பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மாசுபடுதல்

சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றிய குறிப்புகள்

மண் மாசுபடுதல்

மேலோட்டம்

மண் பின்வரும் காரணிகளால் மாசுபடுகின்றது.

  • திடக்கழிவுகள் தேக்கத்தால் ஏற்படுவது உயிரியல் சுழற்ச ஏற்படாத பொருள்களின் சேர்க்கையால் வேதியியல் பொருள்கள் நச்சுகளாக மாறுதல்
  • மண் வேதியியல் பங்கீடுகளின் மாற்றத்தால் ஏற்படுவது (மண்ணின் வேதியியல் குணங்களில் ஏற்படும் சம நிலையின்மையால்)இந்த பூமியில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும், அதன் ஒவ்வோர் பொருளின் அடித்தனத்தையும், வாழ்வினையும் அச்சமூட்டுவது நில மாசபாடே ஆகும். புள்ளியில் விவரங்களின் படி,
  • ஒரு வருடத்தில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பின் இழப்பு
  • ஒரு வருடத்தில் 24 மில்லியன் டன் மேல்புர மண் அரிப்பு ஏற்படுகிறது
  • ஒரு வருடத்தில் 15 மில்லியன் ஏக்கர் வேளாண் விளைநிலங்கள் அதிகபட்ட பயன்பாட்டிலும் தரமற்ற மேலாண்மையினாலும் இழக்கப்படுகின்றது
  • பாலைவனமாக மாறும் நிலங்கள் மூலம் 16 மில்லியன் சதுர மைல் அளவு உலகின் நிலப்பரப்பு இழக்கப்படுகின்றது

இரண்டு வகையான முறையற்ற செயல்பாட்டால் நிலங்கள் / மண்கள் வீணாகிறது. அவை பின்வருமாறு

ஆரோக்கியமற்ற மண் மேம்பாட்டு முறைகள்

  • முறையற்ற உழவினால் மண்ணின் தன்மை வீணாகுதல்
  • அங்ககம் பொருட்களின் நிலையற்ற விகிதம் அதாவது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற அங்ககப் பொருட்களின் விகிதம் நிலையற்று இருப்பதினால் மண்ணின் செழுமை மாறுவதோடு மட்டுமல்லாமல், பாலைவன மண்ணாக மாறுதல்
  • ஊட்டப்பொருள் (அ) சத்துப்பொருட்கள் மண்ணில் முறையற்ற பாதுகாப்பில் இருக்கும் போது, செயற்கை உரங்களானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் உயிற்சிதைவற்ற நிலையிலிருப்பதால் இவைகள் மண்ணில் குவிகின்றது. இவை மண்ணிலுள்ள உயிரணுக்களான பாக்டீரியா, பூசணங்கள் மற்றும் பிற உணிரணுக்களை அழிக்கிறது
  • மண்ணின் அமிலத்தன்மையின் முறையற்ற பாதுகாப்பினால் பயிரப்படும் வெவ்வேறு பயிர்களின் தன்மையை பாதிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மண்ணின் கனிமங்களின் தன்மையை குறைக்கிறது. அதிக அமிலமுள்ள மண்ணில் கனிமங்கள் கரையத்தக்க நிலையிலிருப்பதால் மழைக்காலத்தில் அவை கரைந்து மழைநீருடன் சென்றுவிடுகிறது. களர் மண்ணில் கனிமங்கள் கரைக்க முடியாத தன்மையில் இருப்பதால் கலப்பு அங்ககப் பொருட்களை உறிஞ்சும் தன்மையற்று காணப்படுகிறது

முறையற்ற நீர்பாசன முறைகள்

  • குறைவான வடிதல் தன்மையுடைய மண்ணின் நிலையால் மண்ணில் உப்பு படிதல் அதிகமாகி உவர்நிலையை அதிகரிக்கிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சிகள் பாதிப்பது மட்டுமல்லாமல் பயிர்களை அழைக்கிறது.
  • நீர் பாசனமற்ற நிலமானது குவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை பயன்பாட பொருள்களை பண்படுத்துவதில்லை. இதனால் நிலத்தின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது
  • சரியற்ற நீர்பாசனமானது மண்ணின் ஈரத்தன்மையை குறைப்பதுடன் தாதுக்களின் கரைப்பானில் பற்றாக்குறை ஏற்படுகிறது

ஆதாரங்கள் மற்றும் முறைகள்

நிலத்தின் மாசுபாட்டிற்கு கீழ்கண்டவை முக்கிய ஆதாரமாக நிகழ்கிறது. அவைகளின் வகைகள் பின்வருமாறு.

  • வேளாண்மை
  • சுரங்கம் மற்றும் கற்சுரங்கம்
  • கழிவு தேக்கம்
  • கழிவு நீரோட்டம்
  • வீட்டுமனைகள்
  • தகர்ப்பு மற்றும் கட்டுமானம்
  • தொழிற்சாலைகள்

மண் / நிலம் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்

மண் மற்றும் நீர் மாசுபாடு

  • இரத்த புற்றுநோயை உள்ளடக்கிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமைதல்
  • குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பாக அமைதல்
  • பாதரசமானது சிறுநீரக சேதத்தையும், சைக்கலோடைனஸ் கல்லீரலில் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது
  • நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் மத்திய நரம்பு இயக்கத்தில் ஒருவித பதற்ற அழுத்தம் ஏற்படுதல்
  • தலைவலி, குமட்டல், களைப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் நோய் ஏற்படுதல்

மற்றவை

  • பாதிக்கப்பட்ட மண்ணுடன் நேரடியாக (பூங்கா, பள்ளி போன்றவற்றை பயன்படுத்துதல்) அல்லது மறைமுகமாக (ஆவியாகுதல்) போன்றவற்றுடன் தொடர்பு
  • மண் மாசுபாடு என்பது நீர் மாசுபாட்டின் இரண்டாம் நிலை மற்றும் காற்று மாசுபாட்டின் படிதல் (எ-டு - அமில மழை)
  • மாசுபாடுடைந்த மண்ணில் பயிர்கள் விளைவிக்கப்படுவதால் உணவு பாதுகாப்பில் பிரச்சனைகள் ஏற்படுதல்
  • இது நீருடன் தொடர்புடையவையாகும். நீரில் பாதிப்பு இருக்கும் போது மண்ணானது மாசுபடுகிறது

மண் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு

  • நுண்ணுயிர்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் கணுக்காலிகள் போன்றவையானது மண்ணின் சூழ்நிலையை பொருத்து மாறுபடும். இவை முதல்நிலை உணவு சங்கிலியின் சில பகுதிகளை அழித்து மற்ற விலங்குகளை உண்ணும் விலங்கு இனங்களுக்கு எதிர்மறை விளைவாக அமைகிறது
  • சிறிய விலங்குகள் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன உணவுகளை உட்கொள்ளும்போது இந்த உணவு சங்கிலி, பெரிய விலங்குகள் வரை பாதிக்கிறது. இதனால் இவைகளின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

மண் மாசுபாட்டினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவு:

  • தாவரங்களில் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டு மற்றும் விளைச்சலில் குறைவு
  • மரங்கள் மற்றும் தாவரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை உறிஞ்சி உணவு சங்கிலி வரை அதன் நச்சுதன்மையை கொண்டு வருதல்

உப்புத்தன்மையுடை மண்

மண்ணின் உப்புத்தன்மையை அதிகரிப்பதால் மண்ணின் தன்மையானது பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பற்றாக்குறையாக உள்ள சாக்கடை வசதிகள் மற்றும் நல்ல பாசனவசதி உள்ள பகுதிகளில் உப்பானது எளிதாக மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. மண்ணில் அடிப்புறத்திலுள்ள உப்பானது கோடை காலத்தின் போது ஏற்படும் வெடிப்பில் மேலே வந்து மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. குறைந்த வடிகால் வசதியுடன் இந்நிலையில் தீவிர சாகுபடி மேற்கொள்ளும் போது மண்ணின் உவர்தன்மையானது அதிகரிக்கிறது.

நம் நாட்டில் உவர் நிலமானது 6 மில்லியன் ஹெக்டேராகும் பஞ்சாப்பில் மட்டும் 6000-8000 ஹெக்டேர்களாகும். உலகின் வறண்ட மற்றும் வறண்ட பகுதியில் 6 ல் ஒரு பகுதி அதிக உவர்தன்மையை கொண்டிருக்கும்.

மண் மாசுக்கள் மற்றும் அதன் தாக்கங்கள்

ஃபுளோரைட்ஸ்:

பச்சையத்திலுள்ள மாங்கனீசுடன் ஃபுளோரைட்ஸ் இணைந்து ஒளித்தொகுப்பினை தடுக்கிறது. இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடுகிறது. ஃபுளோரைடு மாசுபாட்டிற்கு மக்காச் சோளம் எளிதில் பாதிக்கக்கூடிய பயிராகும். இவற்றின் தாக்கத்தால் மனிதர்களின் பற்களில் கறை எற்படும். எலும்பு ஃபுளோரைட்ஸினால் வழுவற்ற எலும்பு படகு போன்ற அமைப்பு மற்றும் வளைந்த முழங்கால் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தழைச்சத்து உரமிடுதல் (நைட்ரேட்ஸ் + நைட்ரைடு):

நச்சுத்தன்மையானது இலைகள் மற்றும் பழங்கள் மூலம் உணவு சங்கிலியில் நுழைகிறது. பாக்டீரியாக்கள் உணவுப் பாதையில் நைட்ரேட்ஸை நைட்ரைட்டாக மாற்றுகிறது. பின்னர் இவை இரத்தத்தில் நுழைந்து ஹீமோகுளோபினுடன் இணைந்து மெட்டா ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜனின் கடத்தும் திறமானது குறைகிறது. இதன் தாக்கத்தால் மெத்தனமோகுளோபிநீமியா என்ற நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் இந்த நோயினால் குழந்தைகளின் நிறம் நீலமாக மாறுகிறது. இந்த நைட்ரேட் நச்சுக்களின் போது மெத்தலின் புளு என்ற மருந்தினை ஊசியின் மூலம் குழந்தைகளுக்கு செலுத்தப்படாமலிருந்தால் உயிர் சேதம் ஏற்படும். மேலும் இவை மனிதர்களை தாக்கும் பொழுது மூச்சுத்தினறல் ஏற்படும்.

களைக் கொல்லிகள்

இவைகள் வளர்ச்சிதை மாற்றத்தை தடுப்பதனால் ஒளிச்சேர்க்கையானது தடுக்கப்பட்டு மற்ற வளர்ச்சிதை மாற்ற செயல்களானது தாவரங்களை அழித்து விடுகின்றது. சில தருணங்களில் போலியம் (phloem) திசுவானது அங்கக உணவினை தடுப்பதால் பயிரானது அழிந்து விடுகிறது.

மாசு கட்டுப்பாடு

காற்று வழி தெளிப்பான்

  • பெட்ரோல் பொருட்களிள் வெடிக்கும் தன்மையை குறைப்பதால் அவை மண்ணினால் உறிஞ்சப்படுகிறது. இவை நிலத்தடிநீரில்படிந்து பாதிப்பினை தடுக்கும் தடுப்பான் இவை நிலகீழ் பகுதியில் அமைந்து பின்னர் இவை கரையும் தன்மையிலிருந்து நீராவி பகுதிக்கு செல்கிறது.

வேளாண் நடவடிக்கைகள் மூலம் மண் மாசு கட்டுப்பாடு

  • பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டை குறைத்தல்
  • சரியான அளவில் உரத்தினை பயன்படுத்துதல்
  • பயிர் விளைச்சல் நுட்பத்தினை அதிகரிப்பதன் மூலம் களை வளர்ச்சியை தடுத்தல்
  • தனிப்பட்ட ஒரு குழியில் தேவையற்ற பொருட்களை குவித்தல்
  • மேய்தலை கட்டுப்படுத்துதல் மற்றும் வனமேம்பாடு
  • காற்று அரிப்பினை தடுக்க காற்று தடுப்பான் அல்லது கவசத்தினை அமல்படுத்துதல்
  • மண் அரிப்பினை தடுக்க அணை மற்றும் சரிவு பகுதியில் மண் கட்டமைப்பு தாவரங்கள் அல்லது புற்களை வளர்த்தல்
  • காடு வளர்ப்பு மற்றும் மீண்டும் வன வளர்ப்பு

நீர் மாசுபடுதல்

மேலோட்டம்

நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொருள்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்பட்டு அதன் தரம் குறைவதே ஆகும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் ஏற்படுவதாகும். நீர் மாசுபாடு என்பது பெருங்கடல்கள், ஏரிகள், நீரோட்டங்கள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் உள்ள இடங்கள் அனைத்திலும் ஏற்படக்கூடிய தூய்மைக்கோடாகும். இதனால் நச்சுப்பொருள்கள் தேவைப்படும் பொருட்கள், எளிதில் கரையக்கூடிய பொருள்கள் கதிர்வீச்சுகள் ஆகியவற்றின் வெளியீடு ஏற்பட்டு நிலத்தின் அடியில் மாற்றம் படிந்துவிடும். இதனால் நீர் நிலைகளின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக வளம்குன்றிய நீர்நிலைகள் (Entrophication) என்று நிலைமை ஏற்படும். அதாவது நீர் நிலையில் மாசுபடுத்திகளினால் அதிகமாக வளர்ந்து பரவுவதால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

சுற்றுப்புறத்திற்கு மணிச்சத்தினால் (phosphorus) ஏற்படும் தாக்கம்:

அதிகமான மணிச்சத்து

கேடு விளைவு

  • வளம் குன்றிய நீர்நிலைகள்
  • பிரணவாயுவின் பற்றாக்குறையினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் நச்சுப்பொருள்கள் உண்டாகும்.
  • குடிநீரை தூய்மைப் படுத்துவதற்கான செலவு அதிகமாகுதல்.
  • அப்பகுதியின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படுதல்
  • வண்டல் படிவங்கள் அதிகரிப்பதால் பொழுதுபோக்கிற்கான நீர் உபயோகித்தல் தடை ஏற்படுதல்
  • நீரின் மேற்புறத்தில் ஏற்படும் படிவங்கள் மற்றும் துர்நாற்றம்
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்

வளம் குன்றிய நீர்நிலைகள்

வளம் குன்றிய நீர்நிலைகளை குறைக்கும் வழிமுறைகள்

  • நீர் பிழப்பு பகுதிகளின் மேலாண்மை முறைகள்
  • மணிச்சத்து உரங்களை தேவையான அளவு உபயோகித்தல்
  • மணிச்சத்து உரங்களின் வகை
  • அங்கக உரங்கள் உபயோகப்படுத்தல்
  • வடிகால் வசதிகளை மாற்றியமைத்தல்

இரசாயன நேர்த்தி

நீர் சுழற்சி மற்றும் மாசுபாடு

நீர் சுழற்சி என்பது நீர் சுழலும் பாதையாகும். பூமியில் நீரானது மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதுவே பூமி மற்றும் வளிமண்டலத்தின் இடையே ஏற்படும். நீர் சுழற்சி (அ) தொடர் நீர் இயக்கம் என்றழைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளில் இது நடைபெறுகின்றது.

  • ஆவியாதல்: நீரானது திரவத்திலிருந்து வாயுத்தன்மையாக மாறுதல் இலைத்துளை மூலம் ஆவியாகுதல்
  • படிந்துவிடுதல்: ஆவியானது குளிர்ந்த பதத்தில் படிந்துவிடுதல் (குளிரூட்டப்பட்ட அறை)
  • மழை பெய்தல்: பூமிக்கு மீண்டும் வரக்கூடிய நீர் (மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் பெரியதாகி மழையாக பெய்யும்)

நீர் சுழற்சி மற்றும் மாசுபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு

நீர் சுழற்சியின் படி, இயற்கையின் நிகழ்வாக நம்மைச் சுற்றி உள்ள நீரானது நிலத்தினுள் உறிஞ்சப்பட்டு ஆறுகள் மூலம் நீரோடைகளாக சென்று கடலினை அடையும். உயிர்சிதைவு ஏற்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நன்மை அளிக்கும் முறையில் மாற்றப்படும். அதுபோல் கனிம மாசுபடுத்திகள் பரந்து இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பது இல்லை.

சிறிய அளவிளான அங்கக மற்றும் கனிம மாசுபடுத்திகள் நீரோடைகளில் பாதுகாப்பாக சிதைக்கப்பட்ட கடலுள் கலந்து விடுவதால் சூழிலடத்திற்கு ஏதும் தீங்கு இல்லை. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் இருந்தால் கடலோர உயிரினங்களை பாதிக்கும்.

வழிகள் மற்றும் முறைகள்

நீர் மாசுபாடு ஏற்படுத்தும் முக்கிய வழிகள் பின் வருவனவாகும்.

  • பெட்ரோலிய பொருட்கள்
  • செயற்கை வேளாண் இரசாயனங்கள்
  • கடின உலோகங்கள்
  • தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள்
  • அளவிற்கு அதிக அங்கக பொருட்கள்
  • படிமானங்கள்
  • தொற்று ஏற்படுத்தும் கிருமிகள்
  • காற்று மாசுபடுதல்
  • வெப்ப மாசுபாடு
  • மண் மாசுபாடு

நீர் மாசுபாடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு

மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள்,

  • டைபாய்டு
  • அமிபியாசிஸ்
  • ஜியார்டியாசிஸ்
  • அஸ்காரியாசிஸ்
  • கொக்கி புழுக்கள்

மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள்

  • தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல்
  • மூச்சு திணறல் நோய்கள்
  • மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், வாந்தி மற்றும் வயிற்றுவலி

வாந்தி மற்றும் வயிற்றுவலி

இரசாயனங்கள் (பூச்சிக்கொல்லிகள், ஹைட்ரோகார்பன், அங்கக மாசுபடுத்திகள், கடின உலோகங்கள்) போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள்.

  • புற்று நோய் - இரத்தப் புற்று நோய்
  • இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிப்பாதைகளை தடுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்
  • நரம்பு மண்டலங்களுக்கு சேதம்
  • சிறுநீரகம் மற்றும் கல்லுரலுக்கு சேதம்
  • டிஎன்ஏ விற்கு சேதம்

பாதரசத்தினால் ஏற்படும் பாதிப்பு

  • கர்ப்பத்தினுள்: நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, குறைந்மத பதிவுகள், கற்பதற்காக ஏற்படும் கோளாறுகள், காது கேளாண்மை மற்றும் மூளை பாதிப்பு
  • பெரியவர்களுள்: நியாபக மறதி, உறுப்பின் காழ்ப்பு, பக்கவாத நோய்கள், இதய நோய்கள் மற்றும் மரணம்.

பிற தகவல்கள்:

நீர் மற்றும் மாசுபட்ட மண்ணும் சேர்ந்தால் நீர் மாசுப்பாடு ஏற்படும் (அ) காற்று தொற்றுகள் (உதாரமாண அமில மழை) போன்றதும் நீரினை மாசுபடுத்தும்.
மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும். (உதாரணமாக மீனில் உள்ள அதிக பாதரச அளவு)
மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.

நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:

  • உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து அதனை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும். மேலும் மீன்களில் நோய்களை பரப்புகின்றது.

எண்ணெய் பூசப்பட்ட வாத்து

  • இரசாயன மாசுபாடினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரான பாதிப்புகள் ஏற்படும். அவற்றின் இனப்பெருக்கம், வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும்
  • நீரில் உள்ள பாதரசம் நேர் எதிரான அசாதாரண குணங்கள் குன்றிய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் மரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்
  • அழியாத அங்கக மாசுபடுத்திகள் மீன் இனங்களுக்கு மரணம் மற்றும் குறைபாடுகளை எற்படுத்தும்
  • நீரில் உள்ள அதிக உப்பு உயிரினங்களை அழித்து விடும்.

நீர் மாசுபாட்டினால் மரம் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

  • நீரில் வளரும் செடிகளை ஒளித்தொகுப்பினை பாதித்து அதனால் அவற்றின் சூழ்பத்தினையும் பாதிக்கும்.
  • நீரில் உள்ள மாசுபடுத்திகளை உட்கொள்ளும் செடிகள் அவற்றை உணவுச் சங்கில் மூலம் உண்ணும். மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பரவச்செய்கிறது.
  • நீரில் உள்ள அதிகப்படியான உப்பு (சோடியம் க்ளோரைடு) செடிகளை அழித்துவிடும்.
  • கட்டுமானங்களில் இருந்து விழும் மரக்கட்டைகள் களிமண் மற்றும் மணல் போன்றவை சரிவதாலும் செடிகள் அழிந்து விடும்.
  • நீரில் உள்ள களைக்கொல்லிகள் செடிகளை அழித்துவிடும்.

நீர் மாசுபாடு மேலாண்மை

உயிர்வழி நிவர்த்தி

  • நுண்ணுயிர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி நிலைப்பட்ட வலயினுள் உள்ள அங்கக பாகங்களின் உணிர்சதைவை துரிதமாக்குதல்.
  • முழுமையடைந்த பெட்ரோலியம் ஹெட்ரோகார்பன் பொருள்களுக்கு (எம்.டி.பி.இ தவிர்த்து நீள் சங்கிலி அதிக மூலக்கூறு எடை மற்றும் கரையாத பொருள்களால் ஆன அனைத்தும்) பொருந்தும்.
  • பிற நிலைப்பட்ட வலய நிவர்த்தி தொழில் நுட்பங்கள் (எ-டு. மண் நீராவி பிரித்தெடுத்தல், உயிர்காற்றோட்டம்)
  • வரையறை முறைகள்: மின்னணு ஏற்பான் (ஆக்ஸிஜன், நைட்ரேட்), ஊட்டச்சத்தி (நைட்ரஜன், பாஸ்பரஸ்), ஆற்றல் மூலம் (கார்பன்).
  • நிவர்த்தி முறைகள்: காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்று மாறுபட்ட (நைட்ரேட் சுவாசம்), காற்றில்லாத (பிராணவாயு அல்லாத சுவாசம்), ஒன்றுபட்ட வளர்சிதை மாற்றம்.

இரு நிலை பிரித்தெடுத்தல்:

  • நிலத்தை நீரினை மாசுபடுத்தும் அனைத்து பொருள்கள் பெட்ரோலிய பொருள்களின் தனிப்பட்ட நிலை, நிலத்தடியிலிருந்து ஆவியாகும் ஹைட்டேரா கார்பன் ஆகியவற்றை வெளியேற்றுதல்
  • அதிகமான வெளியேற்றம் ஆற்றல் கொண்டதால், பெட்ரோலிய பொருட்களின் உயிர்சிதைவினை அதிகப்படுத்துவதுடன் நிலத்தடியிலுள்ள பல்வேறு நிலை கொண்ட பொருட்களையும் அகற்றிவிடும்

வரையறை முறைகள்: காற்றற்ற , நீரளவையியல் மற்றும் நீர்

நேர்த்தி முறைகள்:

  • ஒரு குழாயினை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை அதிவிரைவு இரு நிலைஓட்டமாக வெளியேற்றுதல்
  • இரு (அ) அதிகமான குழாய்களை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை வெளியேற்றுதல்

இயற்கையாக அளவினை குறைத்தல்:

  • இயங்கா நேர்த்தி முறையான இது இயற்கையான முறைகளை கொண்டு பங்குகளை சிதைத்தல் மற்றும் பரவவிடுதல் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்
  • பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்தி குறைப்பதுடன் விரைவில் தாக்குதல் ஏற்படும் பொருட்களுக்கு அது பரவாமல் தடுக்கும்.
  • இயக்க நேர்த்தி முறைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவினை குறைக்கும் இடங்களுக்கு பொருந்தும்.

முறைகள்:

  • அழித்தல் (உயிரியல் முறைகள்): காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்றற்ற (பிராணவாயு அற்ற சுவாசம்), மற்றும் குறைந்த காற்றுள்ள (குறைந்த பிராணவாயு அளவு)
  • அழித்தல் அல்லாத மறைகள் (இயற்பியல் முறைகள்): ஆவியாக்குதல், பரப்புதல் (இயந்திர முறை கலப்பு மற்றும் மூலக்கூறு பிரித்தல்) மற்றும் உறிஞ்சுதல்

உயிரியல் முறைகள்

இயற்கையான உயிர்சிதை முறைகள் ஏற்படும் வேகத்தினை இரசாயனங்கள் (அ) உயிரினங்களை கொண்டு அதிகப்படுத்துதல்
சிந்திய எண்ணெய்களை கடலோரங்கள் மற்றும் நன்செய் நிலங்களில் உள்ள சூழிலடம் பாதிக்காமல் அகற்றுதல்.

வரைமுறை முறைகள்

காற்றுள்ள (அ) காற்றல்லாத நுண்ணுயிர்கள் மூலம் மக்குதல் (எ-டு. பாக்டீரியா)

நேர்த்தி முறைகள்:

  • உரமிடுதல்: உயிர்சிதைவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மாசுபட்ட சுற்றுப்புறத்தில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களை சேர்க்க வேண்டும்
  • விதையிடுதல்: நுண்ணுயிர்களை இருக்கும் இளங்கை மண்ணில் சேர்த்தல்

பரவச் செய்யும் பொருள்:

  • புறஈர்ப்பான்களை கொண்ட இரசாயனங்கள் எண்ணெயினை சிறு துகள்களாக உடைத்து நீரினுள் கலந்து பின்னர் காற்று அலைகள் மற்றும் ஓட்டங்கள் போன்ற இயற்கை செயல்களினால் மேலும் உடைந்துவிடுதல்
  • கடலில் உள்ள நீரின் உப்பு அளவு, வெப்பநிலை மற்றும் உள்ள நிலைகள் பரவும் திறனை நிர்ணயிக்கும்
  • இயந்திரங்கள் மூலம் அல்லது தூய்மைபடுத்துதல் கடினமாகும் பொழுது கடலின் நிலை கரடுமுரடாக அமைந்திருந்தால் இம்முறையை பின்பற்ற வேண்டும்.

ஈர்ப்பான்கள்:

  • நீரினை முழுக்கிவிடும் அதாவது எண்ணெய் விரும்பும் மற்றும் நீர் விரும்பாத பொருள்கள்
  • எண்ணெய் சிந்தியுள்ள நிலைகளில் உபயோகிக்கலாம். இது பின்வரும் காரணிகளை நிர்ணயம் செய்யும்
  • ஈர்பான்கள் வகை மற்றும் எண்ணெயின் வகையை கொண்டு உறிஞ்சும் திறன் வேறுபடும்
  • நீர் வழிந்தோடும் தன்மையை பொறுத்து எண்ணெய் தக்க வைத்துக் கொள்ளுதல் அமையும்.
  • சுலபமாக உபயோகிக்கும் முறை ஈர்ப்பான்களின் வகை மற்றும் மண்ணின் வகையை கொண்டு அமையும்.
  • ஈர்க்கும் பொருள்
  • இயற்கை அங்கக பொருள்: மிதப்பான்களில் இணைக்கப்பட்ட மரத்தூள்கள் தங்களது எடையில் 3 முதல் 15 முறை வரையில் எண்ணெயினை முழ்கடிக்கும்.
  • இயற்கை கனிம: களிமண், பெர்லைட், வெர்மிகுலைட், கண்ணாடி நூல், மணல் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவை தங்களது எடையில் 4 முதல் 20 முறை, எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும்.
  • செயற்கை: பாலியுரேத்தேன், பாலித்தீன், நைலான் இழைகள் தங்களது எடையில் 70 முறை எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும். இவற்றில் சிலவற்றை தூய்மைபடுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மற்றவை ஒரு முறை உபயோகித்த பின் அழித்து விட வேண்டும்.
  • பொதுமக்களின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பக்குவத்தின் அடிப்படையில் தொழிற்சாலையின் தொடர்ச்சியான மேம்பாட்டினை அப்பகுதியை பொருத்து சரிவிகிதமாக்குதல்.


சுற்று சூழல் மாசுபடுவதை எப்படி தடுக்கலாம்

ஆதாரம் :தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.96808510638
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top