பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுகாதாரம்

சுகாதாரம் சார்ந்த உபதகவல்களை இங்கு விளக்கியுள்ளனர்.

சுகாதாரம் பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?

குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளில் வரும் உடல்நலக்கேடுகள் மற்றும் இறப்புகளில் பாதிக்கு மேல், உணவு, தண்ணீர் மற்றும் அழுக்கான கைகள் மூலம் வாயிற்குள் செல்லும் நோய்கிருமிகளால் ஏற்படுகிறது. பெரும்பாலான இந்நோய் கிருமிகள், மனித மலம் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வருகிறது.

பேதி போன்ற பெரும்பாலான உடல்நலக்குறைவுகள், நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது மூலம் தடுத்து நிறுத்தலாம். கழிவறையில், மலம் கழித்தல் அல்லது கொட்டுதல், மலம் கழித்த அல்லது குழந்தைகள் கழித்த மலத்தை அப்புறப்படுத்தின பின்னரோ மற்றும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்னர் அல்லது உணவுகளைத் தொடும் முன் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். விலங்குகளின் கழிவுகள் வீடு, பாதை மற்றும் சிறுபிள்ளைகள் விளையாடும் பகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியம்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும். கழிவுப்பொருள் மற்றும் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய கழிவறைகளை கட்ட, அரசாங்கம் உதவ வேண்டும். நகர்புறங்களில், குறைந்த விலையில் துப்புறவு மற்றும் வடிகால் வசதிகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகளுக்கு அரசாங்கம் உதவவேண்டும்

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் சுகாதாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

  1. மலம் முழுவதும், அவசியம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும். கழிவறை அல்லது கக்கூஸ் பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
  2. மலத்தை தொட்ட பின், உணவினை தொடுவதற்கு முன் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முன், சிறு பிள்ளைகளையும் சேர்த்து குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரும் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
  3. சோப் மற்றும் தண்ணீரைக் கொண்டு தினமும் முகத்தினை கழுவுவது கண்களில் ஏற்படும் நோய்தொற்றுவினை தடுக்கிறது. உலகின் சில பகுதிகளில், கண்களில் ஏற்படும் நோய்தொற்று ட்ராகோமா எனும் கண்ணிமையளிப்பு நோயினை ஏற்படுத்துகிறது. இது பார்வை இழப்பினை ஏற்படுத்தும்.
  4. பாதுகாப்பான நீராதாரங்களிலிருந்து அல்லது சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மாத்திரம் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள, தண்ணீர் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும்.
  5. சமைக்காத மற்றும் மீதம் உள்ள உணவுகள் அபாயகரமானவைகள். சமைக்கப்படாத உணவுகளை அவசியம் கழுவ வேண்டும் அல்லது சமைக்க வேண்டும். சமைத்த உணவுகளை அவசியம் தாமதமின்றி உட்கொள்ள வேண்டும் அல்லது நன்கு திரும்ப சூடுபடுத்த வேண்டும்
  6. உணவு தயாரிக்க பயன்படும் இடம் மற்றும் பாத்திரங்கள் அவசியம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவினை அவசியம் மூடியிட்ட பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
  7. வீட்டுக்குப்பைகள் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

சுகாதாரம் குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

மலம் முழுவதும், அவசியம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும். கழிவறை அல்லது கக்கூஸ் பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.

பெரும்பாலான உடல்நலக்குறைவுகள், குறிப்பாக பேதி, மனித மலத்தில் காணப்படும் கிருமிகளால் வருகிறது. இவ்வகை கிருமிகள், தண்ணீர், உணவு, கைகள், பாத்திரங்கள் மற்றும் உணவு தயார்செய்யும் இடங்களில் காணப்படும் போது, அவை உட்கொள்ளும் உணவின் மூலம் விழுங்கப்படுகிறது. இதினால் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகிறது.

இவ்வகை கிருமிகள் பரவுவதை தடுக்கும் தனிப்பெரும் முக்கிய செயல் என்னவெனில், மலக்கழிவுகள் முழுவதையும் அகற்றுவதாகும். மனித மற்றும் விலங்குகளின் மலக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். மனித மலத்தினை கழிவறை / கக்கூஸ்களில் கொட்ட வேண்டும். கழிவறை/கக்கூஸ்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். விலங்கினகளின் மலக்கழிவுகளை வீடு, பாதைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளிலிருந்து விலக்கப்பட வேண்டும்.

கழிவறை/கக்கூஸ் பயன்படுத்த முடியாத நிலையில், ஒவ்வொருவரும் எப்போதும் வீடுகள், பாதைகள், நீர்நிலைகள் மற்றும் சிறுபிள்ளைகள் விளையாடும் இடங்களிலிருந்து மிக தொலைவில் சென்று மலம் கழிக்க வேண்டும். கழித்த மலத்தினை உடனடியாக மண்ணிட்டுப் புதைக்க வேண்டும்.

கக்கூஸ்கள்/ கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். கக்கூஸ்களை அவசியம் மூடியிட்டு வைக்க வேண்டும். கழிவறைகளை அவசியம் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.

உள்ளாட்சி மற்றும் அரசுசாரா அமைப்புகள், சமுதாயத்தினருக்கு, குறைந்த விலை கக்கூஸ்கள் கட்டுவது குறித்த ஆலோசனைகளை எடுத்துரைத்து, உதவி செய்யலாம்.


கழிவறையை பயன்படுத்துங்கள்!!
தகவல் குறிப்பு 2

மலத்தை தொட்ட பின், உணவினை தொடுவதற்கு முன் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முன், சிறு பிள்ளைகளையும் சேர்த்து குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரும் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.

சோப்பு/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவுவது, கைகளிலுள்ள கிருமிகளை அகற்றுகிறது. வெறும் தண்ணீர் கொண்டு மாத்திரம் கைகளைக் கழுவுவது போதாது. இரண்டு கைகளையும் சோப்பு அல்லது சாம்பல் கொண்டு தேய்க்க வேண்டும். அப்படி செய்வது, கிருமிகள் கைகள் மூலம் உணவு அல்லது வாய்க்குள் செல்வதை தடுத்து நிறுத்துகிறது. கைகளைக் கழுவுவது புழுக்களினால் ஏற்படும் நோய்தொற்றுவினையும் தடுத்து நிறுத்துகிறது. சோப்/ சாம்பல் மற்றும் தண்ணீர் அவசியம் வசதியாக வழிவறை அல்லது கக்கூஸ்-ன் அருகாமையில் வைக்கப்பட வேண்டும்.

மலம் கழித்த பின் அல்லது மலவாயை மற்றும் சிறுகுழந்தைகளின் மலவாயைக் கழுவின பின் கைகளைக் கழுவுவது மிகவும் முக்கியமாகும். விலங்குகள் மற்றும் பண்படுத்தப்படாத உணவுகளை கையாண்ட பின்னரும் கைகளைக் கழுவுவது மிகவும் முக்கியமாகும்.

உணவுகளை தயாரிப்பதற்கு முன்பும், பரிமாறும் முன்பும் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முன்பும் அவசியம் கைகளை கழுவ வேண்டும். உடல் சுகவீனம் வராமல் தடுத்து பாதுகாக்க உதவியாக, சிறு பிள்ளைகளுக்கு மலம் கழித்த பின்னர் மற்றும் உணவு உட்கொள்வதற்கு முன்பும் அவசியம் கைகளை கழுவ கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறுபிள்ளைகள் அடிக்கடி தங்கள் கைகளை வாயில் வைத்துக்கொள்வர், எனவே குழந்தைகள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது முக்கியமாகும், மிக முக்கியமாக பிள்ளைகள் அழுக்கில் விளையாடின பின் அல்லது விலங்குகளுடன் விளையாடின பின் அவசியம் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.

சிறு பிள்ளைகளுக்கு புழுக்களால் சுலபமாக நோய்தொற்று ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும்போது அது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியேற்றி, குறைத்து விடுகிறது. புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் மனிதர்களின் மலம், சிறுநீர், தரையில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் மண், மற்றும் சரியாய் சமைக்கப்படாத இறைச்சி போன்றவற்றில் காணப்படுகிறது. சிறுபிள்ளைகள் கழிவறை/ கக்கூஸ் மற்றும் மலம் கழிக்கும் இடங்களுக்கு அருகாமையில் அவசியம் விளையாடக்கூடாது. கக்கூஸ் பக்கம் செல்லும் போது அவசியம் முடிய காலணி (ஷீ)யை அணிந்திருக்க வேண்டும். அப்போது தோல் மற்றும் பாதங்கள் மூலம் புழுக்கள் உடலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தலாம்.

புழுக்கள் பொதுவாக காணப்படும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு அவசியம் வருடத்தில் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்ட குடற்புழு நீக்கி மருந்தினைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 3

சோப் மற்றும் தண்ணீரைக் கொண்டு தினமும் முகத்தினை கழுவுவது கண்களில் ஏற்படும் நோய்தொற்றுவினை தடுக்கிறது. உலகின் சில பகுதிகளில், கண்களில் ஏற்படும் நோய்தொற்று ட்ராகோமா எனும் கண்ணிமையளிப்பு நோயினை ஏற்படுத்துகிறது. இது பார்வை இழப்பினை ஏற்படுத்தும்.

அழுக்கான முகம், ஈக்களைக் கவர்கிறது. அவை, கிருமிகளை ஒருவரிடத்திலிருந்து எடுத்துச் சென்று மற்றவர்களுக்கு பரப்புகிறது. கண்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளாவிட்டால், அவைகளால் கண்களில் புண் அல்லது கண்களில் நோய்தொற்று ஏற்படுகிறது. இதனால், கண்களின் பார்வைத்திறன் குறையலாம் அல்லது இழப்பு எற்படலாம்.

கண்கள் ஆரோக்கியமாக இருந்தால், கண்களின் வெண்படலம் தூய்மையாய் இருக்கும். கண்கள் ஈரப்பதத்துடனும் மற்றும் மினுமினுப்புடன் இருக்கும். மேலும், கண்பார்வை துல்லியமாய் காணப்படும். கண்கள் மிகவும் வறண்டு அல்லது சிவந்து மற்றும் புண் இருந்தால், கண்களிலிருந்து வடிதல் காணப்பட்டால் அல்லது பார்ப்பதில் கடினம் இருந்தால், குழந்தையை உடனடியாக சுகாதாரப் பணியாளரிடம் காண்பித்து பரிசோதிக்கப்பட வேண்டும்.

தகவல் குறிப்பு 4

பாதுகாப்பான நீராதாரங்களிலிருந்து அல்லது சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மாத்திரம் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள, தண்ணீர் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும்.

போதுமான அளவு சுத்தமான தண்ணீர் விநியோகம் மற்றும் தண்ணீரை எப்படி சுத்தமாக கிருமிகள் இன்றி வைத்துக் கொள்வது என்பதை அறிந்திருக்கும் குடும்பங்களில், மிகக் குறைந்தளவு உடல்நலக் கேடுகள் காணப்படும்.

தண்ணீர் சுத்தமாக இல்லாத பட்சத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தோ அல்லது வடிகட்டியோ சுத்தம் செய்யலாம். சரியாய் கட்டமைக்கப்பட்டு மற்றும் பராமரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைப்புகள், குழாய் கிணறுகள், பாதுகாக்கப்பட்ட கிணறுகள் மற்றும் நீருற்றுகள் போன்றவை சுத்தமான நீராதாரங்களாகும். குளங்கள், ஆறுகள், திறந்த நிலையில் உள்ள ஏரிகள் மற்றும் படிக்கிணறுகள் போன்ற பாதுகாப்பற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரை கொதிக்க வைப்பதின் மூலம் பாதுகாப்பான தண்ணீராக ஆக்கலாம். தண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள, அவசியம் தண்ணீரை மூடியிட்ட பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

குடும்பங்கள் மற்றும் சமுதாயம் கீழ்க்காண்பவைகளை செய்து தண்ணீரை சுத்தமாக பாதுகாக்கலாம்.

• கிணறுகளை மூடியிட்டு மூடி, கையினால் இறைக்கும் பம்புகளைப் பொருத்தலாம்

• மனித மலம் மற்றும் கழிவு நீரை (குறிப்பாக கக்கூகள் மற்றும் வீடுகழுவும் தண்ணீர்) சமைக்க/குடிக்க மற்றும் கழுவ பயன்படுத்தும் சுத்தமான நீராதாரங்களுக்கு மிகவும் தூரமான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும்.

• கக்கூஸ்களைக் கட்டும்போது அவற்றை நீராதாரங்களிலிருந்து குறைந்தது 15 மீட்டர்கள் தள்ளியும் மற்றும் நீராதாரங்களுக்கு தாழ்வான பகுதியிலும் கட்ட வேண்டும்.

• எல்லா நேரங்களிலும் தண்ணீர் கொண்டுவர மற்றும் சேமிக்க பயன்படுத்தும் பக்கெட்டுகள், கயறுகள் மற்றும் குடங்களை தரையில் வைக்காமல், சுத்தமான இடத்தில் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

• விலங்குகளை குடியிருப்பு மற்றும் குடிநீர் நிலைகளுக்கு தூரத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

• குடிநீர் ஆதாரங்களுக்கு அருகில் பூச்சிக்கொல்லி அல்லது வேதிப்பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். குடும்பங்கள் கீழ்க்காண்பவைகளை கையாண்டு தண்ணீரை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

• குடிநீரை சுத்தமான மற்றும் மூடியிட்ட பாத்திரங்களில் சேமித்தல்

• அசுத்தமான கைகளை வைத்து சுத்தமான தண்ணீரை தொடுவதை தவிர்த்தல்

• பாத்திரங்களில் உள்ள தண்ணீரை அகப்பை அல்லது கரண்டி மற்றும் கிண்ணங்களை கொண்டு எடுத்தல்

• தண்ணீர் பாத்திரங்களில், நீர் பிடிப்பதற்கு வசதியாக குழாய் அமைத்தல்

• ஒருவரையும் தங்கள் கைகளை குடிக்கும் தண்ணீரில் வைப்பது அல்லது தண்ணீர் பாத்திரங்களிலிருந்து நேரடியாக தண்ணீர் குடிக்க அனுமதிப்பதை தவிர்த்தல்

• சேமித்துவைத்துள்ள தண்ணீருக்கு தொலைவில் விலங்குகளை வைத்துக் கொள்ளுதல்

குடிதண்ணீரின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும்போது, உள்ளுர் அதிகாரிகளின் ஆலோசனை அவசியம் நாடப்பட வேண்டும்.

தகவல் குறிப்பு 5

சமைக்காத மற்றும் மீதம் உள்ள உணவுகள் அபாயகரமானவைகள். சமைக்கப்படாத உணவுகளை அவசியம் கழுவ வேண்டும் அல்லது சமைக்க வேண்டும். சமைத்த உணவுகளை அவசியம் தாமதமின்றி உட்கொள்ள வேண்டும் அல்லது நன்கு திரும்ப சூடுபடுத்த வேண்டும்.

உணவினை நன்கு சமைப்பதினால் உணவிலுள்ள கிருமிகள் அழிகின்றது. குறிப்பாக, மாமிசம் மற்றும் கோழி, வாத்து போன்ற உணவுப்பொருட்களை அவசியம் நன்கு வேகவைத்து சமைக்க வேண்டும்.

வெதுவெதுப்பான உணவுப் பொருட்களில் கிருமிகள் வேகமாக வளர்கின்றது. சமைத்த உணவினை சமைத்த பின் எவ்வளவு சீக்கிரம் உண்ணமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்ளும்போது, உணவில் கிருமிகள் சேர்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

உணவுப் பொருளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வைத்திருக்கும் போது அவ்வுணவினை அதிக வெப்பமாகவோ அல்லது அதிக குளிர்ந்த நிலையிலோ வைத்து வைக்க வேண்டும்.

சமைத்த உணவினை அடுத்த வேளைக்கு பத்திரப்படுத்தி வைக்கும்போது, அவ்வுணவில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் வராத வண்ணம் அவசியம் மூடியிட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவ்வுணவினை உண்பதற்கு முன் திரும்பவும் நன்கு சூடுபடுத்த வேண்டும்.

தயிராக்கப்பட்ட பால் மற்றும் பழைய கஞ்சியினை உணவில் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அவற்றில் உள்ள அமிலம் உணவில் கிருமிகள் வளர்வதை தடுக்கிறது.

சமைக்காத உணவுகள், குறிப்பாக கோழி, வாத்து மற்றும் மீன், இறால் போன்ற கடல் உணவுகளில் சாதாரணமாகவே கிருமியின் உள்ளடங்கு இருக்கும். சமைத்த உணவுகளில், சமைக்காத உணவுகள் படும்போது, கிருமிகள் சமைத்த உணவில் வந்தடைகின்றன. எனவே சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை அவசியம் ஒன்றுக்கொன்று எப்போதும் தூரமாக இருக்கும் வண்ணம் வைக்க வேண்டும். கத்திகள், கறிநறுக்கும் பலகைகள் மற்றும் உணவு தயாரிக்கும் பகுதிகளை சமைக்காத உணவுகளை தயாரித்த பின் சுத்தப்படுத்த வேண்டும்.

பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு தாய்ப்பாலானது மிகவும் பாதுகாப்பான (உணவு) பால் ஆகும். புதிதாக காய்ச்சின அல்லது காய்ச்சி தூய்மையாக்கப்பட்ட விலங்குகளின் பால் காய்ச்சாத பாலை விட தூய்மையானது.

கறந்த தாயின் முலைப்பாலினை அறைதட்ப வெப்பநிலையில் 8 மணி நேரங்கள் வரை மூடியிட்ட பாத்திரத்தில் சேமித்து வைக்கலாம்.

பிறந்த குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு உணவுகளை தயார் செய்யும்போது, அவசியம் தனிக்கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உணவானது, புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். அவற்றை கூடுமானவரை நீண்ட நேரம் வைத்துவைக்கக் கூடாது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம் தோலுரிக்கப்பட வேண்டும். சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவப்பட வேண்டும். குறிப்பாக, பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு காய்கறிகளை பச்சையாக கொடுக்கும்போது, இவைகளை பின்பற்றுவது அவசியம். பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி போன்ற வேதிப் பொருட்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் காணப்படாமல் இருக்க அவற்றைக் கழுவ வேண்டும். அவை காணப்பட்டால், ஆபத்தானவை.

தகவல் குறிப்பு 6

உணவு தயாரிக்க பயன்படும் இடம் மற்றும் பாத்திரங்கள் அவசியம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவினை அவசியம் மூடியிட்ட பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

உணவுகளில் மேல் உள்ள கிருமிகள் விழுங்கப்படலாம். மேலும், உடல்நலக்கேடு ஏற்படலாம். உணவினை கிருமிகளிடமிருந்து பாதுகாக்க

• உணவு தயாரிக்கும் பகுதியினை அவசியம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• கத்திகள், சமையல் பாத்திரங்கள், பானைகள் மற்றும் தட்டுகளை அவசியம் சுத்தமாகவும் மற்றும் மூடியிட்டும் வைக்க வேண்டும்.

• சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் பொறிக்கும் சட்டிகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துணிகளை தினமும் நன்கு துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வைக்க வேண்டும். தட்டுகள், சாமான்கள் மற்றும் பொறிக்கும் சட்டிகள் போன்றவற்றை உணவு உட்கொண்டவுடன் அவசியம் நன்கு சுத்தம் செய்து காயும் வண்ணம் அலமாரிகளில் வைக்க வேண்டும்.

• பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான உணவுகளை அவசியம் மூடியிட்ட பாத்திரங்களில் வைத்து வைக்க வேண்டும்.

• பாலூட்டி அல்லது நிப்பில்-களை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அவைகளை கொதிக்கும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வண்ணம் செய்யாத பட்சத்தில், அவைகளை அவசியம் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவைகளில் கிருமிகள் அடங்கியிருக்கும். அவை பேதி அல்லது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். சிறுபிள்ளைகளுக்கு அவசியம் தாய்ப்பால் அல்லது சுத்தமான கிண்ணத்திலிருந்து பால் கொடுக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 7

வீட்டுக்குப்பைகள் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

கிருமிகள் ஈக்கள், கரப்பான் பூச்சிகள் எலிகள் மற்றும் சுண்டெலிகள் மூலம் பரப்பப்படுகின்றன. இவை, மீதமுள்ள உணவுத்துணுக்குகள் மற்றும் காய்கனிகளின் தோல் போன்ற வீட்டுக்குப்பைப் பொருட்களில்/ கழிவுகளில் பெருகுகின்றன.

சமுதாயத்தில், பொதுவான குப்பை சேகரிப்பு முறை இல்லையெனில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குப்பை சேகரிக்கும் குப்பைக் குழிகள்/தொட்டிகள் தேவைப்படுகிறது. அவற்றில் ஒவ்வொருநாளும் குப்பைகளைப் புதைக்க வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும்.

வீட்டுஉபயோகப் பொருட்கள் மற்றும் வீட்டின் அருகாமையில் உள்ள இடங்களில் மலக்கழிவுகள், குப்பைகள் மற்றும் கழிவுநீர் போன்றவை இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வது உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. வீட்டுக்கழிவு நீரை சோக் பிட் எனப்படும் நீர் உறிஞ்சும் பள்ளங்கள் அமைத்தோ அல்லது அவற்றை குழாய்கள் மூலம் வீட்டுத்தோட்டத்திற்கு பாய்ச்சியோ அல்லது தூரத்திலுள்ள திறந்த வெளிகளில் விடுவதன் மூலமோ பாதுகாப்பான முறையில் அகற்றலாம்.

பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்கள் கைகள், கரங்கள், உணவுகள் மற்றும் விநியோகிக்கப்படும் குடிநீர் போன்றவற்றில் மிகக் குறைந்த அளவில் களந்தாலும், ஆபத்தானதாகும். வேதிப்பொருட்களை கையாளும்போது பயன்படுத்தப்படும் துணிகள் மற்றும் பாத்திரங்களை, வீட்டு உபயோக தண்ணீர் ஆதாரங்களுக்கு அருகாமையில் கழுவக்கூடாது.

பூச்சிக்கொல்லி மற்றும் பிற வேதிப் பொருட்களை வீட்டைச் சுற்றியோ அல்லது குடிநீர் ஆதாரங்களை சுற்றியோ பயன்படுத்தக்கூடாது. வேதிப்பொருட்களை குடிநீரிலோ அல்லது குடிநீருக்கு அருகிலோ அல்லது உணவுபொருட்களுக்கு அருகிலோ சேமித்து வைக்கக் கூடாது. ஒரு போதும் உணவையோ அல்லது குடிநீரையோ பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை வைத்த பாத்திரங்களில் சேமிக்கக் கூடாது.

Filed under:
3.03571428571
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
சரவணன் Sep 15, 2017 02:03 PM

நன்று

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top