பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / இமைக்கொழுப்பிறக்கம் நோய்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இமைக்கொழுப்பிறக்கம் நோய்

இமைக்கொழுப்பிறக்கம் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கண்கோளச் சுவர் பலவீனம் அடைவதால் இமையின் கொழுப்புத் திண்டு முன்புறமாகத் தொங்குவதே இமைக்கொழுப்பிறக்கம்  எனப்படுகிறது. இதனால் கண் உப்பியது போல் தோற்றம் அளிக்கும். இமை எல்லைக் கோட்டைப் பேணுவதில் இமைக் கொழுப்புத் திண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இமைக் கொழுப்பு மேல் கீழ்  இமைகளுக்கு முழுமையும் மென்மையும் அளிக்கிறது. தொங்குவதற்குப் பதிலாக, இமைக் கொழுப்பு செயலிழந்தால் இமை, பின்புறமாக அழுந்தும். இதனால் உள் உருளல் அழுந்துகண் ஏற்படும். மேல் இமை இரு கொழுப்புத் திண்டுகளைக் கொண்டுள்ளது. இவை இடை மற்றும் நடு அறைகளில் அமைந்துள்ளன. கீழ் இமையில் மூன்று கொழுப்புத் திண்டுகள் காணப்படும்.  இவை இடை, நடு மற்றும் பக்க அறைகளில் அமைந்திருக்கும். இளம் வயதினரில் இமைக்கொழுப்பிறக்கம் ஒரு குடும்பக் கோளாறாகக் காணப்படும். ஆனால் பெரும்பான்மையான நேர்வுகளில், இது ஓர் உள் உருளல் நிகழ்வாக அமைகிறது. இமைத் தளர்ச்சி அல்லது தோல்தளர்ச்சியோடு இது தொடர்புடையதாக இருக்கும்.

காரணங்கள்

 • இளம் வயதினரில் இமைக்கொழுப்பிறக்கம் குடும்பக் கோளாறாக இருக்கலாம். இது முதுமை அடைதலின் ஒர் அறிகுறி அல்ல.
 • பெரும்பான்மை நேர்வுகளில், இமைத் தளர்வு அல்லது தோல் தளர்வுடன் தொடர்புடைய உள் உருளும் செயல் முறையின் காரணமாக இது நிகழ்கிறது.
 • கொழுப்பு அளவு மிகுதல் மற்றும் திசுவீக்கத்தால் உண்டாகும் கிரேவ் கண்நோய் போன்ற மண்டலம் சார் நோயுடன் கடும் இமைக்கொழுப்பிறக்கம்  தொடர்புடையதாக இருக்கலாம்.

நோய் கண்டறிதல்

 • மேல் இமையில் இடை கொழுப்புத் திண்டு மிக நன்றாகப் புலப்படும். மேல் இமை, பக்க வாட்டில் பிதுங்குதல் பொதுவாகக் கண்ணீர் சுரப்பி தொங்குதலால் ஆகும்.
 • தோல் தளர்ச்சியுடன் இமைக்கொழுப்பிறக்கம் தொடர்புடையதாக இருக்கும். மேல் இமையின் தொங்கும் தோல் இதை மறைத்திருக்கும்.
 • கீழ் இமையில் மூன்று  அறைகளில் எந்த ஒன்றிலும் கொழுப்பு கீழிறங்கித் தொங்கலாம். இரு கொழுப்புத் திண்டுகள் இருக்கலாம் அல்லது ஒரே தொடர் திண்டும் காணப்படலாம். பக்கவாட்டுத் திண்டு வெளிப்படையாகப் புலன் ஆகும்.  ஆனால் கொழுப்பு தொங்குவது நடு அல்லது இடைத் திண்டுகளோடு சம்பந்தப்ப்ட்டிருக்கும். கீழ் இமையின் முழுப் பகுதியும் பிதுங்கிக் காணப்படும்.

நோய் மேலாண்மை

 • நோய் மேலாண்மை பொதுவாக அறுவை சிகிச்சையே. பொதுவாக இது இமைவெட்டலுடன் இணைத்துச் செய்யப்படும்.
 • இலேசான கொழுப்பு தொங்கலுக்கு கோளச் சுவர் இறுக்கப்படும்.
 • கொழுப்பு அதிக அளவில் தொங்கினால், கோளச் சுவர் திறக்கப்பட்டு, கொழுப்புத் திண்டு தீய்க்கப்பட்டு வெட்டப்படும்.
 • தோல் தளர்ச்சி அற்ற குறைந்த அளவிலான இமைக்கொழுப்பிறக்கத்துக்கு, கோளச் சுவரைத் தொடாமல், ஒரு வெண்படலக் குறுக்கு வெட்டால் கொழுப்புத் திண்டுகள் அகற்றப்படுகின்றன.
 • கீழ் இமையில் அதிகப்படியான தோல் இருந்தால், தோல் குறுக்கு வெட்டு செய்யப்பட்டு  பக்கவாட்டில் தோல் இறுக்கப்படும்.
 • கீழிறங்கிய கன்னப்பகுதி கொழுப்புத் திண்டில் மறுபடியும் இடத்தில் நிலை நிறுத்தலும் செய்யப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம்.

2.79166666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top