பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / இரத்தக்குழல் கட்டி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இரத்தக்குழல் கட்டி

இரத்தக்குழல் கட்டி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இரத்தக்குழாய்களின் உட்படல உயிரணுக்களில் உண்டாகும் தீங்கற்ற கட்டிகளே இரத்தக் குழல் கட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இதனால் இயல்பானவைகளும் இயல்பற்றவைகளுமான இரத்தம் நிரம்பிய இரத்தக்குழாய்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றுகின்றன.

பொதுவாகப் பிறந்த முதல் வாரத்தில் காணப்பட்டுப் பின் பத்து வயதாகும் போது மறைகின்றன. குழந்தைப் பருவத்தில் உண்டாகும் பரவலான கட்டிகள் இவைகளே. இது இரத்த ஓட்டத்தோடு தொடர்புடையது. இடத்தைப் பொறுத்து இவற்றின் தோற்றம் அமைகிறது. தோலின் மேற்பகுதியில் ஒரு ஸ்டிராபெர்ரி பழம் அளவிலும் தோலுக்கடியில் நீல நிற வீக்கம் போலவும் காணப்படும்.

நோயறிகுறிகள்

  • சிவப்பு அல்லது செம்பழுப்பு தோல் கொப்புளம்
  • இரத்தக் குழாயில் பெரிய, புடைத்தக் கட்டி

இவை பொதுவாக முகம், கழுத்து ஆகியவற்றில் பெரும்பாலும் காணப்படும்.

காரணங்கள்

சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் இரத்தக் குழாய்கள் அசாதரணமாகக் காணப்படும். இது கீழ்வருமாறு இருக்கும்:

  • தோல் மேல் பரப்பில்
  • தோலுக்கு அடியில்

காலம் திகையாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்விரு வகையும் சேர்ந்து காணப்படுகின்றன.

நோய்கண்டறிதல்

தோற்றத்தை வைத்தே இரத்தக் குழாய் கட்டிகள் கண்டறியப்படுகின்றன. சோதனைகள் பொதுவாகத் தேவைப்படுவதில்லை.

நோய் மேலாண்மை

லேசர் அறுவை: இரத்தக் குழாய் கட்டி வளர்ச்சியைத் தடுக்கப் பெரும்பாலும் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சில வேளைகளில் கட்டியை அகற்ற அல்லது கட்டியில் வரும் ஆறாத புண்களுக்கு சிகிச்சை அளிக்க அறுவை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. வலி, தொற்று, இரத்தப் போக்கு, வடு, தோல் நிற மாற்றம் ஆகியவை ஆபத்துக் காரணிகள்.

கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் மருந்துகள்: இவை ஊசி அல்லது வாய் மூலமாக அளிக்கப்படலாம். தோலின் மேல் பூசவும் செய்யலாம். கட்டி வளரும் கட்டத்தில் அளிக்கப்பட்டால் இம் மருந்து மிகவும் பலன் தரக்கூடியது. இது வளர்ச்சியைத் தடுக்க பயன்படுத்தப் படுகிறது. நீண்டகால, தொடர் சிகிச்சை தேவைப்படும்.

மருத்துவத்துக்கு மருத்துவரையே அணுக வேண்டும்.

தடுப்புமுறை

  • இரத்தப் போக்கு (குறிப்பாக கட்டியில் காயம் ஏற்பட்டால்)
  • மூச்சுவிடுவதில் உணவு உட்கொள்ளுவதில் பிரச்சினைகள்
  • தோலின் தோற்றத்தால் ஏற்படும் மனவியல் பிரச்சினைகள்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top