অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கண்ணிமைத் துருத்தல்

கண்ணிமைத் துருத்தல்

அறிமுகம்

விழிக்கோலத்தை விட்டு விலகி, கண்ணிமை, வெளிப்புறமாகத் துருத்தும் அசாதாரண நிலையே கண்ணிமைத் துருத்தல் ஆகும். பொதுவாகக் கீழ் இமையே பாதிக்கப்படும். ஆனால் வட்டு இமை நோய்த்தாக்கத்தில், மேல் இமை வெளித்துருத்தல் ஏற்படலாம். கண் வெளிப்படுதலாலும் கண்கோளத்துக்குப் போதுமான மசகு கிடைக்காததாலும் கண்ணிமைத் துருத்தல் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். இதனால் கண்ணீர் வடிதல், நீடித்த வெண்படல் அழற்சி, வெண்படல வீக்கம் அல்லது பார்வை இழப்பு கூட உண்டாகலாம்.

கண்ணிமைத் துருத்தலில் பின்வரும் வகைகள் இருக்கும்:

  • உள்ளுருள்வது
  • தழும்புடையது
  • வாதமுடையது
  • பிறவியிலானது

கட்டியினால் கீழ் இமை விளிம்பு இடம் விலகி இயந்திரகதியிலான கண்ணிமைத் துருத்தல் உண்டாகலாம்.

நோயறிகுறிகள்

இமை விளிம்பு வெளிப்புறமாகத் திரும்பி கண் மூடப்படாமல் இருப்பதால் கண்ணின் முன் பரப்பில் உறுத்தல் ஏற்பட்டு அறிகுறிகள் உண்டாகின்றன.

நோயாளிக்குக் கீழ்வருவன காணப்படும்:

  • இமைக் குறைபாடு
  • கண்ணில் அயல் பொருள் இருப்பதான உணர்வு
  • கண் சிவப்பு
  • கண்ணீர் வடிதல்
  • கண்ணில் கசிவு
  • கண் வலி
  • ஒளிக்கூச்சம்
  • வெண்படல சிராய்ப்பு
  • கண்ணில் புண்
  • கரும்படல பாதிப்பால் கண் உலர்தல்

காரணங்கள்

கண்ணிமைத் துருத்தல் வகைக்கு ஏற்பக் காரணமும் வேறுபடும்:

உள்ளுருள்வு கண்ணிமைத் துருத்தல்

இது ஒரு பொதுவான வடிவம். இது வயதானவர்களின் கீழ் இமையைப் பாதிக்கிறது. வயதோடு தொடர்புடைய மாற்றங்கள் இதற்கு காரணம் ஆகின்றன.

  • செங்குத்தான தளர்வால் இமை நீளம் மிகையாகிறது.
  • கண்மூலை தசைநாண்கள் (உள் மற்றும் பக்க) வழியாக கோள விளிம்போடு இமையை இணைத்துத் தாங்கும் இமைநார் தளர்வாக இருக்கும். (http://emedicine.medscape.com/article/834932-overview#a6)
  • முன்புற இமைமூடு தசை பலவீனம்
  • விழிக்கோளமற்ற விழிக்குழியில் செயற்கைக் கண்ணின் நீடித்த அழுத்தமும் உள்ளுருள்வு கண்ணிமைத் துருத்தலை ஏற்படுத்தும்.

தழும்புடைய கண்ணிமைத் துருத்தல்

தோல் மற்றும் அடித் திசுக்களின் வடு அல்லது சுருக்கத்தால் இது ஏற்படுகிறது. தோலும், இமைமூடு தசையும் அடங்கிய முன் தகடு குறுகுகிறது. இதனால் விழிக்கோளத்தில் இருந்து இமை இழுக்கப்படுகிறது.

முக்கியக் காரணங்கள்

  • கட்டி
  • முகத் தீப்புண்
  • காயம்
  • தோலை மிகையாக அறுத்தல் அல்லது இமை அறுவையில் லேசர் தீய்ப்பு.

வாதக் கண்ணிமைத் துருத்தல்

ஏழாவது மண்டையோட்டு நரம்பு வாதத்தால் இது உண்டாகலாம். ஏழாவது மண்டையோடு நரம்பு வாதத்தால் இமைத் தசை வலுவிழந்து வாதக் கண்ணிமைத் துருத்தல் உண்டாகிறது.

ஏழாவது மண்டையோட்டு நரம்பு வாதம் ஏற்பட முக்கியக் காரணம்:

  • பெல் முகத்தசை வாதம்
  • உமிழ்நீர்ச் சுரப்பி கட்டி
  • சிறுமூளைப் பாலத்தின் கோணத் திண்மை
  • காது அக்கி

பிறவி கண்ணிமைத் துருத்தல்

இது இரு பகுதியையும் பாதிக்கும் ஓர் அரிய நிலையாகும். செங்குத்து முன் தகடு குறைவால் பெரும்பாலும் இது ஏற்படுகிறது.

இது தனியாகவோ பின் வேறு சில நிலைகளோடு இணைந்தோ வரும்:

  • கண்ணிமை முனை ஒடுக்க நோய்த்தாக்கம்
  • பிறவி பசும்படலத்தால் விழிக்கோள வீக்கம்
  • சிறிய விழிக்கோளம்
  • கண்குழிக் கட்டி
  • டவுண் நோய்த்தாக்கம்

இமைக் கட்டிகளினால் இயந்திர ரீதியிலான கண்ணிமை துருத்தல் ஏற்படலாம்.

கண்ணிமைத் துருத்தலுக்கான ஆபத்துக் காரணிகள்

கண்ணிமைத் துருத்தல் சில காரணிகளால் உருவாகிறது:

  • இமைகளை அடிக்கடி தேய்த்தல்
  • இமைகளை அடிக்கடி இழுத்தல் (உ-ம்:கண் வில்லை அணியும்போது)
  • வயதாக ஆக இமையின் இழுதன்மையை இழத்தல்
  • இமையை உள்ளடக்கிய தோலின் தன்மை
  • இமை அறுவை
  • டார்ச்சோலாமைட் மற்றும் பிரிமோடின் போன்ற கண் சொட்டு மருந்துகளை நீண்ட நாள் பயன்படுத்துதல்.
  • இமையோடு தொடர்புடைய தோல் அழற்சி
  • காயம்
  • நடுமுகக் குறைவளர்ச்சி

நோய்கண்டறிதல்

நோய்க்காரணிகளையும் மருத்துவ சோதனைகளையும் ஆய்ந்து பார்ப்பதிலேயே நோய்கண்டறிதல் அடங்கியுள்ளது.

பரிசோதனை பின்வரும் அம்சங்களைக் காட்டலாம்:

  • தோல் வடு, அரிப்பு, தொற்று அறிகுறிகள்
  • நடுமுகக் குறைவளர்ச்சியில், கீழ் விழிக்குழி விளிம்பு விழிக்கோளத்தோடு வைத்து ஒப்பிடும்போது பின்புறமாக அமைந்துள்ளது.
  • இமை வெளிப்புறமாக வளைந்திருத்தல்
  • இமை விளிம்பைச் சோதிக்கும் போது, இமை முடிகள் இல்லாமல் இருப்பது அல்லது இழப்பு, நீடித்த இமை அழற்சி, புண் அல்லது ஊடுறுவல் காணப்படலாம்.
  • கண்ணீர்முனை இமைத் துருத்தலில், உள்நெகிழ்வின் காரணமாக வெளிப்புறமாகச் சுழன்று கண் பரப்போடு தொடர்பு கொள்ளாது.
  • நீடித்த உறுத்தல், மிகைத்தசைவளர்ச்சி அல்லது வடுவாதலால் தூண்டப்பட்டு கருவிழியழற்சி ஏற்பட்டு உலர்விழி அம்சங்களை வெண்படல சோதனை காட்டும்.
  • விழிவெண்படலத்தில் சிராய்ப்பு, வடு, மென்மை, புதுக்குழல் அல்லது புண் காணப்படலாம்.
  • உள்ளுருளும் கண்ணிமைத் துருத்தல்:
  • நோயாளிக்கு உள் மற்றும்/அல்லது கண்மூலை நார்களின் செங்குத்து தளர்வு காணப்படலாம்.
  • செங்குத்து இமைத் தளர்வு: பெருவிரலை பக்க கண்மூலையின் கீழ் வைத்து இமையைப் பக்கவாட்டிலும் மேற்புறமாகவும் தள்ளுவதன் மூலம் செங்குத்து இமைத் தளர்வை மதிப்பிடலாம். இந்த செயலின் போது உள்ளுருள்வு கண்ணிமைத் துருத்தல் மறைகிறது.
  • இமை விலகல் சோதனை: இமையை விழிக்கோளத்தில் இருந்து வெளியே இழுத்து இச்சோதனை செய்யப்படுகிறது. இயல்பான இமை விலகல் 2-3 மி.மீ. இடைப்பட்டு இருக்கும். செங்குத்து இமைத் தளர்வில் விலகல் 5 மி.மீ. மேல் இருக்கும்.
  • மீள் வரல் சோதனை: நோயாளியை இமைக்க விடாமல் தடுத்து கீழ் இமையைக் கீழே இழுத்து விடும் போது இமை மீண்டும் தன் இடத்திற்கு வருவதைத் சோதிப்பவர் கண்காணிக்கிறார். இயல்பாக இமைப்பு இன்றி இமை விரைவாகத் தன்னிலை அடையவேண்டும். ஆனால் தளர்வு அதிகரித்து இருக்கும் போது அது தன்னிலையை மீண்டும் அடைய இமைப்பு தேவைப்படும்.

தழும்புடைய கண்ணிமைத் துருத்தல்

  • செங்குத்து இமைத் தளர்ச்சி: பெருவிரலைப் பக்கக் கண்மூலையில் வைத்து இமையைப் பக்கவாட்டிலும் மேற்புறமாகவும் தள்ளுவதன் மூலம் இதை மதிப்பிடலாம். கீழ் இமை விளிம்பு கீழ் சந்திப்பிற்கு (விழிவெண்படலம் + வெளிவிழியுறை) மேல் 2 மி.மீ. விரிவடையாவிட்டால் தழும்புடைய கண்ணிமைத் துருத்தல் இருக்கிறது எனக் கருதலாம்.
  • தழும்புடைய கண்ணிமைத் துருத்தலில், நோயாளியை மேல் நோக்கிப் பார்க்கவும் அதே நேரத்தில் வாயைப் பிளக்கவும் கூறும் போது இமை நிலை மாற்றம் மிக வெளிப்படையாகக் காணப்படும். இந்த செயல்பாட்டால் முன் தகடு அதிகபட்சமாக இழுபடும்.

வாதக் கண்ணிமைத் துருத்தல்

  • முகத்தசை பலவீனம், இயல்பு மற்றும் அனிச்சை இமை மூடலில் வித்தியாசம், பெல் நிகழ்வின் இருப்பு அல்லது இல்லாமை, இமை மூட இயலாமை ஆகிய ஏழாவது மண்டையோட்டு நரம்பு வாதக் கூறுகள் காணப்படும்.
  • அரைகுறை இமைப்பு மற்றும் இமை மூட இயலாமையால் ஏற்படும் வெளிப்பாடும் கருவிழிநோய்.
  • இமை அகட்டல்
  • புருவ இமையிறக்கம் போன்ற குறைபாடுகள்.

பிறவிக் கண்ணிமைத் துருத்தல்

  • தொடர்புடைய நோய்களான இமைச்சுருக்கம், சிறுவிழிக்கோளம் அல்லது டவுண் நோய்த்தாக்கம் ஆகியவற்றின் அம்சங்கள் காணப்படும்.
  • இயந்திர கண்ணிமைத் துருத்தல் தொடர்புடைய கட்டியின் அம்சங்களைக் காட்டும்.

பின்வரும் நிலைகளில் இருந்து கண்ணிமைத் துருத்தல் வேறுகாணப்பட வேண்டும்:

  • விழிப்பிதுக்கத்தின் இரண்டாம் கட்டமாக இமை அகட்டல்.
  • இமைப் புற்று உம். அடிசெல் புற்று அல்லது செதிள் செல் புற்று.

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவ மேலாண்மை:

கீழ் வரும் சூழலில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும்:

  • அறுவையை மறுக்கும் நோயாளி.
  • நோயாளி அறுவைக்கு ஒத்துக்கொள்ளும் வரை காலம் நீட்டிக்க.
  • அறுவை செய்ய முடியாத அளவுக்கு நோயாளி சுகவீனமாக இருத்தல்.
  • தானாகவே குணமாகக் கூடிய நோயாளிகள் உம். நீண்ட நாள் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட கண்ணிமைத் துருத்தல் அதை நிறுத்தியவுடன் சரியாகலாம் அல்லது இமையை உள்ளடக்கிய தோல் அழற்சியால் உருவான இமைத்துருத்தல் அழற்சி சரியானவுடன் சரியாகலாம்.

அறுவை அற்ற மருத்துவத்தில் அடங்குவன

  • கண்பரப்பு மசகு: வெண்படல வெளிப்பாட்டிற்கு மசகு அல்லது ஈரப்பசை பாதுகாப்பு சாதகமாக இருக்கும். வெண்படலக் கருமைக்கு மசகுக் களிம்புகளைப் பயன்படுத்தலாம்.
  • இமையைச் செங்குத்து டேப்பிங் செய்தல்: ஏழாவது மண்டை ஓட்டு நரம்பு வாதம் தொடங்கியுள்ள நோயாளிகளுக்குப் பக்க கண்மூலைத் தோலை மேற்புறமாக டேப்பிங் செய்யும் போது தற்காலிக விடுதலை கிடைக்கலாம்.
  • ஆரம்ப கண்ணீர் முனை இமைத் துருத்தல் கொண்ட நோயாளிகள் இமையை மேலும் கீழும் (மூக்கை நோக்கி) துடைக்க வேண்டும். இதனால் மருத்துவ ரீதியான இமைதுருத்தல் மோசமான நிலையை அடையாது.
  • தழும்புடைய கண்ணிமைத் துருத்தலில் வடுவை நீட்சி செய்ய டிஜிட்டல் மசாஜ் உதவலாம்.

அறுவை சிகிச்சை

உள்ளுருளும் கண்ணிமைத் துருத்தல்

  • காட்டரி பங்க்சர், கஞ்சக்டிவோபிளாஸ்ட்டி அல்லது லேசி-டி முறைகளில் சரிசெய்யப்படுகிறது.
  • பரந்த அளவிலான  கண்ணிமைத் துருத்தல் பிக் முறை அல்லது மாற்றியமைத்த குன்ஹ்ட்-சைமேனோவ்ஸ்கி முறைகள் மூலம் சரிசெய்யப்படுகிறது.

தழும்புடைய கண்ணிமைத் துருத்தல்:

  • வடு அகற்றல் அல்லது தோல் ஒட்டு மூலம் சரிசெய்யப்படுகிறது.

வாதக் கண்ணிமைத்துருத்தல்

  • டார்சோர்ர்ஹஃபி அல்லது கேந்தோபிளாஸ்ட்டி மூலம் நிவாரணம் அளிக்கலாம்.

பிறவி கண்ணிமைத் துருத்தல்

  • கடுமையான நேர்வுகளில் செங்குத்து தோல் குறைபாட்டை முழு-தடிமன் தோல் ஒட்டு மூலம் மற்றியமைத்து சிகிச்சை அளிக்கலாம்.
  • இயந்திர கண்ணிமைத் துருத்தலுக்கு கட்டியை அறுவை மூலம் அகற்ற வேண்டி இருக்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate