பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / ஹார்னர் நோய்த்தாக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஹார்னர் நோய்த்தாக்கம்

ஹார்னர் நோய்த்தாக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பரிவுணர்ச்சிப் பாதைகளில் ஏற்படும் இடையூறு காரணமாக ஏற்படும் மூன்று வரன்முறை நோய்களான சிறு மற்றும் இடுங்கிய கண்பாவை, மேலிமை தொங்குதல், முக அரைக்கோள வியர்வை இழப்பு ஆகியவற்றை இயல்பாகக் கொண்ட நோயே ஹார்னர் நோய்த்தாக்கம் (கண்பரிவுணர்வு வாதம்) ஆகும். ஒரே கருவிழிப் பகுதியில் பல்வண்ணம் காட்டும் வான் பேசோவ் நோய்த்தாக்கம் ஹார்னர் நோய்த்தாக்கத்தோடு தொடர்புடையதே.

கண்ணுக்கான பரிவுணர்வுத் தொடர்பு மூன்று நரம்பணுக்களைக் கொண்ட ஒரு வில்லை உருவாக்குகிறது.

முதல் நிலை நரம்பணு பின்பக்க மூளையடிப்பகுதியில் இருந்து தண்டு வடத்தின் கழுத்து முள்ளெலும்பு 8 முதல் மார்பு முள்ளெலும்பு நிலை 2 வரை அமைந்திருக்கும் பட்ஜின் சிலியோ தண்டுவட மையம் வரை (C8-T2)  நீண்டுள்ளது.

இரண்டாம் நிலை முன்நரம்பிணைப்பு பாவை இயக்கு இழைகள் மார்பு நிலை 1-ல் இருந்து வெளியேறி (T1) கழுத்து நிலை 3 மற்றும் 4-ல் (C3-C4) மேல் கழுத்து நரம்பு முடிச்சில் இணைகிறது. பின் நரம்பு முடிச்சு குழலியக்க மற்றும் வியர்வையூக்க இழைகள் முகத்தில் உள்ள இரத்தக் குழாய்களையும் வியர்வை சுரப்பிகளையும் நரம்பூட்டம் செய்கின்றன.

மூன்றாம் நிலை முன்நரம்பு முடிச்சு இழைகள் ஐந்தாம் உள்மண்டையோட்டு நரம்பின் கட்புலப் பகுதியில் இணைகிறது. இது கருவிழியையும் நீண்ட சிலியரி நரம்புகளின் வழியாக மேல் இமையின் மியூலர் தசையையும் நரம்பூட்டம் செய்கிறது.

நோயறிகுறிகள்

ஒரு நைவுப்புண்ணால் உண்டாகும் பரிவுணர்வுப் பாதை இடையூறால் ஏற்படுபவை:

 • பாதிக்கப்பட்ட கண்ணில் பாவை ஒடுக்கம். உள உணர்வுத் தூண்டலுக்குப் பின் பாவையின் விரிவாக்கம் மெதுவாக இருக்கும்.
 • மியூலர் தசைக்குச் செல்லும் பரிவுணர்ச்சி நரம்பூக்கத்தினால் இலேசான இமையிறக்கம்.
 • கீழ் இமைத் தசை நரம்பூட்டத்தினால்  சற்றே கீழ் இமை உயர்தல்.
 • புண் இருப்பிடத்திற்கு ஏற்ப உடலின் ஒரு பக்கமாகப் பலவீனமான முகம்சிவத்தலும் வியர்வையும். இரண்டாம் நிலை நரம்புப் புண் முகத்தின் ஒரு பக்கமாக வியர்வைச் சுரப்பியைச் செயலிழக்கச் செய்யும்.
 • பிறவி ஹார்னர் நோய்த்தாக்கத்திலும் இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளிலும் பன்னிற கருவிழி ஏற்படுகிறது. நீடித்த ஹார்னர் நோய்த்தாக்கமும் பன்னிறக் கருவிழியை உண்டாக்கும்.

காரணங்கள்

ஹார்னர் நோய்த்தாக்கம், மரபுரீதியாகவும் (பால்சார்பற்றப் பண்பிழை மேலாதிக்க), பிறவியாகவும் அல்லது பெறப்பட்டதாகவும் இருக்கும். புண்கள் நடுவிலும் (மூளையடிப்பகுதி அல்லது தண்டுவடம் சார்ந்து) அல்லது புறத்திலும் (கழுத்து பரிவுணர்ச்சி சங்கிலி சார்ந்து) இருக்கலாம்.

பலவகைப் புண்கள் பரிவுணர்வுப் பாதையைப் பல நிலைகளில் பாதிக்கும்.

 • அடிசார் தலையோட்டு கட்டிகள்
 • மூளை இரத்தக்குழல் விபத்துகள்
 • அடிசார் மூளையழற்சி
 • மூளை அடிப்பகுதி அல்லது அகணிப் புண்
 • அர்னால்ட் - சியாரி குறைபாடு
 • மூளைப்பால இரத்தக்கசிவு
 • அதிகக் கழுத்துப் பட்டை புண்ணுடன் கழுத்துக் காயம்
 • பிட்யூட்டரி கட்டி
 • சிரிங்கோமைலியா
 • நரம்பு நோய்கள்

பின்வருவனவற்றால் உண்டாகும் இரண்டாம்நிலை நரம்புப் புண்கள்:

 • நுரையீரல் மேற்பகுதி புற்று
 • கீழ் புய நரம்புப் பின்னலைப் பாதிக்கும் பிறப்புக் காயம்
 • குருதிநாள நெளிவு அல்லது பெருநாடிப் பிளவு
 • நடு நரம்பு ஆய்வு
 • காயம் அல்லது அறுவைப் புண்
 • நெஞ்சுக் குழாய்கள்
 • கழுத்துவிலா எலும்பு
 • நரம்புநார்க்கட்டி

மூன்றாவது நிலை நரம்புப் புண் பின் வருவனவற்றால் ஏற்படலாம்:

 • உட் தலை நாடி அறுவை
 • கூட்டுத் தலைவலி
 • தலைக் குகைத் துளைப்புண்
 • அக்கி அம்மைத் தொற்று

நோய் கண்டறிதல்

அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து அம்சங்கள் காணப்படும்.

முதனிலை நரம்புப் புண் நாக்குழறல், விழுங்க இயலாமை, தள்ளாட்டம், பாதியுடலுணர்வு இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

காயம் அல்லது அறுவை, நடுநரம்புக் குழல் வைத்தல் அல்லது நெஞ்சு குழல் பிரயோகம் ஆகியவை இரண்டாம் நிலை நரம்புப் புண்களுக்கு காரணமாக இருக்கும்.

மூன்றாவது நிலை நரம்பு புண்ணினால், ஆறாவது மண்டையோட்டு நரம்பு வாதத்தின் காரணமாக இரட்டைப் பார்வையும், ஆறாவது மண்டையோட்டு நரம்பின் கண் மற்றும் முகம் சார் பகுதிகளில் உணர்வின்மை அல்லது வலி உண்டாகும்.

பரிசோதனை:

 • பாவை ஒடுக்கம். உள உணர்வுத் தூண்டலினால் மெதுவாக விரிவடைகிறது.
 • இமையிறக்கம் கொண்ட கண்களில், குறிப்பாகப் பிறவி ஹார்னர் நோய்த்தாக்கம் உடைய நோயாளிகளுக்குக் கிடைமட்ட இமைமடிப்பு இருக்காது.
 • கீழ் சந்திப்பு சார் கீழிமை விளிம்பு உயர்ந்திருத்தல்.
 • ஆறாவது மண்டையோட்டு நரம்பு வாதத்தால் விலகல் குறைவு கண் அசைவு சோதனையில் தெரிய வரும்.
 • உயிர்நுண்ணியல் சோதனையில் பன்னிறக் கருவிழியைக் காட்டும்.
 • புண் இருப்பிடத்தை அறிய வியர்வைக் குறைவும் அதன் பாங்கும் உதவலாம்.
 • ஒளி மற்றும் பக்கப் பார்வையில் இயல்பான விழிப்பாவை எதிர்வினைகள்.
 • மேல் இமையின் இமையிறக்கத்தினாலும் கீழ் இமை சற்று உயர்ந்திருப்பதாலும் தெளிவான அழுந்துகண்.
 • எதிர் பக்க மேலிமையின் முரண்பட்ட அகட்டல்.
 • அண்மையில் கண்டறியப்பட்ட முன்நரம்பு முடிச்சு ஹார்னர் நோய்த் தாக்கத்தில் புற்றுநோய் இன்மை. நோயாளிக்குத் தொடர்புடைய முகம்சிவத்தல் இருக்கலாம்.
 • முன்நரம்பு முடிச்சு ஹார்னர் நோய்த் தாக்கம் கொண்ட நோயாளிக்கு விழிக்குழி வலி இருக்கலாம்.

மருந்தியல் சோதனை:

கண் பரிவுணர்வுப் புண்ணை இனங்காண மருந்தியல் சோதனை உதவி செய்கிறது. முன் நரம்பு முடிச்சு புண்கள் பெரும்பாலும் புற்றுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன.

 1. கொக்கைன் சோதனை: மேற்பூச்சுக் கொக்கைன் நரம்ப்பிணைப்புப் பிளவில் இருந்து நார்பைன்ஃபிரைன் மறுபயன்பாட்டைத் தடுக்கிறது. இவ்விதமாக அது மறைமுக பரிவுணர்வுதூண்டும் முகவராக செயல்படுகிறது. இயல்பான கண்களைப் போல் அல்லாமல் ஹார்னர் நோய்த்தாக்கம் கொண்ட கண்பாவை குறைவாக விரிவடைகிறது. இரு கண்களிலும் கொக்கைன் இடப்படுகிறது. 40-60 நிமிடங்களுக்குப் பின் 0.8 மி.மீட்டருக்கும் அதிகமான இணையற்ற அளவிலான  கண்பாவை வெளித்தெரியும்.
 2. அப்ராக்ளோனிடின் சோதனை: மேற்பூச்சு அப்ராக்ளோனிடினால் இயல்பான பாவையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அசாதாரண பாவை விரிவடையும். ஹார்னர் நோய்த்தாக்கம் இருந்தால் அப்ராக்ளோனிடினுக்கு அதிக உணர்திறன் இருக்கும். எனினும், கடுமையான நேர்வுகளில், அப்ராக்ளோனிடின் சோதனையில் எதிர்மறை முடிவைக் கொண்டு ஹார்னர் நோய்த்தாக்கம் இல்லை என்று கருத முடியாது. இச்சூழலில் கொக்கைன் சோதனை அதிக உதவியாக இருக்கும்.
 3. ஹைடிராக்சிஅம்ஃபேட்டாமைன் சோதனை: கருவிழி விரிவாக்க தசையில் இருக்கும் முன் நரம்பு முடிச்சு நரம்பணுக்களில் இருந்து நோர்பைன்ஃபிரைனை மேற்பூச்சு ஹைடிராக்சிஅம்ஃபேட்டாமைன் விடுவிக்கிறது. ஹார்னர் நோய்த்தாக்கத்துடனான முழுமையான முன் நரம்புமுடிச்சு தசைநார் பாதிக்கப்பட்டப் பாவையை ஹைடிராக்சிஅம்ஃபேட்டாமைன்  இயல்பான பாவையுடன் ஒப்பிடும் போது சமமான அளவுக்கு அல்லது அதிகமாக விரிவடைய வைக்கிறது. எனினும் ஹார்னர் நோய்த்தாக்கத்துடன் சிதைவடைந்த முன் நரம்புமுடிச்சு தசைநார் கொண்ட பாவை, இயல்பான பாவையைப் போல் விரிவடைவதில்லை.
 4. அட்ரினலைன் சோதனை: முன் நரம்பு முடிச்சுப் புண்களில் மேற்பூச்சு அட்ரினலைன் (1:1000), இரு பாவைகளையும் விரிவடையச் செய்வதில்லை. பின் நரம்பு முடிச்சுப் புண்களில், நரம்பூக்க மிகை உனர்திறன் காரணமாக, பாதிக்கப்பட்ட பாவை விரிவடையும்; ஆனால் இயல்பானது ஆகாது (இந்தக் குறைந்த அட்ரினலைன் அடர்த்தியைக் கொண்டு).

பிம்ப ஆய்வுகள்:

 1. மேல் மூச்சுப்பெருங்குழாயைத் தோற்றக்களனாகக் கொண்ட புற்று நோயைக் கண்டறிய மார்பு எக்ஸ்-கதிர் உதவிகரமாக இருக்கும்.
 2. பக்கவாத நேர்வுகளில் தலையின் சி.டி.ஸ்கேன் துணை புரியும்.
 3. தலைத் தமனி ஆய்வுக்கு மூளை மற்றும் கழுத்து  எம்.ஆர்.ஐ அல்லது எம்.ஆர்.ஏ,

நோய் மேலாண்மை

ஹார்னர் நோய்த்தாக்க நேர்வுகள் பலவற்றிற்குப் பலனளிக்கும் சிகிச்சைகள் இல்லை.

அடிப்படையான காரணத்தைப் பொறுத்தே மருத்துவம் அமைகிறது. உதாரணமாகத் தலைத் தமனி சோதனை அல்லது நெளிநரம்புக்கு குழல் அறுவை தேவைப்படும். இதுபோலவே, மேல்மூச்சுப்பெருங்குழல் புற்றுக்கு பன்நடைமுறைச் சிகிச்சை தேவைப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.96774193548
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top