பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / நீர் / சிறுபாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு மேம்பாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுபாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு மேம்பாடு

சிறுபாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு மேம்பாடு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நீர் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். விவசாய உற்பத்திக்கும், உணவு பொருள் மேம்பாட்டிற்கும் நீர் அவசியமாகிறது. கிடைக்கும் மழை நீரினை மேம்பட்ட அளவில் பயன்படுத்தும் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து இக்குழு (அ) சிறுபாசனம் (ஆ) நீர் மேலாண்மை, (இ) நீர்பிடிப்பு மேம்பாடு ஆகிய பொருள்களில் தனித்தனியே தனது பரிந்துரைகளை கீழ்கண்டவாறு செய்கிறது.

சிறுபாசனம்

கிராம ஊராட்சிகள்

 1. கிராம ஊராட்சிப் பகுதிகளில் 100 ஏக்கருக்கு குறைவான பாசனப் பரப்புள்ள ஏரிகளை கண்டறிந்து, அவற்றின் நீர் பரப்பு, நீர்வளம் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும் போன்ற விவரங்களைச் சேகரித்து, தேவையான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துதல் மற்றும் தேவையான விவரங்களை ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளித்து ஊராட்சி ஒன்றிய அளவில் திட்டங்கள் தீட்ட உதவலாம்.
 2. பயிர் வளர்ப்புக்கு தேவையான நீர் ஆதாரங்களான பாசனக் குளங்களில் மண்படிந்து அதன் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகின்றது. இதனைத் தவிர்த்து வறட்சிக் காலங்களில் மேற்படி குளங்களில் தூர் எடுக்கும் நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.
 3. தேசிய வேளாண்மை வங்கி (நபார்டு) சிறு பாசன மேம்பாட்டிற்க்கான திட்டங்களை நிறைவேற்றுகிறது. இத்திட்டத்தினைப் பயன்படுத்தி ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கவும் மேலும் பாசனக் கால்வாய்களை சீர் செய்வதிலும் கிராம ஊராட்சிகள் உதவலாம்.
 4. மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள விவசாயிகளில் தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிய உதவலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள்

 1. ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராம ஊராட்சிகளைக் கொண்டது. ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல சிறு பாசனத் திட்டங்கள் அந்த பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் நீர்பாசன விநியோக முறைகள், நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு, நுண் நீர்பாசன முறைகள் மற்றும் சொட்டு நீர்பாசனம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை வகைப்படுத்தி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்து, பழுதடைந்தவற்றை சீராக்கவும் புதிய பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கலாம்.
 2. சிறு பாசனம் குறித்த புள்ளி விவரங்களை ஊராட்சி ஒன்றிய அளவில் தொகுத்து, அதனை பராமரிக்க வேண்டும். இதன் பொருட்டு, நீர்வள/ நிலவியல் தொழில் நுட்ப வல்லுநர்களின் தொழில் நுட்ப ஆலோசனையைப் பெற்று மாவட்ட ஊராட்சிக்கு தெரிவிக்கலாம்.
 3. ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஊராட்சி குளங்களைக் கிராம ஊராட்சிகளின் உதவியுடன் கண்டறிந்து, அதன் விவரங்களைப் பெற்று, மழையில்லாக் காலங்களில், குளங்களில் தூர் எடுத்து குளத்தின் நீர் கொள்ளவினை அதிகரிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள் தொடர்புடைய, பாசனக் குளங்களுக்கு நீர் பகிர்மான முறையை சீராக்குதல், பிரச்சனைகளைத் தீர்த்தல்.
 4. பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் மூலம் அமைக்கப்படும் நீர் பாசன ஆழ் குழாய் கிணறுகள் திட்டம், வரத்துக் கால்வாய் சீரமைப்பு ஆகிய பணிகளை செயல்படுத்தவும், பயனாளிகளைக் கண்டறியவும், கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உதவுதல்.
 5. மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஊராட்சி ஒன்றிய அளவில் மேற்கொள்ளல்.

மாவட்ட ஊராட்சிகள்

 1. மாவட்ட அளவில் நீர் பாசன வளத்தை மேம்படுத்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்பாசனக் குழாய்கள், ஏரிகள், வரத்துக் கால்வாய்கள் போன்றவற்றின் துல்லியமான புள்ளி விவரங்களை கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிடமிருந்து பெற்று மாவட்ட அளவில் தொகுத்து, திட்டமிடுவதற்கு ஏதுவாக பராமரித்தல்.
 2. நீர்பாசன வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஓர் தொலை நோக்கு திட்டத்தை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் கிராம ஊராட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளல்.
 3. கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுத்தும் தூர் வாரும் பணிகள், வரத்துக் கால்வாய் மராமத்து பணிகள் ஆகிய பணிகளுக்கு மாவட்ட ஊராட்சிகள் உறுதுணையாக இருத்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.
 4. தமிழ்நாடு பாசனக் குளங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து திட்ட பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தல்.

நீர்மேலாண்மை

கிராம ஊராட்சிகள்

 1. சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில், நிலத்தடி நீரின் அளவு மற்றும் இருப்பு குறித்த விவரங்களை நிலவியல் தொழில் நுட்ப வல்லுநர்களின் மூலம் கண்டறிந்து அந்த விவரங்களை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம்.
 2. விவசாய நிலங்களில் நீர்பாசனத்தை மேம்படுத்தம் பொருட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து, கிராம ஊராட்சிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
 3. திறந்த வெளி கிணறுகளுக்கு உரிய அளவு இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிலையில் தொழில் நுட்ப வல்லுநர்களின் கருத்துக்களை பொதுமக்களிடையே பரப்பலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள்

 1. ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் அளவு மற்றும் இருப்பு குறித்த விவரங்களை நிலவியல் தொழில் நுட்ப வல்லுநர்களின் மூலம் கண்டறிந்து அந்த விவரங்ககளை ஊராட்சி ஒன்றிய அளவில் பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம்.
 2. விவசாய நிலங்களில் நீர்பாசனத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து, ஊராட்சி ஒன்றியங்கள் நடவடிக்கைகள் எடுக்கலாம்.
 3. நீர் மேலாண்மை குறித்த திட்டங்களை ஊராட்சி ஒன்றிய அளவில் திட்டமிட்டு செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஒருங்கிணைக்கலாம்.

மாவட்ட ஊராட்சிகள்

 1. மாவட்ட அளவில், நிலத்தடி நீரின் அளவு, நீரின் தன்மை ஆகியவற்றின் விவரங்களை தொகுத்து அந்த விவரங்களை நிலவியல் வல்லுநர்களின் அறிவுரைகளின்படி பயன்படுத்தி மாவட்ட திட்டம் தயாரித்து நீரினை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம்.
 2. விவசாயத்திற்கான நீர் பகிர்வு முறையினை முறைப்படுத்த மாவட்ட அளவில் திட்டங்களை தீட்டி, அந்த திட்டங்களின்படி திட்ட செயல்பாட்டை மேற்பார்வையிடலாம்.

நீர்பிடிப்பு மேம்பாடு

கிராம ஊராட்சிகள்

 1. நில ஆவணங்களை மேம்படுத்துதலும் பராமரித்தல் சார்ந்த திட்டங்களில் வேளான் மற்றும் மேய்ச்சல் நிலம், தரிசு நிலம், நீர்த்தேக்கங்கள், நீர் நிலைகள், சாலைகள், கரைகள் போன்ற ஏனைய சமுதாய நிலங்கள் தொடர்பான விவரங்களின் மேம்பாட்டிற்கு கிராம ஊராட்சிகள் உதவலாம்.
 2. நீர்பிரி முகடு மேலாண்மை சார்ந்த பொருட்களில் திட்டத்தின் அனைத்து நில/ நீர் பயன்பாடுகள் குறித்து ஊராட்சிகள் மூலம் நடவடிக்கைகள் எடுத்தல்- உற்பத்தியினை அதிகரிக்க சமுதாய பொது நிலம் மற்றும் பொதுச் சொத்துக்களை முறையாக பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தல். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு உதவுதல், இயற்கை வள ஆதாரங்கள், சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில் பல துறைகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.
 3. கிராம ஊராட்சிகள், தங்கள் பகுதியின் நீர்பிடிப்பு மேம்பாடு சார்ந்த திட்டங்களை செயல்படுத்த தேவையான செயல் திட்டங்களைத் தீட்டுதல், கிராமப் புறங்களின் நில அமைப்புக்கு ஏற்ற மரம் மற்றும் பயிற்களைக் கண்டறிதல்.
 4. ஒருங்கிணைந்த நீர்பிரிமுகடு மேம்பாட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளைக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உதவலாம்.

ஊராட்சி ஒன்றியங்கள்

 1. ஊராட்சி ஒன்றியங்கள் நீர்பிடிப்பு மேம்பாடானது திட்டங்கள் குறித்த தேவையான செயல் திட்டங்களைத் தீட்டுவதற்கும், பல்வேறு துறையின் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கலாம்.
 2. நீர் பிடிப்பு மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த, பொது மக்களைக் கொண்ட (அ) நீர் பயன்படுத்துவோர் குழுக்கள் (ஆ) நாற்றாங்கால் அமைப்போர் குழுக்கள் போன்ற குழுக்களை அமைப்பதில், சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு உதவுதல்.
 3. நிலம் மற்றும் நீரை முறையாகக் பயன்படுத்த ஊராட்சி ஒன்றிய அளவிலான செயல் திட்டங்களைத் தயாரிப்பதில் உதவுதல்- பொது மக்கள் மற்றும் அமைக்கப்படும் குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் விவசாயிகளுக்கு தேவையான மண்வளம், நீர்பிடிப்பு மேலாண்மை சார்ந்த பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்தல்.
 4. ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக உதவுதல் மற்றும் திட்ட செயல்பாட்டை ஆய்வு செய்தல்.
 5. மண்வள அட்டைகள் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும், துறை அலுவலர்களுக்கும் உதவுதல்.

மாவட்ட ஊராட்சிகள்

 1. நீர்பிடிப்பு மேம்பாடு திட்டத்திற்கான மண்வளம், நீர்பிடிப்பு பரப்பு ஆகிய விவரங்களைப் பெற்று பராமரித்தல் - பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு தொலை நோக்குத் திட்டங்களைத் தயாரித்தல் - மாவட்ட ஊராட்சியின் நிர்பிடிப்பு மேம்பாடு சார்ந்த திட்டங்களின் அனுபவங்களையும் இதர விவரங்களையும் ஊராட்சி ஒன்றியத்திற்கும், கிராம ஊராட்சிகளுக்கும் அளித்தல்.
 2. மண்வள அட்டைத் திட்டம் குறித்து மாவட்ட அளவில் திட்டமிடுதல் மற்றும் ஆய்வு செய்தல்.

ஆதாரம் : நீர்வள ஆதார அமைப்பு

Filed under:
2.86666666667
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Mahalakshmi Oct 04, 2018 12:37 PM

தலைப்பில் சிறு பாசனம் என்று குறிப்பிடபட்டுள்ளது, ஆனால் நுண்ணீர் பாசனம் என்பதே சரியான வாசகம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top