பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / இளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)

இளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பிறந்தது முதல் 1 வருடம் வரை அசுர வளர்ச்சிக் காணப்படும் பருவம், இளங்குழவிப் பருவம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளங்குழவி பருவம் தவிர வேறெந்தப் பருவத்திலும் வேகமான வளர்ச்சியைப் பார்க்க முடியாது.

உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும்

பிறந்த குழந்தையின் உடல் எடை 25. கி.கி. உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் பல உடலியல் மாற்றங்களை உள்ளடக்கியது. அவை பின்வருமாறு :

உடல் பரிமாணங்களில் ஏற்படும் மாற்றம்

ஒரு சாதாரண, ஆரோக்கியமான இளங்குழவியின் பிறப்பு (birth Weight) ஒரு வருடத்தில் மூன்று மடங்காகவும் கூடுகிறது. அதே போல் இளங்குழவியின் உடல் நீளம், பிறக்கும் போது இருந்த 50-55 செ.மீ லிருந்து ஒரு வருட முடிவில் 75 செ.மீ ஆக அதிகரிக்கிறது. உடலின் நீளத்திற்கு ஏற்ப உடல் அளவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் போது, குழவியின் தலைசுற்றளவு அதனுடைய முழு வளர்ச்சியில் 2/3 பங்கு வளர்ந்து முற்றுப்பெற்றிருக்கும். குழவியின் மார்பு சுற்றளவும் அதிகரித்திருக்கும்.

உடல் ஆக்கப் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள்

தசை உறுப்பு திசுக்கள், எலும்புத் திசுக்கள் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சி, உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. பிறந்த இளங்குழவியின் உடலில் நீரின் அளவு 75 சதவீதம் அளவுக்கு அதிகமாகவும், 12-15 சதவீதம் கொழுப்பும் மற்றும் முழு வளர்ச்சியற்ற தசைகளும் காணப்படும்.

ஒரு வருடம் ஆன பிறகு நீரின் அளவு 60 சதவீதமாக குறைகிறது. கொழுப்பின் அளவு 24 சதவீதமாக அதிகரிக்கின்றது. அதற்கேற்றாற் போல் எலும்புகளுடன் இணைந்த தசைகளின் பருமனும் குறைகிறது. எலும்புகளில் தாதுஉப்புக்கள் படிவது ஆரம்பித்து, குழந்தை பருவத்தில் தொடர்ந்து, குமர பருவம் வரை நீடிக்கிறது.

உணவுக் குழாய் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

முழு வளர்ச்சியுடன் பிறந்த இளங்குழவியால் எளியப் புரதங்களையும், சிறு திவலைகள் கொண்ட கொழுப்பையும் (emulsified fat) மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகளையும் சீரணித்துக் கொள்ள முடியும். முதல் சில மாதங்களில் உமிழ்நீர் சுரத்தலும், வயிற்றில் அமிலம் சுரத்தலும் குறைவாக இருக்கும். குழந்தை வளர வளர சீரணிக்கும் தன்மை மேன்மையடைந்து ஒரு வருட முடிவில் அனைத்து வகை உணவுகளையும் குழந்தையால் சீரணித்துக் கொள்ள முடியும்.

கழிவு நீக்கு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

ஒரு வருட முடிவில்தான், சிறுநீரகங்கள் முழுமையாக செயல்படும் திறனை அடைகின்றன. ஆரம்ப மாதங்களில் (5GolTT(p(5606i) Gilgas' (6lb 6Ségsib (glomerular filteration rate) குறைவாக இருக்கும் இதனால் அடர்த்தியான கரைபடு பொருட்களை வெளியேற்றுவது கடினம்.

மூளை வளர்ச்சி

குழந்தை பிறந்தவுடன், 5 முதல் 6 மாதங்களுக்கு மூளை செல்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும். அதற்குப் பிறகு இரண்டு வயது வரை எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிகரிக்கும் விகிதம் குறைவாகக் காணப்படும்.

இருதய சுற்றோட்ட மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

இளங்குழந்தையின் இதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 120-140 முறைத் துடிக்கும். ஹ9மோகுளோபினின் அளவு, குழந்தை பிறந்தவுடன் 18-22 கிராம்/100 மி.லி ஆக இருக்கும். இந்த அளவு, பிறந்தது முதல் 4 - 6 மாதங்களுக்கு இரத்தத்தின் கனஅளவை அதிகரிக்கத் தேவையான சேமிப்பையும், வளரும் திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனைக் கொடுப்பதற்கும் போதுமானதாக இருக்கும்.

இளங்குழுவியிடம் முதல் உணவுப் பழக்கம் ஏற்படும் விதம்

தசைகளின் ஒருங்கிணைக்கும் நரம்பு மண்டலம் முதிர்ச்சி அடைவதால், இளங்குழவிகள் பால் குடிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பிறந்தவுடன் குழவியால் உறிஞ்சுதல், விழுங்குதல் மற்றும் மூச்சுவிடுதல் ஆகிய மூன்று செயல்களையும் ஒருங்கிணைக்க முடியும். குழந்தையால் கண்களை நிலை நிறுத்தி, பார்வையால் உணர முடியாவிட்டாலும், உணவு கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தை, நாக்கை மேலும் கீழும் அசைத்து பாலை உறிஞ்சுகிறது. மேலும் ஏதேனும் திட உணவு வாயில் தென்பட்டால், உடனடியாக அதை நாக்கு, வெளியே தள்ளும் இயல் நரம்பியக்கம் (extrusion reflex) காரணமாக வெளியே தள்ளிவிடுகிறது. 3-4 மாதங்களுக்குப் பிறகு, நாக்கின் அசைவுகள் மாறி, குழந்தையினால் உணவை விழுங்க முடியும். ஆறு மாதத்திற்குப் பிறகு உணவை மெல்லும் அசைவுகளும் வளர்ச்சியடைகிறது.

வளர்ச்சியைக் கண்காணித்தல்

மேலே குறிப்பிட்ட அனைத்து உடல் வளர்ச்சி மாற்றங்களும் மிக வெளிப்படையாகத் தெரிந்தாலும், வளர்ச்சிக் கண்காணிப்பு மட்டுமே, ஒரு குழந்தையின் வளர்ச்சியை திருப்திகரமாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்யும். வளர்ச்சி கண்காணிப்பு எனப்படுவது வளர்ச்சியை சீராக அளவிடுவது ஆகும். இது வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின்மையை நேரிடையாக உணர உதவுகிறது. மேலும் ஒரு வளர்ச்சி கண்காணிப்பானது, குழந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தக் கூடிய, குறிப்பிட்ட தேவையான, நடைமுறையில் பின்பற்றக் கூடிய வழிகாட்டுதலைப் பெற வழிவகுக்கிறது. வளர்ச்சிக் கண்காணிப்பைப் பலமுறைகளில் செய்யலாம். ஆனாலும் அவற்றுள் குழந்தை வளர்ச்சி அட்டை (Growth chart) உபயோகிப்பது தான் மிகவும் சிறந்த முறையாகும்.

நோய் தடுப்ப்பூசி போடுதல்

இளங்குழவிப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவு அதிக அளவு சிசு மரண விகிதம் (infant mortality) ஏற்பட வழி வகுக்கிறது. ஊடட்ச்சத்து குறைவுத்தவிர அதனுடன் வேறு பிற காரணங்களும் சேர்ந்து மரணத்தை ஏற்படுத்துகிறது. தொற்று நோய்களும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே குழந்தைகளை இந்நோய்களிலிருந்துக் காப்பாற்ற நோய்தடுப்பூசிப் போடுவது அவசியம்.

குழந்தைப் பிறந்து ஓராண்டுக்குள், பல்வேறு மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள், குழந்தைக்கு வாழ்க்கை முழுவதும், ஆறு அபாயகரமான நோய்களிலிருந்து நோய் தடுப்பை ஏற்படுத்துகிறது. காசநோய், போலியோ, தொண்டை அடைப்பான் மற்றும் தட்டம்மை ஆகியவையே அந்த ஆறு அபாயகரமான நோய்கள் ஆகும். எனவே நோய் தடுப்பூசி என்பது ஊட்டச் சத்து குறைவானக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அனைத்துக் குழந்தைகளும் தேவைப்படும் ஒன்றாகும்.

ஊட்டச்சத்துத் தேவைகள்

இளங்குழவிப் பருவத்தில் வளர்ச்சி மிகவும் வேகமாக இருப்பதால் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இளங்குழவியின் ஊட்டச்சத்து தேவைகள் தாய்ப்பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு நன்றாக ஊட்டம் பெற்ற தாயிடம் பால் குடித்தல் மற்றும் 4-5 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் போதாமல் போகும்போது இணை உணவு கொடுக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இளங்குழவிகளுக்கான ஊட்டச் சத்துக்களின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி

ஒரு ஊட்டச்சத்து மிகுந்த தாய்க்கு, ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவான 850 மி.லி யை அடிப்படையாகக் கொண்டு இளங்குழவியின் சக்தித் தேவைகள் கணக்கிடப்படுகிறது. கிடைக்கும் சக்தியில் 50 சதவிகிதம் அடிப்படை வளர்சிதை விகிதத்திற்குப் பயன்படுகிறது. 25 சதவீதம் செயல்பாடுகளுக்காகவும், 25 சதவிகிதம் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

அதிக துறுதுறுப்பான குழந்தைகள், அதிக சக்தியை செயல்பாட்டில் செலவிட்டு விடுவதால் அவர்களுக்கு கூடுதல் கலோரிகள் கொடுத்தாலன்றி உடல் எடை அதிகரிக்காது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பால் சக்தி தேவைகளை 70 சதவிகிதம் மட்டுமே பூர்த்தி செய்வதால், இணை உணவுகள் கொடுப்பது அவசியமாகிறது.

புரதம்

உடலைப் பராமரிப்பதற்கு மட்டுமின்றி, வேகமான எலும்பு மற்றும் தசை வளர்ச்சியையும் சமாளிக்க ஏற்ற வகையில் புரதத்தின் அளவு அமைய வேண்டும். தாய்பாலிலேயே சரியான உடல் வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. முதல் 6 மாதங்களில் இவர்களுக்குத் தேவையான புரதத்தின் அளவு 2 கிராம்/கி.கி உடல் எடை ஆறு மாதங்களுக்குப் பிறகு கலோரிகள் போலவே புரதத் தேவையும் குறைகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு புரதம் தேவைப்படும் அளவு 165 கிராம்/ கி.கி உடல் எடை ஆகும். அப்போது தேவையான புரதம் தாய்பாலிலிருந்தும், தாவரப் புரதத்திலிருந்தும் ஈடு செய்யப்பட வேண்டும்.

கொழுப்பு

போதுமான தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தினசரி 30 கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதில் 10 சதவிகிதம் லினோலியிக் அமிலமும், 1 சதவிகிதம் லினோலெனிக் அமிலமும் அடங்கும். தாய்ப்பால் முக்கிய கொழுப்பு அமிலங்களில் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியது. போதிய தாய்ப்பால் கிடைக்காதபோது அல்லது தாய்ப்பால் அறவே இல்லாமல் போகும்போது, கொடுக்கப்படும் மாற்று உணவுகள் தாய்ப்பாலில் உள்ளது போல கொழுப்புச்சத்து அளிப்பதாகவும், 5-6 சதவிகிதம் சக்தி, முக்கிய கொழுப்பு அமிலங்களிலிருந்து கிடைக்கும் படியும் உறுதி செய்ய வேண்டும்.

தாய்ப்பால் நிறுத்தும் நேரத்தில் (weaning) கொடுக்கப் படும் திட்ட உணவில் 25 சதவிகிதம் சக்தி, கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும். அந்த கொழுப்பும் கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத கொழுப்புகளின் கலவையாக இருக்க வேண்டும்.

கால்சியம்

பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு, குழந்தை தாய்ப்பாலையே முழுமையாக குடிப்பதால் 300 மிகி கால்சியம் நாளொன்றுக்கு போதுமானது. தாய்ப்பாலில் கிடைக்கும் கால்சியத்திலிருந்து பெரும்பகுதியை, குழந்தை தக்க வைத்துக் கொள்கிறது. குழந்தை வளர வளர எலும்புகளில் கால்சியம் படிவது அதிகரிக்கிறது. எலும்புகளில் கால்சியம் படிந்தால்தான், குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது உடல் எடையை அதன் எலும்புகளால் தாங்க முடியும். எனவே தான் இளங்குழவி பருவம் முழுவதும் நாளொன்றுக்கு 500 மி.கி கால்சியத்தை ICMR பரிந்துரை செய்துள்ளது.

இரும்புச்சத்து

உடல் வளர்ச்சிக்கும், இரத்தத்தின் கன அளவை அதிகரிக்கவும், இரும்பு சத்து சேமிப்பை கூடுதலாக்கவும் இளங்குழவிக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து கிடைக்கும் அளவு மற்றும் உறிஞ்சப்படும் அளவைப் பொருத்து 1 மி.கி/கி.கி உடல் எடை / தினம் என்ற அளவில் இரும்புச்சத்து இளங்குழவிகளுக்குத் தரப்படலாம். ஆனால் ICMR இரும்புசத்துக்கு எந்தவித பரிந்துரையும் கீழ்கண்ட காரணங்களால் செய்யவில்லை.

  • அ. இளங்குழந்தை பிறக்கும் போதே நான்கு மாதங்களுக்குப் போதுமான சேமிப்புடன் தான் பிறக்கிறது. பிறந்தவுடன் 17 கிராம்/100 மி.லியாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவு 2 வாரங்களுக்குப் பிறகு 11 கிராம்/100 மி.லியாக குறைகிறது. ஹீமோகுளோபின் சிதைவுறுவதால் அப்போது வெளிப்படும் இரும்புச்சத்து, பிற்பாடு உபயோகப்படுத்துவதற்கென சேமித்து வைக்கப்படுகிறது.
  • ஆ. தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்பாலில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், உயிரியல் முறைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து (bio available iron) அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளது.

இளங்குழந்தைகள் உடலிலிருந்து வீணாகும் இரும்புச்சத்தின் அளவு தெரியாததால் அதை ஈடு செய்ய வேண்டிய அளவும் மதிப்பீடு செய்ய முடியாது.

வைட்டமின்கள்

ஊட்டமிக்க தாயின் பாலை குடிக்கும் குழந்தைகளை அடிப்படையாக கொண்டு இளங்குழவிப் பருவம் முழுவதும் தினசரி 350 மிகி வைட்டமின் A தேவை என ICMR பரிந்துரைத்துள்ளது.

கொழுப்பில் கரையும் மற்ற வைட்டமின்கள்

வைட்டமின்கள் D, E மற்றும் K விற்கான எந்த பரிந்துரையும் ICMR செய்யவில்லை. நல்ல சூரிய வெளிச்சம் குழந்தையின் உடலில் பட்டாலே, அவர்களுக்குத் தேவையான 200-400 I.U வைட்டமின் D கிடைத்துவிடும்.

B தொகுப்பு வைட்டமின்கள்

B தொகுப்பு வைட்டமின்கள் தேவைப்படும் அளவு, குழந்தையின் உடல் எடையைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தையின் எடை அதற்கு கிடைக்கும் கலோரிகளின் அளவைப் பொருத்து அமைகிறது.

தாய்ப்பால் முழுமையாக குடிக்கும் குழந்தைகளுக்கு, தேவையான அளவு தையாமினும், ரைபோபிளேவினும் கிடைத்து விடுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கு 55 மை.கி/கி.கி உடல் எடை தயாமினும் 65 யகி/கி.கி உடல் எடை ரைபோபிளேவினும், அடுத்த ஆறு மாதங்களுக்கு 50 யகி/கி.கி உடல் எடை தயாமினும் 60 uகி/கி.கி உடல் எடை ரைபோபிளேவினும் தேவைப்படுகிறது.

நையாசின் அளவுகள், பெரியவர்களைப் போலவே இவர்களுக்கும் கணக்கிடப்படுகிறது. அதாவது 6.6மி.கி/1000 கி.க அதையே உடல் எடைக்கு ஏற்றாற் போல் குறிப்பிடும் போது 710 மை.கி/கி.கி உடல் எடை முதல் ஆறு மாதங்களுக்கும், 650 யகி/ கி.கி உடல் எடை அடுத்த ஆறு மாதங்களுக்கும் தேவைப்படும்.

தாய்ப்பாலில் காணப்படும் போலிக் அமிலத்தின் அளவைப் பொருத்து இளங்குழவிக்கானத் தேவைகள் கணக்கிடப்படுகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் சாதாரணமாக தினசரி 25 முதல் 30 யகி/கி.கி உடல் எடை போலிக் அமிலம் கிடைக்கிறது. அது முழுவதும் உறிஞ்சப்படுகிறது. எனவே தினசரி 25 யகி/தினம் போலிக் அமிலம் போதுமானது தினசரி 02 uகி/கி.கி உடல் எடை வைட்டமின் B, பெறும் இளங்குழந்தைகளுக்கு இரத்த உற்பத்தி சரியான அளவில் காணப்படுகிறது. ஆனால் 0.05 யகி தினம் பெறும் குழந்தைகளுக்கு வைட்டமின் குறைவு நோய் குறியீடுகள் காணப்படுகிறது. எனவே தினசரி 02 யகி வைட்டமின் B, பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் C

நாள் ஒன்றுக்கு 25 மி.கி வைட்டமின் C உட்கொள்ள வேண்டுமென்று ICMR பரிந்துரைத்துள்ளது. ஹீம் (Heam) வகையைச் சாராத இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் C உதவுவதைக் கருத்தில் கொண்டு இந்த அளவு கணக்கிடப் பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுத்தல் (Breast feeding)

பிறந்தது முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி, மிகவும் சிறப்பாக இருக்கும். தாய்ப்பால் குடிப்பது, குடிக்கும் காலத்திற்கு மட்டுமல்லாது அவர்கள் வளர்ந்த பிறகும் நல்ல பயன்களை அளிக்கக் கூடியது. சுகப்பிரசவம் முடிந்த அரைமணி நேரம் கழித்து குழந்தைக்குத் தாய்பாலூட்டப்படுகிறது.

சீம்பால் (கொலஸ்டிரம் - Colostrum)

குழந்தைப் பிறந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு, சிறிய அளவுகளில் ஏறக்குறைய 10-40 மி.லி சீம்பால் சுரக்கும்.

சீம்பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

  • ஊட்டச்சத்து அளவு/100மி.லி சக்தி (கி.கி) 58
  • கொழுப்பு (கிராம்) 29
  • கால்சியம் (மி.கி) 31
  • பாஸ்பரஸ் (மி.கி) 14
  • இரும்புச்சத்து (மி.கி) 0.09
  • புரதம் (கிராம்) 27 லாக்டோஸ் (கிராம்) 5.3
  • கரோட்டீன் (1U) 186

சீம்பாலில், வைரஸை எதிர்க்கும் செயல்பாட்டை (antiviral activity) உடைய இன்டர்பெரான் (interferon) போன்ற பொருட்கள் காணப்படுகின்றன.

இதில் B, ஐ இணைக்கும் புரதம் உள்ளது. இதனால் எ.கோலி மற்றும் பிற பாக்டீரியாக்கள் வளர்வதற்கு B, கிடைக்காமல் போய்விடுகிறது. இதில் வைரஸ் தொற்றுக்களை எதிர்க்க கூடிய எதிர் உயிர் பொருட்கள் (antibodies) உள்ளது. செல் முதிர்ச்சியை மேன்படுத்தும் லைசோசைம் (lysozyme) மற்றும் பெர்ஆக்ஸிடேஸ் (peroxidase) ஆகியவை அதிக அளவு சீம்பாலில் காணப்படுகிறது.

தாய்ப்பாலூட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதே ஒரு எளிய, சிறந்த வழியாகும். இதில் கீழ்கண்ட நன்மைகள் உள்ளன.

தாய்ப்பாலில் புரதத்தின் அளவு குறைவு. ஆனால் பால் சர்க்கரையாகிய லாக்டோஸின் அளவு அதிகம். கொழுப்பின் அளவும் குறைவு. புரதத்தின் அளவு குறைவாக இருப்பது இளங் குழவிகளுக்கு பயனளிக்கிறது. ஏனெனில் கூடுதல் நைட்ரஜனை வெளியேற்ற சிறுநீரகங்கள் சிரமப்படத் தேவையில்லை. பாலில் இருக்கும் புரதமும், லாக்டோ ஆல்புமின் என்ற கூட்டுப் பொருளாக காணப்படுகிறது. இது பசும்பாலில் காணப்படும் புரதத்தை விட எளிதில் சீரணிக்கக் கூடியது

லாக்டோஸ் பாலுக்கு இயற்கையான இனிப்பைத் தருவதுடன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுதலுக்குத் துணைபுரிகிறது. கொழுப்பு அளவில் குறைந்துக் காணப்பட்டாலும் அது சிறு சிறு திவலைகளாக உள்ளதால் (emulsified) எளிதில் சீரணிக்கிறது.

தாய்ப்பாலில் காணப்படும் லிப்பிடுகள்

செறிவற்ற கொழுப்பு அமிலங்கள், முக்கிய கொழுப்பு அமிலங்கள், புரோஸ்டா கிளான்டின் தயாரிக்க உதவும் காரணிகள் (prostaglandin precursors) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொலஸ்டீரால். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பாலில் உள்ளதை விட தாய்ப்பாலில் வைட்டமின் C கூடுதலாக காணப்படுகிறது.

மேலும், தாய்ப்பாலை வெப்பப்படுத்தாததால் இந்த வைட்டமின் அழிவதில்லை. ஆனால் பசும்பாலை சூடுபடுத்தும் போது வைட்டமின் C அழிந்து விடுகிறது. உயிரியல் முறையில் கிடைக்கும் இரும்புச்சத்து, தாய்ப்பாலில் காணப்படும் லாக்டோபெரின் (lactoferrin) என்ற இணைவுப் புரதத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. அதே போல பசும்பாலை விடக் குறைவாகத் தாய்ப்பாலில் கால்சியம் காணப்பட்டாலும், அது சிறப்பாக இளங்குழவியின் உடலில் தன்மயமாகிறது.

ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சிக் காரணிகள்

தாய்ப்பாலில், தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (Thyroid stimulating Hormone - TSH), thyroxin, Insulin மற்றும் புரோலாக்டீன் (prolactin) மிக அதிக அளவில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாது தாய்பாலில் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தும் காரணிகளும் (growth regulatory factors) வளர்ச்சி ஊக்கிகள் (growth promoters) மற்றும் வளர்ச்சி மாற்றிகள் (growth modulators) ஆகியவைக் காணப்படுகின்றன.

நோய் தடுப்புக் காரணிகள்

தாய்ப்பாலில் காணப்படும் கீழ்கண்டப் பொருட்கள், குழந்தைக்கு எதிர் விளைவு குறைவான நோய்த்தடுப்பை (passive 64 immunity) ஏற்படுத்துகிறது.

இவை பாக்டீரியாக்களைச் சீரணித்து, மேலும் தொற்று நோய்களுக்கெதிரான நோய் தடுப்பை ஏற்படுத்துகிறது. லிம்போசைட்டுகள், இண்டர்பெரான் (interferon) போன்ற வைரஸ் எதிரி (antiviral) பொருட்களை உற்பத்தி செய்கின்றன. லிம்போசைட்டுகள், லிம்போகைன்கள் (lymphokynes) மற்றும் வளர்ச்சிக் காரணிகளைத் தயாரிக்கின்றன. லிம்பாய்டு திசுக்கள் (lymphoid tissue) உற்பத்தி, வேறுபாடு மற்றும் ஆன்டிஜன்களுடன் (நோயை உண்டாக்கும் நச்சுப் பொருள், antigen) வினைப்புரியும் திறனை அதிகரிக்கின்றன.

லாக்டோபெரின் (lactoferrin)

இது ஒரு இரும்புச்சத்தை இணைக்கும் புரதமாகும். எ.கோலி போன்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்தை இவை இணைத்துக் கொள்வதால், பாக்டீரியாவின் வளர்ச்சித் தடைசெய்யப்படுகிறது.

லாக்டோபாசில்லஸ் பைபிடஸ் வளர்ச்சிக் காரணி (Lactobacillus bifidus factor)

இது ஒரு அமினோ சர்க்கரை (amino Sugar). இது லாக்டோ பாசில்லஸ் பைபிடஸ் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த பாக்டீரியா லாக்டோஸிலிருந்து அசிட்டிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம் தயாரிக்கிறது. இந்த அமிலங்கள் நோயை உண்டாக்கும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

என்ஸைம்கள்

தாய்ப்பால், லிப்பேஸ், அமிலேஸ் மற்றும் லாக்டோபெர் ஆக்ஸிடேஸ் ஆகிய என்ண்ஸம்களை வழங்குகிறது. இவை செரித்தலை மேன்படுத்துவதோடு, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றன.

இம்யூனோ குளோபுலின் (immunoglobulin)

இவை அனைத்து வகையான ஆன்டிபாடிகளையும் (நோய் எதிர்ப்புப் பொருட்கள் - antibodies) உள்ளடக்கியப் பாதுகாப்பு புரதங்கள் ஆகும். தாய்ப்பாலில் அதிக அளவு காணப்படும் இம்யூனோ குளோபுலின் A, போலியோ வைரஸ், ஸ்ரெப்டோ காக்கஸ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பாக உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.

பொருளாதாரக் காரணிகள்

தாய்ப்பாலே குழந்தைக்குக் கொடுக்கக் கூடிய மிக விலைக்குறைந்த உணவுப் பொருளாகும். தாய்ப்பால் சுரப்பதற்காக தாய் உண்ணும் கூடுதல் உணவின் செலவைக் கணக்கிட்டால் கூட மற்ற செயற்கை உணவுப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தாய்ப்பால் மிகவும் விலைக்குறைவான ஒரு பொருளாகும்.

உளவியல் காரணிகள்

தாய்க்கும், குழந்தைக்குமிடையே ஆரோக்கியமான, சந்தோஷமான, உணர்ச்சிகரமான உறவு ஏற்பட தாய்ப்பால் ஊட்டுவது முக்கியமாகும். இதனால் தாய் திருப்திகரமான உணர்வை பெறுகிறார். குழந்தைப் பாதுகாப்பு உணர்ச்சியைப் பெறுகிறது.

இயற்கைக் கருத்தடைச் சாதனம்

தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், தாய்க்கு கருவணு வெளியிடல் நிகழ்ச்சித் தடைப்பட்டு தீட்டு வராமல் போய்விடுகிறது. இதனால் அடுத்தக் கர்ப்பம் ஏற்படுவது தடைபடுகிறது. மேலும் கர்ப்பப்பையும் பழைய அளவுக்குச் சிறியதாகிறது. இதனால் தாய்ப்பால் இயற்கைக் கருத்தடைச் சாதனமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாது தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

பிற நன்மைகள்

  • இளங்குழவி, பாலை உறிஞ்ச கடினமாக முயற்சிப்பதால் அதனுடைய தாடைகள் நன்றாக முழு வளர்ச்சி அடைகின்றன.
  • தாய்ப்பாலில் எந்தவிதமான நுண்ணுயிரிகளும் இல்லாமல் மிகவும் சுத்தமானதாக இருப்பதால் தொற்று நோய் கிருமிகளின் கலப்பின்றி உணவுக்குழாய் மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கின்றது.
  • தாய்ப்பால் எப்போதுமே புதியதாகவும், சரியான குடிக்கும் வெப்பத்திலும் காணப்படும்.
  • எந்த வேளையிலும் கொடுப்பதற்கு மிகவும் எளிது.
  • தவறான அளவுகளில் பாலைப் புகட்டுதல் மற்றும் அதிகமாகப் புகட்டுதல் போன்ற ஆபத்துகள் கிடையாது.
  • தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பாட்டில் பால் குடித்த குழந்தைகளை விட சிறப்பான பகுத்தறியும் திறனும் (cognition) நுண்ணறிவுத் திறனும் (1.0) பின்னாளில் காணப்படும்.

தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கவும், இளங்குழவிகளுக்கு பாதுகாப்பான, போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் இந்திய அரசு, இந்திய தேசிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதையடுத்து இளங்குழவி மாற்றுப் பால்பொருட்கள் சட்டம் (Infant Milk substitute act) - (IMS) பாதுகாக்க, மேன்படுத்த, ஆதரவளிக்க உருவாக்கப்பட்டது.

  • இளங்குழவிகளுக்கான மாற்று உணவுப் பொருட்களை ஊக்குவிக்கக் கூடாது.
  • உடல் நலப்பாதுகாப்பு மையங்களில் செயற்கை உணவுப் பொருட்களை மக்கள் கண்ணில் படும்படி கவர்ச்சிகரமாக அடுக்கி வைக்கக் கூடாது.
  • செயற்கை பால் உணவுகள் தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள், தாய்மார்களை அணுகி அப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
  • செயற்கை பால் உணவு பொருட்கள் பற்றிய எத்தகைய விளம்பர கையேடுகளோ, சிறு புத்தகங்களோ அனுமதிக்கப்பட மாட்டாது.

உலக கூட்டமைப்பு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க, ஆகஸ்டு 1-7 வரை உலக தாய்பாலூட்டும் வாரம் என அறிவித்துள்ளது.

செயற்கை உணவு கொடுத்தல் (Artificial feeding)

வேறெந்த உணவும் ஈடு செய்ய முடியாத சிறந்த உணவு தாய்ப்பாலே ஆனாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் செயற்கை உணவு கொடுப்பது அவசியமாகிறது. கீழ்கண்ட காரணங்களினால் செயற்கை உணவளித்தலுக்கு தாய் காரணமாகிறார்

  1. குறுகிய கால நோய்களாகிய காய்ச்சல், பால்காம்பு வெடித்துப் போதல் அல்லது மிகவும் கொடுமையான நோய்களாகிய காசநோய் மற்றும் இருதய நோய்.
  2. தாய்க்கு ஸ்டீராய்டுகள், எதிர் உறைதல் பொருட்கள் (anti coagulants) மற்றும் கதிரியக்க மருந்துகள் கொடுக்கப்படுதல்.
  3. குறைந்த பால் சுரப்பு.
  4. தாயின் மரணம்.

கீழ்கண்ட காரணங்களால் செயற்கை உணவளித்தலுக்கு இளங்குழுவி காரணமாகிறது

  1. மிகவும் மோசமான குறை வளர்ச்சி.
  2. குறுகிய காலத் தொற்று நோய்கள்.
  3. பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளாகிய “பிளந்த உதடு” (cleft palate) உணவுக் குழாய் மண்டலத்தில் அடைப்பு. (gastrointestinal tract obstructions)

தாய்ப்பால் இல்லாதபோது, விலங்குகளின் பாலோ அல்லது டோண்டு பாலோ, மாற்று உணவாக கொடுக்கப்படலாம். அந்த பாலை நீர் சேர்க்காமல் அப்படியே கொடுக்கலாம். குழந்தையால் சீரணிக்க முடியாவிட்டால், பாலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரும் 3:1 என்ற விகிதத்தில் கலந்துக் கொடுக்கலாம். விலங்குகளின் பால் கொடுக்கும்போது இரும்புச்சத்தும், வைட்டமின் C சத்தும், ஈடுகட்டக் கொடுக்க வேண்டியது முக்கியம்.

விலங்குப் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை உணவுகள் தாய்பாலை ஒத்து இருக்கும்படி அதன் ஊட்டச்சத்துக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரும்புச்சத்து செறிவூட்டப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு செயற்கை உணவு கொடுக்கும்போதும், அப்பொருட்களைக் கையாளும் போதும், தயாரிக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதை தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள், பால்பாட்டில் மற்றும் நிப்பிள்களை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தாய்ப்பாலுடன் துணை உணவு கொடுக்க ஆரம்பித்தல்

குழந்தையின் உணவூட்டும் திட்டத்தில், தாய்பாலைத் தவிர, சிறிது சிறிதாக வேறு உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கும் செயலே இணை உணவு கொடுத்தல் (Weaning) எனப்படும். தாய்பாலுடன் கொடுக்கப்படும் பிற உணவுகள் துணை உணவுகள் எனப்படும். குழந்தைப் பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க போதாது.

இனை உணவு கொடுத்தலானது, குழந்தைக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு குடும்பத்தின் உணவு பழக்கவழக்கத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக தயார் செய்யவும் உதவும். இணை உணவு தரும் ஊட்டச்சத்தின் அடர்த்தி 0.25 கி.க முதல் 0.4கி.க/கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். எனவே கலோரி அடர்த்தி அதிகம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இணை உணவு அளிக்கும் கலோரிகளில், குறைந்தது 10 சதவிகிதம் புரதத்திலிருந்து கிடைக்க வேண்டும்.

துணை உணவுகளின் வகைகள்

1. பால் : ஆரம்பத்தில் பாலும், நீரும் 3 - 1 விகிதத்தில் கலந்து கொடுக்கலாம். சில வாரங்களில் தண்ணீரின் அளவை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டே வந்து, பாலை நீருடன் கலக்காமல் குடிக்க கொடுக்கலாம்.

2. பழச்சாறுகள் : தக்காளி, திராட்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடியிலிருந்து புதிதாக பிழியப்பட்ட சாறுகள் கொடுக்கலாம். 4-6 மாதங்களில் இச்சாற்றை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒரு தேக்கரண்டியளவு நீருடன் கலந்து கொடுக்கலாம். சிறிது சிறிதாக அளவை அதிகரித்து அதிக நீர் சேர்க்காமல் (85 மிலி ஆரஞ்சு சாறு) கொடுக்கலாம்.

3. சூப்புகள் : கீரை சூப் செய்து கொடுக்கலாம். கீரைகளை நன்கு கழுவி, சிறிது உப்பும், வெங்காயமும் சேர்த்து, குறைந்த அளவு நீரில் வேகவைத்து, வடிகட்டிக் கொடுக்கலாம், சிறிது நாட்கள் கழித்து வடிகட்டாமல் கொடுக்கலாம்.

5 - 6 மாதங்களில் திட திரவ துணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதன் முதலில் கொடுக்கப்படும் திட திரவ உணவாக, மாவுப் பொருள் நிறைந்த உருளைக்கிழங்கு மற்றும் தானிய வகைகள் ஆகியவற்றை நன்கு வேகவைத்து, மசித்து கொடுக்கலாம். தானியப்பொருட்கள் உபயோகிக்கும்போது, வேக வைத்து, மசித்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொடுக்கலாம். கலோரி அடர்த்தி நிறைந்த உணவு தயாரிக்க முளைகட்டிய கோதுமை அல்லது கேழ்வரகு உபயோகிக்கலாம்.

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், கீரைகள் ஆகியவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஆரம்பிக்கலாம். இவை வைட்டமின்கள் தருவதுடன், உணவுக்கு நிறத்தையும் கொடுக்கவல்லது. வாழைப்பழம் தவிர பிற பழங்களை வேக வைத்தும், மசித்தும் கொடுக்கலாம். ஒருவருடம் ஆன குழந்தைகளுக்கு பழங்களை நீரில் வேக வைத்துக் (stewed) கொடுக்கலாம்.

முட்டை மஞ்சள் 6-7 மாதங்களில் கொடுக்கலாம். அரைத் தேக்கரண்டி முட்டை மஞ்சள் கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தை அதை ஏற்றுக் கொண்டால், பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். முட்டை மஞ்சளை, மிருதுவான கஸ்டர்டுகளிலும் கொடுக்கலாம். முட்டை வெள்ளை சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குவதால் 10 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம். அதன் பிறகு முழு முட்டையை மிருதுவாக வேக வைத்தோ அல்லது போச்சிங் (Poached) செய்தோ கொடுக்கலாம்.

வேக வைத்து மசித்த மாமிசம், வேக வைத்த மீன் இவற்றுடன் சிறிது உப்பும், வாசனையும் சேர்த்துக் கொடுக்கலாம். பருப்பு வகைகளைத் தானியங்களுடன் சேர்த்து நன்கு வேக வைத்த கிச்சடி அல்லது பொங்கல் அல்லது கஞ்சியாக கொடுக்கலாம். பருப்பு வகைகள் மற்றும் மாமிசம் தயாரிப்புகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுப்பதன் மூலம், வாரத்தில் 3-4 முறை குழந்தைக்கு இந்த உணவுகள் கிடைக்கும்.

திட துணை உணவுகள்

குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது திட உணவு ஆரம்பிக்கலாம். சமைக்கப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் கொடுக்கலாம். திட திரவ உணவுகள், குழந்தைக்கு பழக்கமான பிறகு இட்லி, சப்பாத்தி, சாதம் மற்றும் பருப்பு போன்ற திடப்பொருட்களைக் கொடுக்கலாம். மசித்த மாமிசத்திற்குப் பதிலாக கொத்துக்கறி கொடுக்கலாம்.

சிறிதாக நறுக்கி வேக வைத்த காய்கறிகள், கீரைகள் மிருதுவாக வேக வைக்கப்பட்ட அல்லது பச்சை கேரட், தோலும், விதைகளும் நீக்கப்பட்ட பழத்துண்டுகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவு சாப்பிடக் கொடுக்கும் போது, குழந்தைக்கு குடிக்க நிறைய நீர் கொடுக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை, சிறிது சிறதாக ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 முறை கொடுக்க வேண்டும். வெய்யில் நாட்களில் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்.

இளங்குழுவிகளுக்கான சீருணவு (6-12 மாதங்கள்)

உணவுத் தொகுதி அளவு

  • தானியங்கள் 45 கிராம்
  • பருப்புவகைகள் 15 கிராம்
  • பால் 500 மி.லி
  • வேர்களும், கிழங்குகளும் 50 கிராம்
  • கீரைகள் 25 கிராம்
  • காய்கறிகள் 25 கிராம்
  • பழங்கள் 100 கிராம்
  • சர்க்கரை 25 கிராம்

தாய்பாலை தவிர்த்து, பாலின் அளவுக் கொடுக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுக்கும்போது 200 மி.லி. பால் தேவைப்படும்.

6-12 மாதங்களான இளங்குழவியின் உணவூட்டத்திற்காக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பல்வேறு உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வயதைப் பொருத்து உணவுத் தயாரிப்புகள் சிறப்பாக மாற்றி அமைக்க வேண்டும்.

இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்

  1. ஒரே ஒரு உணவு மட்டும் தான், புதியதாக அறிமுகப்படுத்த வேண்டும்.
  2. ஆரம்பத்தில், புதிய உணவைக் குறைந்த அளவே கொடுக்க வேண்டும். குழந்தை விரும்ப ஆரம்பித்தால் சிறிது சிறிதாக அளவை அதிகரிக்க வேண்டும்.
  3. குழந்தையைக் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டக்கூடாது. குழந்தை ஏதாவது உணவை விரும்பவில்லையென்றால், அதை தொடராமல் வேறு உணவை அளிக்க முயற்சிக்க வேண்டும். அந்த உணவை 2-3 வாரங்கள் கழித்து கொடுத்து பார்க்க வேண்டும். குழந்தை தொடர்ந்து அந்த உணவை நிராகரித்தால், அந்த உணவுக்குப் பதிலாக வேறு உணவை மாற்றி அமைக்க வேண்டும்.
  4. மசாலா நிறைந்த உணவைக் கொடுக்க கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  5. பல்வேறு மாற்றங்களைச் செய்து குழந்தையின் உணவைக் கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டியது அவசியம். குழந்தை ஒரு உணவை விரும்பி உண்ணத் தொடங்கியவுடன், அடுத்த புதிய உணவை ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதிய உணவு வகைகளை நாளடைவில் குழந்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கும். குழந்தை வளர, வகை உணவின் நிறம், மணம், தன்மை, வடிவம் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  6. குழந்தைக்கு நல்ல உணவுப் பழக்கங்களை உண்டுபண்ண, எல்லாவகையான உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் முன்னால், பெற்றோர் அவர்களுடைய உணவைப் பற்றிய சொந்த விருப்பு, வெறுப்புக்களை காட்டக் கூடாது.

குறைந்த விலை துணை உணவுகள்

  • பேறு காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு (feeding a preterm baby) 37 வாரங்களுக்கு முன்னதாகப் பிறந்த குழந்தைகள் (preterm) பேறுகாலத்திற்கு முன் பிறந்தவர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் கர்ப்பப்பையில் இருக்க வேண்டியக் காலத்தில் எத்தகைய வளர்ச்சி விகிதத்தை அடைந்திருப்பார்களோ, அதே அளவு வளர்ச்சி விகிதத்தை பெற உணவு அளிப்பதே, இவர்களுக்கு உணவு அளிப்பதன் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
  • வளர்ச்சி அதிகரிப்பு காட்டாத, பேறுகாலத்திற்குமுன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல்வாரத்தில் சக்தி தேவை. 60கி.க/கி.கி உடல் எடை/தினம் ஆக இருக்கும். முதல் இருவாரங்கள் கழித்து, திருப்திகரமான வளர்ச்சிக்கு சக்தி தேவை. 120 -150 கி.க/கி.கி உடல் எடை/தினம் தேவைப்படும். எடையேற்றம் இல்லாத குழந்தைகள், அறுவை சிகிச்சையில் பிறந்தவர்கள் மற்றும் மிக மோசமான பிரிடெர்ம் குழந்தைகள் ஆகியோருக்கு கலோரிகள் மிக அதிகமாகத்தேவைப்படும்.
  • இவர்களுக்கு தேவைப்படும் திரவத்தின் அளவு முதல் வாரத்தில் அதிகமாக இருக்கும். 7 -10 நாட்களுக்கு திரவம் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு 90 -100 மி.லி/கி.கி உடல் எடை/தினம் என்ற அளவில் இருக்கும். ஒளி சிகிச்சை (photo therapy) அல்லது கதிரியக்க வெப்பமூட்டி (radiant Warmer) ஆகியவற்றில் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதலாகத் திரவம் கொடுக்கப்பட வேண்டும்.
  • குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் லாக்டோஸை ஏற்றுக் கொள்வதில் சிரமப்படுவர். அவர்களுக்கு குளுகோஸ் பாலிமர் கொடுத்தால் ஏற்றுக் கொள்வர்.
  • இவர்களின் வேகமான உடல் வளர்ச்சிக்காக 3 - 4 கிராம் புரதம்/ கி.கி உடல் எடை தேவைப்படும். இவர்களுக்கு சிஸ்டின், டாரின், அலனைன் மற்றும் ஆர்ஜினின் போன்ற அமினோ அமிலங்கள் அவசியமாகும். இவை தாய்ப்பாலில் காணப்படுகின்றன.
  • குறைந்த பிறப்பு எடைக் குழந்தைகள் செறிவூடடப்பட்ட டிரைகிளிசரைடுகளை சீரணிக்கவோ, தன்மயமாக்கவோ சிரமப்படுவர். தாவர எண்ணெய்களில் காணப்படும் செறிவூட்டப் படாத நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் இவர்களால் சுலபமாக தன்மயமாக்கிக் கொள்ளப்படும்.
  • இவற்றை விட மிதமான சங்கிலி டிரைகிளிசரைடுகள் சிறந்தது. செரித்தலுக்கும், உறிஞ்சுதலுக்கும் இவற்றிற்கு பித்த உப்புக்கள் அதிகமாகத் தேவைப்படுவதில்லை.
  • ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கூடுதலாக தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைவு 6 - 12 வாரங்களில் ஏற்படலாம். எனவே 2.5 மி.கி/கி.கி உடல் எடை/தினம் என்ற அளவில் இரும்புச்சத்து 6 - 8 வாரங்கள் முதல் கொடுக்கப்பட வேண்டும்.
  • தாய்ப்பாலில் உள்ளதைவிடக் கூடுதலாக வைட்டமின்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

பிரிடெர்ம் குழந்தைகளுக்கு (Preterm) தாய்ப்பாலே சிறந்த உணவு. ஏனெனில் இத்தகைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு, தாய்ப்பாலில் இயற்கையாகவே, குழந்தைக்கு ஏற்ற வகையில் அதிக கலோரி, கொழுப்பு, புரதம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவுகள் உள்ளது. தாய்பாலின் நுண்ணுயிரிகளை அழிக்கும் பண்பு இவர்களுக்கு அதிமுக்கியத் தேவையாகும். இவர்களின் எடையேற்றம் திருப்திகரமாக இல்லையென்றால் தாய்ப்பால் மட்டுமின்றி, கூடுதலாக சோள எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் கொடுக்கலாம். இவை உணவின் கனஅளவை அதிகப்படுத்தாமல் அதே சமயம் கலோரியின் அளவை அதிகரிக்கக் கூடியது. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் விலங்குகளின் பாலோ அல்லது செயற்கை பால் உணவுகளோ கொடுக்கப்படலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்

2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top