பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எடையும் உயரமும்

உடல் உயரத்திற்கு ஏற்ற எடையை அளவிடுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உயரத்திற்கு ஏற்ற எடை

நாம் நமக்கு ஏற்ற உடல் எடை எவ்வளவு என்று தெரிந்து கொண்டால்தான் நாம் அதற்கு ஏற்ப குறைக்க வேண்டிய உடல் எடையை அளவிட்டுக் கொள்ள முடியும்.  நம் உடல் எடை அளவுகள் நம் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். காரணம் நம் உடல் உயரம் நம் வளர்ச்சி விதத்தை தெரியப்படுத்துகிறது. நம் உடல் எடை நம் உடல் நலத்தை வெளிப்படுத்துகிறது. உடல் உயர வளர்ச்சி குறைவாக இருந்து, எடை அதிகமாக இருந்தால், நமக்குத் வளர்ச்சியைவிட தளர்ச்சியே அதிகமாக இயிருப்பதாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் உயர வளர்ச்சி அதிகமா இருந்து உடல் எடை குறைவாக இருப்பின் நம் வளர்ச்சிக்கு ஏற்ற உடல் வலிமையும் ஆரோக்கியமும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், சிலருக்கு உயரத்திற்கு ஏற்ற சராசரி உடல் எடை இருந்தாலும் வயிற்று ஊளைச் சதையும் தொப்பையும் இருக்கும். இவர்களுக்கு உடல் கழிவும், துர்நீரும் உடலில் சேர்ந்திருக்க, எலும்பும் சதையும் கரைந்தும் தளர்ந்தும் இருக்கும். இவ்வித நபர்களும்  தங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றி சரியான உடல் எடையை அடைய துணை உணவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் சரியான ஆரோக்கியமான உடல் எடையை பெற முடியும். உண்மையில் உடல் எடைக் குறைவாக இருந்து உடல் பருமனாக இருந்தால், நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு எலும்பு அதிகமாகக் கரைந்திருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் சிலர் மிக ஆரோக்கியமாக இருந்து தன் உயரத்திற்கு ஏற்ற எடையைவிட அதிகமான எடையைக் கொண்டிருப்பர். இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தாலும், வலுவான ஜீரண அமைப்பாலும்  அதிகப்படியான நல்ல கொழுப்பை தன் உடலில் சேமித்து வைத்திருப்பார்கள். இவர்களின் உடலில் தொல தொல ஊளைச் சதையைப் பார்க்க முடியாது. உடல் சதையமைப்பு அழுத்தமாக ஆனால் அதேசமயம் இருக்கமாக அல்லாமல் இருக்கும். இவரகள் தங்கள் எடையைக் குறைக்கத் தேவையில்லை. இவர்களின் உடல் எடை பாதுகாப்பான விதத்தில்தான் இருக்கிறது. ஆக, உயரத்திற்கு ஏற்ற உடல் எடை அளவீடு என்பது ஓரளவிற்குத்தான் பொருந்தும்.

உடல் எடையில் ஆண் பெண் பால் வேறுபாடு இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, ஆண் உயர வளர்ச்சியிலும் பெண் அகல வளர்ச்சியிலும் சற்று அதிகமாக இருப்பர்.  அதே போல் உடல் எடை சேர்ப்பதில் ஆண் உயரத்திற்கு ஓரிரு கிலோ அதிகமாகவும், பெண் ஒன்று இரண்டு கிலோ குறைவாகவும் இருப்பர். ஆணின் வயதுக்கு ஏற்ற உடல் எடை அதிகரிப்பானது கிட்டதட்ட ஒரே சீராக இருக்கும். ஆனால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பானது அதிரடியாக இருக்கும். உதாரணமாக,  சிசேரியன் பிரசவம், கருத்தடை அறுவை சிகிச்சை, தைராய்டு பிரச்சனை, மாதவிடாய் கோளாறு மற்றும்    மெனோபாஸ் நிகழ்வு ஆகியவற்றால் உடல் எடை அதிரடியாக ஏறலாம். அதேபோல், உடல் பருமனின் உருவ அமைப்பிலும் ஆண் பெண் வித்தியாசங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆணுக்குப் பொதுவாக வயிற்றுத் தொப்பை அதிகரித்திருக்கும். பெண்ணிற்கு இடுப்பு மற்றும் புட்டப்பகுதி பெருத்திருக்கும்.                           இது மாறியிருந்தால் இருவருக்கும் பட்சத்தில், இருவருக்குமே அதிக ஆபத்து இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இடுப்பு பருத்திருக்கும் பேரிக்காய் உருவ உடற்பருமனைவிட தொப்பை அதிகமிருக்கும் ஆப்பிள் உருவ உடற்பருமனே அதிக ஆபத்துக்களைத் தரும். காரணம் வயிற்றுப் பகுதியிதான் சிறுநீரகங்கள், கணயம், கல்லீரல், மண்ணீரல், ஆகியன இயங்குகின்றன. இவ்வித உடல் பருமானால் சிறுநீரக செயலிழப்பு, பித்தக்கல்,      குடல் புற்று மற்றும் குடல்வால் அழற்சி முதலிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இடுப்பு பகுதியில் ஜனன உள் உறுப்புகள் மட்டுமே இருப்பதால் இடுப்பு பருத்த நிலையால் உயிருக்கு ஆபத்து அதிகம் இல்லைதான், ஆனால் மலட்டுத் தன்மை அதிகமாக இருக்கும். பொதுவாக, ஆணுக்குத் தொப்பைச் சுற்றளவும் பெண்ணுக்கு இடுப்புச் சுற்றளவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இவர்கள் ஆரோகியமாக இருக்க முடியும்.                         

ஆண் மற்றும் பெண்ணின் உயரத்திற்கு ஏற்ற சராசரி உடல் எடை அளவுகள் (கிலோ கிராமில்)

ஆண்

பெண்

உயரம்

உடல்  எடை

(கிலோ)

உயரம்

உடல் எடை

(கிலோ)

செ. மீ

அடி

செ. மீ

அடி

157.5

5.17

55

147.5

4.84

45

160.0

5.25

58

150.0

4.92

47

162.5

5.33

61

152.5

5.00

49

165.0

5.41

63

155.5

5.09

52

167.5

5.50

65

157.5

5.17

54

170.0

5.57

67

160.0

5.25

56

172.5

5.70

68

162.5

5.33

58

175.0

5.74

70

165.0

5.41

60

178.0

5.84

72

167.5

5.50

61

180.0

5.91

74

170.0

5.57

63

183.0

6.00

76

172.5

5.70

65

185.5

6.10

78

175.0

5.74

66

188.0

6.17

80

178.0

5.84

68

190.5

6.24

82

180.0

5.91

69

193.0

6.33

84

183.0

6.00

71

அன்பு நண்பர்களே! நாம் வேண்டாத உடல் பருமனாக இருக்கிறோமா இல்லையா என்பதை நம் உடல் வெளிப்பாடுகளின் மூலமும் கண்டு கொள்ள முடியும். நம் கால்களில் அடிக்கடி நீர் கோர்ப்பது நிகழுமாயின் நம் உடலில் துர்நீர்க் கழிவுகள் அதிகமாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் சிறுநீரகங்கள் செயல்படுவதில் தினறுவதை இது குறிக்கிறது.  அதே போல் நம் காலின் உள் பாதம் உப்பியிருந்தால் நாம் ஆரோக்கியமற்ற உடல் பருமனைக் கொண்டுள்ளதாகக் கருத வேண்டும். உடல் உள் உறுப்புகளின் மேல் கெட்டக் கொழுப்பு படிந்திருப்பதை இது குறிக்கிறது. அதேபோல், அடிபட்டால் உடலில்  அதீதமான  தடிப்பு ஏற்படுமாயின், நாம் அதிக கெட்டக் கொழுப்போடு இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  நம் கல்லீரல் இரணப்பட்டும் உடல் வெப்பப்பட்டும் இருப்பதை இது உணர்த்துகிறது. மேலும், உடல் புண்ணிலிருந்து அதிகமாக பொங்குதல் இருந்தால் நம் உடலில் கழிவுகள் அதிகமாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நம் தோலின் கீழ் அதிகப்படியான கெட்டக் கொழுப்பு படிந்திருப்பதை இது குறிக்கிறது. ஆக, நாம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை மாத்திரம் பார்க்காமல் நம் உடல் நம்மோடு பேசும் உடல் மொழியையும் கவனிக்க வேண்டும்.

உடல் எடை காட்டுவது அதன் ஆரோக்கிய நிலையினை.

உடல் உருவம் காட்டுவது அதன் வளர்ச்சித் தன்மையை.

குழந்தைகளின் எடையும் உயரமும்

அன்பான பெற்றோர்களே! வளரும் குழந்தையின் எடையும் உயரமும் முறையே ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் குறிக்கின்றவையாகும். இந்த இரண்டும் மரபுக்கூறின் அமைப்பைப் பொருத்ததாக இருந்தாலும் ஆரோக்கியம்  மற்றும் சத்து தன்மையை அதிகம் சார்ந்துள்ளன. உடல் எடையும் உயரமும் ஆண் மற்றும்  பெண் குழந்தைகளில் வித்தியாசப்படுகின்றன. பிறக்கும் போது ஒரே எடையுடன் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தாலும் வயது ஏற ஏற பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தையின் எடை அதிகரிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். அதே சமயம் பெண் குழந்தையின் அதிகபட்ச எடை அதிகரிப்பானது 9 வயது தொடங்கி 14 வயது வரை அதிகமாக இருக்கும். இந்த வயதுகளில்  ஆண் குழந்தையைவிட பெண் குழந்தையின் எடை சற்று அதிகமாகவே இருக்கும். ஆண் குழந்தையின் அதிகபட்ச எடை அதிகரிப்பானது 16 முதல் 18 வயதுகள் வரை அதிகமாக இருக்கும். இந்த வயதுகளில் பெண் குழந்தையைவிட ஆண் குழந்தையின்  எடை 5 முதல் 10 கிலோ வரை அதிகமிருக்கும்.

குழந்தையின் உயரத்தைப் பொருத்தவரை, சராசரியாக, ஆண் குழந்தைகளின் உயரமே அதிகமாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் எடை மற்றும்  உயர அளவுகள் சராசரி குழந்தையின் அளவுகோளாகும். இந்த சராசரி அளவுகளில் இருந்து மிக அதிகமாக மாறுபடும் நிலைகள் யாவும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிப்பதாக கண்டு கொள்ள வேண்டும்.  முதலில் குழந்தையின் எடை அளவுகள் சொல்லும் ஆரோக்கிய  அறிகுறிகளை பார்ப்போம்.

எடையும் ஆரோக்கியமும்

குழந்தையின் உடல் எடை அளவு என்பது அக்குழந்தையின் இரைப்பை செரிமானத் தன்மை (Digestion) மற்றும்  சிறுகுடலின் சத்து கிரகிப்பு (Assimilation) ஆகிய இரு தன்மைகளைச் சார்ந்திருக்கிறது. இரைப்பை செரிமானம் அதிகமிருந்து சிறுகுடல் சத்து கிரகிப்பு குறைவாக இருப்பின்  குழந்தையானது எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிப்பது மிகக் குறைவாகவே இருக்கும். அதே சமயம் குழந்தையின் இரைப்பை செரிமானம் குறைவாக இருந்து சிறுகுடலின் சத்து கிரகிப்பு அதிகமாக இருப்பின், வயதுக்கு மீறிய உடல் எடை அதிகரிக்கும். அப்படி அதிகரித்த எடையாவும் கெட்டக் கொழுப்பு மற்றும் கழிவு தேக்கமாகவே இருக்கும். செயற்கை ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்பட்ட கோழி இறைச்சியை அதிகம் சாப்பிடும் குழந்தைகளும் அதிக எடை அதிகரிப்பை காண்பார்கள். இரைப்பை செரிமானம் மற்றும் சிறுகுடல் சத்து கிரகிப்பு ஆகிய இரண்டுமே குறைவாக இருப்பின் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். அவரகளின் உடல் எடையும் மிகக் குறைவாகவே இருக்கும். இவ்வித உடல் எடைக் குறைவுகளுக்கு இரத்தச் சோகை வெளிப்பாடு இருக்கும். செரிமானமும் சத்து கிரகிப்பும் முழுமையாகவும் சரிசமமாகவும் இருக்கும் குழந்தைகளின் எடை அளவுகள் சராசரி அளவுகளை ஒட்டியிருக்கும்.  அடுத்து நாம் உடல் உயரம் சொல்லும் வளர்ச்சி தன்மைகளைப் பார்ப்போம்.

உடல் உயரமும் வளர்ச்சியும்

உடலின் உயர வளர்ச்சி என்பது குழந்தையின் ஹார்மோன் சமநிலை மற்றும் சத்து நிலையைச் சார்ந்திருப்பதாகும். அதீத பிட்டூட்டரி மற்றும் தைராய்டு ஹார்மோன் சுரப்பானது உடல் உயரத்தை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சிய பசும்பாலானது அதிகப்படியான எலும்பு நீட்டத்தை உண்டுபண்ணி உடல் உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.  இவ்வித உடல் உயரத்திற்கு ஏற்ற  உடல் எடை அளவு குறைவாக இருக்கும். நம் உடலின் சதை வளர்ச்சிக்கு மண்ணீரலும், எலும்பு வளர்ச்சிக்கு கல்லீரலும் உதவியாக இருக்கின்றன. மண்ணீரல் அழற்சியால் உடல் எடை அதிகமாகவும் உடல் உயரம் குறைவாகவும் இருக்கும். கல்லீரல் அழற்சியால், உடல் எடை மிகக் குறைவாகவும், உடல் உயரம் அதிகமாகவும் இருக்கும். அன்புத் தாய்மார்களே! மண்ணீரல் மற்றும் கல்லீரல் தன்மைகளைக் கெடுக்காமல் இருந்தால் மட்டுமே நம் குழந்தைகளின் உடல் எடையும் உயரமும் வயதுக்கு ஏற்ற அளவில் இருக்கும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உடல் எடை மற்றும் உயர அளவுகள்

வயது

ஆண் குழந்தை

பெண் குழந்தை

உடல் எடை (கிலோ)

உயரம்

உடல் எடை (கிலோ)

உயரம்

செ. மீ

அடி

செ. மீ

அடி

பிறந்தவுடன்

3.3

50.5

1.65

3.3

49.9

1.64

3 மாதம்

6.0

61.1

2.00

5.4

60.2

1.98

6 மாதம்

7.8

67.8

2.22

7.3

66.6

2.19

9 மாதம்

9.2

72.8

2.39

8.6

71.1

2.33

1 வருடம்

10.3

76.1

2.5

9.5

75.0

2.45

2 வருடம்

12.3

85.6

2.81

11.5

84.5

2.77

3 வருடம்

14.6

94.9

3.11

14.1

93.9

3.08

4 வருடம்

16.7

102.9

3.38

16.0

101.6

3.33

5 வருடம்

18.7

109.9

3.61

17.7

108.4

3.56

6 வருடம்

20.7

116.1

3.81

18.5

114.6

3.60

7 வருடம்

22.9

121.7

3.39

21.8

120.6

3.96

8 வருடம்

25.5

127.0

4.17

24.8

126.4

4.14

9 வருடம்

28.1

132.2

4.93

28.5

132.2

4.33

10 வருடம்

31.4

137.5

4.51

32.5

138.3

4.54

11 வருடம்

32.2

140.0

4.59

33.7

142.0

4.66

12 வருடம்

37.0

147.0

4.82

38.7

146.0

4.79

13 வருடம்

40.9

153.0

5.02

44.0

150.0

4.92

14 வருடம்

47.0

160.0

5.24

48.0

155.0

5.09

15 வருடம்

52.6

166.0

5.41

51.5

161.0

5.28

16 வருடம்

58.0

170.0

5.58

53.0

162.0

5.31

17 வருடம்

62.7

175.0

5.74

54.0

163.0

5.35

18 வருடம்

65.0

177.0

5.81

54.4

164.0

5.38

இங்கே கொடுக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல் எடை மற்றும் உயர அளவுகள் ஒரு ஒப்பீட்டு அளவுகளே! இது முன்னே பின்னே இருக்கலாம், ஆனால், இந்த அளவுகளில் இருந்து குழந்தையின் உடல் எடை மற்றும் உயர வித்தியாசங்கள் மிக அதிகமாக இருப்பின் நம் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி நிலைகளில் வேண்டாத தன்மை இருப்பதை உணர வேண்டும். பின்னர் அதற்கு தகுந்த நிவாரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

குழந்தையின் உடல் எடை காட்டுவது அதன் ஆரோக்கிய நிலையினை.

குழந்தையின் உடல் உயரம் காட்டுவது அதன் வளர்ச்சித் தன்மையை.

ஆதாரம் : தன்னம்பிக்கை மாத இதழ்

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top