অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கண்ணிமை வீக்கம்

கண்ணிமை வீக்கம்

அறிமுகம்

மெய்போமியன் நீர்க்கட்டி

மெய்போமியன் சுரப்பியின் துளைகள் அடைபட்டு சுரப்புகள் தேங்குவதால் நீடித்த குருணைத்திசுக் கட்டி அழற்சி ஏற்படுவதே கண்ணிமை வீக்கமாகும்.

மெய்போமியன் சுரப்பிகள் என்பது உருமாறிய தோல்மெழுகுச் சுரப்பிகள் ஆகும். இவை மேல்கீழ் இமைகளின் தகடுகளில் காணப்படுகின்றன. மேல் இமைத் தகட்டில் ஏறத்தாழ 30-40 சுரப்பிகளும், கீழ் இமைத் தகட்டில் சுமாராக 20-30 சுரப்பிகளும் உள்ளன. விழிக்கோளத்தின் முன் பரப்பை மூடி இருக்கும் கண்ணீர்த் திரையின் வெளிப்புறக் கொழுப்பு அடுக்கை இந்த சுரப்பிகள் சுரக்கின்றன. இச்சுரப்பிகளின் நாளங்கள் செங்குத்தாக அமைந்துள்ளன. இவை கண் இரப்பைகளின் பின் விளிம்பிடைப் பகுதியில் (முன்புறப் பின்புற இமை விளிம்புகளுக்கு இடையில்) திறக்கின்றன. கண் இரப்பை நுண்னறைகளோடு தொடர்புடைய இதுபோன்ற உருமாறிய தோல்மெழுகு சுரப்பிகள் செயிஸ் சுரப்பிகள் என அழைக்கப்படும்.

கண்ணிமை வீக்கத்தில் சுரப்புகளின் கடும் தொற்றால் இமை உள் கட்டி என்னும் சிறு சீழ்ப்புண்கள் உருவாகும். அதுபோல செயிஸ் சுரப்பிகளில் கடும் தொற்று ஏற்பட்டு இமை வெளிக் கட்டிகள் தோன்றும்.

நோயறிகுறிகள்

  • இமைவீக்கம் பொதுவாக இமைத் தோலின் இமைத்தகட்டுப் பகுதியில் சிறு, வலியற்ற, உறுதியான வட்டவடிவப் புண்ணாகத் தோன்றும்.
  • இமைத்தகட்டு விழியிணைப்படலத்தைச் சிதைத்து (சீழ்கட்டிய குருணைத்திசுக்கட்டி) விழுதுத் தொகுதியாக இமைவீக்கம் தோற்றமளிக்கும்.
  • விளிம்பு இமைவீக்கம் இமையின் ஓரத்தில் காணப்படும்.
  • ஒன்று அல்லது பல இமைவீக்கங்கள் இருக்கலாம்.
  • மேல் இமையில் இருக்கும் இமைவீக்கம் விழிவெண்படலத்தை அழுத்துவதால் ஏற்படும் ஒரு வகையான விலகல் பிழை காரணமாகப் பார்வை மங்கல் உருவாகும்.
  • இமை உள் கட்டி, வலியுடனும் அழற்சி வீக்கத்துடனும் காணப்படும்.
  • இமைவீக்கம் தொடர்ந்து ஏற்படலாம். மெய்போமியன் சுரப்பிப் புற்று அல்லது அடித்தள செல் புற்றுத் தொடர் இமைவீக்கமாக ஏற்படலாம். எனவே மேல் ஆய்வு தேவைப்படும்.

காரணங்கள்

  • மெய்போமியன் சுரப்பி நாளத்தின் துளை அடைபடுவதால் இமைவீக்கம் ஏற்படுகிறது. பின்வரும் சில தொடர்புடைய நிலைகளால் அடைப்பு மேலும் தீவிரம் அடையும்:
  • செம்முகப்பரு
  • நீடித்த கண்ணிமையழற்சி
  • எண்ணெய்ச்சுரப்பிமிகை தோலழற்சி

நோய்கண்டறிதல்

ஒரு நோயாளிக்கு பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு இமைகளில் வலியற்ற வீக்கம் இருக்கலாம். அவர் அதைச் சீர்படுத்த விழையலாம். ஒன்று அல்லது பல வீக்கங்கள் உண்டாகக் கூடும். இது போன்ற வீக்கங்கள் முன்பும் அடிக்கடி ஏற்பட்டிருக்கலாம்.  மேல் இமையின் நடுவில் பெரிய இமைவீக்கம் ஏற்பட்டு விழிவெண்படலத்தை அழுத்துவதால் நோயாளிக்கு கண் பார்வையும் குறையக் கூடும். இது, விதிப்படி பெறப்பட்ட சிதறல் பார்வைக்கோ அல்லது பெறப்பட்ட தூரப்பார்வைக்கோ இட்டுச்செல்லும்.

இது வலியுள்ள அழற்சி வீக்கமாகவும், தொற்று ஏற்பட்டதாகவும் காணப்படலாம். கடுமையான அழற்சியால் இமை முற்றிலும் வீங்கலாம். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப வரும் இமைவீக்கம் தீங்குள்ள தாக மாற வாய்ப்புள்ளதா என்று அறிய சோதனை செய்ய வேண்டும்.

சோதிக்கும் போது உறுதியான, சிவப்பாகாத, நிலையான, மென்மையற்ற வீக்கம் காணப்படும். இமைக்கு அடியில் இருக்கும் விழியிணைப்படலப் பரப்பு ஊதிய மெய்போமியன் சுரப்பியைக் காட்டும். சுற்றி இருக்கும் சுரப்பிகளை மென்மையாக பிதுக்கும் போது இறுகிய பற்பசை போன்ற தெளிவான எண்ணெய்ப் பசையுள்ள ஒரு பொருள் வெளிப்படுகிறது. ஊதிய மெய்போமியன் சுரப்பியை அடுத்திருக்கும் விழியிணைப்படலம் நெருக்கமடையலாம். வடியும் காதுமடலுக்குரிய நிணநீர் முடிச்சுகள் இமைவீக்கத்தின் இரண்டாம் நிலை தொற்று ஏற்படாத போது வீங்காது.

செம்முகப்பரு, எண்ணெய் மிகைச்சுரப்பு அல்லது நீடித்த கண்ணிமை அழற்சி போன்ற தொடர்புடைய அம்சங்களும் காணப்படலாம். முகச்சிவப்பு, சிலந்தி மச்சக்கட்டி, இரத்தக் கிளைக்குழல் விரிவு, அல்லது தொடர்புடைய மூக்குமுனைக் கட்டிகளும் செம்பருக்களின் தன்மையாகும். தோலின் அதிக எண்ணெய்ச் சுரப்பால் எண்ணெய் மிகைச்சுரப்பு உண்டாகிறது. நீடித்த கண்ணிமை அழற்சியால் இமை விளிம்புகளில் செதில்கள் அல்லது புண் வெடிப்புகள் காணப்படலாம்.

கீழ்க்காணும் தன்மைகளில் இருந்து இமைவீக்கத்தை வேறுபடுத்திக் காணவேண்டும்:

  • செதிளணு, அடித்தோலணு மற்றும் மெய்போமியன் புற்று
  • விழுதுப்புற்று
  • தந்துகி மற்றும் குகைபோன்ற இரத்தநாளக் கட்டி
  • பால்பரு

இமைவீக்கம் தொடர்ந்து வருமானால் நுண்ணூசி உறிஞ்சல் உயிரணுவியல் சோதனை நடத்துவதன் மூலம் புற்றுக் கட்டியா என்பதைக் கண்டறிய முடியும்.

மடித்த இமையில் இருக்கும் மெல்போமியன் சுரப்பிகளை அகச்சிவப்பு நிழற்பட பிம்பம் ஆக்கும்போது  மெல்போமியன் சுரப்பி உப்பி இருப்பதை அது காட்டும். பிம்பத்தில் காணப்படும் அடுத்திருக்கும் சுரப்பிகள் இறுகிய சுரப்பிகளைக் காட்டும்.

நோய்மேலாண்மை

சிறு, தெளிவற்ற, அறிகுறிகளற்ற இமைவீக்கம் சிகிச்சை எதுவும் இல்லாமல் தானாகவே சரியாகிவிடும். கண்ணிமை வீக்கத்துக்கு மரபான முறைகளிலும் அறுவையினாலும் சிகிச்சை அளிக்கலாம்.

மரபான சிகிச்சை

  1. நீராவி வெப்பம் மற்றும் இமை நீவுதல் சுரப்புகளைக் கரைக்க உதவும். இதன் மூலம் தோல் சுரப்புகள் வடியும்.
  2. விழியிணைப் படலத்தின் வழியாக ஊக்கமருந்தை ஊசிமூலம் செலுத்துவது அறுவைக்கு ஒரு மாற்று சிகிச்சையாகும். பலனளிக்காத போது மீண்டும் செய்யப்படலாம். பக்க விளைவுகளைக் குறைக்க படிகக் கலவையை விட நீர்க்கரைசல் தேர்ந்துகொள்ளப் படுகிறது. தோலுக்கடியாக மருந்தைக் கொடுக்கும்போது நிகழக்கூடிய பக்க விளைவுகள் இமைச்சிதைவு, நிறமிக்குறைபடுதல், மருந்துத் தேக்கம் ஆகியவை ஆகும்.
  3. எண்ணெய்ச் சுரப்பு மிகு தோலழற்சி, செம்முகப்பரு அல்லது நீடித்த கண்ணிமை அழற்சி ஆகியவற்றுடன் கூடிய தொடர் கண்ணிமை வீக்கம் இருந்தால் முறையாக நுண்ணுயிர்க் கொல்லிகளை முற்காப்பு முயற்சியாக உட்கொள்ளலாம்.

அறுவை மருத்துவம்

  1. பகுதி மரப்புக்காக மருந்தளித்து கீறல் அல்லது சுரண்டல் முறையில் கண்ணிமை வீக்கத்தின் உட்பொருட்கள் பெரும்பாலும் அகற்றப்படுகின்றன.
  2. தோல்சுரப்பணுப் புற்று சந்தேகத்தை நீக்க, கீறல் மற்றும் சுரண்டலுக்குப் பின் சுரப்பியின் மீதமிருக்கும் விளிம்பில் திசுச்சோதனை செய்யப்படுகிறது.

சிக்கல்கள்

  1. இமையில் வெட்டுப்பள்ளம்: இமையைக் கீறும்போது அது இமை விளிம்பைத் தாண்டுவதால் வெட்டுப் பள்ளம் ஏற்படும்.
  2. தோல்புரைப்புண்ணும் வடுவும் : ஆழமான கீரல்களால் தோல்புரைப் புண்ணும் இமை வடுவும் உண்டாகலாம்.
  3. குருணைத்திசுக் கட்டிகள்: போதுமான அளவுக்குச் சுரண்டப்படாத போது திசுக்களில் துளைகள் விழுந்து குருணைத் திசுக்கட்டிகள் உருவாகலாம்.
  4. கண்ணிமை விக்கம் தொடர்ந்து வருதல்: பாதிக்கப்பட்ட சுரப்புகளின் படலம் முதற்கொண்டு அனைத்துத் திசுக்களையும் தகுந்த முறையில் சுரண்டாவிட்டால் இமைவீக்கம் திரும்பவும் ஏற்படலாம்.
  5. அழற்சியும் தொற்றுமுள்ள கண்ணிமை வீக்கத்தோடு இமையணு அழற்சியும் இணைந்திருக்கலாம்.
  6. மேல் இமையின் நடுவில் உருவாகும் பெரிய இமைவீக்கத்தால் சிதறல் பார்வை மற்றும் தூரப்பார்வையுடன் பார்வைக் குறைவும் இணைந்திருக்கும்.
  7. தொடர் வடிதலும் இமைவீக்கமும் இருப்பதால் உறுத்தலும் விழியிணைப்படல் சிவப்பும் உண்டாகும்.
  8. வீக்கத்தினால் உண்டாகும் இமையின் தோற்றப்பொலிவுக் குறைபாடுகளுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்.
  9. இமைவீக்கத் தொற்றுக்குப் பின் ஏற்படும் அழற்சியோடு தொடர்புடைய இமையுட்கட்டி உண்டாகும்.
  10. ஓரத்தில் உண்டாகும் இமைவீக்கத்தால் கண்ணிமை முடி உட்புறம் வளைதல் அல்லது கண்ணிமை முடி இழப்பு ஏற்படலாம்.

ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate