பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வாக்குவாதம் நல்லது

வாக்குவாதம் நல்லது

Posted by TASNA at November 23. 2015

பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ஒன்றைப் பற்றி விவாதிக்காமல் அப்படியே விடுகிறவர்களுக்கும், வாக்குவாதம் செய்கிறவர்களுக்குமான ஹார்மோன் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டதில், விவாதம் செய்கிறவர்களுக்கு மன அழுத்தத்துக்கான ஹார்மோன்கள் கட்டுப்பாட்டுக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

Re: வாக்குவாதம் நல்லது

Posted by Anonymous User at November 24. 2015
விவாதம், வாக்குவாதம் என்றாலே பலருக்கும் ஏற்புடையது அல்ல. வம்பு எதற்கு என வாயை மூடிக் கொண்டு விலகிச் செல்பவர்களே அதிகம்.

Re: வாக்குவாதம் நல்லது

Posted by TASNA at November 24. 2015

ஆனால் நல்ல வற்றிற்காக வாக்குவாதம் செய்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. வாதம் செய்கிறவர்கள், உடலளவிலும் ஆரோக்கியமாக உள்ளதை உணரலாம்.

Re: வாக்குவாதம் நல்லது

Posted by Anonymous User at November 30. 2015
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள் ? - தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும் , குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்றும் சொல்கின்றனர் உளவியலாளர்கள். எப்போதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று வாக்கு வாதம் செய்வது, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற சொல்லுக்கு உறுதியாகிவிடும். யாரையும் அவமதிப்பது ஆபத்து. ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டி பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணாமல் போய்விடும் அப்புறம் யார் பெரியவர் யார் சின்னவர் யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்ய வேண்டியதுதான். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது . நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஏளனமாக வேடிக்கையாக போய் விடும். இது தேவை தானா?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top