பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள்

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புலம்

ஊட்டச்சத்து என்பது உணவு மற்றும் ஆரோக்கியத்துடனான அதன் தொடர்பு பற்றிய  அறிவியலாகும். ஆரோக்கியத்தில் மட்டுமல்லாமல் நோயிலும் உணவின் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதும் வாழ்க்கை முறைக் கோளாறுகள் அதிகரித்து வருவதால் எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தைக் கொண்டு செல்வது முக்கியமானதாகும். உணவு முறையை மேம்படுத்துவது என்பது தனிநபருக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களுக்குமானது.  ஊட்டச்சத்து ஓர் இருபுறமும் கூரான வாள். ஏனெனில் அதிக ஊட்டச்சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பன. குறிப்பாகக் குறைவான ஊட்டச்சத்து இளம் வயதில், அதாவது குழந்தைப்பருவத்தில், தீமையானது. வயது ஆகஆக ஐம்பது வயதுக்கு மேல் உட்கொள்ளும் அதிகமான சத்துணவு தீமை பயப்பதாகும். மொத்தத்தில் இரு வகையுமே எல்லா வயதினரையும் கொஞ்ச காலத்திலேயே பாதிக்கும். சத்துணவுக் குறைவினால் உண்டாகும் சில முக்கிய நோய்களாவன: போதுமான இரும்புச் சத்து இன்மையால் ஏற்படும் இரத்தச்சோகை, ஐயோடின் குறைவினால் உண்டாகும் தைராயிடுக் கோளாறுகள். வைட்டமின் ஏ குறைவினால் ஏற்படும் பார்வைக்குறைவு போன்றன. அதிகச் சத்தால் உடல் பருமனாகிறது.

சுமை

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 3-ன் படி ஐந்து வயதுக்குள் தாய்ப்பாலூட்டப்பட்ட 96 % குழந்தைகளில் கால்பங்கே பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டப் படுகின்றன. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ பாதி அளவினர் (48%) ஊட்டச்சத்து இன்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43% தங்கள் வயதுக்குரிய எடை இன்றி இருக்கின்றன. இந்தியாவில் மரணமடையும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேல் (54%) சத்துணவுக் குறைபாட்டுத் தொடர்பாலேயே இறக்கின்றன. கடுமையான ஊட்டச்சத்துக் குறைவை விட (11%) குறைந்ததில் இருந்து மிதமான ஊட்டச்சத்துக் குறைவாலேயே (43%) அதிகமான மரணங்கள் நிகழுகின்றன. இந்தியாவில் ஒரு முக்கியமான கோளாறான இரும்புச் சத்துக் குறைவு இரத்தச் சோகை 6-59 மாத வயதுடைய குழந்தைகளில் பத்து குழந்தைகளில் ஏழு பேருக்கு உள்ளது.  இவருள் 3 % கடுமையாகவும், 40 % மிதமாகவும், 26 % குறைவாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளின் குடும்பங்களில் பாதி அளவே அயோடின் கொண்ட உப்பைப் பயன்படுத்துகின்றன. பெரியவர்களில், 36 % பெண்களின் உடல் பொருண்மை அட்டவணை (BMI) 18.5-ற்கும் கீழ் உள்ளது. இது அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைபாட்டையே சுட்டிக் காட்டுகிறது. ஒல்லியாக இருக்கும் பெண்களில் ஏறக்குறைய பாதி (45 %) அளவினர் மித அல்லது அதிக ஒல்லியாக உள்ளனர். 13 % பெண்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் உடையவர்களாக இருக்கின்றனர் (10 % அதிக எடை, 3 % உடல் பருமன்). அதிக அல்லது குறைவான சத்துணவு ஆகிய இரண்டுமே தீங்கானவை. தனிநபர், குடும்பம் மற்றும் சமூக ஆரோக்கியத்தை இவை நெடுங்காலத்திற்குப் பாதிப்படையச் செய்யும். ஆகவே, ஆரோக்கியமான சத்துணவின் அடிப்படைகளை பற்றிய விழிப்புணர்வை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் உண்டாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சிறந்த சத்துணவின் முக்கியத்துவம்

திசு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பராமரிக்கவும், உடலின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் தேவையான ஆற்றலை உணவு நமக்கு அளிக்கிறது. சத்துணவே ஆரோக்கியத்துக்கு மூலைக்கல்லாகும். எனவே, உடலுக்குத் தேவையான சத்துக்களைத், தேவையான அளவுக்கு, உட்கொள்ளும் உணவு வழங்க வேண்டும். சிசு, குழந்தை, தாய் ஆகியோரின் மேம்படுத்தப்பட்ட நலத்தோடும், நோய்களோடு எதிர்த்துப் போராட வலிமையான நோய்த்தடுப்பு அமைப்போடும், பாதுகாப்பான மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்போடும், பரவா நோய்களின் (நீரிழிவு, மாரடைப்பு, இதய- குருதிக் குழாய் நோய்கள் போன்றவை) குறைந்த ஆபத்துக்களோடும், ஆயுட்காலத்தோடும் சத்துணவு தொடர்புடையது. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுப்பது வருங்காலத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு முக்கியம் வாய்ந்ததாகும். வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழல் தொற்றுக்கள், திடீர்க் குழந்தை இறப்பு நோய்கள், ஒவ்வாமைகள் (ஆஸ்துமா போன்றவை), உடல்பருமன், பிற்கால வாழ்க்கையில் 1 & 2 –ம் வகை நீரிழிவுகள் ஆகிய ஆபத்துக்களைக் குறைக்கும் பலவிதமான நன்மைகள் தாய்ப்பாலுக்கு உண்டு. அது அன்னைக்கு பிற்கால வாழ்க்கையில் மார்பு, கருப்பை புற்றுக்கள், இடுப்பு முறிவு ஆகியவற்றில் இருந்து காப்பளிக்கிறது. தற்கால ஆராய்ச்சிகள் நீண்ட நாள் தாய்ப்பாலூட்டலுக்கும், பின்மாதவிடாய் இதய இரத்தக் குழாய் நோய் ஆபத்துகளுக்கும்  இடையில் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகின்றன.

இளம் வயது சத்துணவுக் குறைவே மூன்றில் ஒரு பங்கு இளங்குழந்தை மரணத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. தப்பிப் பிழைப்பவர்கள் வளர்ச்சிக் குன்றிப்போகின்றனர். வாழ்க்கையில் அவர்களின் நோய்த்தடுப்பு ஆற்றலும், உடல் உழைப்புத் திறனும், கல்வி வளர்ச்சித் திறனும், வளர்ந்தபின் வேலைத்திறனும் பாதிக்கப்படுகின்றன.  பின்னர் சத்தற்ற உணவும், ஊட்டச்சத்தின்மையும் பரவா நோய்களான (NCDs)  இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று, மாரடைப்பு, இரத்த ஓட்டத் தடை இதயநோய் போன்றவற்றிற்குக் முக்கிய காரணங்கள் ஆகின்றன.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.94915254237
Charchil Durai.P Apr 08, 2016 06:48 PM

காலையில் பல் துலக்குவது முதல் நம் உடல் நலம் காப்பது நமது கடமை. சமுதாயத்தில் அதிகாலை உபயோகிக்கும் பல் பசை சரியான முறையில் ஆய்விற்கு உட்பட்டதா? பற்பல பன்னாட்டு தொழிற்சாலைகள் என்ன வேதிப்பொருள் சேர்த்தார்கள் ? நமக்கு தெரியாது என்பதே உண்மை. நம் இந்தியதேசம் நல்மனிதர்கள் உடையது. அரசின் மீதுள்ள நம்பிக்கையில் பற்பசையை குழந்தைகளிடமும் கொடுக்கிறோம். நன் மேற்கொண்ட ஒரு சிறிய ஆய்வில் பள்ளி குழந்தைகளுக்கு காலையில் பற்பசைக்கு பதிலாக திரிபலா பொடி கொடுத்ததில் நல்லதொரு முன்னேற்றம் கண்டேன் . பற்பசை சர்க்கரை நோய்க்கு வித்திடுமோ என்ற ஆய்வுடன் கவனித்து வருகிறேன். இதனை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வினை மேற்கொண்டால் சமுதாய நலம் கிட்டும். கட்டுரை என்பது எழுத்துமட்டும் அல்ல கடைபிடிப்பதும் அவசியம்.
நன்றி நண்பர்களே.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top