பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு.

பாலியல் வன்முறை என்றால் என்ன?

இளம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் இதற்கு ஆளாகக்கூடும். பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழியான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்.

பாலியல் வன்முறையின் அறிகுறிகள் யாவை?

குற்றம் புரிந்தவரிடம் பயப்படுவதால், தாம் அனுபவித்த வன்முறையை குழந்தைகள் பொதுவாகக் கூறமாட்டார்கள். யாரிடமாவது சொன்னால் அதற்கு அல்லது அதன் வீட்டில் உள்ளவருக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவேன் என்று குற்றவாளி பயமுறுத்தலாம். குற்றம் புரிபவர் குழந்தைக்குத் தெரிந்தவராக இருந்தால், தமக்குள் இருக்கும் 'சிறு ரகசியத்தை' யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லக்கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரியும். எனவே பெற்றோரும், கவனிப்பாளர்களும் இவற்றை விழிப்புடனிருந்து கவனிக்க வேண்டும்.

 • உறக்கத்தில் பாதிப்புகள்
 • பள்ளியில் பிரச்சினைகள்
 • குடும்பம்,நண்பர்கள் அல்லது வழக்கமான செயல்களிலிருந்து விலகியிருத்தல்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்

அக்கறையுள்ள பெற்றோரான நீங்கள் கீழ்க்கண்ட சிலவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம்:

 • அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், மிக அருமையானவர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
 • சரியான மற்றும் தவறான தொடுதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.
 • அவர்களுடைய உடல் அவர்களுக்கே சொந்தம், யாருக்கும் அதை பயன்படுத்தவோ, தீங்கு செய்யவோ உரிமை இல்லை என்பதைக் கூற வேண்டும்.
 • அசௌகரியம் ஏதும் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றோருக்குத் தெரிவிக்கக் கூறுதல்.
 • குழந்தை பெற்றோரின் மீது நம்பிக்கை வைத்து சம்பவத்தைப் பற்றி பேசும்போது, பெற்றோர் அவர்களுக்குத் தேவையான நல்ல ஆதரவை அளிக்கவேண்டும்.

செய்ய வேண்டியவை

 • அமைதியாக இருங்கள்.
 • குழந்தையை நம்புங்கள்.
 • 'உன்னால் தடுக்க முடியவில்லை என்பது எனக்குப் புரிகிறது', 'நீ என்னை நம்புவதைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது' என்பது போலக்கூறி  நம்பிக்கை ஊட்டுங்கள்.
 • குழந்தையின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும், வேற்று நபர்கள் முன் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.
 • எந்த நிரந்தர பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரிடம் காட்டவும்.

செய்யக்கூடாதவை

 • பீதியடைவதோ அல்லது அளவுக்கதிக எதிர்வினை காட்டுவதோ கூடவே கூடாது. குழந்தைக்குக் கஷ்டமான இந்த நேரத்தில் உதவியும் ஆதரவும் தேவை.
 • குழந்தையின் முன்னிலையில் குற்றம் புரிபவரை கண்டிக்க வேண்டாம்.
 • பாலியல் வன்முறை ஒருபோதும் குழந்தையின் குற்றமாகாது, எனவே குழந்தை மேல் குற்றம் சுமத்த வேண்டாம்.

ஆதாரம் : தமிழ்சகூடல்

3.04
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top