பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறைந்துவரும் பல்லுயிர் வளம்

குறைந்துவரும் பல்லுயிர் வளத்தைப் பற்றி இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கடந்த 50 வருடங்களில் நாம் உணவுக்காக சார்ந்து இருக்கும் விவசாயப் பயிர்வகைகளின் எண்ணிக்கையை 100க்கும் குறைவாக்கிவிட்டோம்.  இதுபோலவே கால்நடைகளின் வகைகளை 24 ஆகக் குறைத்துவிட்டோம்.  உலக மக்களின் மொத்த உணவுத் தேவைகளை வெறும் 12 வகையான பயிர்களே பூர்த்தி செய்கின்றன.  அதிலும் வணிக நோக்கிலான நல்ல விளைச்சல் தரக்கூடிய பயிர்கள், நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள பயிர்கள், சுவையுள்ள வேகமாக வளரக்கூடிய குறைந்த அளவே நீர் எடுத்துக் கொள்ளக்கூடிய சிலவகைப் பயிர்களை மட்டுமே நாம் இன்று போற்றி பயன்படுத்தி வருகிறோம்.  பழைய வகை அரிதான விதைகளை நாம் முற்றிலுமாக இழந்து விட்டோம்.

உலகிலுள்ள மொத்த சிற்றின வகைகளின் எண்ணிக்கை 10 முதல் 100 மில்லியன் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.  ஆனால் இதுவரை 1.75 மில்லியன் வகை சிற்றினங்களைப் பற்றி மட்டுமே ஆராய்ச்சிகள் நடந்து முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் 40 ஆயிரம் வகை சிற்றினங்கள் மட்டுமே இன்று உலகம் முழுவதும் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன.  மீதமுள்ளவைப் பற்றிய சரியான விவரங்கள் இன்றும் அறியப்படவில்லை.  இன்று நாம் உபயோகப்படுத்தும் மருந்துகளில் 40% தாவரங்களில் இருந்தே எடுக்கப்படுகிறது.

ஆறாவது மிகப்பெரிய சிற்றின அழிவு

சூழலுக்கு எதிரான போராட்டத்தில் மனிதன் இன்றுவரை வெற்றியடைந்தே வந்திருக்கின்றான்.  ஒரு யானையைப் பாதுகாப்பதைத் காட்டிலும், ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையே முதலிடம் பெறுகிறது.  தற்போதைய நிலையில் 600 கோடியாக உள்ள உலகின் மக்கள் தொகை 2030ம் ஆண்டு வாக்கில் 900 கோடியைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வளவு மக்களும் தங்களுடைய தேவைகளான வீடு, விளைநிலம், சாலைகள், மேய்சல் நிலம், அணைகள் போன்றவற்றை ஏற்படுத்த இயற்கையை அழித்து சூழலை வெகு வேகமாக மாசுபடுத்தி வருகின்றான்.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன டைனசோர்கள் காலத்தை ஒப்பிடும்பொழுது, தற்போதைய நிலையில் சிற்றினங்கள் அழிவின் வேகம் மிக மிக அதிகம்.  உயிரியியல் வல்லுனர்களின் கருத்துப்படி ஒவ்வொரு மணி நேரத்திலும் 3 சிற்றினங்களை நாம் ஏதாவது ஒரு வகையில் அழித்துவிடுகிறோம்.  புதிய பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அழிக்கப்பட்டு விடக்கூடும்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

Filed under:
3.28125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top