பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும் தங்கள் சிசுவையும் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் மற்றும் கர்ப்பமடைவதற்கு முன், கர்ப்பமடைந்த பின் மற்றும் பிரசவத்துக்கு பிறகு சிறப்பாக தங்களை கவனித்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.


கர்ப்பகால கவனிப்பு

கர்ப்பகால கவனிப்பு

 

கர்ப்ப காலத்தில் மகப்பேற்றுக்கு முந்தைய பராமரிப்பு தாய்மை அடைய இருக்கும் அன்னை மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின்  நலனுடன் நேரடியாக தொடர்புடையது.

பெற்றோராக போகின்றவர்கள் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவது தெரிந்ததும் உடனடியாக அங்கன்வாடிக்கு சென்று தாய் மற்றும் சேய் பாதுகாப்பு அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த எளிதான ஆனால் சக்திவாய்ந்த அட்டை அவர்கள் குழந்தையின் ஊட்டசத்து மற்றும் வளர்ச்சியினை தொடர்சியாக கண்காணிக்க உதவும்.

இந்தியாவில் 75% புதிய தாய்மார்கள் இரத்தசோகை மற்றும் கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட மிக குறைவாக எடை அதிகரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இல்லாமல் இருப்பது, பிறக்கும்போது மிக குறைவான எடை மற்றும் குழந்தைக்கு மரபணு தொடர்பற்ற பிறவிக் குறைபாடுகள் ஆகியவை ஏற்படுகின்றன.

கர்ப்ப காலத்தில், தாய்மார்கள் சரிவிகித உணவினை சரியான நேரத்தில் எடுத்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் எப்போதும் உண்பதை விட ஒரு கால் பங்கு அளவு அதிக உணவை உண்ண வேண்டும்.

கர்ப்பிணிப்பெண்கள் மதிய நேரத்தில் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் இரவில் எட்டு மணி நேரங்கள் தூங்க வேண்டும். மேலும் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவ வேண்டும்.

நோக்கம்

  • கர்ப்பக்காலத்தின் போது ஏற்படும் ஊட்டசத்து குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் அதன் ஆபத்தான பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • சமுதாயத்தை குறிப்பாக பெண்களை அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவித்தல்

ஆதாரம் : யூனிசெஃப் மற்றும் பல வளர்ச்சி பங்குதாரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு.

2.87719298246
Subhashini May 18, 2018 07:38 PM

Good

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top