம்பிகளையோ பயன்படுததலாம்.
 4. ஒவ்வொரு முறையும் கழிவுகளை குழியில் கொட்டிய பின் அதன் மேல் 10 செ.மீ. அளவுக்கு மண் கொட்ட வேண்டும்
 5. சரியான மேற்பார்வை மற்றும் கண்காணிப்புடன் கழிவுகளை புதைக்க வேண்டும்.
 6. இந்த இடத்திற்க்கு பக்கத்தில் ஆழமில்லாத கிணறு இருக்க கூடாது மற்றும் மண்ணில் நீர் உட்புகும் திறன் குறைவாக உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் நல்லது.
 7. இக்குழி ஒதுக்குபுறமாக அமைந்திருப்பதோடு இதனால் நிலத்தடி நீரோ அல்லது பரப்பு நீரோ பாதிக்கப்படாமல் இருத்தல் அவசியம்.
 8. இப்பகுதி வெள்ளம் மற்றும் மண் அரிப்பினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
 9. தேர்வு செய்யப்படும் இடம் தகுந்த அத்தாட்ச்சியை பெற்றிருக்க வேண்டும்.
 10. புதைக்கப்படும் கழிவுகள் மற்றும் குழிகளை பற்றிய விவரங்களை இதனைச் செயல்படுத்தும் நிறுவனம் சரியாக நிறுவகிக்க வேண்டும்.

கூர்மையான பொருட்களை அகற்றுதல்

 1. கத்தி மற்றும் ஊசி போன்ற கழிவுகைள தொற்று தடைக்கு பின் வட்டமான மற்றும் சதுரமான குழிகளில் போட வேண்டும்.
 2. இந்த குழிகள் செங்கல் காங்கிரட்டால் ஆனதாக இருக்க வேண்டும்.
 3. இந்த குழிகள் கனமான காங்கிரேட் மூடிகளால் மூடப்பட்டிருக்க வேண்டும்.  முலாம் பூசிய இரும்பு குழாய் இந்த காங்கிரெட்டில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.  இவற்றின் மூலமே இக்கூரிய முனையுடைய கழிவுகள் அகற்றப்பட வேண்டும்.
 4. இக்குழாய் நிரம்பியதும் வேறு ஒரு குழி ஏற்பாடு செய்துவிட்டு பழைய குழியை மூடிவிட வேண்டும்.
 5. மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கதிரியக்கக் கழிவுகள்
 6. கதிரியக்கக் கழிவுகளின் கதிர்வீசும் தன்மை குறைந்து அவை மற்ற கழிவுகளோடு கலக்க ஏற்ற நிலையை அடையும் வரை அவை பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டியது அவசியம்.
 7. கதிரியக்க பொருட்கள் கொண்ட மருந்து சாதனங்கள் உபயோகமற்று வெளியேற்றப்படும் பொழுது தகுந்த முறையில் அவை அழிக்கப்பட வேண்டும்.

பாதரசக் கட்டுப்பாடு

பாதரசம் உள்ள வெப்பமானி போன்ற கருவிகள் உடையும்பொழுது சிதறும் பாதரசத்துகள் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் மீண்டும் இக்கருவிகள் தயாரிப்பவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

சிதறும் பாதரசத் துகள்கள் மற்ற மருத்துவக் கழிவுகளடன் கலக்கப்படக் கூடாது.

50 அளவிற்கு மேற்பட்ட பாதரசம் கலந்த கழிவுகள் அபாயகரமானவையாகக் கருதப்படுகின்றன.  இக்கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள் இவற்றை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்வது அவசியம்.

கழிவுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கழிவுகளை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் கையாளுவது மிக முக்கியமான ஒன்றாகும்

மருத்துவக்கழிவுகளைப் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்

மருத்துவக்கழிவு மேலாண்மையின் முக்கிய அம்சங்கள்

கழிவுகளை கட்டுப்படுத்துதல்

மறுசுழற்சி

மறுஉபயோகம்

அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் சுத்திகரிப்பு முறைகளை தவிர்த்தல் நல்லது.

உலக சுகாதார நிறுவனக் கூற்றின்படி மனிதனின் சராசரி வாழ்நாள் அதிகரித்து வருகிறது.  எனினும் தொற்று நோயினால் ஏற்படும இறப்பு விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.  இந்நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் வரும உலகின் ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேர் தொற்றநோய் தாக்கப்பட்டு இறக்கிறது.  இவ்வாறான தொற்றுநோய் பரவலுக்கு கழிவுகள் சரிவர நிர்வகிக்கப்படாததும் ஒரு காரணமாகும்.  உடற்கூறு திரவங்கள் போன்ற மருத்துவக் கழிவுகள் வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவற்றின் உறைவிடமாக இருந்து அதிக அளவில் நோய் பரவக் காரணமாகின்றன.

தொழில் ரீதியான சுகாதாரக் கேடுகள்

முறையற்ற கழிவு மேலாண்மையினால் குறிப்பிட்ட மருத்துவ நிறுவனம் / தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர் நலனைப் பாதிக்கின்றது.

சுகாதார நிலையங்களுக்கு வந்து செல்லும் மருத்துவர்கள், தாதியர்கள், கழிவகற்றும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் ஆகியோர் பாதிப்படைகின்றனர்.

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கூரிய முனையுடைய கருவிகள், கதிரியக்கக் கழிவுகள், மற்றும் மருத்துவ இரசாயனக் கழிவுகள் ஆகியவற்றாலும் பொது சுகாதாரக் கேடுகள் உண்டாகின்றன.

மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

மருத்துவக் கழிவுகளை, பொதுக் குப்பைத் தொட்டிகள், பொது இடங்கள், நீர் நிலைகள் உள்ள இடங்களில் கொட்டுவது வேகமாக நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது.

திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதன் மூலமும், எரியூட்டு முறையில் வெளியேறும் புகையைச் சுவாசிப்பதன் மூலமும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதோடு புற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

எண்ணிக்கையில் பெருகிவரும் நீரழிவு நோயாளிகள் மற்றும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்தே சிகிச்சை பெறுபவர்கள் மூலம் உருவாகும் மருத்துவக் கழிவுகள் நேரிடையாக மற்ற குப்பைகளுடன் கலக்கும் வாய்ப்பு உள்ளது.  இது மிகவும் அபாயகரமான ஒரு செயலாகும்.

மருத்துவக் கழிவுகளினால் பறவைகளும் மிருகங்களும் பெருமளவில் பாதிப்படைகின்றன.

குப்பைகளிலுள்ள பாலிதீன் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் விலங்குகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது.

கூரிய முனையுடைய, மருத்துவக் கழிவுகளை பொதுக் குப்பையோடு சேர்ப்பதால் இக்குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம்.

டை-ஆக்ஸின், ஃப்யூரேன் போன்ற வாயுக்களால் மனிதர் மட்டுமல்லாது விலங்குகள் மற்றும் பறவைகளின் நலனும் பாதிக்கப்படுகின்றது.

கன உலோகக் கழிவுகளினால் இவற்றின் இனபெருக்கம் பாதிப்படைவதோடு, நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும் வாய்ப்பு உருவாகிறது.

நாம் என்ன செய்யலாம்

ஒரு முறைப்பயன்படுத்தும் ஊசிகளைப் பயன்படுத்திய பின்னர் உடைத்து களைதல் அவசியம்

பஞ்சு, காயம் கட்டும் துணிகள் போன்ற இரத்தம் மற்றும் அழுக்கு தோய்ந்த பொருட்களை பொதுக் குப்பைத் தொட்டிகளில் போடக் கூடாது.

மருத்துவக் கழிவுகளை கருமைநிற பாலிதீன் பைகளில் பிரித்து அகற்றுதல் அவசியம்.

இக்கழிவுப் பொருட்களை சிறுகுழந்தைகள் கையாளாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டு காலம் முடீவுற்ற மருந்துகளின் உபயோகத்தை தவிர்ப்பது நல்லது.

மருத்துவக் கழிவு மேலாண்மை தற்போது மனித குலத்தை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவாலாகும்.  அறிவியல் பூர்வமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு, பொது மக்களும் இதை குறித்த விழிப்புணர்வு பெற்றிருத்தல் அவசியம்.  நாமும், நமது சமுதாயமும், சூழலும் பாதுகாக்கப்பட மருத்துவக் கழிவு மேலாண்மைக்கு செயல்வடிவம் கொடுப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம்.

மருத்துவக் கழிவு மேலாண்மை செய்து மனித நலம் காப்போம்!

ஆதாரம்  : சி.பி.ஆர்.சுற்றுச்கசூழல் மையம் சென்னை

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top