பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / கண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை

கண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை பற்றிய தகவல்.

செசல்பீனியா புல்செரிமா என்று தாவர பெயரில் குறிப்பிடுகின்றனர். கொன்றை மலர் மரங்களை நாம் அன்றாடம் பயணம் செய்யும் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், பூங்காக்களிலும் ஏராளமாக காணலாம். கொன்றை மரங்கள் எல்லா இடங்களிலும் மிகவும் சாதாரணமாக காணக் கிடைக்கக் கூடிய தாவரமாகும். இந்த பூக்கள் மஞ்சள் நிறம் கலந்து சிவப்பு நிறத்தில் காணப்படும். இந்த பூக்கள் முதிர்ந்து அவரை காய்களைப் போன்ற காய்களை உருவாக்குகிறது. இதே மயில் கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இதனால் சிவப்பு மயில் கொன்றை என்றும், மஞ்சள் மயில் கொன்றை என்றும் இரண்டு வகையான பூக்களும் காணப்படுகின்றன. மயிலின் உருவத்தை ஒத்திருப்பதால் இதற்கு மயில் கொன்றை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்த மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருந்தாகின்றன. இந்த கொன்றை வலியை குறைக்கக் கூடியது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. நுண் கிருமிகளை போக்கக் கூடியது. உள் உறுப்புகளுக்கு ஊக்கத்தை கொடுக்கக் கூடியது. மயில்கொன்றை இலைகளை பயன்படுத்தி நாம் காய்ச்சலை போக்கக் கூடிய தேநீர் ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மயில் கொன்றை இலைகள், சீரகம், மிளகு, பனங்கற்கண்டு. 5 மிளகை எடுத்து பொடி செய்து கொள்ளலாம். இலைகள் ஒரு பிடி அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இலைகளுடன் பொடி செய்த மிளகு பொடியை கலந்து கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் அளவு சீரகம் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் அளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் சேர்க்க வேண்டும்.

இதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 50 மிலி வரை தினமும் உணவுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் இலைகள் காய்ச்சலை தணிக்கக் கூடியதாக அமைகிறது. காய்ச்சலோடு கூடிய சளி, உடல் வலி போன்றவற்றையும் இது போக்குகிறது. மயில் கொன்றை பூக்களை பயன்படுத்தி கண் நோய்க்கான மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மயில் கொன்றை பூக்கள். இதற்கு எந்த நிற பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதனுடன் பிடி அளவு மயில் கொன்றை பூக்களை இட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இது நன்றாக வதங்கிய பிறகு இதை எடுத்து சூடு ஆறிய பிறகு கண்களின் மேல் புறத்தில் வைத்து துணியால் கட்டிக் கொள்ள வேண்டும். இது கண் நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக அமைகிறது. அதே போல் மயில் கொன்றை பூக்களை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி எடுத்து ஆறிய பிறகு அதை கொண்டு கண்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதுவும் கண் எரிச்சல், சோர்வு போன்றவற்றை போக்கக் கூடியதாக அமையும். கண் நோய், கண் வீக்கம், கண் இமைகளில் தண்ணீர் சேர்ந்திருத்தல், கண் சிவத்தல் போன்றவற்றிற்கு இது நிவாரணத்தை கொடுக்கிறது.

ஆதாரம் : இயற்கை மருத்துவம்.

3.12068965517
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top