பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இமைமூடாமை (நோய்)

இமைமூடாமை (நோய்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூட முயலும்போது இமைகளை முற்றிலுமாக மூட இயலாமையே இமைமூடாமை என அழைக்கப்படுகிறது. லாகோப்தால்மாஸ் (இமைமூடாமை) என்ற பதம் கிரேக்கச் சொல்லான லாகோஸ் என்பதில் இருந்து உருவானது. லாகோஸ் என்றால் முயல் என்று பொருள். முயல் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டே உறங்கும் என்று நம்பப் படுகிறது. இமைகளைச் சரிவர மூட இயலாமையால் ஏற்படுபவை:

 • கண்ணீர் ஆவியாதல் அதிகரித்தல்
 • மோசமான கண்ணீர்ப்படலப் பரவல்
 • கண்ணீர் படலத்தின் சளி அடுக்குக் கூறு முறிதல்
 • வெண்படலம் உலர்தல்
 • கண்பரப்பு உடைதல்
 • கண்மூடாமையின் காரணங்கள்

 • கண் கோளம் முன்னோக்கி பிதுங்குதல்
 • செங்குத்து மேல் அல்லது கீழ் இமை குறுகல்
 • முன்தள்ளும் விழிக்குழி வட்டத் தசை செயலிழப்பு
 • ஏழாவது மண்டையோட்டு உள் நரம்பு செயலிழப்பு
 • இமைக் கோள ஒட்டு உருவாதல்
 • இமை மூடுவது எனப்படுவது கீழ் நோக்கி இறங்கும் மேல் இமையின் செயல்பாடு. கண்களை மூடும் போது கீழ் இமை மேல் நோக்கி மிகச் சிறிய அளவே நகர்கிறது. ஆகவே, மேல் இமையின் செயல்பாடு சரியாக இருந்து கீழ் இமையின் நகர்ச்சி சிறிதளவோ அல்லது இல்லாமலோ இருந்தாலும் அறிகுறிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் நோயாளிகள் இதைப் பெரிது படுத்துவதில்லை.

  சுற்று விழிக் கோளாறுகள் இல்லாத சில நோயாளிகள் தங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்க முடியும். இவர்களுள் ஒரு சிலர் கண் வெளிப்படுதல் அறிகுறிகளால் துன்புறுவர். இவர்களில் பெரும்பான்மையோர் பெல் நிகழ்வால் பாதுகாக்கப் படுகின்றனர் (இமையை மூடும் போது கண்கோளம் மேல் செல்லுதல்). பகலில் இமைமூடாமைக் கோளாறு கொண்டவர்களுக்கு கண் பரப்பு சிதைவு அறிகுறிகள் தோன்றும்.

  மீளாத்துயில் நிலை நோயாளிகளுக்கு இமை மூடாமை பெரும்பாலும் காணப்படும். ஏழாவது உள்மண்டையோட்டு நரம்பு வலு போதுமானதாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம். மேலும், இந்த நோயாளிகளுக்கு ஐந்தாவது உள்மண்டையோட்டு நரம்பு செயலிழப்பும் இணைந்து காணப்படலாம். இதனால் வெண்படல மேற்திசு சிதைவு ஏற்படும் ஆபத்து உண்டு.

  நோய் அறிகுறிகள்

  நோயாளிகளுக்குக் கீழ்வரும் அறிகுறிகள் காணப்படும்:

  • அயல்பொருள் உணர்வு
  • உறுத்தல்
  • எரிச்சல்
  • நீரொழுகல்
  • கண் தொற்று
  • வெண்படலப் புண்

  உலர்கண்

  சவ்வழற்சி (KCS) அல்லது கண் உலர் நோய் பெரும்பாலும் கண்ணீர்க் குறைபாட்டால் ஏற்படுகிறது. உலர்கண் சவ்வழற்சி நோயை, “மனவுலைவு, பார்வைத் தொந்தரவு, கண்ணீர்ப்படலத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் விழிப்பரப்புக்கு சேதாரம் விளைவிக்கும் சாத்தியக் கூறுகளைக் கொண்ட கண்ணீர்ப் படலம் மற்றும் விழிப்பரப்பின் பல காரணி நோய்” என உலர் கண் பணிமனை 2007 (DEWS) வரையறுக்கிறது.

  கண்ணீர்ப்படலத்துக்கு மூன்று உட்கூறுகள் உண்டு.

  வெளிப்புற கொழுப்புப் படலம்:

  வெளிப்புற எண்ணெய்ப்படலமான இது கண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கிறது. இமைகளுக்கு எண்ணெய்ப்பசை அளித்துக், கண்ணீர், இமை ஓரங்களில் கசியாமல் பாதுகாக்குகிறது.

  நடு நீர்ப்படலம்

  இது விழிவெண்படலத்துக்கு உயிர்வளியை அளித்து சிறுசிறு ஒழுங்கற்ற தன்மைகளை மூடி விழிப்பரப்பைச் சமமாக்குகிறது. நுண்ணுயிர் தொற்றுக்களைத் தடுத்து தூசிகளை கழுவி வெளியேற்றுகிறது.

  உட்புற சளிச்சவ்வுப் படலம்

  இது நடுப்படலத்தில் உள்ள நீரால் விழிவெண்படலத்தை ஈரமாக வைத்திருக்கிறது. கண்ணீர்ப்படல உட்கூறுகளில் உண்டாகும் குறைபாட்டால் உலர் கண் நோய் ஏற்படலாம். எனினும் கண்ணீர் குறைபட்டினாலேயே பெரும்பான்மையும் இந்நோய் ஏற்படுகிறது. கண்ணீருக்கு, சிறு அடிப்படைக் கூறும் பெரிய அனிச்சைக் கூறும் உண்டு. விழிவெண்படல உணர்வுத் தூண்டலால் அனிச்சையாகக் கண்ணீர் சுரக்கிறது. இயல்பான கண்ணீர்ப்படலத்தோடு, சிறந்த பரவலுக்கும், மறுதளமாக்கலுக்கும் தேவைப்படுவன:

  • இயல்பான மென்மையான விழிவெண்படலப் பரப்பு
  • இயல்பான அளவில் இமைத்தல்
  • ஒத்த விழிப்பரப்பும் இமைகளும்

  காரணங்கள்

  இமை மூடாமைக்கு மூன்று காரணங்கள் உண்டு:

  • விழிக்குழி சுற்றுத்தசை இயங்காமை: இதுவே முக்கிய காரணம். இது வாதம், விழிக்குழி சுற்றுத்தசையோடு தொடர்புடைய முக உள்மண்டையோட்டு நரம்பு அல்லது தைரநச்சியத்தில் காணப்படுவது போல் வலிப்பு சார்ந்ததாக இருக்கலாம்.
  • கண்கோளம் விழிக்குழிக்குள் மிகையாகத் துருத்தல்: இயல்பான இமையாக இருந்தும், பிதுங்கிய விழியை மூடமுடியாமல் இருப்பதால், விழிப்பிதுக்கம், அல்லது குழந்தைகளில் உட்கண் அழுத்தம் அதிகரிப்பதால் வெண்படலம் விரிதல், ஆகியவை இமைமூடாமையோடு காணப்படலாம்.
  • மேல் அல்லது கீழ் இமையில் செங்குத்துப் பரிமாணம் போதுமானதாக இல்லாமை: வடுவுறல் அல்லது காயம் அல்லது நோயால்  ஏற்படும் செயலிழப்பால்  இமை சுருங்குதல் அல்லது குறுகுதல் அமைப்பு சார்ந்தது. இமை படலத்தில் தடுக்கும் விளைவு இருப்பதால் கொலோடியன் படலம் கொண்ட குழந்தைகளுக்கு இமைமூடாமை தற்காலிகமானது.
  • உடலியல் சார் இமைமூடாமை பொதுவாகத் தூங்கும்போது இருக்கும். சுய உணர்வு அற்ற நோயாளிக்கு செயல்படும் இமைமூடமை இருப்பது பிரச்சினைக்கு உரியது.

  நோய் கண்டறியும் முறை

  மருத்துவ ரீதியாகவே நோய் கண்டறியப்படுகிறது.

  • ஒரு கண் மருத்துவரால் பிளவு விளக்கு சோதனை செய்யப்படுகிறது. இதில் இமைக்கிடை புள்ளி மேற்திசு வெண்படல நோய் காணப்பட்டால் இமை மூடாமை அல்லது அரைகுறை இமைப்பு என்று கண்டறியப்படும். இரவு இமைமூடாமை நோயாளிகளில் வெண்படல இருப்புநிலையைப் பொறுத்துப் புள்ளி மேற்திசு வெண்படல நோய் பரவல் அமையும்.
  • நோயாளி மெதுவாக கண்களை மூடும்போது முழு இமை மூடலுக்கான புற சோதனை செய்யப்பட வேண்டும்.
  • முகமுடக்கு வாதம், காயம், அல்லது மருத்துவ விளைவுக் காயம் ஆகியவற்றல் ஏற்படும் கடும் ஏழாவது மண்டையோட்டு நரம்பு செயலிழப்பால் இமைமூடாமை உருவாகலாம். நுட்பமான கண் சுற்று வட்டத் தசை பலவீனம் கொண்ட நேர்வுகளில், பலவந்தமாக மூடும்போது ஏற்படும் உடலியலான இமை திசை திருப்பம் பலவீனத்தை வெளிப்படுத்தும். இதனால் இரவு கண்மூடாமை அல்லது அரைகுறை இமைத்தல் ஏற்படும்.
  • ஐந்தாவது மண்டையோட்டு நரம்பு செயலிழப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த வெண்படல உணர்திறனை அறிவது முக்கியம்.
  • இமைமூடாமை சந்தேகம் உள்ள நோயாளிகளின் மேல் கீழ் இமைத் தோல் செங்குத்துப் பரிமாணத்தை மதிப்பிடுதல் அவசியம். கீழ் இமையில் பொதுவாக செங்குத்து குறைபாடு தெளிவாகத் தெரியும். இது வெண்படல வெளித்தெரிகை அல்லது இமை பின்வலித்தல் ஆகக் காணப்படும். இருப்பினும் மேல் இமைகளில் இமை விளிம்பு இயல்பான உயரத்திலேயே நிற்கும். இமையைக் கீழ் இழுக்கும் போதே செங்குத்துத் தோல் குறைவு வெளிப்படையாகத் தெரியும்.
  • இமைமூடாமைக் கோளாறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளிலும் மேல் இமை உயர்த்தும் தசை செயல்பாடு அளக்கப்பட வேண்டும். இயல்பான அளவுக்கு தோல் இருந்தாலும் மேல் இமை நகர்வு போதுமானதாக இல்லாத நோயாளிகளுக்கு இமைமூடாமை இருக்கக்கூடும்.
  • மேல் விதானத்தில் குமிழ் மற்றும் இமைசார் கண்சவ்வுக்கு இடையில் இணை இமை இருந்தாலும் மேல் இமையின் கீழ்நோக்கிய நகர்ச்சியை அது கட்டுப்பட்டுத்துவதால் இமைமூடாமையை உண்டாக்கும்.
  • கோளம் வெளிப்பிதுங்குதல் காரணமாகக் கண் மூடும்போது இமை நகர்ச்சி வெண்படலத்தை மூடும் அளவுக்குப் போதுமானதாக இல்லாமல் போகிறது.  இமை வீழ்ச்சியோடு இணைந்த இமைமூடாமை வெளித்தோன்றல் வெண்படல நோயை உருவாக்கும்.
  • இரவு இமைமூடாமை விழிக்கும்போது அயல் பொருள் உணர்வையும் நீரொழுகலையும் உண்டாக்கும்.

  ஏழாவது மண்டையோட்டு நரம்பின் வலு போதுமானதாக இல்லாமல் இருப்பதால் ஆழ்மயக்க நோயாளிகளில் பெரும்பாலும் இமைமூடாமை காணப்படும்.

  நோய் மேலாண்மை

  பொதுவான சிகிச்சை

  • கண் பரப்பு மசகு: இது ஆரம்ப அறிகுறிகளுக்கான மசகு, வழுவழுப்பான செயற்கைக் கண்ணீரால் அளிக்கப்படுகிறது.
  • ஆவியாகி உலர்தலைத் தடுக்கவும் : ஆவியாகி உலர்தலைக் குறைக்க முன்வடிவமைக்கப்பட்ட ஈரப்பத அறை அல்லது மென் பாலிஎத்திலின் படலம் கண்களின் மேல் இடப்படுகிறது. தற்காலிக அல்லது நிரந்தர இமை தைத்தல் சில நேர்வுகளில் தேவைப்படும்.

  குறிப்பான சிகிச்சை

  • இமைமூடாமையின் அடிப்படைக் காரணத்தைத் துல்லியமாக கண்டறிந்து குறிப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இமைவீழ்ச்சி: இமைவீழ்ச்சி குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு கோள அமுக்கநீக்கம் மற்றும் கட்குழிக்குள் கண்கோள மறுநிலைப்படுத்தல் மூலம் நோய்மேலாண்மை செய்யலாம். அமுக்கநீக்கம் செய்ய இயலாத நோயாளிகளுக்கு, கண் மூடும் போது வெண்படல முகட்டுக்கு முன்னாக இமைகளை மறுநிலைப்படுத்தும் முயற்சியாக இமை நீட்டித்தல் செயல்முறைகள் மூலம் உதவலாம். மீள்குமிழ் திரள் அல்லது குருதிக்கசிவு கொண்ட  நோயாளிகளுக்கு மீள் குமிழ் புண் நீக்கல் அல்லது வடித்தல் தேவைப்படும்.
  • இமைக் குறுக்கம்: காயம் அல்லது சிகிச்சையின் விளைவாக மேல் இமை குறுக்கமுற்றதால் ஏற்பட்ட இமை மூடாமைக்குப் பொதுவாக மறு உருவாக்க  மென்திசு அறுவை தேவைப்படும்.
  • செங்குத்துத் தோல் பற்றாக்குறை: செங்குத்துத் தோல் பற்றாக் குறையால் ஏற்படும் இமை மூடாமைக்குத் தோல் படலம் அல்லது ஒட்டால் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
  • இணை இமை: இணை இமையால் இமைக் கோள ஒட்டால் ஏற்படும் இமை மூடாமைக்கு இணை இமையை விடுவித்து சளி படல ஒட்டு மூலம் உரிய வளைமுகட்டை (இமை மற்றும் குமிழ் கண்சவ்வு சந்திப்பு) மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
  • கண் சுற்றுக்குழி தசை வாதம்: குறைந்த காலத்திற்கு எதிர்பார்க்கப்படும் மட்டான வெளித்தோன்றல் வெண்படல நோய்க்கு ஆவியாதலைக் குறைத்தலும் மசகை அதிகரிப்பதும் போதுமானவையாகும். வெளித்தோன்றல் கடுமையாகவும் அதிக காலம் எதிர்பார்க்கப்பட்டால் இமைத்தைப்பு செய்யலாம்.

  கீழ் இமை பின்வலிப்பு

  கீழ் இமை வாதத் தொய்வும் இமை துருத்தலும் கொண்ட நோயாளிகளுக்கு இமையைத் தாங்க ஒரு இடைவியை (spacer) வைப்பதன் மூலம் மேலாண்மை செய்யலாம். கொடையாளர் வெண்படலம் அல்லது திசுத்தகடு, சுய உற்பத்தி காது அல்லது மூக்கு மெல்லெலும்பு, செல்லகற்றப்பட்ட மானிட தோல் அல்லது கடின அண்ண சளிச்சவ்வாலான இடைவி பயன்படுத்தப்படும். கீழிமை பின்வலிப்பு சிகிச்சைக்கு கடின அண்ண சளிச்சவ்வு பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  ஆதாரம் : தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனம்

  3.09803921569
  கருத்தைச் சேர்

  (மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

  Enter the word
  நெவிகடிஒன்
  Back to top