பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / உணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்

பல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம்.

அறிமுகம்

உடலியக்கத்திற்கும், சீரான ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் போதுமான அளவுகளில் உணவுச் சத்துக்கள் உணவின் மூலமாக நம் உடலுக்கு அளிக்கப்படுகின்றன. அவை கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நீர் ஆகும். பல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் நோய்கள்

புரதக் கலோரி குறை நோய்கள் (PEM)

புரதக் கலோரி குறைநோய் என்ற சொல் பரந்த உருவெளியில் பல்வேறு மருத்துவ நிலைகளில் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் குவாஷியோர்க்கர், (சவலை) நோயும், மராஸ்மஸ் (நோஞ்சான்) நோயும் மற்றும் லேசான பாதிப்படைந்து வளர்ச்சி குன்றுதல் நோயும் முக்கியமாக கண்டறியப் பட்டுள்ளது. இந்நோய்கள் பால் அருந்தும் பழக்கம் நிறுத்தப்படும் குழந்தைகளிடத்தில் மற்றும் முன் பள்ளிப் பருவ குழந்தைகளிடத்திலும் இந்தியா மற்றும் பல வளரும் நாடுகளில் அதிகமான அளவில் பரவலாகக் காணப்படுகின்றது.

சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகள்

  • வறுமையின் விளைவாக உணவு பற்றாக்குறை அதிக மக்கள் நெரிசல், மற்றும் அசுத்தமான வாழ்க்கை நிலை, ஒழுங்கற்ற குழந்தை பராமரிப்பு முறை போன்றவை அதிக அளவில் புரத பாதிக்கப்படுவர். சவலை நோய் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

புரதக் கலோரி குறை நோயின் ஐந்து தோற்றங்கள்

உயிரியல் காரணிகள்

தாய்க்கு கர்ப்பகாலத்திற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் ஏற்படும் ஊட்டக் குறைவே குறைவான எடையுடன் கூடிய குழந்தை பிறப்பதற்கு காரணமாகிறது. புரதக் கலோரி குறை நோய்க்கு தொற்று நோய்களே முதன்மையான பங்கு வகித்து, அதிவிரைவாக நோய் ஏற்படுத்தும் காரணியாகும். வயிற்று போக்கு நோய்கள், மணல் வாரி அம்மை மற்றும் சுவாச நோய்களும் மற்ற பிற தொற்று நோய்களும் புரதம் மற்றும் சக்தி சமன்பாட்டில் மாறுபட்ட விளைவை ஏற்படுத்துகிறது.

சுற்றுப்புறச் சூழலில் உள்ள காரணிகள்

  • அதிகமான மக்கள் நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் மிக சுலபமாக தொற்றக் கூடிய வயிற்றுப் போக்கு போன்ற தொற்றுக்களை ஏற்படுத்தும். விவசாயம் செய்யும் முறைகள், பஞ்சம், வெள்ளப் பெருக்கு, நில நடுக்கங்கள், போர் மற்றும் கட்டாயத்தின் காரணமாக இடம் பெயர்தல் ஆகியன சுழலாக திடீர் அல்லது நீண்ட உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தும்.
  • மிக மோசமான சேமிப்பு நிலை மற்றும் குறைபாடுள்ள உணவு பகிர்ந்தளிப்பு ஆகியவை அறுவடைக்கு பிறகு உணவு வீணாவதற்கான காரணங்கள் ஆகும்.

வயது

  • குழந்தைகள் மற்றும் சிறார்களின் வயது வளர்ச்சிக்கு ஏற்ப ஊட்டச் சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது.
  • நீண்ட காலத்திற்கு சத்துக் குறைவான உணவினை உட்கொள்வதன் விளைவாக, ஒரு வயது நிறைவடையும் முன்பே நோஞ்சான் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நோயின் முக்கிய மருத்துவ அடையாளம் மற்றும் அறிகுறிகள் ஆவன:

பொதுவாக புரதங்கள் மற்றும் கலோரிகள் குறைபாட்டினால் ஏற்படும் வளர்ச்சியில் தடை. பற்றின்மை மற்றும் எரிச்சலுறுதல் ஆகிய மனநிலை மாற்றங்கள். தசை வீணாதல். முதலில் பாதங்கள் மற்றும் கீழ் காலில் நீர் கோர்வை ஏற்பட்டு, பிறகு கைகள், தொடைகள் மற்றும் முகத்தில் நீர் கோர்வை ஏற்படும்.

கொழுப்பு படிந்த, பெருத்த கல்லீரல் பசியின்மை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தனிச்சிறப்பு பண்புகளுடன் கூடிய தோலில் மாற்றங்கள் - அதிக அடர்வான நிறமி கருங்காபி நிறத்துடன், தோல் பரப்பில் பிட்டம் மற்றும் தொடைகளின் பின்புறம் ஆகிய இடங்களில் பல வடிவங்களில் பிளவுப்பட்ட தோல் அழற்சி தோன்றும்.

இரத்த சோகை உயிர்ச் சத்து - A குறைபாடு கலோரி குறைவு ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். தாய்ப் பால் புகட்டும் வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பால் புகட்டும் குறுகிய காலம் ஆகியவற்றோடு, பால் மறக்கடித்த பின், பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் ஆகியவற்றின் குறைபாடுகள் புரதக் கலோரி குறைநோய் ஏற்பட முக்கியக் காரணங்கள் ஆகும்.

நோஞ்சான் சவலை இதில் நோஞ்சான், சவலை நோய்களின் அறிகுறிகள் சேர்ந்து குழந்தையிடம் காணப்படும். சத்துணவு குறைபாட்டால் ஏற்படும் குள்ளத் தன்மை அல்லது வளர்ச்சியின்மை சில குழந்தைகள் தொடர்ச்சியாக உணவு - சக்தி மற்றும் புரதம் பற்றாக்குறைவினால் ஒரு குறிப்பிடும் படியான வளர்ச்சி குன்றுதலுக்கு ஆளாகின்றனர். எடை மற்றும் உயரம் ஆகியன ஒரே விகிதத்தில் குறைக்கப்பட்டு, பின் அக்குழந்தை வெளிப்புறமாக சாதாரண குழந்தைகளைப் போல தோன்றுவர். எடைக் குறைவான குழந்தை மருத்துவ பரிசோதனையின்றி, சாதாரணமாக புரதக் கலோரி குறைநோயால் தாக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அவர்களது எடை வயது அல்லது உயரத்தை வைத்து, ஒப்பிட்டு கண்டறியலாம். அவர்கள் உடலில் மிகவும் குறைந்த அளவில் பிளாஸ்மா புரதம் இருக்கும். இக்குறைபாடு உள்ள குழந்தைகளை சுவாச மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட தொற்றுகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை

நோஞ்சான் (Marasmus)

இந்நோயின் அடையாளம் மற்றும் அறிகுறிகளாவன : கடுமையான வளர்ச்சி குன்றுதல், தோலடியில் உள்ள கொழுப்பு இழப்பு, கடுமையான தசை வீணாதல். குழந்தை திகைக்க வைப்பது போன்ற ஒல்லியான உடலுடன், சுருக்கங்கள் கொண்ட தோலுடன் எலும்புக் கூடு தோற்றம் கொண்டிருக்கும்.

சிகிச்சை முறையை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலைமைகளை பகுத்தறிய வேண்டும். ஊட்ட நிலையை மீண்டும் பெற வேண்டும். ஊட்ட நிலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

உயிர்ச்சத்துக்களின் குறைவால் ஏற்படும் விளைவுகள்

உயிர்ச்சத்து A (ரெட்டினால்) :

உணவில் உயிர்ச்சத்து A குறைவால் ஏற்படும் முக்கியமான நோய்களாவன:

அ. மாலைக்கண் நோய் (Night blindness) மூன்று நிலைகளில் சிகிச்சை செய்யப்படுகிறது

மருத்துவமனையில் சிகிச்சை

பின்வரும் நிலைமைகளை சரிபடுத்த வேண்டும். ஹைபோதெர்மியா, ஹைபோகிளைசீமியா, தொற்று நோய்கள், நீர்வற்றிப் போதல், தாதுப் பொருட்கள் நிறைந்த கரைசல், நீர்மத்தில் - தாது உப்புக்கள் சரிசமமாக இல்லாதிருத்தல், இரத்த சோகை மற்றும் பிற உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் குறைபாடு நோய்கள்

உணவுத் தரம் மேலாண்மை

உணவுத் திட்டமிடுகையில், அந்தப் பகுதியில் கிடைக்கும் முக்கியமான உணவுப் பொருட்களைக் கொண்டு திட்டமிட வேண்டும். விலை குறைவானதாக, எளிதாக ஜீரணிக்கக் கூடியதாக, நாள் முழுவதற்கும் சரியான சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் மற்றும் உணவு உட்கொள்ளுதல் உணவு வேளைகளை அதிகரித்தல்.

மறு சீரமைப்பு

ஊட்ட நிலை மறுசீரமைப்பின் அடிப்படை என்பது செயல்முறையில் ஊட்டச்சத்து பற்றிய பயிற்சியை தாய்மார்களுக்கு அளிப்பதாகும். இப்பயிற்சியின் மூலம் குழந்தைகள் ஆரோக்கிய நிலையை மீண்டும் அடைவதற்கு தாய்மார்கள் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஊட்டம் நிறைந்த உணவை தயாரித்து குழந்தைகளுக்கு தருவதை, மேற்பார்வையிடப் படுகிறார்கள்.

தடுக்கும் முறைகள்

  • தாய்ப்பாலில் இருந்து மாற்று உணவுக்கு மாறுதல் குறைவான செலவில் மாற்று உணவு தயாரிப்பதில் வளர்ச்சி சத்துணவு கல்வி மற்றும் சரியாக உணவு உண்ணும் பழக்க வழக்கங்களை கடைபிடித்தல்.
  • ஆரம்ப நிலையில், உயிர்ச்சத்து A குறைவு ஏற்படும் போது, பாதிப்படைந்தவரால் குறைந்த வெளிச்சத்தில் தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படும். கடுமையான குறைபாடு ஏற்படும் போது, பாதிப்புக்கு உள்ளானவர் குறைந்த வெளிச்சத்தில் பொருளை பார்க்கவே முடியாது.
  • நீர்க்கசிவற்ற கண் இமை இணைபடல அழற்சி (Xerosis Conjunctiva): கண் இமை இணை படலமானது வறண்டு, தடித்து, சுருங்கி, நிறம் மாறி தோற்றம் அளிக்கும். நிறமியின் செயலால் இமை இணை படலம் மங்கலாக தெளிவற்று புகை போன்று தோன்றும்.
  • நீர்க்கசிவற்ற விழிவெண்படல அழற்சி (Xerosis cornea): வறட்சி பரவி வெண்படலத்தை தாக்கும் போது, மங்கலாக பளபளப்பு இன்றி தோற்றம் அளிக்கும்.
  • பைடாட்ஸ் புள்ளிகள் (Bitot's spots) : சாம்பல் நிறத்தில் மினுமினுப்புடன் வெள்ளை நிற தழும்பு போல புள்ளிகள் பொதுவாக முக்கோண வடிவில், இமை இணை படலத்துடன் இணைந்து இருக்கும் எப்பித்தீலியல் செல்கள், செதில்களாகி அதன் அமைப்பில் மாறுபட்டு தடிமனாகி விடுகிறது.
  • பாளிகுளர் ஹைபர்கெராடாசிஸ் (Follicular Hyperkeratosis) தோல் வறண்டும், கடினத்தன்மையுடன் இருக்கும்.

இதற்கான தேசிய அளவிளான நோய்த்தடுப்பு வைட்டமின் A குறைபாடு ஒழிப்பதற்கு (National prophylaxis programme) மாலைக்கண் நோய்க்கு 2,00,000 IU வைட்டமின் A (எண்ணெயில்) ஆறு மாதத்திற்கொருமுறை, பள்ளி பருவம் அடையாத (Preschool) பிள்ளைகளுக்கு அளித்தல்.

உயிர்ச்சத்து D

கெரட்டோமலேசியா (Keratomalacia)

நீர்க்கசிவற்ற விழி இமை இணைபடலம் மற்றும் வெண்படல கண் அழற்சி ஏற்படும் போது சிகிச்சை செய்யப்படவில்லையெனில், இந்நோயின் நிலை கடுமையாகி 'கெரட்டோ மலேசியா' என்று அழைக்கப்படுகிறது.

ரிக்கெட்ஸ்

ரிக்கெட்ஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டால், முக்கியமாக மார்பறை சுவர் (மணி கோர்த்தது போல), இடுப்பு இடைப்பகுதி மற்றும் கணுக்கால் (தடிமனாவது) மற்றும் பல்வேறு அழகை பாழாக்கும் கூறுகள் (தொட்டிக்கால், முட்டிக்கால், வளைந்த கால்கள்) உருவாவதே அறிகுறிகளாகும். ரிக்கெட்ஸால் பாதிக்கப்படும் குழந்தை அமைதியின்றி, சிடுசிடுப்புடன், தளர்ந்த தொங்கும் தசையுடன் வெளிறிய தோற்றம் கொண்டு இருக்கும்.

ஆ. வீக்கத்துடன் மென்மையான மூட்டுக்கள், பல்வேறு திசுக்களில் இரத்தக் கசிவு மற்றும் மூட்டுக்களில் வலியும் இருக்கும்.

இ. ஈறுகளில் இரத்தக் கசிவும், உறுதியற்ற பற்களும் இருக்கும். குழந்தை பருவத்தில் ஸ்கர்வி ஏற்பட்டால், குழந்தையானது தூக்கும் போதும், நகரும் போதும் அல்லது அக்குழந்தையை கையாளும் போதும் கத்தி அலறும். கை, கால் உறுப்புகளில் வலியும், மிருதுவான தன்மையும் ஏற்படும்.

உயிர்ச்சத்து B, (தயாமின்)

இக்குறைகளை இணைத்துப் பார்க்கும் போது இயற்கைக்கு மாறான தோற்ற அமைப்பை போல் இருக்கும். வளர்ச்சி தடைபட்டு, பல் வெளிவருவதும் தாமதமாகிறது. உட்காருதல், நிற்றல், தவழ்தல், நடத்தல் போன்றவை நடைபெறுவதிலும் சாதாரணமாக ஒத்த வயதினரை விட மிகவும் பின்னடைந்து இருப்பார்கள்.

வயிற்றுப் பகுதி அசாதாரணமாக பெருத்து 'பானை வயிறு' போல தோன்றும்.

ஆ. ஆஸ்டியோ மலேசியா இதற்கு பெரியோரை தாக்கும் ரிக்கெட்ஸ் என்று பெயர். இது பொதுவாக கர்ப்பிணி பெண்களிடம் காணப்படுகிறது. எலும்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், ரிக்கெட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களை போல் ஒத்து இருக்கும். எலும்புகளில் வலி இருக்கும். இருந்து கொண்டே லேசாக ஆரம்பிக்கும் வலி, பிறகு கடுமையானதாகி விடும். தசைகளில் பலவீனம் இருக்கும். நோயால் தாக்கப்பட்டவர் படிக்கட்டுகளில் ஏறவும், நாற்காலியில் இருந்து இறங்கவும் சிரமப்படுவார்கள்.

உயிர்ச்சத்து E (டோக்கோஃபிரால்)

விலங்குகளில் உயிர்ச்சத்து E குறைவு ஏற்படும் போது இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலைமை, கல்லீரல் நெக்ரோசிஸ், போன்ற பல்வேறு நோய்கள் உண்டாகும்.

உயிர்ச்சத்து K

இவ்வுயிர்ச்சத்துக் குறைபாட்டினால் உள்ளுறுப்புகளில் இரத்தக் கசிவு ஏற்படும்.

உயிர்ச்சத்து C (அஸ்கார்பிக் அமிலம்)

  • கடுமையான உயிர்ச்சத்து C குறைவின் விளைவாக ஸ்கர்வி நோய் ஏற்படும். இந்த நோயின் பண்புகளாவன.
  • அ. கை, கால் தசைகளிலும், எலும்புகள் மூட்டுகளிலும் வலியுடன் மூச்சிரைத்தல் உடல் வலுவிழத்தல் முதலியன தொடர்ந்து ஏற்படும்.
  • தயாமின் குறைவு ஏற்படும் போது பெரிபெரி என்னும் நோய் மனிதர்களில் காணப்படுகிறது.
  • ஈர பெரிபெரி, உலர்ந்த பெரிபெரி ஆகிய இரு வகையான பெரிபெரிக்கள் பெரியோர்களிடம் காணப்படுகின்றன.
  • பெரிபெரியின் முதல் அறிகுறியானது னொரெக்சியா (பசியின்மை), கால்கள் கனமாகவும், வலிமையின்றியும் இருத்தல்.
  • கால்கள் உணர்ச்சியற்று மரத்துப் போதல் மற்றும் வலியும் இருக்கும். பாதிக்கப்பட்டோர் வலிமை இழந்தும் அதிகமாக சோர்வுற்றும் காணப்படுவர்.
  • நீர் கோர்த்து வீங்கியிருப்பது, ஈர பெரிபெரியின் தனிச் சிறப்பு ஆகும். ஆடுதசைகள், கொண்டைகால், பின் கால் தசை (Calf muscle) வீங்கி இருக்கும்.
  • நாடித் துடிப்பு மிக வேகமாக தூக்கிபோடுவதாக இருக்கும். இருதயம் வலிமையற்று போய்விடும்.
  • இதனால், இருதய செயலிழப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும். குழந்தைப் பருவ பெரிபெரியில், முதன்மையான அறிகுறிகள் என்னவென்றால், அமைதியின்மை, தூக்கமின்மை மற்றும் இருதய செயலிழப்பு ஆகும்.

உயிர்ச்சத்து B, (ரைபோஃபிளேவின்)

ரைபோஃபிளேவின் குறைவின் காரணமாக ஏற்படும் நோய்களின் பண்புகள் ஆவன:

மைனா வாய் (ஆங்குலர் ஸ்டோமாடைட்டிஸ்) : வாயின் ஓரங்களில் காணப்படும் வெடிப்புடன் கூடிய புண்களே ஆங்குலர் ஸ்டோமாடைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது.

கீலோசிஸ் (Chellosis) : இந்த நிலைமையில் உதடுகள் உலர்ந்து வெட்டுப் பிளவுகளுடன் காட்சி அளிக்கும். ரைபோபிளேவின் குறைபாடுள்ள குழந்தைகளிடம் பழக்க வழக்க நடவடிக்கைகளில் மாறுபாடு ஏற்படும்

உயிர்ச்சத்து B, (நயாசின்)

நயாசின் குறைபாடு 'பெல் லாகரா' என்ற நோயை மனிதர்களிடம் ஏற்படுத்துகிறது. பெல்லகரா நோயினை 3D நோய் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை Diseases of 3D's என்று கூறுவர். ஏனெனில் இந்நோயில், டையேரியா, டெர்மடைட்டிஸ், மற்றும் டிப்ரஷன் (Diarrhoea, Dermatitis, Depression) ஏற்படும்.

அ. நாக்கில் அழற்சி மற்றும் வயிற்றுப் போக்கு (Glossitis and Diarrhoea)

இவை இரண்டும் மிக முக்கியமான அறிகுறிகள். தலை சுற்றல், வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை பல நோயாளிகளிடம் காணப்படுகிறது.

ஆ. தோல் அழற்சி (Dermatitis)

இந்நோயின் மிக முக்கிய அறிகுறி தோல் அழற்சி ஆகும். மிகவும் பொதுவான உறுப்புப்பகுதி தோல் அழற்சியால் பாதிக்கப்படுவது எதுவெனில் நகங்கள் மற்றும் கைகளின் பின்புறம், முன்கைகள் மற்றும் கழுத்து.

இ. லேசான மனநிலை பாதிப்புகள்

எரிச்சலுறுதல், மந்தமான நிலை மனதை ஒரு நிலை படுத்த முடியாமை மற்றும் ஞாபக மறதி முதலியவற்றை உள்ளடக்கிய குறைபாடுகள் நயாசின் குறைவால் ஏற்படும் குறைநோய் ஆகும்.

உயிர்ச்சத்து B (பைரிடாக்சின்)

பைரிடாக்சின் குறையும்போது பின் வரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

  • ஹைபோகுரோமிக் மைக்ரோசைடிக் அனீமியா
  • தூக்கம் பாதிப்படைதல், எரிச்சலுறுதல், மனச்சோர்வுடன் இருத்தல்
  • மைனாவாய், நாக்கு அழற்சி, மற்றும் கீலோசிஸ் ஆகியவற்றை பாலூட்டும் தாயிடம் காணலாம்.

பான்டோதெனிக் அமிலம்

இச்சத்துக் குறைபாட்டினால் தலைசுற்றல், வாந்தி, கைகளில் நடுக்கம், எரிச்சலுடன் இருத்தல், மற்றும் கால்களில் எரிச்சல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும்.

போலிக் அமிலம்

இச்சத்துக் குறைவு ஏற்படும்போது குறைந்த வருவாய் பிரிவிலுள்ள கர்ப்பிணி பெண்களிடத்தில் மெகலோ பிளாஸ்டிக் அனீமியா என்ற நோய் ஏற்படும் (Megaloblastic Anaemia).

உயிர்ச்சத்து B

இச்சத்துக் குறைவு ஏற்படும் போது மனிதர்கள் பெரினீசியஸ் அனீமியாவால் (Perinicious Anemia) பாதிக்கப்படுகின்றனர். நாக்கு அழற்சி மற்றும் வீக்கத்துடன் புண்கள், பொதுவாகக் காணப்படுகின்றன.

பாரஸ் தீசியா (Parasthesia) - இந்நிலையில் கை, கால் விரல்களில் உணர்ச்சி இன்றி மறத்து, கூச்சம் ஏற்படுதல் ஆகியவை காணப்படும்.

உயிர்ச்சத்து B, குறைபாடு முக்கியமாக சைவ உணவு உண்பவர்களை அதிக அளவில் தாக்குகிறது.

தாது உப்புக்களின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

கால்சியம்

கால்சியம் குறைவு 'ஆஸ்டியோபோராசிஸ்' என்ற நோயினுக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் எலும்பின் எடை குறைந்து, அடர்வும் குறைந்து இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் நடுத்தர வயதினரிடமும், வயதான பெண்களிடத்திலும் அநேகமாக காணப்படுகிறது. அதிகமான அளவில் எலும்புகள் பாதிப்பு அடைந்து எலும்பு முறிவுகள் ஏற்படுவதே இந்த நோயின் முக்கியமான அறிகுறியாகும். கடுமையான எலும்பு வலியும், பொதுவாக நொறுங்கும் தன்மையுடைய எலும்புகளில் சிறிய அதிர்ச்சியிலும் முறிவு ஏற்படும்.

மெக்னீசியம்

குறைபாட்டினால் ஏற்படும் முதன்மையான மருத்துவம் சார்ந்த நோயின் பண்பு யாதெனில் மன அழுத்தம், தசைகளில் சோர்வு, தலை சுற்றல் மற்றும் வலிப்புடன் கூடிய உடல் குலுக்கம்.

இரும்பு

இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை நோய் ஏற்படும். இந்நோய் அதிகமாக குழந்தைகள், இளம் வாலிப பருவ பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களை வளரும் நாடுகளில் தாக்குகிறது. மருத்துவம் சார்ந்த பண்பு என்னவென்றால், இரத்தத்தில் குறைவான ஹீமோகுளோபின் அளவினால் பிராணவாயுவை செல்கள், தசைகள் ஆகியவற்றிக்கு எடுத்துச் செல்வது குறைதல் போன்ற விளைவு ஏற்படுகிறது.

இந்நோயின் அறிகுறிகளாவன - தோல் வெளிறிக் காணப்படுதல் ஆகும். நகங்கள் மென்மையானதாகவும், தட்டையாக, கரண்டி போன்ற வடிவத்துடன் ('கோயிலானிசியா') (Koilonychia) காணப்படுதல் ஆகும். கீழ்வரும் படத்தில் கோயிலானி சியா நோய் உருவாகியுள்ளதைக் காணலாம்.

மற்ற அறிகுறிகளாவன சோர்வுறுதல், விரைந்து செயல் புரியும்போது மூச்சிரைப்பு ஏற்படுதல், தலை சுற்றல், தலைவலி, பார்வை மங்குதல், தூக்கமின்மை, பாரஸ்தீசியா (அதாவது கை, கால்களில் கூச்சத்துடன் நடுக்கம்), மற்றும் நெஞ்சுவலி கடுமையான நிலைகளில் கணுக்காலில் நீர்த் தேக்கம் காணப்படுகிறது.

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரும்புச் சத்துக்குறை இரத்தசோகை ஏற்படும்போது மண் உண்ணும் பழக்கம் காணப்படுகிறது.

சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளாவிய மக்கட்தொகையில் வளரும் நாடுகளில் இரத்த சோகை நோய் 30%க்கும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இரத்த சோகை தாக்கப்பட்டுள்ளவர்களில் ஆண்களை விட பெண்களே அனைத்து நிலையிலும் 20 - 70% வரை பாதிப்படைந்துள்ளனர். தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின்படி, இரத்த சோகை என்பது அனைத்து இளம் பருவ வயது பிரிவுகளில் (சமூக பொருளாதார நிலையினை பொருட் படுத்தாமல் கண்டறிந்துள்ளபடி) 20 - 25% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய ஊட்டக்குறைவு இரத்த சோகை நோய் தடுப்புத் திட்டம் அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரும்பு மற்றும் போலேட் மாத்திரைகளை கர்ப்பிணி பெண்கள் மற்றும் முன் பள்ளி பருவ குழந்தைகளுக்கு விநியோகம் செய்கிறது.

ஐயோடின்

அயோடின் சத்து உணவில் குறைந்தால், தைராய்டு சுரப்பி பெருத்துவிடும் நிலை ஏற்பட்டு அதன் விளைவாக காய்ட்டர் என்ற நோய் ஏற்படும். இந்தியாவில் காய்ட்டர் உள்ள சில இடச்சூழலில் நோயால் தாக்கப் பட்ட மக்களை கொண்ட மண்டலம் மலைச்சரிவுகளில், மலை அடிவாரத்தில் மற்றும் இமாலய மலை சமவெளிகளிலும் உள்ளன. காய்ட்டர் நோயால் தாக்கப்பட்ட மக்கள் ராஜஸ்தானில் ஆரவல்லி மலைகளிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலை தொடர்களிலும், குஜராத்தில் உள்ள நர்மதா பள்ளத் தாக்கிலும், ஒரிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதியிலும் மற்றும் கர்நாடகா, கேரளா மாநில தேயிலை எஸ்டேட்களிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

துத்த நாகம் (Zinc)

கடுமையான துத்தநாகம் குறைபாட்டின் விளைவாக 'அக்ரோடெர்மடைட்டிஸ் என்டரோபத்திக்கா' ஏற்பட்டு, இதன் விளைவாக கடுமையான தோல் நோய், குழந்தைக்கு பிறந்த ஒருசில மாதங்களில் ஏற்படும். ஹைபோகிஸியா (சுவை குறைதல்) மற்றும் ஹைபோஸ்மியா (மணம் கண்டறிவதில் குறை ஏற்படுவது) ஆகியன நடுத்தர அளவு துத்தநாகம் குறைவினால் ஏற்படும். இக்குறைபாடு துத்தநாகம் சத்தை உணவுடன் எடுத்துக்கொள்ளும் போது சரியாகிறது.

சிகிச்சை உணவுகள்

சிகிச்சைக்கான சத்துணவு என்பது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ஊட்டசத்துச் சம்பந்த முடையதாகவும், நோயாளிக்கு சரியான சிகிச்சை உணவுகளை வகுத்துரை செய்தலும் ஆகும். சிகிச்சை உணவின் முக்கிய நோக்கங்கள் ஆவன. 1. தற்போதுள்ள ஊட்டக் குறைவுகளை சரி செய்து, நோயாளியை சரியான ஊட்ட நிலையினில் பராமரித்தல்.

நோயாளியின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவுத் திட்டத்தினை, அவர்களது உணவு பழக்க வழக்கங்களை மனதில் கொண்டு திட்டமிட வேண்டும்.

கடுமையான அயோடின் குறைவு குழந்தைகளிடம் ஏற்பட்டால் மிக அபாயகரமான வளர்ச்சி குன்றல் ஏற்படும். அந்நிலைக்கு 'கிரிட்டினிஸம்' என்று பெயர். ஐயோடின் குறைவு ஏற்படும்போது, ஐயோடைஸ்டு உப்பு சேர்க்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளலாம்.

வகுத்துறை செய்யப்பட்ட உணவுத் திட்டத்தின் அவசியம் பற்றி நோயாளிக்கு அறிவுரை செய்தல்

சிகிச்சை உணவுகள் பல சமயங்களில் நோய்க்கான தீர்வாக அமைவதில்லை. ஆனால் துணை உணவின் நிறைவுக்காகவும் அல்லது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மிகுந்த பயனளிக்கச் செய்வதற்கும் ஒரு அளவு கோலாக சிகிச்சை உணவு விளங்குகிறது.

சிகிச்சை உணவினை திட்டமிடும்போது மனதில் கொள்ளவேண்டிய கருத்துக்கள்

நோய் நிலையினைப் பொருத்து உணவுத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் :

  1. நோயின் கால அளவு
  2. நோய் நிலைமைகளில் இருந்து மீண்டு வருவதற்கு உணவுத்திட்டத்தில் குறைக்கப்பட வேண்டிய குறிப்புகள்
  3. உணவினை நோயாளி வாய் மூலமாக உட்கொள்வதில் சகிப்புத் தன்மை

பல்வேறு நோய்களில் உணவுத் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள்

உணவுத் திட்டத்தில் நோய்களுக்காக செய்யப்படும் மாற்றங்களின் முக்கிய மூலக்கூறாவன.

  1. காரம், வாசனை, மசாலா போன்றவை தவிர்க்கப்பட்ட உணவுத்திட்டம்.
  2. குறைந்த நார்ச்சத்து அல்லது நார்ச்சத்து மிகுந்த உணவுத் திட்டம்.
  3. அதிக புரதம் அல்லது குறைந்த புரதம் உள்ள உணவுத் திட்டம்.
  4. கொழுப்பு மிகுந்த அல்லது கொழுப்பு குறைக்கப்பட்ட உணவுத்திட்டம்.
  5. அதிக கார்போஹைட்ரேட் அல்லது கார்போஹைட்ரேட் குறைந்த உணவுத்திட்டம்.
  6. அதிக கலோரி அல்லது குறைந்த கலோரி உணவுத்திட்டம்.
  7. சோடியம் குறைக்கப்பட்ட உணவுத்திட்டம்.

பல்வேறு நோய்களுக்கு, உணவுத்திட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களின் வகையாவன: 1. கார்போஹைட்ரேட் அளவில் மாற்றங்கள் செய்தல்

கல்லீரல் நோய்களிலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவினை அளிக்கலாம். கார்போஹைட்ரேட் கட்டுப்படுத்தப்பட்ட உணவு டையபட்டீஸ் மெலீட்டஸ் நோய் சிகிச்சையின்போது மிகவும் இன்றியமையாதது.

கலோரி அளவுகளில் மாற்றம் செய்தல்

ஜுரம், தொற்று நோய்கள் மற்றும் ஹைபர்தைராய்டிஸம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கலோரி சத்து மிகுந்த உணவை கொடுக்கலாம். குறைந்த கலோரி உணவானது, உடல் வாசனை, காரம் இன்றி தயாரித்து நோயாளிக்கு வழங்குவது. பருமன் மற்றும் இருதய நோய் சிகிச்சையின்போது கொடுக்கப் படலாம்.

உணவில் புரத அளவில் மாற்றம் செய்தல்

புரதக் கலோரி குறைநோய் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் நோயிலும் புரதம் மிகுந்த உணவு வகுத்துரைக்கப்படுகிறது. நெஃப்ரைட்டிஸ் மற்றும் ஹெப்பாட்டிக் கோமா ஆகிய நோய்களுக்கு குறைந்த புரதம் உள்ள உணவுத்திட்டம் அமைக்கப்படுகிறது.

கொழுப்புச் சத்து தேவை அளவில் மாற்றம் செய்தல்

கடுமையான ஊட்டக்குறைவு நிலையின் சிகிச்சையில், சாதாரணமாக உட்கொள்ளும் அளவினை விட சற்று அதிக அளவில் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இருதய நோய்களில், உடற்பருமன் மற்றும் கல்லீரல் நோய்கள் உள்ளோர் குறைந்த அளவு கொழுப்பு உட்கொள்ளவேண்டியது மிகவும் இன்றியமையாதது.

தாது உப்புக்கள் அளவுகளில் மாற்றம் செய்தல்

ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோ மலேசியா போன்ற நோய் சிகிச்சையில் அதிக கால்சியம் உள்ள உணவினை கொடுக்க வேண்டும். ஆனால் சிறுநீரகக் கற்கள் உள்ள நோயாளிக்கு கால்சியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவினை கொடுக்க வேண்டும். சோடியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவினை அதிக இரத்த அழுத்தம், இருதய செயலிழப்பு, சிறுநீரக நோயாளிகளுக்கும் கொடுக்க வேண்டும்.

நார்ச்சத்து அளவுகளில் மாற்றம் செய்தல்

நார்ச்சத்து மிகுந்த உணவு மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு வகுத்துரை செய்யப்படுகிறது. ஆனால் வயிற்றுப்போக்கு, இரைப்பைப்புண் மற்றும் சீதபேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோருக்கு குறைவான நார்ச்சத்து உள்ள உணவு இன்றியமையாதது.

மருத்துவமனையில் முறையான சிகிச்சையின் உணவுத்திட்டம்

தெளிந்த திரவ உணவு (Clear fluid diet)

இவ்வகை உணவுத் திட்டம் தெளிவான திரவத்தால் செய்யப்படுகிறது, இந்த உணவில் தெளிந்த திரவம் தவிர வேறு எதுவும் எஞ்சி இராது. இவ்வுணவு வாயு உருவாக்காத உணவு. எரிச்சல் ஏற்படுத்தாதது. மற்றும் தசைச்சுருக்க அசைவுகளை ஊக்கப்படுத்தாதது. திரவம் மற்றும் சில தாது உப்புக்களின் தேவைகளை இவ்வுணவானது பூர்த்தி செய்கிறது. இந்த திரவ உணவினை 1 முதல் 2 மணி நேர இடைவெளிகளில் கொடுக்க வேண்டும். பார்லி நீர், பருப்பு நீர், தேநீர் மற்றும் பால் சேர்க்காத காபி போன்ற உணவுகளை தெளிந்த திரவ உணவில் சேர்க்கலாம்.

முழு திரவ உணவு (Full fluid diet)

தெளிந்த திரவ உணவு மற்றும் மென்மையான உணவிற்கும் இடைப்பட்ட ஓர் உணவு. இவ்வுணவுத்திட்டத்தில், திரவமாக உள்ள உணவுகள் அடங்கும். அல்லது இரைப்பையை அடைந்த உடன் திரவமாக மாறக்கூடிய உணவை கொடுக்க வேண்டும். அறுவைசிகிச்சை, கடுமையான இரைப்பை அழற்சி, தொற்று நோய்களில் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ள சமயங்களில் முழு திரவ உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இவ்வுணவை 2 முதல் 4 மணி நேர இடைவெளிகளில் கொடுக்கலாம். கஞ்சி, பால் ஷேக்குகள், லஸ்ஸி, கஸ்டர்டுகள் போன்ற உணவுகள் முழு திரவ உணவில் அடங்கும்.

மென்மையான உணவு (Soft diet)

இவ்வுணவை கடுமையான தொற்று நோய்கள், அறுவை சிகிச்சைக்குப்பின் மற்றும் வாயால் உணவை மென்று விழுங்க முடியாதவர்களுக்கு பயன்படுத்தலாம். சாதாரண, எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளைக் கொண்டு மென்மையான உணவு செய்யப்படுகிறது. இவ்வுணவில் அதிக கடினமான நார்ச்சத்து மற்றும் தாளிதம் செய்யப்பட்டுகின்ற பொருட்கள் கிடையாது. இவ்வுணவில் 3 வேளை உணவுடன் இடைப்பட்ட உணவும் கொடுக்க வேண்டும்.

தனித்தன்மை வாய்ந்த உணவளிக்கும் முறைகள் (Special feeding methods)

குழாய் மூலம் உணவளித்தல் (Tube feeding)

குழாயை மூக்கின் வழியாக இரைப்பை அல்லது சிறுகுடலின் முதல் கூற்றை அடையச் செய்து உணவளித்தலுக்கு குழாய் மூலம் உணவளித்தல் என்று பெயர் அல்லது நேரடியாக அறுவை சிகிச்சை மூலமாக உணவை செலுத்த இரைப்பையில் அறுவை செய்தல் கேஸ்ட்ரோஸ்டோமி (gastrostomy) அல்லது ஜெஜூனோஸ்டோமி (jejunostomy) உணவளித்தல் என்றும் கூறுவர். குழாய் மூலமாக செலுத்தப்படும் உணவுகளில் கீழ் வருபவை அடங்கும்.

  • இயற்கையான திரவ உணவுகள்
  • திட உணவை நயமாக கலந்து திரவ உணவாக செய்தல்
  • வியாபார ரீதியாக தயாரித்து அளிக்கப்படும் மின் சேர்ம இயல்புடைய கலவைகள் (Polymeric mixtures) அல்லது இன்றியமையாத உணவுகள் - காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்றவைகள்.

குழாய் மூலம் உணவு செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  • போதுமான சத்துக்கள் நிறைந்த உணவினை மிக எளிதாக இம்முறையில் கொடுக்கலாம்
  • நோயாளிகள் விரும்பாத உணவுகள் மற்றும் மருந்துகளை குழாய் மூலமாக செலுத்தலாம்.

குடல் சாரா உணவளிக்கும் முறை (Parenteral feeding)

இம் முறையில் ஊட்டச்சத்து தயாரிப்புகள் நேரடியாக குருதிக்குழாய் நாளம் வழியாக செலுத்தப்படுகிறது. வாய்வழியாக சாதாரணமாக உணவளிப்பதற்கு இணையாக இம்முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நோயாளிக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் அளிக்கப்படுகிறது. அதனால், இம்முறை ''மொத்த குடல் சாறா சத்துணவு'' என்று அழைக்கப்படுகிறது. மொத்த குடல் சாரா சத்துணவில் குளுக்கோஸ், நீர்மப்பொருளாக்கப்பட்ட கொழுப்பு, படிகப் பொருட்கள் உள்ள அமினோ அமிலங்கள், B., போலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக்கள், உயிர்ச்சத்து K, மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், மற்றும் மிகவும் குறைவான அளவில் தேவைப்படும் துத்தநாகம், செம்பு, ஐயோடின், நீர் போன்ற தாதுஉப்புக்களின் நீர்மக் கரைசல்கள் ஆகியன அடங்கியுள்ளன.

பல்வேறு நோய்களுக்கான உணவுத் திட்டம்

1. ஜூரம் (காய்ச்சல்)

உடல் சாதாரண வெப்பநிலையில் இருந்து மாறுட்டு சற்று கூடுதலாகும் வெப்ப நிலையை அடைவதை ஜுரம் என்கிறோம். ஜுரம் மூன்று வகைப்படும்.

அவை:

  1. குறைந்த காலத்திற்கு உள்ள ஜூரம். உதாரணம்: டைஃபாய்டு, கடுமையான சளிக்காய்ச்சல்
  2. நீண்டகாலத்திற்கு உள்ள ஜூரம். உதாரணம் : காச நோய்.
  3. இடைவெளி விட்டு வரும் ஜூரம். உதாரணம்: மலேரியா.

பொதுவான உணவுத்திட்டக் குறிப்புகள் :

சக்தி

வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பின் காரணமாக அதிக கலோரி உள்ள உணவு வகுத்துரைக்கப்படுகிறது. 2500 - 3000 கலோரிகள் வரை வகுத்துரைக்கப்படுகிறது.

புரதம்

80 - 100 கிராம் புரதம் வகுத்துரைக்கப்படுகிறது. புரதம் மிகுந்த பானங்களை முறையான உணவுகளுக்கு இணையாக கொடுக்கலாம்.

கொழுப்பு

பொரித்த உணவுகள் மற்றும் அதிக அடர்வுள்ள உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. ஏனெனில், இவ்வகை உணவுகள் மிக எளிதில் ஜீரணிக்கப்படுவதில்லை .

உயிர்ச்சத்துக்கள்

உயிர்ச்சத்து A, B கூட்டு உயிர்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்து - ஆகியவை ஜூரம் இருக்கும் காலத்தில் நோயாளிக்கு அதிகமாக தேவைப்படுகின்றன.

திரவம்

வியர்வை மூலமாக வெளியேறும் நீரை ஈடு செய்வதற்கு அதிகமான அளவில் திரவம் உட்கொள்ள வேண்டும். சூப்கள், பழச்சாறுகள், நீர் ஆகியவற்றுடன் 2500 - 5000 மி.லி. அளவில் திரவம் தேவைப்படுகிறது.

காரம், வாசனை இல்லாத, எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகள், மென்மையான உணவுகள் ஆகியவை கொடுக்கப்பட்டு, ஜீரணித்தல் எளிதாக்கப்பட்டு சத்துக்கள் உறிஞ்சப்படவேண்டும். 2 - 3 மணி நேர இடைவெளிகளில், குறைந்த அளவு உணவை போதுமான ஊட்டச்சத்துக்களுடன், ஜீரண மண்டலத்திற்கு அதிக சிரமம் ஏற்படாதவாறு தர வேண்டும்.

இரைப்பை புண்

உணவுப் பாதை பகுதியில் உள்ள சவ்வுப் படலம் இரைப்பை நீரில் உள்ள அதிக அமிலத் தன்மையால் அரிக்கப்பட்டு புண்ணாகிவிடுவதே இரைப்பை புண் ஆகும். இரைப்பைப் புண்ணின் அறிகுறிகளாவன - வயிற்றுவலி, அசௌகரியம், அடிவயிற்றின் மேல் பகுதியில் வாயு உற்பத்தியாவது, எடை இழப்பு மற்றும் இரும்புச் சத்து குறைவில் ஏற்படும் இரத்த சோகை முதலியன ஆகும்.

சிகிச்சை உணவுத் திட்டத்திற்கான வழிகாட்டி

  1. காரம், வாசனை இல்லாத உணவு - இவ்வுணவில் இயந்திர நுட்பம் சாராத இரசாயனங்கள் இல்லாத, அதிக வெப்பமில்லாத இரைப்பைக்கு எரிச்சல் ஏற்படுத்தாத உணவுகளை அளிக்க வேண்டும்.
  2. சாதாரணமாக தாளிதம் செய்து கொடுக்கலாம். உணவு உண்ணும் நேரங்கள் ஒழுங்குப் படுத்தப்படுவது இன்றியமையாததாகும்.
  3. சிறிய இடைவெளிகளில் குறைந்த அளவில் உணவு உண்ண வேண்டும்.
  4. இடைவெளியில் அதிக புரதம் மிக்க தின்பண்டங்களை உண்ணலாம்.
  5. மனதிற்கு அழுத்தமில்லாத தளர்வான மனநிலை ஏற்படுத்தும் சூழ்நிலையில் உணவு உண்ண வேண்டும்.
  6. சுய மற்றும் குடும்ப பிரச்சனைகளை உணவு உண்ணும் போது மறக்க வேண்டும்.
  7. உணவை நன்கு மென்று மெதுவாக உண்ண வேண்டும்.
  8. பால் மற்றும் க்ரீம் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால், வயிற்றுப் புண் சரியாவதற்கு உதவியாக இருக்கும்.
  9. புரதம் மிக்க உணவை உண்டால் வயிற்றுப் புண் குணமடைவதற்கு உதவியாக இருக்கும்.
  10. குளுக்கோஸுடன் பழச்சாறுகள், இளநீர், பார்லிநீர், கஸ்டர்ட்கள் மற்றும் தானியக் கஞ்சிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
  11. தவிர்க்கவேண்டிய உணவுகள் : எண்ணெய் அதிகமாயுள்ள உணவுகள், நெய், மசாலாப் பொருட்கள், பொரித்த உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகள்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு என்பது சாதாரணமாக மலங்கழிப்பதை விட சற்று மாறுபட்டு அடிக்கடி அதிகமான அளவில் அதிக நீருடன் கழிப்பதாகும். உணவு மூலம் நோயாளியை பராமரிப்பதில், இழந்த திரவங்களையும், தாது உப்புக்களையும் மீள ஈடு செய்வது மிகவும் முக்கியமானது. வாய்வழி திரவங்களை உட்கொள்வதை அதிகமாக்கி, முக்கியமாக சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த சூப்புகள் மற்றும் பழச்சாறுகளை நோயாளிக்கு கொடுக்க வேண்டும்.

இழந்த நீரை மீளப்பெற வாய்வழி நீரேற்றுவதற்கு ஒரு டம்ளர் கொதித்து, ஆறவைக்கப்பட்ட நீரில் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து தயாரித்த திரவத்தை நோயாளிக்கு பருக தரவேண்டும். வயிற்றுப்போக்கு நின்றபின், மாவுச்சத்து உணவுகளான சாதம், உருளைக்கிழங்கு சாதாரண தானியங்களை புரத உணவுகளோடு கொடுக்கலாம். கொழுப்புச் சத்தை நோயாளி திடமான நிலையில் இருந்தால் கட்டுபடுத்த வேண்டாம்.

கல்லீரல் நோய்கள்

கல்லீரல் என்பது மிக முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் பித்த நீரை சுரக்கும். மேலும், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதங்களின் வளர்ச்சிதை மாற்றங்களில் பங்கு கொள்கிறது.

கல்லீரல் நோய்களாவன:

வைரல் ஹெப்படைட்டிஸ்

பசி இன்மை, சுவை இன்மை (Anorexia), ஜுரம், தலைவலி, தொடர் எடை இழத்தல், அடிவயிறு மேற்பகுதியின் அசெளகர்யம் மற்றும் மஞ்சள் காமாலை அதாவது தோலிலும், உடம்பிலும் உள்ள திசுக்களில் மஞ்சள் நிறமாற்றம் ஏற்படுதல்.

கல்லீரல் சிரோசிஸ் (Cirrhosis of Liver)

வைரஸ் தொற்றினால், மதுபானங்களால் மற்றும் நச்சுப்பொருட்களால் கல்லீரல் செல்கள் பாதிப்படைந்து அழிவு பெறுகின்ற நிலைமையே சிரோசிஸ் எனப்படுகிறது. பசி, சுவை இல்லாமை, தலைசுற்றல், வாந்தி, வலி, கால் தசைபிடிப்பு, எடை குறைதல், ஜுரம், மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுப் பகுதியில் திரவம் அதிக அளவில் சேர்ந்துகொள்ளுதல் முதலியன கல்லீரல் சிரோசிஸின் அறிகுறிகளாகும்.

ஹெப்படிக் கோமா (Hepatic Coma)

ஒரு சில அமோனியா போன்ற நைட்ரஜன் நிறைந்த பொருட்கள் பெருமூளைப் பகுதி சார்ந்த அழற்சியின்போது, கல்லீரலால் வளர்ச்சிதை மாற்றம் நிகழப்பெறாதபோது ஏற்படுவதே ஹெப்படிக் கோமா ஆகும். படு விரைவான காரணிகள் என்னவென்றால் வயிற்றுக் குடலில் ஏற்படும் இரத்தப்போக்கு, கடுமையான தொற்றுநோய்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் உணவில் அதிகமான அளவு புரதம். குழப்பமான நிலை, நிலைகொள்ளாது இருத்தல், எரிச்சலுறுவது, ஒவ்வாத பழக்க வழக்கங்கள் மற்றும் மயக்கம் ஆகியன அறிகுறிகள் ஆகும். சிகிச்சையில் உணவுப் புரதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், மற்றும் கலோரிகள் அதிகமாக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஹெப்படைட்டிஸ் மற்றும் சிரோசிஸ் நிலைமைகளில் உணவு திட்ட மேலாண்மை சக்தி

அதிக கலோரி உணவினை வகுத்துரைக்க வேண்டும். 2000-2500 கலோரிகள் இருக்க வேண்டும்.

புரதம்

புரதத் தேவையானது நோயின் தீவிரத்தை பொறுத்து மாறுபடும். மிக கடுமையான மஞ்சள் காமாலையில் 40 கிராம் புரதம் கொடுக்கப்படுகிறது. மிக லேசான மஞ்சள் காமாலையில் 60 - 80 கிராம் புரதம் உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கொழுப்பு

ஏறத்தாழ 20 கிராம் கொழுப்பு கொடுக்கப்படுகிறது. மிதமான சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்கள் கொண்ட தேங்காய் எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் தேங்காய் எண்ணெய் ஜீரணிக்கப்படுவதற்கு பித்த நீரில் உள்ள அமிலம் அவசியம் இல்லை .

கார்போஹைட்ரேட்டுகள்

உணவில் அதிக கார்போஹைட்ரேட் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், கலோரிகளை கொடுப்பதற்கும், சக்தி தேவைக்கு திசுப் புரதங்கள் சிதைவுறாது இருப்பதற்கும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பது நல்லது.

உயிர்ச்சத்துக்கள்

கல்லீரல் செல்கள் மறு உற்பத்தியாவதற்கு அதிக உயிர்ச்சத்துக்கள் இன்றியமையாதது. உயிர்ச்சத்துக்களை கல்லீரல் நோயாளிக்குக் கொடுக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். சேர்க்கப்படவேண்டிய உணவுகள் : தானியக் கஞ்சி, ரொட்டி, அரிசி சாதம், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பழச்சாறு, பிஸ்கட்கள் மற்றும் மது அல்லாத கார்பனேட் அல்லாத பானங்கள். பருப்புகள், பேக்கரி தயாரிப்புகள், அதிக அளவு இனிப்புகள், பொரித்த உணவுகள், முழுமையான பால் மற்றும் பாலேடு.

இருதய நோய்கள்

இருதய நோய் அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது ஆகும். ஆனால் அதிகமாக அத்திரோஸ்கிளிரோசிஸ் மூலமாக ஏற்படுகிறது. அத்திரோஸ்கிளரோசிஸ் என்பது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருக்கும் நிலைமையே ஆகும். அத்திரோஸ்கிளரோசிஸ் உருவாவதற்கு மிக முக்கிய காரணங்கள் என்னவெனில்,

அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது. அதிக செறிவு நிலை கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உண்பது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு. லேசான வேலை செய்யும் வாழ்க்கை நிலை.

அதிக கடின உழைப்பாற்றல் திறன் மற்றும் அழுத்தம் (Stress and Strain).

உணவுத் திட்ட மேலாண்மை

இதன் குறிக்கோள், இருதயத்திற்கு அதிகமான ஓய்வு மற்றும் நல்ல சத்துணவு அளித்து பராமரித்தல் ஆகும்.

உணவுத்திட்டத்தின் கொள்கைகள்:

சக்தி : அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு கலோரி கொண்ட உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உடற்பருமன் நோயாளிகள் அதிக கலோரி உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சேர்க்கப்பட வேண்டிய உணவுகள்

சாலட்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள் மற்றும், குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகள்.

சிறுநீரக நோய்கள்

அ. நெஃப்ரைட்டிஸ்

இந்நோய் முக்கியமாக குழந்தைகளையும், இளம் வயதினரையும் அதிகமாக தாக்குகின்றது. ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் தொற்றுக்கள் குளோமருலை அழற்சியை ஏற்படுத்தும். ஹீமட்டூரியா (haematuria - சிறுநீரில் இரத்தம் இருக்கும் நிலை), புரோட்டீனூரியா (Proteinuria - சிறுநீரில் புரதம் இருக்கும் நிலை), நீர்த்தேக்கம், மூச்சிரைப்பு, பசியின்மை, சுவையின்மை, டேக்கிகார்டியா (tachycardia இருதய துடிப்பு அதிகரித்தல், குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நெஃப்ரைட்டிஸ் நோயின் அறிகுறிகளாகும்.

உணவுத் திட்ட மேலாண்மை

மிகுந்த கலோரிகள் - 2000 கி. கலோரிகள் உணவில் குறைந்த அளவு புரதம், ஏனெனில் புரத வளர்சிதை மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் கழிவுப் பொருட்களான யூரியா மற்றும் யூரிக் அமிலங்களை சிறுநீரகத்தால் கழிவாக வெளியேற்ற முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட திரவங்கள், கட்டுப்படுத்தப்பட்ட சோடியம், கட்டுப்படுத்தப்பட்ட பொட்டாசியம், சேர்க்கப்பட வேண்டிய உணவுகள் - அரிசி, சவ்வரிசி, சுரக்காய், மற்றும் சர்க்கரை.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உப்பு, ஊறுகாய்கள், கொட்டைகள், வெல்லம், பயறுகள் மற்றும் மாமிசம்

ஆ. நெஃப்ரோசிஸ்

படிப்படியாக தீவிரமான நெஃப்ரைட்டிஸ், டயபட்டீஸ் மெலீட்டஸ் மற்றும் நச்சுப் பொருட்களால், நெஃப்ரோசிஸ் உருவாகிறது. புரோட்டீனூரியா (சிறு நீரில் புரதம் மிகுந்து காணப்படுவது), ஹைப்போ ஆல்பமினிமியா (குறைவான சீரம் ஆல்பமின் நிலை), நீர்த்தேக்கம் மற்றும் சீரம் கொலஸ்ட்ரால் அதிகரித்தல் ஆகியவை நெஃப்ரோசிஸ் நோயின் அறிகுறிகள் ஆகும். கார்போஹைட்ரேட் மிகுதியான, புரதம் கட்டுப்படுத்தப்பட்ட, சாதாரண அளவில் கொழுப்பு உடைய திரவம் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சோடியம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு நெஃப்ரோட்டிக் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. உயிர்ச்சத்து C இணைச்சத்தாக கொடுக்கப்பட வேண்டும்.

இ. சிறுநீரகக் கற்கள் (யூரோலித்தியாசிஸ்)

சிறுநீரகக் கற்கள் அல்லது யூரினரி கால்குலை சாதாரணமாக சிறுநீர் பாதைகளில் காணப்படுகிறது. சிறுநீரகம், சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்லும் நாளம், சிறுநீர்ப்பை, அல்லது சிறு நீர்ப்பையில் இருந்து வெளியே சிறுநீரைத் தள்ளும் நாளம் ஆகியவற்றில் சிறுநீரகக் கற்கள் இருக்கலாம். வெதுவெதுப்பான தட்ப வெப்பநிலை, தொழில், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நோய், மரபு தொடர் மற்றும் ஹைபர்தைராய்டிசம் ஆகியன சிறுநீரகக் கற்களை உண்டாக்கும் காரணிகளாகும்.

அநேகமான கற்கள் கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்ஸலேட், யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியம், பாஸ்பேட் போன்றவற்றால் உருவாகின்றன. உணவுத் திட்டமானது போதுமான திரவங்களை அளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

டயபட்டீஸ் மெல்லிட்டஸ்

எளிதான கார்போஹைட்ரேட்களான சர்க்கரை மற்றும் தேன் போன்றவை தவிர்க்கப்படுகிறது. உணவுத் திட்டத்தில் நார்ச்சத்து மிகுந்து இருக்க வேண்டும். பச்சை காய்கறி தயாரிப்புகளான சாலட்கள் போன்றவை, ஒவ்வொரு உணவிலும் இடம் பெற்று இருக்க வேண்டும்.

நீண்ட காலமாக இருந்து வந்த வளர்ச்சிதை மாற்றங்களில் ஏற்பட்ட குறைபாடே டயபட்டீஸ் மெல்லிட்டஸ் ஆகும். உடலில் இன்சுலின் சுரப்பது குறைவுபடுவதால், உடலானது குளுக்கோஸை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படக் காரணமாகிறது. பரம்பரை மற்றும் அழுத்தம் ஆகியவை டையபட்டீஸ் மெல்லிட்டஸின் அறிகுறிகளாவன.

முழு பயறுகள் மற்றும் முளை கட்டிய பயறுகள் உணவில் இடம் பெற வேண்டும்.

• அதிகமான தாகம் (பாலிடிப்ஸியா) அதிகமான சிறுநீர் வெளியேறுதல் (பாலியூரியா) அரிசிக்கு பதிலாக கோதுமை பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்றால், கோதுமையில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும், கோதுமையால், இரத்தத்தில் க்ளூக்கோஸ் உறிஞ்சப்படுவதன் விகிதம் குறைக்கப்படுகிறது.

அதிகமான பசி (பாலிஃபேஜியா) நிறை செறிவூட்டப் பெறாத பல கொழுப்பு அமிலங்கள் உணவுத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. எடை இழப்பு க்ளைக்கோசூரியா (சிறுநீரில் சர்க்கரை வெளியேறுதல்) ஹைபர்க்ளைசீமியா (இரத்த்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல்) தோலில் எரிச்சல் அல்லது தொற்று நோய் வலிமையிழத்தல், சக்தி இழத்தல் அதிக புரதம் உட்கொள்ளுதல், இன்சுலின் உற்பத்தியை பெருக்குவதற்கு உதவி செய்யும். 3 வேளை பெரிய உணவுகள் மற்றும் 3 வேளை சிற்றுண்டிகளும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

விரதங்கள் மற்றும் அதிகமாக விருந்துண்ணல் போன்றவற்றை நோயாளி தவிர்க்க வேண்டும். காயம் ஆறுவதில் தாமதம் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை 80-120 மி.கி / 100 மிலி இரத்த சர்க்கரை அளவு என்பது சாதாரணமான நிலையாக கருதப்படுகிறது.

உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இணை சத்துக்கள் கொடுக்கப்படுகின்றன. குறைந்த கொழுப்பு உள்ள உணவை அத்திரோஸ்கிளரோசிஸ் வராமல் தடுப்பதற்கு கொடுக்கவேண்டும்.

'தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள், அதாவது ஒரு சில உணவுகள் அல்லது உணவுத் தொகுப்புகளை உணவுத் திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது உணவு ஒவ்வாமைக்கான சிகிச்சைக்கு உதவக் கூடியதாக இருக்கும். ஆன்டிஹிஸ்டமைன்ஸ் மற்றும் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் ஒவ்வாமை சிகிச்சையில் கொடுக்கப்படுகிறது.

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்

தவிர்க்க வேண்டிய உணவுகள் : எளிதான சர்க்கரைகள், தேன், இனிப்புகள், உலர்ந்த பழங்கள், கேக், பொரித்த உணவுகள், மதுபானங்கள், கொட்டைகள் மற்றும் இனிப்பு செறிவூட்டப்பட்ட ஜூஸ்கள்.

கட்டுப்படுத்த வேண்டிய உணவுகள் : கொழுப்பு, தானியங்கள், மாமிசம் மற்றும் முட்டை

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் : கீரைகள், வாழைப்பழம் தவிர மற்ற பழங்கள், காபி அல்லது தேநீர், கொழுப்பு நீக்கப்பட்ட பால், மோர், சாலட்கள் மற்றும் எலுமிச்சை .

உணவு ஒவ்வாமை (Food Allergy)

ஒரு சில மனிதர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட அல்லது ஒரு தொகுதியில் உள்ள உணவினை உட்கொண்ட பின் சாதாரண திசுக்களில் எதிர் விளைவுகள் ஏற்படுவதே 'உணவு ஒவ்வாமை' என வரையறுக்கப்பட்டுள்ளது. உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களில் அதிகமான அளவு பால் மற்றும் முட்டை புரதங்களே உள்ளன. மேலும், தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, சாக்லேட் போன்றவைகளும் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவு ஒவ்வாமையின் அடையாள குறிகள் மற்றும் அறிகுறிகளில் கீழ் வருவன் அடங்கும்.

1. தோலில் பாதிப்பு, அதாவது தோல் தடித்தும், (எக்ஸிமா) வெடிப்புகளுடன் காணப்படும்.

2. தலைசுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு தலைவலி, சளி மற்றும் ஆஸ்துமா கண்கள் சிவந்து, வீக்கத்துடன், எரிச்சலுடன், அரிப்புடனும் காணப்படும்.

உணவு தயாரித்து, வழங்குவதில் கையாளப்படும் பொருட்கள் அதிக அளவில் பாதிப்படைந்து தூய்மைக் கேட்டின் விளைவாக நோய் தொற்றுக்களை பரப்பும் ஒரு தளமாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் சுத்தம் மற்றும் சுகாதாரத் தேவையை மதிப்பீடு செய்வதற்கு கீழ்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறச் சூழலின் சுத்தமும், சுகாதாரமும்

  • இது உணவு தயாரிக்கப்பட்டு, உண்ணப்படுகின்றவரை உள்ள அனைத்து நிலைகளையும் குறிக்கிறது.
  • இடத்தை கூர்ந்து ஆய்வு செய்து, எந்த அளவிற்கு காற்றினால் மாசுபடுகிறது அல்லது எலிகள், ஈக்கள், பூச்சிகள், வண்டுகள் போன்றவைகளால் தாக்கப்படுகிறது, அரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குடிநீர் குழாய்களும், கழிவுநீர் குழாய்களும் அருகருகே அமைக்கப்பட்டு இருப்பது நல்லதல்ல. ஏனெனில், குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்படுகிற சமயங்களில், குடிநீருடன் கலந்து தூய்மைக் கேட்டை விளைவிக்கும்.

காற்றோட்டம்

அறைக்குள் இருக்கும் வெப்பக்காற்றை அகற்றுவதில் ஜன்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஜன்னல்கள் வெப்ப நிலையை குறைத்து, கரியமில வாயுவை வெளியேற்ற உதவுகின்றன. அனைத்து சமையல் அறைகளிலும், உள் வெப்ப அலையை வெளியேற்றும் கருவியும் (exhaust fan) மேலும் புகை போக்கி மூடியும் பொருத்தப்பட்டு, ஒழுங்கான காற்றோட்ட வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அமைப்பு

தரைகள், சுவர்கள், மேற்கூரைகள், அல்லது பிற பகுதிகள் தூய்மையாக்கப்படுவதே தொற்றுக்களின் அபாயகரமான விளைவுகளில் இருந்து அமைப்பை பராமரிப்பதன் முக்கிய நோக்கமாகும். தேர்ந்தெடுக்கும் பொருட்கள் நீர் உறிஞ்சா தன்மையுடையதாகவும், கூடா தன்மையுடையதாகவும், எளிதில் சுத்தம் செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

சமையல் அறையை முறையாக பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேதிமுறை செயல்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

கழிவுநீரை ஒழுங்கான முறையில் வெளியேற்ற வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமையல் அறை உபயோகத்துக்கு போதுமான நீர் விநியோகிக்கப்படுவதற்கு நீர் குழாய்களை ஒழுங்காக அமைப்பதால், சுகாதாரப் பயன் அளிக்கும். அனைத்து கழிவுநீர் குழாய்களும், பொது கழிவு நீர் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலான குழாய் இணைப்புகளால், அடிக்கடி குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு அதன் விளைவாக கழிவு நீர் கசிவு மற்றும் பின்நோக்கி தள்ளப்படும் நிலையும் ஏற்படுகிறது.

வெளிச்சம்

கருவிகள், தட்டுமுட்டுச் சாமான்கள் மற்றும் இணைப்புகள் அனைத்து பகுதிகளும் நல்ல வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அழுக்கு, எண்ணெய் பிசுக்கு மற்றும் ஏதாவது பாதிப்புகள் இருப்பின் எளிதாக கண்டறிய வெளிச்சம் உதவும்.

நீர் விநியோகம்

நீர் விநியோகம் செய்யப்படும் முன், அந்த நீர் குடிப்பதற்கு, உணவு சமைப்பதற்கு, மற்றும் பாத்திரங்களை கழுவுவதற்கு ஏற்றது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து வகையான இயற்கையாக கிடைக்கும் நீரிலும் தாது உப்புக்களும், அடிப்படையான சில பொருட்களும், காற்றில் கரைக்கப்பட்ட வாயுக்களும் அடங்கி இருக்கிறது. நுண்ணுயிரியல் செயல்பாடுகள், நீரின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றிற்கு காரணமாக விளங்குகிறது. உணவு சமைப்பதற்கான நீர் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். போதுமான சுத்தத்துடன் இருந்தாலும், மிகக் குறைந்த அளவுகளில், சில பொருட்கள் நீரில் கரைந்து இருக்கும். ஆனாலும், கரைந்த பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது.

நீரில் உள்ள அசுத்தங்கள் நேர்த்தியாக விடப்பட்ட அல்லது கரைக்கப்பட்ட பொருட்கள் ஆகும்.

உப்பு வடிவங்களில் இவை தூசி மற்றும் அழுக்குகளை சுமக்கும் பொருட்களாக திகழாதவாறு வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் தூசிகள் மற்றும் அழுக்குகளே நுண்ணுயிர்களின் ஆதாரப் பொருட்கள் ஆகும். எந்த ஒரு கருவி உடைந்து இருந்தாலும் அல்லது பழுதுபட்டு இருந்தாலும், உடனே அக்கருவி நீக்கப்பட வேண்டும். இவற்றுடன் ஒழுங்காக சுத்தம் செய்வதற்கான சோப்பு பயன்படுத்துவது பற்றிய அறிவு இன்றியமையாதது. ஏனெனில், இரசாயனப் பொருட்கள் கருவியில் படிவதால் உணவில் கலந்து தூய்மைக் கேட்டை விளைவிக்கும்.

உலோகங்களான காரீயம், இரும்பு, துத்தநாகம் மற்றும் கார்பனேட்கள், குளோரைடுகள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சல்பேட்டுகள் போன்றவை நீரில் கடினத் தன்மையை ஏற்படுத்தும். மற்ற பிற அசுத்தங்களான மணல் துகள்கள், நோய் பரப்பும் நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணி புழுக்களின் முட்டைகள் மற்றும் அதிகப்படியான அளவுகளில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பாதுகாப்புப் பொருட்கள் முதலியன. வயிற்றுப் போக்கு, காலரா, டைப்பாய்டு, சீதபேதி, வலிமையிழப்பு மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.

கழிவுகளை அப்புறப்படுத்துதல்

சுத்தமாக உள்ளதை உறுதி செய்வதற்கான சரிபார்த்தல் முறை மொத்த பழங்கள், காய்கறிகளிலும் அவை எந்த அளவு பழுத்துள்ளது என்பதை அளவிட்டு சோதிக்க வேண்டும். அழுகக் கூடியவைகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பழுத்தவற்றை, வெட்டு பட்டதை, கசிபவைகளை அல்லது நிறம் மாறிய பழங்கள், காய்களை நுண்ணுயிரிகள் அதிகமாக தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவற்றை நீக்கிவிட வேண்டும். பழம், காய்களில் துளை இருந்தாலும் அவற்றை நீக்கி விட வேண்டும். ஏனெனில், அவற்றை பூச்சிகள் தாக்கியிருக்கக் கூடும்.

சமையல் அறைக் கழிவுகளுள் காய்கறிகளின் தோல்கள், சிந்திய சிதறிய உணவுப் பொருட்கள், காலி செய்யப்பட்ட டப்பாக்கள், முதலானவை அடங்கும். இவை சமையல் அறையின் அருகே சேமித்து வைக்கப்பட்டு இருக்கக் கூடாது. ஏனெனில், இவை பூச்சிகள், வண்டுகளை கவர்ந்து, உணவு முழுவதையும் பாழ்படுத்தும் நிலையை உருவாக்கும் காரணிகளாகிவிடும். ஒழுங்காக கழிவுகள் அகற்றப்படாவிட்டால், அக்கழிவுகள் மூலமாக நீர் மாசுபட்டு, கருவிகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீர்கேட்டை விளைவித்துவிடும்.

பால், பால் பொருட்கள் நன்றாக மூடி முத்திரையிடப்பட்டுள்ளதா, தயிராகும் அறிகுறி உள்ளதா, மணம், அமிலம் அல்லது கசப்பு சுவையுடன் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

தானியங்கள், பருப்புகள் பூச்சிகள், வண்டுகள் தாக்கியுள்ளதா மற்றும் பயறுகள் மற்றும் வெளிப்பொருட்களான தூசி, கற்கள் முதலியன உள்ளனவா என சரி பார்க்கவும். மொத்தமாக, கட்டியாக நிறம் மங்கி அல்லது பாதிப்படைந்து விரும்பத்தகாத மணம் இருந்தாலும் உணவுப் பொருளை தவிர்த்து விட வேண்டும். கொழுப்பு மற்றும் கசிவது போன்ற அறிகுறியோ அல்லது எண்ணெய் அசாதாரண முத்திரையோ, உணவுப் பொருள் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கும் மற்றும் மீண்டும் முத்திரையிட்டு மூடப்பட்டு இருப்பது, கெட்டுப் போதல் அல்லது சிக்கு பிடித்தலை காட்டும்.

மிகக் அதிகமான தாக்குதல் எனில் கண்டறியலாம். இல்லாவிடில் கரப்பான் பூச்சிகள் அதன் இருப்பிடத்தில் இருந்து பகல் வேளைகளில் வெளிவருவதில்லை. ஆகவே, இரவு நேரங்களில் கரப்பான் பூச்சிகளுக்கான ஆய்வு செய்தல் மிகவும் அவசியம்.

தயாரித்தல்

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியமாக வேர்கள் மற்றும் கிழங்குகள், மண்ணுக்கு அடியில் வளருபவை, அவற்றை அதிக அளவு நீரில் நன்றாக கழுவ வேண்டும். அப்போது தான் மண் மற்றும் மற்ற பொருட்கள் நீங்கும். புரதம் மிகுந்த உணவுகளான முட்டை, பால் மற்றும் மாமிசம், தனியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நுண்ணுயிரிகள் மிக வேகமாக அவற்றைத் தாக்கி நன்கு வளரும்.

சுத்தப்படுத்தப்பட்ட உடன், பின்னால் பயன்படுத்துவதற்கு உறையவைக்கப்பட்டு இருந்தாலொழிய உணவை மிக விரைவாக சமைக்க வேண்டும். மாமிச வகை உணவை சமைப்பதற்கு, உணவிற்கு அதிக உட்புற வெப்பநிலை தேவை. அப்போது உண்பதற்கு உகந்ததாக இருக்கும்.

தனிநபர் உடற்சுத்தம்

தனி நபரின் உடல் சுத்தம் என்பது பொதுவான ஆரோக்கியம் மற்றும் சமையல் அறையில் பணிபுரிபவர் தம் உடலை பேணுதலைக் குறிக்கிறது. சமையலறை வேலையைத் தொடங்கும் முன்பும், கழிவறைக்குச் சென்று வந்த பின்பும், கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும். வெட்டுக் காயங்கள் இருப்பின் நீர் புகாதவாறு காயங்களுக்கு கட்டுபோடும் பொருளை கொண்டு மூட வேண்டும். தலைமுடி, மூக்கு மற்றும் வாய் மூலமாக தொற்றுக்கள் எளிதில் பரவும்.

சேமித்தல்

அழுகும் பொருட்கள் அனைத்தும் 10°C முதல் 20°C க்குள் பாதுகாக்கப்பட்டு நுண்ணுயிரியின் வளர்ச்சி தடை செய்யப்படுகிறது. வண்டுகள், பூச்சிகள் ஆகியவை உணவுப் பொட்டலங்களில் துளை வழியாக, அல்லது பைகளின் துளை வழியாக கசிவின் வழியாக கதவின் வழியாக மற்றும் சமையலறை உள்ளே மற்றும் வெளியே கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருப்பின், அதன் மூலமாக உணவைத் தாக்கி வீணாக்கலாம். கரப்பான் பூச்சிகள் இருட்டில், அசுத்தமான மூலைகளில், சுவர் இடுக்குகளில், அலமாரிகளின் பின்புறத்தில், கருவிகளின் கீழ், முதலிய இடங்களில் இருக்கும். கரப்பான் பூச்சி தாக்கி கேடு விளைவித்ததை கண்டறிவது கடினம்,

சீப்புகளை சமையலறையில் உபயோகிக்கக் கூடாது. உணவை கையாளும் போது தும்மல் ஏற்பட நேரிட்டால், முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொண்டு, கைக்குட்டையை பயன்படுத்தி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் மேஜை மீது சாய்வதும், ஏறி உட்கார்ந்து கொள்வதும் விரும்பத்தகுந்த பழக்கம் இல்லை. அனைத்து காய், பழங்களிலிருந்து உரிக்கப்பட்ட தோல்களை, கழிவுகளுக்கு என உள்ள கொள்கலனில் போடவேண்டும். தவிர, காய்கறிக் கழிவுகள் மேஜை மீது, தயாரிக்கப்பட்ட உணவின் அருகே சிதறிக்கிடக்கக் கூடாது. சமையலறையில் வேலை நிறைவடைந்தபின் கொள்கலனில் உள்ள கழிவுகள் மூடப்பட்ட கழிவுசேகரிக்கும் கலன்களுக்கு மாற்றப்பட்டு, அகற்றப்பட வேண்டும். உணவை மூடி வைத்து அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக சூட்டுடனோ பராமரிக்க வேண்டும். உணவை சரியான முறையில் கையாள வேண்டும். முடிந்தவரை சிறிது, சிறிதாக பயன்படுத்த வேண்டும்.

உணவால் பரவும் நோய்கள் மற்றும் உணவு விஷமாதல்

கழிவுகளைச் சார்ந்து வளர்ந்து, சந்தையில் விற்கப்படும், சமைக்கப்படாத உணவு பொருட்களான மாமிசம், மீன், பால் மற்றும் காய்கறிகள் போன்றவை கேடு விளைவிக்கும் அபாயகரமான நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டிருக்கும். இந்நுண்ணுயிரிகள் பொதுவாக உணவை சமைக்கும் போதோ அல்லது சில செயல் முறைகள் மூலமாகவோ அழிக்கப்படுகின்றன. ஒரு சில நுண்ணுயிரிகள் செயல் முறையின் போது குறைவான வெப்பநிலையில் உயிர்ப்பிழைத்து விடுகின்றன. மேலும், ஒரு சில உணவுகளை சமைக்கப்படாத நிலையில் உண்ண நேரிடும்போது உணவு விஷமாதல் ஏற்பட்டு விடுகிறது. சமீபத்திய ஆய்வுகள், மூலம் உணவு தானியங்கள் வெப்பமான சூழ்நிலையில் பாதுகாக்கப் படும்போது பாத்தோஜெனிக் பூஞ்சைகளால் தாக்கப்பட்டு விபரீதமான நோய்களை ஏற்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாக்டீரியாவினால் பரவும் தொற்றுக்கள்

பாத்தோஜெனிக் பாக்டீரியாக்கள் உணவினை தாக்கி கேடு விளைவித்து, முக்கியமான சில நோய்களை ஏற்படுத்துகின்றன. அவற்றைப் பற்றி கீழே விவாதிப்போம்:

டைஃபாய்டு மற்றும் பாரா டைஃபாய்டு ஷெல் மீன் மற்றும் கழிவுகளில் விளைந்த காய்கறிகள் போன்றவையே பொதுவாக டைஃபாய்டு நோய் கிருமிகளை பரப்புபவை. ஈக்கள் மூலமாக திறந்த நிலையில் விற்கப்படும் உணவுப் பொருட்களை கேடு விளைவிக்கும் டைஃபாய்டு மற்றும் பாராடைஃபாய்டு பாக்டீரியாக்கள் அடைந்து, தொற்றுநோயை பரப்புகின்றன. இந்நோய்களின் அறிகுறிகளாவன - வாந்தி, வயிற்றுப்போக்கு, மற்றும் ஜுரம்.

பாட்டூலிசம்

வழக்கமாக பாட்டூலிசம் நோய் பாட்டூலினம் முட்டைகள் தாக்கப்பட்டுள்ள டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது ஏற்படுகிறது. நோய் பரப்பும் நுண்ணுயிரி க்ளாஸ்ட்ரீடியம் பாட்டூலினம் ஆகும். மேலும் இந்நுண்ணுயிரி எண்டோடாக்சின் என்ற வீரியமான நச்சுப் பொருளை உற்பத்தி செய்கிறது. எக்ஸோடாக்சின் என்பது வெப்பத்தினால் செயலிழக்கச் செய்யப்படுகிறது. நோய்கிருமி நோய் தாக்கப்பட்ட நபரின் உடம்பில் வளரும் 8 - 36 மணி நேரத்தை வெம்மை பருவம் என்கிறோம்.

இந்த நோய் திடீர் என்று தாக்கக் கூடியது. இந்த நோயின் அடையாள அறிகுறியாதெனில், தெளிவற்ற பார்வை, மயக்கம், பலவீனம், தலைவலி, அடி வயிற்று வலி, மற்றும் உடலில் சோர்வு, நச்சுப்பொருளானது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, பக்கவாதம் ஏற்படுத்தி, பேச்சுத்திறன் மற்றும் விழுங்குதலில் பாதிப்பை ஏற்படுத்தும். சுவாசத்தில் தடை அல்லது இருதய செயலிழப்பு ஒரு சில நாட்களில் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடலாம்.

க்ளாஸ்டிரீடியம் பெர்ஃபிரிஞ்சன்ஸ் உணவு விஷமாதல்

இது அதிகமாக குறைபாடுள்ள செயல் முறையில் தயாரிக்கப்பட்டு சமைக்கப்பட்ட மாமிச உணவு பொருளுடன் தொடர்புடைய நோயாகும். நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரி - க்ளாஸ்ட்டிரீடியம் பெர்ஃ பிரிஞ்சன்ஸ் ஆகும். இதன் அறிகுறிகள் என்னவெனில், அடிவயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு இந்நோயின் வெம்மைப் பருவம் 8 - 12 மணி நேரங்கள்.

சால்மோனெல்லா உணவு விஷமடைதல் (Salmonella food poisoning)

இதனை ஏற்படுத்தும் நுண்ணுயிரி சால்மோனெல்லா டைஃபோசா. குறைபாடுள்ள செயல்முறையால் பதப்படுத்தப்பட்ட மாமிசம், மீன், முட்டை மற்றும் கழிவுகளில் விளைந்த காய்கறிகள் போன்றவையே முக்கியமாக, இந்நோயை பரப்புவதில் தொடர்புடையன. இந்த தொற்றின் முக்கிய அறிகுறிகளாவன: வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் ஜூரம். இந்நோயின் வெம்மைப் பருவம் 12-48 மணி நேரங்கள். இந்நோய் 1-7 நாட்கள் வரை நீடித்து இருக்கும்.

ஸ்டாபிலோகாக்கல் உணவு விஷமாதல் (Staphylococcal food poisoning)

இந்நிலைக்கான காரணி ஸ்டாபிலோகாக்கஸ் ஆரியஸ் ஆகும். இந்நுண்ணுயிரி ஒரு எக்ஸோடாக்சினை உற்பத்தி செய்யும். இவ்வகையில் விஷமாதல் ஏற்படுதல் என்பது உணவு தாக்கப்பட்டு கேடு விளைவிக்கப்பட்ட உணவில் உள்ள எக்ஸோடாக்சினால் ஆகும். இந்த நச்சுத்தன்மை வெப்பத்தில் நிலையாக இருக்கும். முன்பே சமைக்கப்பட்ட விலங்கின உணவுகள் இவ்வகையில் விஷமாகிறது. இதன் அறிகுறிகளாவன: வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றுவலி. இந்நோயின் வெம்மை பருவம் 2 - 6 மணி நேரங்கள் ஆகும்.

ஸ்ட்ரெப்டோகாக்கை உணவு விஷமாதல் (Streptococci food poisoning)

இவை தொண்டையில் புண் மற்றும் ஸ்கார்லெட் ஜூரம் ஏற்பட காரணமான நுண்ணுயிரிகள் ஆகும்.

ஷிகெல்லா (Shigella)

இத்தொகுதி நுண்ணுயிரிகள் பேசில்லரி சீதபேதியை ஏற்படுத்தும். சீதம் மற்றும் இரத்தம் கலந்து வயிற்றுவலியுடன் கூடிய மலம் கழிப்பது அதன் அறிகுறிகள் ஆகும். சமைக்கப்படாத பாலில், அசுத்தமான நீர் கலந்து பருகுவதனாலும், உணவு பொருட்கள், திறந்து வைக்கப்பட்டிருப்பதாலும் பேசில்லரி சீதபேதி ஏற்படுகிறது. ஈக்களே பொதுவாக இந்நோயை பரப்புகின்றன. பாக்டீரியாக்களை தொற்று நோயுள்ளவற்றில் இருந்து சுமந்து, உணவில் உட்கார்ந்து, உணவின் மூலமாக பரப்புகிறது.

வைரஸ் மூலம் ஏற்படும் தொற்று நோய்கள்

நீரூடன் கழிவு நீர் கலந்து மாசுபடுவதால் வைரஸ் தொற்று நோய்கள் உண்டாகின்றன. வைரஸ்கள் உயிருடன் உள்ள செல்களில் மட்டும் இனப் பெருக்கம் செய்கின்றன. உணவில் அல்ல. ஹெப்படைட்டிஸ், காலரா மற்றும் போலியோமைலட்டிஸ் போன்ற நோய்கள் வைரஸ்களால் ஏற்படுகின்றன.

பூஞ்சைகள் உணவை தாக்கி விளைவிக்கும் கேடுகள்

ஃப்யூசேரியம் மற்றும் க்ளாடோஸ்போரியம் : தானியங்கள் மற்றும் சிறுதானியங்களில் ஃப்யூசேரியம் மற்றும் க்ளாடோஸ்போரியம்களின் தாக்குதல் ஏற்பட்டு இத்தானியங்களை உண்பவர்கள் தொற்று நோயால் பாதிப்படைவர்.

அஸ்பெர்ஜில்லஸ் ஃபிளேவஸ் : இந்த பூஞ்சை ஈரமான வேர்கடலை, சோயாபீன்ஸ், பருத்தி விதை, பயறு இனம் சார்ந்தவைகள் மற்றும் தானியங்களில் வளர்கின்றன. இவை அஃப்ளாடாக்ஸின் என்ற (Aflatoxin) நஞ்சை ஏற்படுத்தும். இந்த நச்சு கல்லீரல் சிதைவு மற்றும் புற்று நோயை ஏற்படுத்தும்.

ஆதாரம் ; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top