பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஊட்டச்சத்தும் உடல்நலமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டச்சத்தும் உடல்நலமும்

ஊட்டச்சத்தும் உடல்நலமும் பற்றி தெரிந்துக் கொள்ள படிக்கவும்.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து என்பது உடல்நலத்திற்கு இன்றியமையாதது. சரிவிகித உணவு உண்ணாமல், நல்ல ஆரோக்கியத்தைப் பெறமுடியாது. (போதுமான ஊட்டச்சத்து உடல்நலத்திற்கு அடிப்படையானது). எனவே "உடல்நலம் என்பது WHO-ன் படி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. மேலும் நோய் மற்றும் முதிர்ச்சி இல்லாத தன்மையை குறிப்பது அல்ல.

ஊட்டச்சத்தும் உடல்நலமும்

சிறந்த உடல்நலம், நல்ல ஊட்டச்சத்தினைப் பொறுத்தது. சரியான உணவினை, சரியான அளவில் சிறந்த உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்துடனும், மனநலத்தோடும், நல்ல உற்சாகம் மற்றும் வலிமையுடனும், நோய் எதிர்ப்புத் தன்மையுடனும் வாழ்நாள் முழுவதும் வாழலாம்.

உணவு என்பது நாம் உட்கொள்ளும் பொருள். இது உடலுக்குள் சென்று, உடலுக்கு தேவையான சக்தி மற்றும் வலிமையைத் தருகிறது. மேலும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. சத்துணவு கவனிப்பில் செவிலியரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் அவள் தான் நோயாளியின் பராமரிப்பில் தொடர்ச்சியாக இருக்கிறாள். ஒரு செவிலியர், மருத்துவருக்கும், உணவைத் திட்டமிடுபவருக்கும் நடுவில் இருந்து பரிந்துரைக்கப்படும் உணவுகளை கொடுப்பதில் உதவ வேண்டும். ஒரு ஆசிரியரைப் போன்று சத்துணவு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

உணவு பலவித சத்துப்பொருட்களாலானது (Nutrients). அவையாவன, கொழுப்பு, புரோட்டின், தாதுக்கள், உப்பு சத்துகள், வைட்டமின்கள் மற்றும் நீர்.

அவற்றின் செயல்பாட்டினைப் பொறுத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப் படுகின்றன.

  • ஆற்றல் தரும் உணவுகள் (கார்போஹைடிரேட்டு)
  • உடல் கட்டமைப்பிற்கு பயன்படும் உணவுகள் (புரோட்டின்)
  • உடல் செயல்பாட்டிற்கு அல்லது எதிர்ப்பு சக்திக்கு பயன்படும் உணவுகள் (வேதிப்பொருள், மூலப்பொருட்கள் மற்றும் செயல்பாட்டினைப் பொறுத்து)

உணவின் வேலைகள்

பட்டியல் 1 பொதுவான வேலைகள்

வ எண்

பயன்பாடு (வேலை)

ஊட்டச்சத்து

மூலப் பொருள்

 

1

ஆற்றல் அளிக்க கூடியவை

கார்போஹைட்ரேட்

சர்க்கரை, வெல்லம், இனிப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், கிழங்குகள் மற்றும் நார் பொருட்கள்

 

கொழுப்பு

 

வெண்ணெய், நெய், எண்ணெய், ஹைட்ரஜனேற்றம் அடைந்த கொழுப்பு மற்றும் கிரீம்

 

புரதம் (ஒரு சில அளவு)

 

பால், இறைச்சி, மீன், முட்டை , பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் சோயா பீன்ஸ்

2

உடல் கட்டுமான ஊட்டச் சத்துக்கள்

 

புரதம்

 

பால், இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் சோயா பீன்ஸ்

கால்சியம்

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டை, இறைச்சி, பச்சை காய்கறிகள், அனைத்து தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பழங்கள்

தாதுக்கள்

 

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பருப்புகள், முட்டை, இறைச்சி மற்றும் மீன்

இரும்பு சத்து

இறைச்சி, பச்சை காய்கறிகள், கீரை, வகைகள், தானிய வகைகள்

3

உடல் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அளிக்க கூடியவை

நீர், தாதுக்கள், வைட்டமின்கள் வைட்டமின் A

பால், வெண்ணெய், முட்டை, ஈரல், கீரைகள், மஞ்சள் நிறமுள்ள பழம் மற்றும் காய்கறிகள்

வைட்டமின் D

இறைச்சி, மீன், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, தானிய வகைகள்

வைட்டமின் B

 

பால், இறைச்சி, மீன், முட்டை, கோழி, தானிய வகைகள்

ரிப்போபிளேபின்

இறைச்சி, கோழி, கொட்டைகள், பீன்ஸ், தானியங்கள், பருப்புகள், பால், மற்றும் பால் சார்ந்த உணவுகள், கீரை வகைகள்

 

 

நியாசின்

 

கோழி, கல்லீரல், பூஞ்சைகள், மாட்டு இறைச்சி, தானிய வகைகள்

 

 

வைட்டமின் C

சிட்ரஸ் பழங்கள், தக்காளி, காலி ஃப்ளவர், சிவப்பு மற்றும் பச்சை மிளகு

 

 

வைட்டமின் E

மக்காச்சோளம், கீரைகள், மீன், பால், முட்டை இது இனைப்பெருக்கத்திறது அவசியமானது.

ஊட்டசத்து மதிப்பீட்டைப் பொறுத்து உணவை வகைப்படுத்துதல்

* தானியங்கள் மற்றும் நெல் அல்லாத தானிய வகைகள்

* லெகியூம்கள் (legumes) அ) பருப்பு வகைகள்

* எண்ணெய் வித்துக்கள்

* காய்கறிகள்

* கீரைகள்

* கிழங்குகள்

* மற்ற காய்கறி வகைகள்

ஆற்றல் தரும் உணவுகள்

வேலை செய்யும் திறன் ஆற்றல் எனப்படும். ஆற்றல் அளவானது கிலோ கலோரிகள் (kcal) அல்லது மெகா ஜூல் ஆல் (MJ) அளக்கப்படுகிறது.

ஒரு கிலோகிராம் தண்ணீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கிலோ கலோரி எனப்படும்.

உணவுப்பொருட்களின் ஆற்றல் மதிப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 கிராம் கார்போஹைடிரேம் - 4 கி.கலோரிகளைத் தரும்

1 கிராம் கொழுப்பு - 9 கி. கலோரிகளைத்தரும்

1 கிராம் புரதம் - 4 கி.கலோரிகளைத்தரும்

உடல் வெப்பநிலை, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாட்டிற்கு ஆற்றல் உடலிற்கு தேவைப்படுகிறது. ஆற்றல் தரும் உணவு தொழிற்சாலைகளான கார்போஹைடிரேட்டுகள், கொழுப்பு மற்றும் புரதம், ஆக்ஸிஜனின் உதவியால் உடல் செல்களில் சிதைக்கப்பட்டு வெப்பம், நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாறுகின்றன.

மனிதனின் ஆற்றல் சிதைவுறுதலைப் பாதிக்கும் காரணிகள்

எடை : மொத்தம் சிதைவுறுதல் என்பது ஒருவரது எடையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையாகும். எனவே உடல் எடை அதிகமாகும்போது ஆற்றல் தேவையும் அதிகமாகிறது.

வயது : ஒருவரின் வயதும் மொத்த சிதைவுறுதலைப் பாதிக்கிறது. (எ.கா) விடலைப் பருவத்தினருக்கு (Adolescents) வயதானவர்களை விட அதிக ஆற்றல் தேவை.

வெப்பநிலை : உடலின் வெப்ப இழப்பை ஈடுகட்ட உடலிற்கு உணவு அவசியமாகிறது. உடலின் வெப்ப இழப்பு கீழ்க்கண்ட காரணிகளைப் பொறுத்தது.

அ. வேலையின் அளவு : ஒருவர் அதிக உற்சாகத்தோடு வேலையிலோ, விளையாட்டிலோ ஈடுபட்டிருந்தால், அதிக வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

ஆ. வெளிப்புறவெப்பநிலை : உடலின் வெப்பநிலைக்கும் சுற்றுப்புற வெப்பநிலைக்கும் அதிக வேறுபாடு காணப்படும்போது, வெப்ப இழப்பும் அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலம் : கர்ப்பகாலத்தின் போது கருவின் வளர்ச்சி, நச்சுக்கொடியின் வளர்ச்சி, அதிக அளவு இரத்தத்தின் காரணமாக அதிக ஆற்றல் தேவைப்படும்.

கார்போஹைடிரேட்டுகள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய சர்க்கரைகள் ஒன்றுசேர்ந்து உண்டாகிறது

வகைகள்

மோனோசாக்கரைடுகள் (monosaccharides)

டை சாக்கரைடுகள் (Disaccharides)

பாலிசாக்கரைடுகள் (Polysaccharides)

மோனோசாக்கரைடுகள்

இவை எளிய சர்க்கரைகள் எல்லா கார்போஹைடிரேட்டுகளும் உடலில் உறிஞ்சப்படுவதற்கு முன் மோனோசாக்கரைடுகளாக மாற்றப்பட வேண்டும்.

குளுக்கோஸ் : இவை உடலின் முக்கியமான சக்தி தரும் பொருளாக இருக்கின்றன. இது எல்லா வகையான பழங்களிலும், தேனிலும் தாராளமாய் கிடைக்கிறது.

ஃபிரக்டோஸ் (Fructose) : இது குளுக்கோஸுடன் சேர்ந்து எல்லா வகையான பழங்களிலும் தேனிலும் கிடைக்கிறது. அப்படியே இது ஆற்றலாக உடலால் பயன்படுத்தப்படுகிறது.

காலக்டோஸ் (Galactose) : இது தனியாக எதிலும் கிடைப்பதில்லை . லாக்டோசுடன் பாலில் காணப்படுகிறது. ரைபோஸ் (Ribose) : இது தாவர மற்றும் விலங்கு திசுக்களில் காணப்படுகிறது.

டைசாக்கரைடுகள்

இரண்டு மோனோசாக்கரைடுகள் இணைந்து ஒரு மூலக்கூறு ஆகி நீரை வெளியேற்றி டைசாக்கரைடுகள் உருவாக்கப்படுகின்றன.

அ. சுக்ரோஸ்

ஆ. மால்ட்டோஸ், லாக்டோஸ்

சுக்ரோஸ் (கரும்பு, சர்க்கரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு)

இது பெரிய அளவில் கரும்பிலிருந்தும், பீட்ரூட்டிலிருந்தும் எடுக்கப்படுகிறது.

மால்டோஸ் : இது ஸ்டார்ச்சிலிருந்தும் தானியங்கள் முளைக்கட்டும் போதும் உண்டாகிறது. ஸ்டார்ச்சானது அமைலேஸ் நொதியினால் செரிக்கப்படுகிறது.

லாக்டோஸ் : இது எல்லா விலங்குகளின் பாலிலும் காணப்படுகிறது. டை சாக்கரைடுகள் தண்ணீரில் கரையும் படிகப்பொருட்களாகும். இவை உடலால் உறிஞ்சப்படுவதற்கு மோனோசாக்கரைடுகளாக மாற்றப்பட வேண்டும்.

பாலிசாக்கரைடுகள்

இவை அநேக மோனோசாக்கரைடுகள் சேர்ந்து உருவானவை. இவை பெரும்பாலும் நீரில் கரையாதவை அல்லது பகுதியாக கரையும். ஸ்டார்ச், கிளைக்கோஜன், டெக்ட்ரின் மற்றும் நார்ச்சத்து போன்றவை முக்கியமானவை.

ஸ்டார்ச் : இது அதிக அளவிலான குளுக்கோஸ் சேர்ந்து உருவாகிறது.

கிளைக்கோலன் : இது கல்லீரலிலும், தசைகளிலும் காணப்படும் கார்போஹைடிரேட் ஆகும். இது மிருக மாவுச்சத்து (Animal starch) என்றும் அழைக்கப்பெறும்.

டெக்ஸ்டிரின் (Dextrine)

உடலில் உணவு செரிமானத்தின் போது ஸ்டார்ச் மாஸ்டோஸாக மாறும்போது டெக்ஸ்ட்ரின் உருவாகிறது. விதைகள் முளைவிடும் போது மற்றும் சில சமையல் முறைகளிலும் டெக்ஸ்ட்ரின் உருவாகிறது.

நார்ச்சத்துள்ள உணவுகள்

செல்லுலோஸ், பகுதி செல்லுலோஸ், கோந்து, மியூலேஜஸ், லிக்னின்கள்

செல்லுலோஸ் : நிலையான, கரையாத பொருட்கள், இது ஊட்டச்சத்தில் பயன்படும் தாவர உணவின் பெரும்பான்மையான பகுதியை உள்ளடக்குகிறது.

(எ.கா) தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள், செல்லுலோஸ் எந்த விதமான ஆற்றலையும் உருவாக்குவதில்லை. ஏனெனில் இவை உடலினால் செரிக்கப்படுவதில்லை. இது பெரிஸ்டாசிலிஸ் இயக்கத்தைத் தூண்டுகிறது.

பகுதி செல்லுலோஸ் : இது முழு தானியங்களிலும், காய்கறிகளிலும் மற்றும் லெகியூம்களின் (legumes) மேற்தோலிலும் (உ.மி) காணப்படுகிறது.

பெக்டின் : இது சிட்ரஸ் பழங்களிலும், பச்சைப் பட்டாணியிலும், கேரட்டிலும் காணப்படுகிறது. இது வயிற்றுப்போக்கினை குணப்படுத்த பயன்படுகிறது.

கோந்து (Gum) : இது முழு கோதுமை, கம்பு, பீச், பேரிக்காய், பிளம்ஸ் மற்றும் முதிர்ந்த காய்கறிகளில் காணப்படுகிறது.

மாவுச்சத்தின் வேலைகள்

1 கிராம் மாவுச்சத்து 4 கலோரிகளைக் கொடுக்கிறது.

மாவுச்சத்து தினசரி தேவைகளில் 50% அல்லது அதற்கு அதிகமான அளவு பூர்த்தி செய்கிறது.

சாதாரணமான உணவில் 10% புரதத்தினாலும், 20 - 25% கொழுப்பினாலும் மீதமுள்ள 65-75% கார்போ ஹைட்ரேட்டினாலும் ஆக்கப்பட்டுள்ளது. கொழுப்பு சிதைவுறுவதற்கு கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுகின்றன. இவை கொழுப்பு அதிகமாக சிதைவுறுவதைத் தடுத்து கீட்டோஸிஸ் (Ketosis) உருவாவதைத் தடுக்கிறது. இவை புரதங்கள் சிதைவுறுவதைத் தடுக்கிறது. கார்போஹைட்ரேட் இல்லாத நிலையில் புரதம் ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

செல்லுலோஸ் என்ற வடிவில் கார்போஹைட்ரேட்டுகள் குடலிலிருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

மூல ஆதாரங்கள் : தானியங்கள், நெல் தவிர மற்ற தானியங்கள், சர்க்கரை, வெல்லம், வேர் கிழங்குகள், பருப்புகள், உலர் தானியங்கள்

தேவைகள் : 60-70% ஆற்றல் பெரியவர்களில் கார்போஹைட்ரேட்டினால் வழங்கப்படுகிறது. குழந்தைகளில் 40-60% கார்போஹைடிரேட்டினால் அளிக்கப்படுகிறது.

கொழுப்பு (Lipids)

கொழுப்புகளில் கொழுப்பு அமிலங்களும், கிளிசரினும் அடங்கியுள்ளன.

சாச்சுரேடட் (Saturated) கொழுப்பு அமிலம்

இது விலங்கு கொழுப்புகளில் பெரும்பாலும் காணப்படுகிறது.

அன்சாச்சுரேட்டட் (Unsaturated) கொழுப்பு அமிலம் : இது தாவர எண்ணெயில் (சோள எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய்) காணப்படுகிறது. (தேங்காய் எண்ணெய் தவிர).

இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் :

பாலி அன்சாச்சுரேட்டட் அமிலங்களாவன லினோலியிக், லினோலினிக் மற்றும் அரக்கிடானிக் அமிலங்கள் போன்றவை இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இது உடலினால் உருவாக்க முடியாது. எனவே உணவின் மூலம் வழங்கப்பட வேண்டும். இது வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமானது.

கொழுப்பின் வேலைகள் : கொழுப்பு ஒரு கிராமுக்கு 9 கி.கலோரி கொடுக்கிறது

கொழுப்பை அளவோடு உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கொழுப்பிலிருந்து கிடைக்கும் கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கும் கலோரிகளை விட குறைவாக இருப்பது நல்லது.

விட்டமின் A, D, E, K குறிப்பாக கரோட்டினாய்டுகள் போன்றவை உறிஞ்சப்படுவதற்கு கொழுப்பு அவசியம்.

சில விலங்கு கொழுப்புகள் (எ. கா.) மீன், கல்லீரல் எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய் போன்றவை வைட்டமின் Aயைக் கொண்டுள்ளன.

உணவிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாறி சேமித்து வைக்கப்படுகின்றன. இவை முக்கிய உறுப்புகளுக்கும், இரத்த நாளங்களுக்கும் மெத்தை போன்று செயல்படுகிறது மற்றும் வெப்ப இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.

மூல ஆதாரங்கள்

விலங்கு மூலங்கள் : இறைச்சி, மீன், பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் மீன், கல்லீரல் எண்ணெய் போன்றவை மாறுபட்ட அளவு கொழுப்பினைக் கொண்டுள்ளன.

தேவையான கொழுப்பு அளவு

இது 15-20% அளவு மொத்த கலோரி தேவையை ஈடுகட்டுகிறது.

புரதங்கள் : (உடல் கட்டமைப்புக்கு உதவுபவை)

புரதம் மனித உடலுக்கு மிக முக்கியமானது. மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள், தோல், முடி, எலும்புகள், குறுத்தெலும்புகள் மற்றும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் கட்டமைப்பிற்கு பெரும் பங்கினை வகிக்கிறது.

வகைப்பாடு

எளிய புரதம், (எ.கா.) அல்புமின், குளோபுலின்

சிக்கலான புரதம் (Conjugatedprotein) (எ.கா) நியூக்ளியார் புரதம் மற்றும் ஹீமோகுளோபுலின்

பெறப்பட்ட புரதம் (Derived Protein) (எ.கா) பெப்டைடுகள் மற்றும் பெப்டோன்கள்

முழுமையான புரதம் (Complete Protein) : இது முக்கியமான அமினோ அமிலங்களைக் கொண்டது. (எ. கா.) பருப்பு வகைகள். இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பகுதியாக முழுமையடைந்த புரதம் : இதில் ஒரு சில முக்கியமான அமினோ அமிலங்கள் சிறிதளவு குறைவுப்படுகிறது. (எ. கா.) பருப்பு வகைகள். இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

முழுமையற்றபுரதம் : இதில் ஒரு சில முக்கியமான அமினோ அமிலங்கள் முற்றிலும் குறைப்படுகிறது. (எ.கா). (Gelatin) ஜெலாட்டின். இது உடல் வளர்ச்சிக்கு உதவாது.

செரித்தலும் உறிஞ்சப்படுதலும்

செரித்தலின் இறுதியில், புரதங்கள் நீரில் கரையும் அமினோ அமிலங்களாக மாறுகிறது. இந்த அமினோ அமிலங்கள் விரைவில் சிறுகுடலில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரல் இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கிறது. இவற்றில் சில அமினோ அமிலங்கள் உடலின் தேவைக்காக சிதைவடைந்து சக்தியாகவும், கழிவுப்பொருளான யூரியாவாகவும் மாறுகிறது.

புரதச் செரிமானத்திற்காக உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளிலிருந்து சுரக்கும் என்சைமின் செயல்கள்

உறுப்பு

செயல்பாட்டு நிலையிலுள்ள என்சைம்

செயல்

வாய்

----

மெல்லுதல் (Mechanical) புரோட்டீன் - பாலிபெப்டைடுகள்

இரைப்பை

பெப்சின்

ட்ரிப்சின்(சிசு) காசினோஜென்

கேசினை தயிர் போன்று மாற்றுகிறது

தினசரி புரதத் தேவைப்பாடுகள் : ICMR பரிந்துரையின்படி ஒரு இளம் வயதுள்ள மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பாலூட்டும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஒரு நாளைக்கு சராசரியாக 14 - 25 கிராம் புரதம் அதிகமாக தேவைப்படுகிறது.

மூல ஆதாரங்கள் :

முதல் தர புரதம் : பால், தயிர், இறைச்சி, மாட்டு இறைச்சி, கல்லீரல், மீன், முட்டை, கோழி, நிலக்கடலை மற்றும் சோயா ; இரண்டாம் தர புரதம்: கோதுமை, கேழ்வரகு, அரிசி, துவரம் பருப்பு, பருப்பு வகைகள்

தாதுக்கள் (அ) தாது உப்புகள்

மனித உடல் எடையில் 4 - 5% தாது உப்புகளாகும். இவை மனிதனின் உடல் இயக்கத்திற்கும், உறுதியான உடல் அமைப்பிற்கும், கடத்தியாகவும், நோய் எதிர்ப்பிற்கும் உதவுகிறது.

மிக தேவையான தாது உப்புக்கள்

* சுண்ணாம்பு

* பாஸ்பரஸ்

* மெக்னீசியம்

* சோடியம்

* பொட்டாசியம்

* குளோரைடு

* சல்பர்

* அரிதான தாது உப்புக்கள்

இரும்பு, அயோடின், துத்தநாகம், காப்பர், மெங்கனீசு, குரோமியம், கோபால்ட், சிலினியம், புளோரின்

தாதுஉப்புகளின் பொதுவான வேலைகள்

கடின திசுவின் ஒரு பகுதியாக இருக்கிறது (எ.கா) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு

எளிய திசுவின் ஒரு பகுதியாக விளங்குகிறது (எ.கா) சல்பர் மற்றும் பாஸ்பரஸ்

உடலின் கட்டுப்பாடான இயக்கத்திற்கு ஒரு பகுதியாக இருக்கிறது. (எ.கா) நரம்பு மற்றும் தசை இயக்கத்திற்கு.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

உடலில் உள்ள 99% கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளில் அடங்கியுள்ளது.

எனவே பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் கால்சியம் உதவுகிறது.

இரத்தத்தில் கால்சியம் இருக்கிறது. மேலும் இது உடலின் மற்ற திரவங்களான தண்டுவட திரவம் மற்றும் பால் சுரப்பி சுரக்கும் பாலிலும் இருக்கின்றது.

நரம்பு மற்றும் தசைகள் சரியாக செய்யப்பட வேண்டும்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வேலைகள்

* தசைகள் சுருங்கி விரிவதற்கு தேவைப்படுகிறது.

* செல்லின் சவ்வூடு திறனுக்கு மிகவும் இன்றியமையாதது.

* சில நொதிகளின் செயலினை தூண்டிவிட கால்சியம் இன்றியமையாதது.

* பற்களிலும், எலும்புகளிலும் கால்சியம் படிவதற்கும், கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கும் பாஸ்பரஸ் சேர்மங்கள் பயன்படுகிறது.

* கொழுப்பு அமிலத்தை இடம் மாற்றுவதற்கு கால்சியம் உதவுகிறது

* வளர்சிதை மாற்றம்

எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது. கால்சியம் போதுமான அளவும், பாஸ்பரஸ் மிகையாமலும் எடுத்துக் கொண்டால் எலும்பில் கால்சியம் படிதல் நன்றாக இருக்கும். ஆனால் கால்சியம் குறைவாகவும், பாஸ்பரஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் எலும்புகள் பலமாக இருக்காது. எனவே எலும்பு போதுமான அளவு வலுவடையாமல் உடல் எடையை தாங்க இயலாமல் போய்விடும்.

ஒரு நாளைக்கு தேவைப்படும் கால்சியத்தின் அளவு

* இளம் வயதினர் - 400 மி.கி / நாள்

* கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் - 1000 மி.கி. நாள்

* குழந்தைகள் - 500 - 750 மி.கி / நாள்

கால்சியத்தின் மூல ஆதாரங்கள்

* கால்சியத்தின் மிகச் சிறந்த மூலாதாரம் பால் ஆகும்.

* தானியங்கள் கேழ்வரகு

* பருப்பு வகைகள் முழு துவரம்பருப்பு, கொள்ளு

* எண்ணெய் வித்துக்கள் - கடுகு விதை, பாப்பி விதை (கசகசா விதை)

* பச்சைக் காய்கறிகள் - அகத்திக்கீரை, முருங்கைக் கீரை

* பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் - பசும்பால், எருமை பால், வெண்ணெய்

* மீன் மற்றும் கடல் வாழ் உணவு வகைகள்

பாஸ்பரஸின் மூலாதாரம் :

1. முழு தானியங்கள் 2. லெகியூம்ஸ் 3. பருப்பு வகைகள் 4. மீன்

இரும்பு

மனித உடலில் இரும்பு மிக குறைவான அளவிலேயே காணப்படுகிறது. ஆனால் உடல் நல பராமரிப்புக்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இரும்பின் வேலைகள்

செல்லின் உட்கருவில் இரும்பு காணப்படுகிறது. இது திசுவின் ஆக்சிஜன் ஏற்றத்திற்கு பயன்படுகிறது.

இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் முக்கிய பகுதியாகும். அது ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனை அதிகரிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

உடலின் கட்டுப்பாடான இயக்கத்திற்கு இன்றியமையாதது.

ஹீமோகுளோபின் உருவாவதற்கு காப்பர் வினையூக்கியாக பயன்படுகிறது. உடலில் காப்பர் மிக குறைவாகவே காணப்படுகிறது.

இரும்பின் மூலாதாரம்

கல்லீரல், மென்மையான இறைச்சி ஆகியவற்றில் ஹூம் வடிவில் காணப்படுகிறது.

அயோடின்

அயோடின் உப்பு 30 மி.கிராமிற்கும் குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் அரை பகுதிக்கு மேல் தைராய்டு சுரப்பியில் காணப்படுகிறது. தைராய்டு சுரப்பிக்கு இரண்டு சதுப்புகள் உள்ளன. இச்சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில் மூச்சு குழலின் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது.

அயோடினின் மூலாதாரம் : கடல்வாழ் மீன், ஓடுள்ள மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, கோழி முதலியன. பொட்டாசியம் அயோடைட் கலந்த உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

வேலைகள் : அயோடின், தைராக்ஸின் ஹார்மோனின் முக்கியமான பகுதியாகும். இது தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கப்படுகிறது.

உடலின் சீரான வளர்ச்சிக்கு அயோடின் உதவுகிறது.

உறிஞ்சுதல் : தைராய்டு சுரப்பி சிறுகுடலிலிருந்து வேகமாக உறிஞ்சப்பட்டு தைராக்ஸின் சுரப்பதற்கு பயன்படுகிறது.

தினசரி வேலை

0.15 - 0.2 மிகி/நாள் (இளம் வயதினர்) 0.05 - 0.2 மிகி/நாள் (குழந்தைகள்)

சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு

இவை மூன்று உணவு பொருட்களில் இருக்கின்றது. இது உடலின் இயல்பான இயக்கத்திற்கு பயன்படுகிறது. இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது. பொட்டாசியம் முக்கியமாக செல்களின் உள்ளேயும், இரத்தம் மற்றும் மென்மையான திசுக்களிலும், சோடியம் திரவங்களில் (எ.கா) இரத்த பிளாஸ்மா மற்றும் திசு திரவத்திலும் காணப்படுகிறது.

வேலைகள்

சவ்வூடு அழுத்தத்திற்கு சோடியம் உதவுகிறது

குளோரைடு உப்பு நைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது

சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் தசை சுருக்களின் போது சரியான இயக்கத்திற்கு பயன்படுகிறது.

பொட்டாசியத்தின் மூலாதாரம் : இறைச்சி, கோழி, மீன், பால், தயிர், முழு தானியங்கள், பருப்புகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் (எ.கா) வாழைப்பழம், உருளைகிழங்கு, தக்காளி, காரட், ஆரஞ்சு, திராட்சை மற்றும் சீத்தாப்பழம்.

சோடியத்தின் மூலாதாரம் : பால், முட்டையின் வெள்ளை பாகம், இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் (பசலைக்கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பழங்கள், தானியங்கள், லெகியூம்ஸ்)

மெக்னிசியம்

மென்னீஸியம் உடலில் 25கி உள்ளது. இதில் பாதி அளவு எலும்பில் உள்ளது. பாதி அளவு பாஸ்டேட் மற்றும் கார்பனேட் கலவையாக உள்ளது. 1/5 உடல் திசுக்களில் உள்ளது.

மூலாதாரம் : பால் சார்ந்த பொருட்கள் (வெண்ணெய் தவிர), பச்சை காய்கறிகள், இறைச்சி, கொட்டைகள், பருப்புகள், கடல்வாழ் உயிரினங்கள்.

இதர தாதுக்கள்

* காப்பர் : இது இரும்பு சத்துடன் சேர்ந்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது.

* மேன்கனீசு : இது குறைவாக மதிப்பிடப்பட்டாலும் இது காப்பரை ஒத்தது.

* கோபால்ட் : இது வைட்டமின் B12ல் உள்ளது. VitB12 ஹீமோகுளோபின் உருவாதற்கு உதவுகிறது.

* துத்தநாகம் : இது கணைய திசுக்களில் காணப்படுகிறது. இது இன்சுலின் சேமிப்பதற்கு உதவுகிறது.

வைட்டமின்கள்

வைட்டமின்கள் உடல்நல கட்டுபாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் உதவுவனவாகும்.

வகைபாடு : இதில் இரண்டு வகைகள் உண்டு

1. நீரில் கரையக்கூடியவை 2. கொழுப்பில் கரையக்கூடியவை

கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள்

விட்டமின் A, D, E, K ஆகியன கொழுப்பில் கரையக்கூடியது.

விட்டமின் A

இது விலங்கு மற்றும் தாவர உணவுகளில் உள்ளது.

வேலைகள்

1. இது கண்பார்வைக்கு அவசியமானது.

2. இது மாலைக்கண் நோயைத் தடுக்கிறது.

3. இது சிராஃப்தால் மியாவை (Xerophalmia) தடுக்கிறது.

4. உடலில் உள்ள எபிதீலிய திசுக்களைப் பராமரிக்கிறது.

5. இது உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

6. புரதங்களின் சரியான பயன்பாட்டிற்கு உதவுகிறது.

மூல ஆதாரங்கள்

விலங்கு மற்றும் தாவர வகை உணவில் உள்ளது. (எ.கா) கீரைகள், மஞ்சள் நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் (கேரட், தக்காளி, மாம்பழம், பப்பாளி, பலாப்பழம் ) பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, ஈரல் மீன் மற்றும் மீன் எண்ணெய்.

வைட்டமின் D

இது சூரிய ஒளியின் உதவியுடன் உடலில் போதுமான அளவு உற்பத்தியாகிறது.

வேலைகள் : எலும்புகளில் கால்சியம் படிவதற்கும், ரிக்கட்ஸ் நோயைத் தடுக்கவும் உதவுகிறது.

தேவை : குழந்தைகளுக்கு 400 - 800 IU போதுமானது.

மூல ஆதாரங்கள் : பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், மீன் எண்ணெயில் உள்ளது. விட்டமின் D உணவிலும் கலந்து உள்ளது.

விட்டமின் E

இது செல் மற்றும் செல் அடி படலங்களைப் பாதுகாப்பதினால் திசு அமைப்பு பாதுகாக்கப்படுகிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு இது இன்றியமையாதது.

மூல ஆதாரங்கள் : தாவரக்கொழுப்புகள், தானிய வகைகளில் அதிகமாக காணப்படுகிறது.

விட்டமின் K

இது இரத்த உறைதலுக்கு இன்றியமையாதது.

மூல ஆதாரங்கள்

இது மனித உடலில் உற்பத்தியாகிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் இறைச்சியில் உள்ளது.

நீரில் கரையக்கவடிய விட்டமின்கள்

தயமின் (விட்டமின் B)

ரிபோபிளேவின் (விட்டமின் B)

நிகோடினிக் அமிலம் (விட்டமின் B)

பைரி டாக்சின் விட்டமின் B)

போலிக் அமிலம் (விட்டமின் B)

சையனோ கோபாலமைன் (விட்டமின் B)

வைட்டமின் B1 Complex (Thiamine)

இது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாதது ஆகும். இது நரம்புகளின் தூண்டுதலைக் கடத்துவதற்கு உதவுகிறது.

சேமிப்பு

இது நமது உடலிலுள்ள அனைத்து திசுக்களிலும் காணப்படுகிறது. முக்கியமாக வளர்சிதை மாற்றத்தில் துரிதமாக செயல்படும் உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் இது நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்க முடியாது.

மூல ஆதாரங்கள் :

முழு தானியங்கள், கோதுமை, கேழ்வரகு, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் கீரைகளில் இது அதிகமாக காணப்படுகிறது.

வைட்டமின் (B2) (Ribaflarin)

இது கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மிக முக்கியமானது.

மூல ஆதாரங்கள் : பால், கீரைகள், இட்லி, தோசை, முளைக்கட்டிய தானியங்கள்

வைட்டமின் B3 நிகோடினிக் அமிலம்)

இது தையமின் மற்றும் ரிபோபிளேவில் சேர்ந்து கார்போஹைட்ரேட்டை ஆக்ஸிஜனேற்றம் செய்ய உதவுகிறது.

பணிகள்

புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

எலும்பில் இரத்த சிவப்பணுக்கள் உண்டாவதைத் தூண்டுகிறது.

சேமிப்பு

* இது கல்லீரல் மற்றும் உடலிலுள்ள எல்லாத் திசுக்களிலும் காணப்படுகிறது.

• மூல ஆதாரம் உருளைக்கிழங்கு, கீரைகள் மற்றும் சில வகை பழங்கள்.

போலிக் அமிலம் (B9) மற்றும் சையனோகோபாலமைன் (B12)

* இவை இரண்டு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

* B12 நரம்பு செல்களின் செயல்பாட்டிற்கு அவசியம்

மாட்டு இறைச்சி, கோழி, கல்லீரல், நண்டு, கீரைகள், மென்மையான இறைச்சி.


மூல ஆதாரம்

குறைபாட்டு நோய்கள் (Deficiency Disorder)

கொழுப்பு அதிகமாவதால், உடல் பருமனாதல் (obesity), இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், அத்திரோஸ்கிலிரோஸிஸ் (Atherosclerosis), இரத்தத்திலுள்ள கொலஸ்டிராலின் அளவு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.

புரதக் குறைபாடு : (குவாஷியாக்கர், மராஸ்மஸ்)

குவாஷியாக்கர் (Kwashiorkar)

வளர்ச்சி குறைவு, மனவளர்ச்சியில் மாற்றம், உடல் வீக்கம், தசை இழப்பு, நிலா போன்ற முகம், கல்லீரல் குறைபாடுகள், இரத்த சோதனை, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் தோல், முடி நிறம் மாறுதல் போன்றவைகள் இந்நோயில் காணப்படும்.

மராஸ்மஸ் (Marasmus) : வளர்ச்சி குறைபாடு, தசை இழப்பு, அடிப்போஸ் திசு இழப்பு, உலர்ந்த தோல் போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். இரத்த சோகையும் இந்நோயில் இருக்கலாம்.

வைட்டமின் குறைபாடு :

வாயின் ஓரத்தில் புண் (angular stomatistis), நாக்கில் புண் (glossitis) போன்றவை ரைபோபிளேவின் (B2) குறைபாட்டால் ஏற்படுகிறது.

வைட்டமின் A குறைபாடு

1, மாலைக்கண் நோய் (mightblindness)

2, ஸ்ரோஸிஸ் கன்சைன் டைவிட்டிஸ் (Xerosis conjunctivities)

3. ஸ்ரோஸிஸ் கார்னியா (Xerosis cornia)

4. பைடாட் ஸ்பாட் (Bitot's spot)

5. கேரட்டோ மலேசியா (Keratomalacia).

வைட்டமின் D குறைபாடு

எலும்பில் ஏற்படும் குறைபாடுகள்

ரிக்கட்ஸ் (Rickets)

ஆஸ்டியோ மலேசியா (Osteomalacia)

ஆஸ்டியோ ஃபோரோஸிஸ் (Osteoporosis)

வைட்டமின் K குறைபாடு :

கர்ப்பக் காலத்தில் தாய்க்கு வைட்டமின் K குறைவாக இருப்பதால் சிசுவிற்கு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வைட்டமின் C குறைபாடுகள் :

சோர்வு, ஸ்கர்வி (Scurvy), மூச்சு திணறல், மூட்டு, எலும்பு மற்றும் தசைவலி போன்றவை வைட்டமின் குறைபாட்டால் ஏற்படலாம்.

தையமின் குறைபாடு (Vitamin B1)

பெரிபெரி

நிக்கோடினிக் குறைபாடு

பெல்லாகரா, வயிற்றுபோக்கு, தோல் அழற்சி, வாய்ப்புண் போன்றவை நிக்கோடினிக் குறைபாட்டால் தோன்றும்.

போலிக் அமிலக் குறைபாடு

இரத்த சோகை

வைட்டமின் B12 குறைபாடு

வாய்புண் மற்றும் நாக்கு புண் போன்றவை ஏற்படலாம்.

கால்சியம் குறைபாடுகள் :

வளர்ச்சி குன்றி காணப்படுதல், ஆஸ்டியோஃபோராஸிஸ் (Osteoporosis), டெட்டணி, இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைவாக காணப்படுகிறது. ஹைபர் பிளேசியா (Hyperplasia)

மெக்னீசியம் குறைபாடு : தசைச் சோர்வு, தசை தளர்ச்சி (muscular tremors), டெட்டனி (tetany), மூளைக் குறைபாடு (Delirium)

இரும்புச்சத்து குறைபாடுகள் இரத்தசோகை

சமைக்கும் முறை

உணவை சமைப்பதற்கு கொதிக்க வைத்தல், லேசாக சூடுபடுத்தல், சுண்ட வைத்தல், உரித்து வேக வைத்தல் (poaching), நீராவியில் சமைத்தல், வறுத்தல், நேரடியாக நெருப்பில் வேகவைத்தல், வெப்பத்தில் வாட்டுதல் (paking) மற்றும் வெப்பத்தில் சுடுதல் (Roasting) ஆகிய முறைகளை உபயோகப்படுத்தலாம்.

1. கொதிக்க வைத்தல் :

இது தானியம், பருப்பு மற்றும் காய்கறிகள் சமைப்பதற்கு உதவுகிறது. இது மீன் மற்றும் இறைச்சி சமைக்க உகந்ததல்ல. ஏனெனில், இது நார்தன்மையைக் கடினமாக்குகிறது.

2. லேசாக சூடுபடுத்தல் :

இலேசாக சூடுபடுத்த வேண்டிய உணவினை திரவத்தின் கொதிநிலையில் சமைக்க வேண்டும். இம்முறை மீன் மற்றும் இறைச்சியை சமைக்க உதவுகிறது. ஏனெனில் இந்த வெப்பநிலை புரோட்டினை சிதைவுற செய்கிறது. மேலும் இது நார்தன்மையை கடினப்படுத்தாது.

3. உரித்து வேக வைத்தல் :

பாத்திரம் திறந்த நிலையில் தண்ணீர் அல்லது இதர திரவத்தில் சமைக்கும் முறையாகும். இது பொதுவாக மீன் மற்றும் முட்டை சமைப்பதற்கு உதவும்.

4. நீராவியில் சமைத்தல் :

கொதிக்க வைக்கப்படும் தண்ணீரிலிருந்து வரும் நீராவியில் சமைக்கும் முறைக்கு நீராவியில் சமைத்தல் எனப்படும். இது கொதித்தலை விடவும் நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் சதைப்பற்றுள்ள உணவை நன்றாக சமைக்கலாம். பாத்திரத்தில் இருக்கின்ற நீர் வற்றிவிடாமல் பார்க்க வேண்டும்.

5. சுண்ட வைத்தல் :

இம்முறையில் மூடிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரில் மெதுவாக உணவை சூடுபடுத்த வேண்டும்.

6. வறுத்தல் :

உணவை சூடான எண்ணெயில் வேக வைப்பதற்கு வறுத்தல் என்று பெயர். இம்முறையால் உணவை வேகமாக சமைக்கலாம். இது திறந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும்.

7. வெப்பத்தில் வாட்டுதல் :

சூடான காற்றில் உணவினை சமைப்பது வெப்பம் வாட்டுதல் ஆகும். இம்முறை அனைத்து உணவு வகைகளையும் சமைப்பதற்கு பயன்படுத்தலாம். குறிப்பாக ரொட்டி மற்றும் கேக் போன்றவற்றை தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இம்முறையில் சமைக்க அடுப்பு (oven) தேவை.

8. வெப்பத்தில் சுடுதல் :

இது வெப்பத்தில் வாட்டுதல் போன்றதாகும். இம்முறை இறைச்சி, கிழங்கு வகைகளை சமைக்க உதவுகிறது.

9. நேரடியாக நெருப்பில் கூடுதல் (grilling) :

இம்முறையில் உணவு பொருள்கள் ஆனது சிறப்பான கிரில்லிங் தட்டின் உதவியுடன் நேரடியாக நெருப்பில் காட்டி வேகவைக்கப்படுகிறது. அப்பத்தை அல்லது ரொட்டியை முறுகலாக சிவக்க வைக்க மற்றும் இறைச்சி, மீன் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுகிறது.

உணவு பாதுகாப்பு (Preservation) அல்லது உணவு பதப்படுத்தல்

உப்பேற்றம் செய்தல் : ஊறுகாய் தயாரித்தல் இம்முறைக்கு எடுத்துக்காட்டாகும். உப்பை பாதுகாக்கும் காரணியாக பயன்படுகிறது.

சர்க்கரை பயன்படுத்தல் : ஜாம், ஜெல்லி மற்றும் பழரசம் பழங்களை பாதுகாக்க உதவுகிறது.

உலர்த்துதல் : மீனை உப்பேற்றம் செய்து உலர்த்தலாம் (கருவாடு இறைச்சி, காய் மற்றும் பழங்களை (திராட்சை) உலர்த்தி சேமிக்கலாம்.

டப்பாவில் அடைத்து மூடி பாதுகாத்தல் : வெப்பத்தில் பயன்படுத்தி, டப்பா மற்றும் கேன்களில் அடைத்து உணவு பதப்படுத்தப்படுகிறது. (எ.கா. குளிர்பானம் Fanta)

உறைய வைத்தல் : காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை கெட்டுப்போகாமல் இருக்க உறைய வைத்தல் பயன்படும்.

வெப்பம் : கொதிக்க வைத்தல், அழுத்தத்தில் சமைத்தல், வெப்பத்தில் வாட்டுதல் ஆகிய முறைகள் உணவினை குறைந்த காலத்திற்கு பாதுகாக்க பயன்படுகிறது.

தொகுப்பு :

  • ஊட்டச்சத்து உடல் நலத்திற்கு அடிப்படையானது.
  • உணவு என்பது உடலால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு பொருளாகும். இது வளர்ச்சிக்கும், உடலுக்கும் தேவையான ஆற்றலை அளிக்கவும் பயன்படுகிறது.
  • உணவு என்பது சத்து பொருட்களின் கலவையாகும்.
  • ஊட்டச்சத்தானது அவற்றின் வேலைகளை கொண்டு கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது. அவை, ஆற்றல் அளிப்பவை, உடலின் கட்டமைப்புக்கு உதவுபவை, உடல் பாதுகாப்புக்கு அல்லது எதிர்ப்பு சக்திக்கு உதவுபவை, உடல் செயல்பாட்டிற்கு உதவுபவை.
  • ஆற்றல் என்பது வேலை செய்யும் திறன் ஆகும்.
  • 1கி கார்போஹைட்ரேட், 4 கி.கலோரி ஆற்றலை தருகிறது.
  • 1கி கொழுப்பு 9 கி.கலோரி ஆற்றலை தருகிறது.
  • 1கி புரோட்டின் 4 கி.கலோரி ஆற்றலை தருகிறது.
  • கார்போஹைட்ரேட் ஆனது எளிய சர்க்கரையாகவும் அல்லது பல எளிய சர்க்கரைகள் இணைந்து உண்டாகும் கூட்டு சர்க்கரை ஆகவும் இருக்கலாம்.
  • மோனோ சாக்ரைட்ஸ் எளிய சர்க்கரைகளாகும்.
  • டை சாக்ரைட்ஸ் இரண்டு மோனோ சாக்ரைட்ஸ் இணைந்து ஒரு மூலக்கூறு நீரை வெளியேற்றுவதால் உண்டாகிறது.
  • உணவில் உள்ள நார் பொருள்களாவன செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், கம், மியூசிலேஸ் மற்றும் லிக்னைட்ஸ் ஆகும்.
  • எண்ணெய் மற்றும் இறைச்சி பொருள்கள் கொழுப்பு ஆகும். புரதம் தசை திசுக்களின் வளர்ச்சிக்கு அடிப்படையானது.
  • மனித உடல் எடையில் 4லிருந்து 5% தாதுக்களால் ஆனது.
  • உணவை சமைப்பதற்கு கொதிக்க வைத்தல், இலேசாக சூடுபடுத்தல், சுண்ட வைத்தல், உரித்து வேகவைத்தல், நீராவியில் சமைத்தல், வறுத்தல், நேரடியாக நெருப்பில் வேகவைத்தல், வெப்பத்தில் வாட்டுதல் மற்றும் வெப்பத்தில் சுடுதல் ஆகிய முறைகளை பயன்படுத்தலாம்.
  • உப்பேற்றம், சர்க்கரை பயன்படுத்தல், உலர்த்தல், டப்பாவில் அடைத்தல், உறைய வைத்தல், சூடுபடுத்தல் போன்றவை உணவை பதப்படுத்தப்படும் முறைகளாகும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.93103448276
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top