பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்களும் எரிசக்தியும்

எரிசக்தித் தேவைகளுடன் பெண்களின் தொடர்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கிராமப் பகுதிகளுக்கான எரிசக்தித் தேவைகளுடன் பெண்கள் பிரிக்க இயலாதபடி சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வீடுகளுக்குத் தேவையான அடிப்படை சுகாதாரத் தேவைகளான சுத்தமான தண்ணீர் எடுத்து வருதல், கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் ஆகியவற்றையும் அவர்கள்தாம் கவனித்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் எரிசக்திக்கும் வலுவான பிணைப்பு உள்ளது. ஏனென்றால் பெண்கள்தான் இந்த சக்தியைப் பெற அதிகமாக உழைக்கவும், இதை உபயோகிக்கவும் செய்கின்றனர்.

அடிப்படையான எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட அதிகமாகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்களும் குழந்தைகளும், விறகுகளைச் சேகரிக்கப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. எரிப்பதற்கு விறகு கட்டைகள் குறைவாகக் கிடைக்கும் காலகட்டங்களில், குடும்பத்தின் உணவுப் பழக்கமே மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதனால் குடும்பத்திற்குத் தேவையான சத்துணவும் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்கள் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகிறார்கள். குழந்தைகளும் அவர்களுடன் இருக்கிறார்கள். மரபு சார்ந்த அடுப்புகளில் தாவரக் கழிவுகள் சரியான விதத்தில் உபயோகிக்காதது, போதுமான அளவுக்கு காற்று வசதி இல்லாதது ஆகியவற்றால் மிகக் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளையே பாதிக்கின்றன.

இதிலிருந்து மீள வழி உண்டா?

எரிசக்தியைக் குறைவாக எடுத்துக்கொண்டு, புகையை வெளிவிடாத அடுப்புகளைப் பயன்படுத்துவது, சூரியசக்தி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற சுத்தமான எரிபொருள்களை உபயோகிப்பது இதற்கான தீர்வுகளாக இருக்க முடியும். சமீபகாலங்களில் மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்வது அதிகரித்துவருகிறது.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top