பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவம், அறுவைசிகிச்சை நுண்ணுயிறச் செய்தல்

ருத்துவம், அறுவைசிகிச்சை நுண்ணுயிறச் செய்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நுண்ணுயிரற்ற நிலையின் விளக்கம்

நுண்ணுயிரற்ற முறை என்பது நோய் கிருமிகளை குறைத்தல் அல்லது முற்றிலுமாக (பாக்டீரியா, வைரஸ், காளான் மற்றும் பாரசைட்) அகற்றுதலாகும். குறிப்பாக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் நுண்ணுயிர்களால் ஏற்படும் விளைவை தடுப்பதாகும்.

நுண்ணுயிரற்ற நிலையின் கோட்பாடுகள்

(நேரத்தை குறைத்தல், காயம், வெளிபுற தொற்றுகள்)

மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை முறையில் செயல்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரத்தை சார்ந்தது. அதிக நேரம் எடுப்பதால் நோய் கிருமிகளின் பாதிப்பு அதிக அளவில் உருவாவதற்கு வாய்ப்பளிக்கிறது. முரட்டுத்தனமாக கையாளுதல், திசுக்களின் இறப்பு, வெளிப்புற தொற்றுகள், பாக்டீரியா, உயிரற்ற மக்கிய பொருட்கள் மற்றும் வெளிப்புற நுண்கிருமிகள் மூலமாகவும் காயத்தில் தொற்று உருவாகிறது.

மருத்துவமனையில் நுண்ணுயிரற்ற நிலையை உருவாக்கும் முக்கிய காரணிகள்

  1. கை கழுவுதல்
  2. கையுறை, அங்கிகள், முகமூடி முறைபடி பயன்படுத்துதல்
  3. கருவிகள் சுத்திகரிக்கப்படுதல்
  4. பாதுகாப்பான முறையில் படுக்கை துணிகளை கையாளுவதால் கிருமியற்ற நிலை பரவுதலை தடுத்தல்.

நுண்கிருமிகளை அகற்றும் வழிமுறைகள்

பொருட்களை கட்டும்போது மிக பெரியதாகவே மிக இறுக்கமாகவோ கட்டக்கூடாது. ஏனெனில் நீராவி உள்ளே துளைத்து செல்லவேண்டும். இரப்பர் கையுறைகளை தனியாக 15 பவுண்ட் அழுத்தத்தில் 15 நிமிடம் உயர் அழுத்த நீராவியில் வைக்கவும். பாட்டில்களில் நீராவி உள்ள திரவங்களை உயர் அழுத்த நீராவிக்கு உட்படுத்தும் பொழுது மூடிகளை தளர்த்தவும். நீராவியை மெதுவாக வெளியேற்றவும்.

உயர் அழுத்த நிராவிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் நீண்ட நேரம் உயர்ந்த வெப்பத்தை தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெளியுறையும் பாத்திரமும் நீராவி ஊடுருவி செல்லும் தன்மையை உடைதலாக இருக்க வேண்டும். உள்உறையில் பொருட்களை அதிகமாக நிரப்பாமலும், முழுவதும் நெருக்கமாக அடுக்கி வைக்கக் கூடாது. கட்டுகளும், பாத்திரங்களும் தளர்த்தியாக கட்டப்பட வேண்டும். கேன்களும், ஜாடிகளும் திறந்த நிலையிலும் ஒருபுறம் திருப்பப்பட்டும் இருக்கும் போது நீராவி, எளிதாக உட்புகுந்து செல்லும். ஸ்போர்களையும் நுண்கிருமிகளையும் அழிப்பதற்காக வெப்பமும், நீராவி அழுத்தமும், உயர்வாக இருத்தல் வேண்டும்.

சாதாரணமாக 121°C வெப்பமும், 1.05 kg/cm2 அழுத்தமும் தேவைப்படும். உயர் அழுத்த நீராவியில் எவ்வளவு நேரம் பொருட்கள் திறந்து வைக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நேரம் 30 நிமிடங்கள். அழுத்தம் அதிகப்படுத்தும் போது திறந்து வைக்கப்படுதல் குறைக்கப்படவேண்டும். நீராவி கலத்தின் உட்புறத்தில் காற்று முழுவதுமாக நீக்கப்பட்டு முழுவதும் நிராவியினால் நிரப்பப்பட்டுள்ளதை நிராவி கலத்தை பயன்படுத்துவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் 15 பவுண்ட் அழுத்தம் என்பது காற்று மற்றும் நிராவி கலந்த கலவையின் அழுத்தமாகும். இது நிராவியின் வெப்பத்தை குறைத்துவிடும். நீராவி கலத்தில் பொருட்கள் சிறிது நேரம் அப்படியே விட்டு வைக்கப்பட்டு பொருட்கள் உலரும் வரை காத்திருக்கவும். நுண்ணுயிரிகளை அகற்றும் கலத்தை ஆட்டோகிளேவ் (Autoclare) என்ற பெயரினால் குறிப்பிடுகிறோம்.

நிராவி கலத்தில் நீராவி செலுத்துவதற்கான இரண்டு காரணங்கள்

நீராவியானது மூடப்பட்ட பாத்திரத்தில் இருக்கும் பட்சத்தில் அவை அழுத்தப்படும் போது வெப்பத்தின் அளவு நீரின் கொதிநிலை வெப்பத்தைவிட அதிக அளவில் உயருகிறது. துளைகள் உள்ள பாத்திரத்தில் நிராவியானது அதிக வேகத்தில் ஊடுருவி செல்லுகிறது. இது எவ்வாறு செயல்முறை படுத்தமுடியும் என்றால் சரியான மேல் உறைகளால் கட்டப்படவேண்டும் அல்லது துணிகக்கு உள்ளும், துளைகள் உள்ள கருவிகளில் காற்று எளிதில் உட்செல்லும் முறையில் இருக்க வேண்டும்.

ஒரு நீராவி களத்தில் வெளிஉறையும் உள்ளுறையும் இருக்கிறது. இது ஒரு பாதுகாப்பான பூட்டின் மூலம் இறுக்கமாக பூட்டப்பட முடியும். முதலில் வெளிஉறைக்கு தேவையான அளவு நிராவி, விரும்பிய வெப்பநிலை, அடையும் வரை செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் நுண் உயிர் அகற்ற வேண்டிய பொருட்கள் அடங்கிய உள்ளறைக்கு நீராவி செலுத்தப்படுகிறது.

உள் அறைக்கு நீராவி செல்லும் போது காற்று வால்வுகள் அதிக வேகத்துடன் வெளியேறுகிறது. விரும்பிய வெப்பநிலை அடையும்வரை நீராவியானது உள்ளறைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உள்ளறையின் வெப்பநிலையும், அழுத்தமும் முக்கியமாக கண்காணிக்க படவேண்டும். விரும்பிய அளவு வெப்பம் அடைந்தபின், இது அதே நிலையில் தேவையான நேரத்திற்கு தொடரப்பட வேண்டும் (வெப்பநிலை. 1210 செல்சியஸ், அழுத்தம் 1.05kg/ cm' மற்றும் முப்பது நிமிடம் அதே நிலையில் விடப்பட வேண்டும்).

நுண்ணுயிர் அகற்றப்படும் பொழுது, முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக நீராவி களத்தில் உள்ள காற்று வெளியேற்ற பட வேண்டும்.

  1. குழாய்களில் உள்ளே உள்ள காற்றும், கட்டுகளுக்கு, இடையே உள்ள காற்றும், நீராவி அழுத்தத்தில் உள்ளே செல்வதை தடை செய்யும். அப்படி இருக்குமானால் நுண்ணுயிர் அகற்றம் தோல்வி அடையும்.
  2. காற்று நீராவியுடன் கலக்கும் போது நீராவியின் வெப்பநிலை குறைகிறது. முடிவில் நீராவி செலுத்துதல் முழுமையாக முடிந்த பிறகும், அழுத்தம் 0 காஜ்ஜிற்கும், வெப்பநிலை 100ஸ்செல்சியத்திற்கு வரும்வரை மூடியை திறக்க கூடாது. இதனால் திரவங்கள் குளிர்நிலையை அடைந்து, அழுத்தம் குறைந்து, வெளியே வராமல் இருக்கிறது மற்றும் கட்டுகள் உலர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலர் வெட்பம்

ஊசி குழல்கள் போன்ற கண்ணாடி பொருட்கள் 160° சென்டிகிரேட்டில் ஒரு மணி நேரம் வெப்ப காற்று அளவில் வைப்பதன் மூலம் நுண்ணுயிர் அகற்றப்படுகிறது. ஸ்போர்கள் மற்றும் கிருமிகளும் கொல்லப்படுகிறது. ரப்பர் பொருட்கள் இந்த வெப்பத்தின் அளவை தாங்குவதில்லை.

எரியூட்டும் உலை

கட்டுதுணிகள், ஆய்வுகூடத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட நுண்கிருமிகள், மனித திசுக்கள் மற்றும் உபயோகிக்கப்பட்ட எண்ணெய் போன்றவைகள் இம்முறையின் மூலமாக அகற்றபடுகிறது. மருத்துவமனையில் உள்ள எரியூட்டும் உளை சுற்றுபுற சூழலை மாசுபடுத்துவதால் இம்முறை விரும்பத்தக்கது அல்ல.

வெப்ப காற்று மின் அடுப்பு

ஈரத்தை தாங்க முடியாத பொருட்களுக்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறை கண்ணாடி பொருட்கள், எண்ணெய் மற்றும் பொடிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

புற ஊதா கதிர் மூலம் நுண்ணுயிர் அகற்ற செய்தல்

ஒளியானது நேர்கோட்டில் செல்வதால், இது ஊடுருவாது. நேர்கோட்டில் செல்லக்கூடிய பொருட்களில் மட்டுமே புற ஊதா கதிர்கள் ஒளி வீசும். நிழலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதில்லை. எல்லா பகுதிகளும் ஒளிக்கற்றைக்கு திறந்து வைக்கப்பட வேண்டும்.

புற ஊதா கதிர்கள் திரவங்களில் ஊடுருவாது. அதிக நேரம் புற ஊதா கதிர்களில் திறந்து வைத்தால் கண்ணில் உட்பகுதி பாதிப்புக்கு உள்ளாகிறது. இதை தவிர்ப்பதற்கு கருப்பு கண்ணாடிகள் அணிய வேண்டும். இது தோலையும் திசுக்களையும் சிதைக்கும். இது மிகவும் விலை உயர்ந்தது. சூரிய ஒளியின் மூலம் இலவசமாக புறஊதா கதிர்கள் பெறப்பட முடியும். காமா கதிர்கள் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதால் இவை பிளாஸ்டிக் பொருட்களான ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசி மற்றும் குழாய்கள் போன்றவற்றில் ஊடுருவி சென்று நுண்ணுயிர் அகற்ற செய்கிறது. கூர்மையான கருவிகள், ஊசிகள், அறுவை கத்திகள் போன்றவை அதிகமான வெப்பத்தை தாங்குவதில்லை. இதன் ஒரு பெரிய நன்மை என்னவெனில் பொருட்கள் நுண்ணுயிர் அகற்ற செய்யப்படுவதற்கு முன்பாக தனித்தனியாக பிளாஸ்டிக் உறைகளிலும் அல்லது அலுமினியம் தாள்களிலும் கட்டப்படலாம். இதன் மூலம் கையாளப்படும் போது ஏற்படக்கூடிய தொற்றினை தடுக்கலாம்.

தொற்று நீக்கம் செய்தலின் கொள்கைகள்

  • வெப்பத்தின் மூலம் தொற்று நீக்கம் செய்யப்பட முடியாத பொருட்கள் மட்டும் புரதத்தையும், பிசுகுத்தன்மை உள்ள பொருட்களையும் நுண்ணுயிர் அகற்ற செய்வதற்கு முன் அகற்ற வேண்டும்.
  • திரவத்தின் அடர்த்தி சரியான முறையில் அளக்க வேண்டும்.
  • கலக்கும் போது நுண்ணுயிர் அகற்ற செய்யப்பட்ட முறை கையாளப்பட வேண்டும்.

உபயோகத்திற்கு ஏற்றாற்போல் தொற்று நீக்கிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். விலை, நோய்கிருமிகளை எதிர்க்கும் திறன், நச்சுத்தன்மை, அரிக்கும் தன்மை ஆகியவைகளை பொறுத்தது. பொதுவான தூய்மைபடுத்தலுக்கு தொற்று நீக்கிகள் பயன்படுத்தப்படுவது என்பது பண விரயத்தை ஏற்படுத்தும்.

இரசாயன பொருட்களின் வகைகள்

அ. காரத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் : இவை பாக்டீரியாக்கள், ஸ்டோர்கள் மற்றும் வைரஸ்களை கொல்லும். பொதுவாக நாம் செய்யக் கூடிய வெப்ப சிகிச்சைக்கு பதிலாக இந்த இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

அவையாவன

1. பார்மால்டிஹைடு (Formaldehyde) கருவிகளையும், இயந்திரங்களையும் நுண்ணுயிரகற்றச் செய்ய பயன்படுகிறது.

2. க்ளுடரால்டிஹைடு (Gluteraldehyde) கருவிகளை நுண்ணுயிரகற்றச் செய்ய பயன்படுகிறது.

3. எத்திலின் ஆக்ஸைடு (Ethylene oxide) ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நுண்ணுயிரகற்றச் செய்ய பயன்படுகிறது.

4. ப்ரப்யோலேக்டோன் (Propiolactone) வாயுமூலம் நுண்ணுயிரகற்றச் செய்ய பயன்படுகிறது.

ஆ) ஃபினால் (Phenols) - இது அமிலமும், செமிசின் தெடிக்கும் கலந்த சோப்பு கரைசலாகும். இது சிறிய நச்சுத் தன்மையுடன் ஒரு கெட்ட நாற்றத்தையும் கொண்டதாகும். அழுக்கடைந்த பகுதிகளை தொற்று நீக்கம் செய்ய இது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

தொற்று நீக்கம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

வெப்பத்தின் மூலம் நுண்ணுயிரகற்றச் செய்யப்படும் போது சேதம் ஏற்படும் பொருட்களையும் அரிக்கும் உலோகப் பொருட்களும் இதன் மூலம் தொற்று நீக்கம் செய்யப்படுகிறது. மிக எளிமையாக பொருட்களை தொற்று நீக்கம் செய்வதற்கு இது ஏற்ற ஒரு முறையாகும்.

தீமைகள்

இம்முறை நுண்ணுயிரற்ற நிலையை கொடுக்க முடியாது. ஏனெனில் ஸ்போர்கள் அழிக்கப் படுவதில்லை. சில தொற்று நீக்கிகள் தோலுக்கும் பொருட்களுக்கும் ஊறுவிளைவிக்கும்.

நினைவில் இருக்க வேண்டிய குறிப்புகள்

  1. தெரிவு செய்யும் தொற்று நீக்கியானது கிருமிகளை அழிப்பதற்கு வலுவுள்ளதாக இருத்தல் வேண்டும்.
  2. சரியான அடர்த்தியில் பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. பொருட்கள் முழுவதுமாக மூழ்கி இருக்க வேண்டும். போதுமான அளவு நேரத்திற்கு வைக்கப் பட வேண்டும். அவை மேல் தோலுக்கோ, பொருட்களுக்கோ சேதத்தை விளைவிக்காததாக இருத்தல் வேண்டும்.
  4. பொருளானது கனிமப் பொருட்கள் ஏதுமின்றி இருப்பதற்கு நன்றாக சுத்தப்படுத்தப் படவேண்டும்.
  5. ஏனெனில் கனிமப் பொருட்கள், தொற்று நீக்கி பாக்டீரியாக்களின் மீது செயல்புரிவதை தடுத்துவிடும்.
  6. விலைகுறைந்ததாக இருத்தல் வேண்டும்.
  7. தொற்று நீக்கியில் மூழ்கவைக்கப்படும் பொருட்கள் பயன்படுத்தப்படுவதற்குமுன் சுத்திகரிக்கப்பட்ட நீரில் கழுவப்பட வேண்டும்.

நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பொருட்களை கையாளுதல்

நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பொருட்களைக் கையாளும் போது எப்போதும் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். அந்த பொருட்கள் பயன்படுத்தப்படும் வரையில் நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்லது துவாலைகளில் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் நுண்ணுயிரகற்றச் செய்யப்படாத பொருட்களுடன் தொடர்பு கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஈரம் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை நுண்ணுயிர் உள்ள நிலையாக மாறிவிடும். ஒரு நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பரப்பின் மீது கை அல்லது வேறெந்த நுண்ணுயிரகற்றச் செய்யப்படாத பரப்பும் கடந்து செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கை விரலினால் பாத்திரத்தையோ அல்லது பொட்டலங்களின் உட்புறத்தை தொடக் கூடாது. சீட்டில் இடுக்கியை பயன்படுத்தவும். நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பாட்டிலில் இருந்து கார்க்கை எடுக்கவேண்டுமானால் கார்க்கின் உட்பகுதியையும், பாட்டிலின் வாய் பகுதியையும் அசுத்தம் செய்யாமல் நீக்கிவிட்டு தாமதமின்றி மூடிவிட வேண்டும். ஒரு நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட பாத்திரத்தின் மூடியை திறக்கும் போது உட்பகுதி வெயிலில் இருக்குமாறு வைத்து தாமதமின்றி மூடிவிட வேண்டும். நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்ட கிண்ணத்தையோ பாத்திரத்தையோ கையில் எடுக்கும் போது பக்கவாட்டிலோ அடிப்புறத்திலோ தொட வேண்டும், விளிம்பு பகுதியை தொடக்கூடாது.

சீட்டில் இடுக்கியை பயன்படுத்துவதற்கான விதிகள்

  1. இடுக்கி உள்ள பாத்திரம் தூய்மையாக இருத்தல் வேண்டும். தினமும் நுண்ணுயிரகற்றச் செய்யப்பட்டு புதிய கரைசல் நிரப்பப்பட வேண்டும். சீட்டில் இடுக்கி தூய்மையாக்கப்பட்டு நுண்ணுயிரகற்றச் செய்யப்பட வேண்டும் அல்லது கொதிக்க வைக்கப்பட வேண்டும். சீட்டில் இடுக்கியை பயன்படுத்தும் போது முழங்கை அளவிற்கு உயரத்தில் இருக்கும் படியும், கீழே நோக்கி இருக்கும்படியாக பிடி உயரமாக சீட்டில் இடுக்கியை பிடிக்கும் போது இடுக்கியில் உள்ள திரவம் உன் கைகளின் வழியாக வழிந்தோடி மீண்டுமாக இடுக்கிக்கு வரும்போது இடுக்கி நுண்ணுயிர் உள்ள நிலையை அடையும். சீட்டில் இடுக்கி பயன்படுத்தப்பட்ட பின் உடனடியாக ஜாடியில் வைக்க வேண்டும். இடுக்கியை போடும் போது ஜாடியின் விளிம்புகளை தொடாதவாறு பார்த்துக் கொள்ளவும். எந்தவிதத்திலாவது இடுக்கி அசுத்தமடையுமானால் அவை ஜாடிக்குள் போடப்படுவதற்கு முன்பு மீண்டுமாக நுண்ணுயிரகற்றச் செய்யப்பட வேண்டும்.
  2. நுண்ணுயிரகற்றச் செய்யப்பட வேண்டிய பொருட்களை ஆயத்தம் செய்தல் ஒவ்வொரு விதமான அறுவைசிகிச்சை அல்லது செயல்முறைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் நமது வசதிக்கு ஏற்ப கருவிகள் அனைத்தும், துடைக்கும் துணிகள், பஞ்சுகள், கட்டுத்துணிகள், துவாலைகள் தைக்கும் பொருட்கள் ஒரு பகுதியில் இருக்க வேண்டும். இவை ஒரு டிரம்மிலோ, கட்டுகளிலோ அல்லது தட்டுகளிலோ வைக்கப்பட்டு, அடையாளச் சீட்டு ஒட்டப்பட்டு நுண்ணுயிரச் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட வேண்டும். இப்பொருட்கள் கவனமாக வரிசைப்படுத்தப்பட்டு முதலில் பயன்படுத்த வேண்டிய பொருட்களை மேலே வைக்கவும். நீராவி நன்றாக ஊடுருவி செல்வதற்காக தளர்த்தியாக கட்டப்படவேண்டும். டிரம்களில் உள்ள துளைகள் திறந்துவைக்கப்பட வேண்டும். கட்டுகள் கட்டப்படும் போது இரட்டை உறைகள் அல்லது நெருக்கமாக நெய்யப்பட்ட துணிகள் அல்லது தாள்களில் கட்டப்பட வேண்டும்.
  3. கட்டுத்துணிகள், துடைக்கும் துணிகள் மற்றும் உறிஞ்சும் துணிகள் ஆகியவை அறுவை சல்லாத் துணிகளால் கனமாக செய்யப்பட வேண்டும். வெட்டப்பட்ட ஓரங்கள் உள்ளே மடிக்கப்பட வேண்டும். கட்டுத்துணிகளும், துடைக்கும் துணிகளும் மீண்டுமாக மடிக்கப்பட்டு நாம் விரும்பும் அளவிற்கு தயார் செய்யப்படவேண்டும். வயிற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உறிஞ்சு துணிகள் பெரியவைகளாகவும், ஓரம் தைக்கப்பட்டும், ஒரு ஓரத்தில் நாடா பொருத்தப்பட்டும் இருக்க வேண்டும். ஒரு தமனி இடுக்கி நாடாவின் ஓரத்தில் கவ்வி பிடிக்கப்பட்டிருக்குமானால், வயிற்றினுள் உறிஞ்சுதுணிகள் விடப்படும் அபாயம் இல்லாமலிருக்கும்.
  4. அடைக்கும் சல்லாத்துணிகள் வேறுவேறு அளவுகளில் செய்யப்படுகிறது. அடைக்கும் சல்லாத்துணிகள் தேவையான அளவில் நான்கு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.

பஞ்சு உருண்டைகள் வெவ்வேறு விதமாக தயாரிக்கப்படுகிறது. வெவ்வேறு அளவிளான பஞ்சு உருண்டைகள் உள்ளங்கையின் நடுவில் வைத்து உருட்டப்படுகிறது. சில பஞ்சு உருண்டைகள் உள்ளே செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இவை சல்லாத் துணியினால் மூடப்பட்டு கட்டப்படுகிறது. இந்த வகையான பஞ்சு உருண்டைகள் நீளமான இடுக்கிகளில் பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. புண்களை கட்டுவதற்காக சதுரவடிவமான பஞ்சுகள் பல அளவுகளில் வெட்டப்படுகிறது. சில சல்லாத்துணியில் மூடப்படுகிறது.

கருவிகள்

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் முதலில் குளிர் நீரில் அலசப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்டபின் நச்செதிர் கரைசலில் வெதுவெதுப்பான நீரில் கழுவப்பட வேண்டும். தமனி இடுக்கிகளையும், கிளாம்புகளையும், அவைகளின் பற்களுக்கு இடையில் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும். நல்ல முறையில் நுண்ணுயிரச் செய்யப்பட வேண்டும். காய்ந்துபோன இரத்தக் கறைகளோ, ஒழுக்குகளின் சுவடுகளோ இல்லாமல் இருத்தல் வேண்டும்.

தூய்மையான நீரில் கழுவு, 5 நிமிடங்களுக்கு கொதிக்க வை, பின் நன்கு உலர விடு. கூர்மையான கருவிகளான கத்தி மற்றும் ஊசிகள் தனியாக பிரிக்கப்பட்டு, வெட்டுக் காயங்களோ, குத்தும் காயங்களோ ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். ஊசிக்குழல்களும், ஊசிகளும் பயன்படுத்தப்பட்டவுடன் உடனடியாக சிறிது நீரை ஊசிக்குழலில் எடுத்து ஒவ்வொரு ஊசியும் அடைப்பு இல்லை என்பதை உறுதி செய்வதற்கு நன்றாக ஊசிக்குழலில் வைத்து அழுத்தவும். தொற்றுள்ள ஊசிக்குழல்களை (இரத்தம் மற்றும் சீழ் எடுத்த) தனியாக எடுத்து உடனடியாக குளிர்ந்த தொற்று நீக்கி கரைசலில் கழுவப்படவேண்டும். ஊசிக்குழல்களையும், ஊசிகளையும் சோப்பு நீர் பயன்படுத்தி கழுவவும். பாட்டில் பிரஸ்ஸை பயன்படுத்தி ஊசிக்குழல் அழுத்திகளை கழுவவும். தூய்மையான நீரில் அலசவும். ஊசிக்குழாயையும், அழுத்திகளையும் ஜதை மாறாமல் பார்த்துக் கொள்ளவும். எப்பொழுதும் அவை ஜதையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

ஊசிகள் கூர்மையாக இருக்கிறதா என்று கவனமாக பரிசோதிக்கவும். கூர்மையாக்கும் கல்லை பயன்படுத்தி ஊசிகளை தேய்த்து துணிகளை கூர்மையாக்கவும். கைகளில் ஊசிகள் குத்தி அதன் மூலம் நோய்கிருமிகள் பரவாதபடி பார்த்துக் கொள்ளவும். இரப்பர் குழாய்கள் குளிர்நீரில் கழுவப்பட வேண்டும். பின் வெந்நீரில் சோப்பு கொண்டு அலசவும். உள்பகுதி நல்ல முறையில் முழுவதுமாக தூய்மை படுத்தப்படவேண்டும். கொதிக்க வைத்தபின் கம்பிகளில் நீர்வடிவதற்கு தொங்கவிடப்பட வேண்டும். குழாய் மடங்குவதை தவிர்ப்பதற்காக, தளர்த்தியாக சுற்றப்படவேண்டும். இரப்பர் குழாய்கள் ஓடும் நீரில் கழுவப்பட்டு, 5 நிமிடம் கொதிக்கவைக்கப்பபட்டு, துவாலை கொண்டு துடைத்து உலர வைக்கப்பட வேண்டும்.

மருத்துவமனை கழிவுகள்

மருத்துவமனை கழிவு என்பது, மருத்துவமனை, நர்சிங் கேரம், கிளினிக், டிஸ்பன்சரி, கால் நடை மருத்துவமனை, நோய்களை கண்டறியும் நிலையம், இரத்த வங்கி இவற்றிலிருந்து பெறப்படும் கழிவுகள் ஆகும்.

செவிலியர்களின் கடமை

  • 24 மணி நேரமும் நோயாளியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டும், அவர்களை பேணுபவர்களும் செவிலியர்களே. ஆகவே நோய்த் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களை அறிந்து விழிப்புணர்வையும், நுண்ணுயிரறச் செய்யப்பட்ட முறையையும், கையாள்பவர்களாகவும் இருப்பதே செவிலியரின் முதன்மையான கடமையாகும்.
  • நுண்ணுயிரறச் செய்யப்படுதலை அடைவதற்கு மூன்று முக்கியமானவைகள் காலம், காயம் மற்றும் வெளிப்புற தொற்றுகளை குறைத்தலாகும். இரண்டு வகையான நுண்ணுயிர் நீக்கும் முறைகளை செவிலி செயல்படுத்தப்படவேண்டும்.
  • அவை மருத்துவ மற்றும் அறுவை நுண்ணுயிரறச் செய்யப்படும் முறையாகும். மருத்துவமுறையில் நுண்ணுயிரறச் செய்தல் என்பது தூய்மையான முறைகளை கடைப்பிடித்து நுண்கிருமிகளை குறைப்பதுடன் அவை பரவாமல் தடுப்பதாகும். (உ.ம்) நோயாளியின் படுக்கைத் துணியை தினமும் மாற்றுதல், கைகளை கழுவுதல்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.08823529412
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top