অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

கருவளையம்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

மேற்கொள்ள வேண்டியவை

  • எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
  • தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
  • சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.
  • உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை.  மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.

ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

  1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
  2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
  3. வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
  4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
  5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
  6. மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.
  7. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.
  8. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.
  9. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

ஆதாரம் : ஆரோக்கியத்தளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate