பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தூக்கமின்மை

தூக்கமின்மையின்மையை பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது. பல தூக்கம் மற்றும் மனவியல் கோளாறுகளின் அறிகுறியே தொடர்ந்து தூங்க இயலாமல் போவதாகும். இதன் விளைவாக விழித்திருக்கும்போது செயல்பாட்டுக் கோளாறுகள் தோன்றுகின்றன. இது எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் முதுமையிலேயே பொதுவாக உண்டாகிறது.

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள்.

மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாக காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்கு பழகிய ஒன்று.

இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகார செயற்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு செய்யப்படுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குவதாக கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்கள்.

தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரத்யேக பிரச்சனை மட்டுமல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

குறிப்பாக குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின் நீலநிறம் அதிகமாக இருக்கும் வெளிச்சமும், டேப்ளட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சம் மனிதக்கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது அதனால் கண்களின் தூக்கம் மிகப்பெரிய அளவில் இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார்கள்

அதிகப்படியான சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் காரணமாக மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ, அதே அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மை என்பது போதுமான தூக்கமின்மையால் உங்களின் உடலின் ஆரோக்கியம் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும் என்கிறார் தூக்கமின்மை தொடர்பான மருத்துவ பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எச்சரித்துவரும் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன். தமது அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதானால், சென்னையில் சுமார் 30 சதவீதமான இளம் தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தூக்கமின்மையின் வகைகள்

 • இதில் கடுமையானது,
 • நீடித்தது

கடும் தூக்கமின்மை: ஒரு மாதத்துக்குக் குறைவாகத் தூக்கமின்மைக் கோளாறு இருந்தால் அது கடும் தூக்க மின்மை எனப்படுகிறது. தூக்கம் வராமை, தொடர்ந்து தூங்க இயலாமை அல்லது சரியான தூக்கம் இன்மை ஆகியவையே தூக்கமின்மைக் கோளாறின் இயல்புகளாகும். தூங்குவதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் இருந்த போதிலும் தூக்கமின்மைக் கோளாறு ஏற்படும். இதனால் பகல் நேர செயல்பாடுகளுக்கு இடையூறு உண்டாகும். கடும் தூக்கமின்மையைக் குறுகிய கால தூக்கமின்மை அல்லது மனவழுத்தம் தொடர்பான தூக்கமின்மை என்பர்.

நீடித்தத் தூக்கமின்மை: இது ஒரு மாதத்துக்கு மேலும் நீடிக்கும். இது இன்னொரு கோளாறாலும் உண்டாகலாம் அல்லது அதுவே முதன்மையான கோளாறாகவும் இருக்கலாம். மனவழுத்த இயக்குநீர்களின் அளவு அதிகரித்தல் அல்லது சைட்டோகைன்களின் அளவு மாற்றாங்களால் நீடித்தத் தூக்கமின்மை ஏற்படலாம். காரணத்தைப் பொறுத்து அதன்  விளைவுகளும் மாறுபடும். தசைத்தளர்ச்சி, மாயத்தோற்றம் அல்லது மனக்களைப்பு இதன் விளைவுகளாகும். இக் கோளாறு உடையவர்களுக்கு மாயத்தோற்றமும் செயல்கள் மெதுவாக நிகழ்வது போன்றும் தோற்றமளிக்கும். இரட்டைத் தோற்றங்களும் ஏற்படலாம்.

அவையாவன

 • ஊக்கிக் கட்டுப்பாட்டு சிகிச்சை – படுக்கை அறையை தூக்கத்தோடு இணைத்து முறையான தூக்க விழிப்பு முறைமையை உருவாக்குதல்
 • தூக்கக் கட்டுப்பாட்டு சிகிச்சை – தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கையில் படுத்திருப்பதன் மூலம் படிப்படியாக தூக்க நேரத்தை அதிகரிக்க முடியும்.
 • மனத்தளர்வுப் பயிற்சி – பதட்டத்தையும், தூக்கத்தைக் கெடுக்கும் சிந்தனைகளையும் குறைத்தல்.
 • முரண்பாடான எண்ணம்- தூங்கும் எண்ணத்தைத் தவிர்த்து விழித்துக் கொண்டு இருக்கவும். இது தூங்குவதற்குப் பிரச்சினை உள்ளவர்களுக்கே.
 • உயிரியல் பின்னூட்டம் – தசை விறைப்பு, இதயத்துடிப்பு விகிதம் போன்ற உடல் எதிர்வினைகளை அளக்க ஒரு பொறியோடு இணைக்கப்பட்ட உணரிகள் உடலில் இணைக்கப்படுகின்றன. படங்கள் அல்லது ஒலி மூலம் மூச்சு விடுதலையும் உடல் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்த எந்திரம் உதவுகிறது.
 • இவை புரிந்து கொள்வதற்காகத் தரப்படும் தகவல்களே. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

நோயறிகுறிகள்

 • அதிகாலையில் எழுந்தபின் மீண்டும் தூங்கமுடியாமை
 • இரவில் அடிக்கடி விழித்தல்
 • இரவில் நீண்ட நேரம் விழித்தே இருப்பது
 • களைப்பு தூக்கத்துக்குப் பின்னும் அகலுவதில்லை
 • எரிச்சல்

காரணங்கள்

மனவழுத்தம் தரும் நிகழ்வுகள்:  வேலை, பணம், உடல்நலம், அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் நோய் அல்லது மரணம், ஒலி, ஒளி ஆகிய யாவும் மனவழுத்தத்தைக் கொடுத்து இரவு முழுவதும் உங்களைத் தூங்கவிடாமல் செய்யலாம்.

மனவியல் பிரச்சினைகள்: புதைந்திருக்கும் மனவியல் பிர்ச்சினைகளும் தூக்க முறையைப் பாதிக்கும்.

அவையாவன

 • மனவழுத்தம், இருமுனைக் கோளாறு போன்ற மனநிலைக் கோளாறுகள்
 • பொதுவான கவலை, அச்சக் கோளாறுகள், விபத்துக்குப் பின்னான மனவழுத்தக் கோளாறுகள் போன்ற பதட்டக் கோளாறுகள்
 • முரண்மூளை நோய் போன்ற மனக்கோளாறுகள்

கீழ்வருவனவற்றால் தூக்கமின்மை உண்டாகலாம்

 • இதய நோய்கள்
 • ஆஸ்துமா, நீடித்த நெஞ்சடைப்பு நோய் போன்ற சுவாச நோய்கள்
 • அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்ற நரம்பு நோய்கள்
 • தைராயிடு மிகைச்செயல்பாடு போன்ற இயக்குநீர் பிரச்சினைகள்
 • கீல்வாதம் போன்ற மூட்டு, தசைப் பிரச்சினைகள்
 • ஓயாக்கால் நோய், மயக்க நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்க நோய்கள்
 • அதிகமாக காஃபைன் எடுப்பதும் (தேனீர், காப்பி, பானங்களில் அடங்கி இருப்பவை) தூக்க முறையைப் பாதிக்கலாம்.
 • மருந்துகள்: கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளும் தூக்கமின்மையைக் கொடுக்கலாம்:

அவையாவன

 • எதிர் மனவழுத்த மருந்துகள்
 • வலிப்பு மருந்துகள்
 • பீட்டா-தடுப்பான்கள் போன்ற மிகை இரத்த அழுத்த மருந்துகள்
 • இயக்குநீர் மாற்று சிகிச்சை
 • ஊக்க மருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள்
 • ஆஸ்துமாவுக்கான சல்புயூட்டாமல், சல்மெட்டிரால், தியோஃபைலைன் போன்ற சில மருந்துகள்

நோய்கண்டறிதல்

 • புதிய பழைய உடல்நலப் பிரச்சினைகள்
 • கீல்வாதம் போன்ற வலி தரும் உடல் பிரச்சினைகள்
 • கடையிலோ, மருத்துவச் சீட்டின் படியோ உட்கொண்ட மருந்துகள்
 • மனவழுத்தம், கவலை, மனநோய் ஆகியவற்றின் அறிகுறிகள்
 • மணமுறிவு, மரணம் போன்ற மனவழுத்தம் தரும் நிகழ்வுகள்
 • இவை புரிந்து கொள்வதற்காகத் தரப்படும் தகவல்களே. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

சிகிச்சை

அறிவு மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகள்: தூக்கமின்மைக்குக் காரணமான தேவையற்ற சிந்தனைகளையும் நடத்தைகளையும் மாற்ற இது பயன்படுகிறது. நான்கு வாரங்களுக்கு மேலாக ஒருவருக்கு தூக்கப் பிரச்சினை இருந்தால் இச்சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.

அவையாவன:

 • ஊக்கிக் கட்டுப்பாட்டு சிகிச்சை – படுக்கை அறையை தூக்கத்தோடு இணைத்து முறையான தூக்க விழிப்பு முறைமையை உருவாக்குதல்
 • தூக்கக் கட்டுப்பாட்டு சிகிச்சை – தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கையில் படுத்திருப்பதன் மூலம் படிப்படியாக தூக்க நேரத்தை அதிகரிக்க முடியும்.
 • மனத்தளர்வுப் பயிற்சி – பதட்டத்தையும், தூக்கத்தைக் கெடுக்கும் சிந்தனைகளையும் குறைத்தல்.
 • முரண்பாடான எண்ணம்- தூங்கும் எண்ணத்தைத் தவிர்த்து விழித்துக் கொண்டு இருக்கவும். இது தூங்குவதற்குப் பிரச்சினை உள்ளவர்களுக்கே.
 • உயிரியல் பின்னூட்டம் – தசை விறைப்பு, இதயத்துடிப்பு விகிதம் போன்ற உடல் எதிர்வினைகளை அளக்க ஒரு பொறியோடு இணைக்கப்பட்ட உணரிகள் உடலில் இணைக்கப்படுகின்றன. படங்கள் அல்லது ஒலி மூலம் மூச்சு விடுதலையும் உடல் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்த எந்திரம் உதவுகிறது.

இவை புரிந்து கொள்வதற்காகத் தரப்படும் தகவல்களே. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.96
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top