ஆல்புமின் பரிசோதனை
இந்தப் பரிசோதனை சிறுநீரில் ஆல்புமின் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இரண்டு வகையான பரிசோதனைகள் உள்ளது:
* வெப்ப சோதனை
* குளிர்சோதனை
வெப்ப சோதனை
வெப்பசோதனை என்பது கொதிக்கவைத்த பிறகு சோதனையின் முடிவு கிடைப்பது
தேவையான பொருட்கள்
* சாராய விளக்கு
* சோதனைக்குழாய்
* அசிடிக் அமிலம்
* வடிகட்டப்பட்ட சிறுநீர்
செய்முறை
* சோதனைக்குழாயில் 4ல் 3 பங்கை சிறு நீரால் நிரப்பவும்.
* சிறுநீரின் மேற்பகுதியை சாராய விளக்கினால் சூடுபடுத்தவும்.
* கொதிக்கவிடவும்
* அசிடிக் அமிலத்தை சொட்டு சொட்டாக சேர்க்க வேண்டும்.
* வெண்மை நிறகலங்கலான தோற்றம் இருந்தால் ஆல்புமின் இருப்பதை காட்டுகிறது
குளிர் சோதனை
குளிர்சோதனை என்பது கொதிக்க வைக்காமல் நேரிடையாக முடிவு கிடைப்பது
தேவையான பொருட்கள்
* நைட்ரிக் அமிலம்
* சல்போசலிக் அமிலம் 3%
* சோதனைக்குழாய்
செய்முறை
* சம அளவு நைட்ரிக் அமிலத்தையும், சிறுநீரையும் சோதனைக் குழாயில் சேர்க்கவும்.
* வெண்மை வீழ்படிவு தோன்றினால் ஆல்புமின் இருப்பதை காட்டுகிறது.
அசிட்டோன் பரிசோதனை
இந்தப் பரிசோதனை சிறுநீரில் அசிட்டோன் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது இது ரோதராஸ் சோதனை (Rothera's test) என்றும் அழைக்கப்படும்.
தேவையான பொருட்கள்
* அம்மோனியம் சல்பேட் படிகங்கள்
* சோடியம் நைட்ரோ புருசைடு படிகங்கள்
* திரவ அம்மோனியா
* சிறுநீர்
செய்முறை
ஒரு சோதனைக்குழாயில் அம்மோனியம் சல்பேட் படிகங்களை 2 செ.மீ ஆழத்திற்கு எடுத்துக்கொண்டு அதனுடன் சம அளவு சிறுநீரையும், சோடியம் நைட்ரோ புருசைடையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோதனைக் குழாயை மூடி நன்றாக கலக்க வேண்டும். திரவ அம்மோனியாவை எடுத்து சிறிது சிறிதாக சோதனைக் குழாயின் பக்கங்களிலிருந்து சேர்க்க வேண்டும்.
முடிவு
* ஊதா வண்ண வளையம் அசிட்டோன் இருப்பதைக் காட்டுகிறது
சர்க்கரை பரிசோதனை
* சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா என்பதை அறிய பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
* சாராய விளக்கு
* சோதனைக்குழாய்
* வடிகட்டப்பட்ட சிறுநீர்
* பெனடிக் கரைசல்
செய்முறை
* 5 மி.லி. பெனடிக் கரைசலை சோதனைக்குழாயில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சோதனைக் குழாயின் அடிப்பாகத்தை சாராய விளக்கினால் சூடுபடுத்த வேண்டும்.
* கொதிக்க விடவும்.
* ஏதாவது நிறமாற்றம் இருந்தால் கவனிக்கவும்
* 5 சொட்டு சிறுநீரை சோதனைக்குழாயில் சேர்க்கவும்.
* ஏதாவது நிறமாற்றம் இருந்தால் கவனிக்கவும் (நீல நிறம் +, பச்சை நிறம் ++, ஆரஞ்சு நிறம் +++, செங்கல் சிவப்பு நிறம் ++++)
ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்