অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கல்லீரல்

கல்லீரல்

ஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்

ஹிபாடிக் என்செபலோபதி (போர்டல்-சிஸ்டமிக் என்செபலோபதி, லிவா; என்செபலோபதி, ஹிபாடிக் கோமா) என்பது மூளைச் செயல்களை சீர்குலையச் செய்கிறது. இது சாதாரணமாக ஈரலீனால் நீக்கப்படும் நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல்,இரத்தத்தில் கலந்து அதிகரித்து மூளையை சென்றடைவதால் ஏற்படும்.

  • ஹிபாடிக் என்செலோபதி மது, மாத்திரை அல்லது நீண்ட நாட்களாக ஈரல் நோய் கொண்டவர்கள் மன அழுத்தம் போன்றவைகளால் அதிகரிக்கிறது.
  • மக்கள் ஆளுமை, நடத்தை மற்றும் மனநிலை மாற்றத்துடன் குழப்பம் மற்றும் சுற்றுச்சூழல் உணர்விழப்பு கொண்டவர்களாக மாறுகின்றனர்.
  • உடர்சார் பரிசோதனைகள், எலக்ட்ரோ என்செபலோகிராபி மற்றும் இரத்த சோதனைகளை அடிப்படையாக கொண்டு மருத்துவர்கள் நோய் பற்றி ஆய்வு செய்கின்றனர்.
  • உணவில் புரதத்தினை குறைப்பது நோய் அறிகுறிகளை சீர்செய்ய உதவும்.

குடலிலிருந்து இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகின்ற (உணவு) பொருட்கள் ஈரல் வழியாக செல்கிறது. அங்கே (ஈரலில்) நச்சுப்பொருட்கள் நீக்கப்படுகின்றது. ஈரலின் செயல் பழுதடைவதின் காரணத்தினால் நச்சுக்கள் நீக்கப்படுவதில்லை. அப்படி ஈரலினால் நீக்கப்படாமல் உள்ள நச்சுக்கள் பொது இரத்த ஒட்டத்தில் கலந்து விடுகிறது. அவ்வண்ணம் பொது இரத்த ஒட்டத்தினுள் உள்ள நச்சுக்கள் மூளையை சென்றடைந்து மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எந்த பொருள் மூளைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்என்பது தெளிவாக தெரியவில்லை. புரத சிதைவுப் பொருட்களான அம்மோனியா இப்பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிகிறது.

நீண்டநாட்களாக ஈரல் கோளாறு நோய் உள்ளவர்கள் வழக்கமாக என்செபலோபதி காணப்படும். திடீரென ஏற்படும் நோய் தொற்று மற்றும் மது போன்றவை ஈரல் சிதைவினை அதிகரிக்கும். அல்லது அதிக அளவு புரதம் உட்கொள்வது அதன் விளைவாக அதிகளவு புரத சிதைவுப்பொருட்கள் உண்டாவதால் என்செபலோபதி நோயின் விளைவு அதிகரிக்கச் செய்யலாம். ஜீரண மண்டல உறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து அவற்றிலிருந்து இரத்தம் வெளியேறுதல், ஈஸோபேகஸ் எனும் உணவுக்குழாயில் முறுக்கிய வண்ணம் உள்ள இரத்த நாளங்களிலிருந்து இரத்தம் வெளியேறுதல் போன்றவைகளால் இரத்தத்தில் புரத சிதைவு பொருட்களை அதிகரிக்கச் செய்து இப்பொருட்கள் மூளையை நேரடியாக பாதிக்கலாம். உடலில் நீர் இழப்பு (டிஹைட்ரேஷன்), எலக்ட்ரோ லைட் சமநிலையின்மை, மற்றும் சில மருந்துகள் குறிப்பாக தூக்க மருந்துகள் (செடேடிவ்கள்) நோய் நீக்கி மருந்துகள் (அனல்ஜெஸிக்ஸ்) மற்றும் சிறுநீர்பெறுக்கி (டையூரெடிக்ஸ்) - போன்றவைகள் என்செபலோபதியினை அதிகரிக்கச் செய்யும். இதுபோன்று நோய் அதிகரிக்கச் செய்யும் காரணிகளை நீக்கும் போது என்செபலோபதி குறையலாம். உணவில் புரதத்தினை குறைப்பதும் நோய் அறிகுறிகள் சீர் செய்ய உதவலாம்.

நோய் அறிகுறிகள் மற்றும் நோய் நாடல் (ஊடாய்வு)

மூளையின் செயல்கள் குறைவது முக்கியமாக விழிப்புணர்வு குறைதல் மற்றும் குழப்பம் போன்றவை அறிகுறிகளாகும். ஆரம்ப நிலையில் சிந்தனை செய்தல், ஆளுமை மற்றும் நடத்தையில் நுண்ணிய மாற்றங்கள் காணப்படும். அந்நபரின் மனநிலை மாறலாம் மற்றும் தீர்மானிக்கும் திறன் குறையலாம். சாதாரண தூக்க முறையில் தடைகள் ஏற்படலாம். என்சபலோபதியின் எந்த நிலையிலும் அந்நபரின் மூச்சுக்காற்றில் துர்நாற்ற வாடை ஏற்படலாம். நோய் அதிகரிக்கும் பட்சத்தில் அந்நபர் தன் கைளை நேராக நீட்டும் போது கைகள் நேராக நிற்காது, கைகளில் லேசான சிறகடித்தல் போன்ற அசைவு (ஆஸ்டரிக்ஸிஸ்) ஏற்படும்.

அதேபோன்று அந்நபர் மனக்குழப்பம் அடைந்தவராய் அரைதூக்க நிலைக்கு வந்துவிடுவார். மற்றும் அசைவுகள் மற்றும் பேச்சு மந்தமாக இருக்கும். சுற்றுசூழல் உணர்விழப்பு பொதுவாக காணப்படும். இயற்கைக்கு மாறாக என்செபலோபதி உள்ள ஒரு நபர் சண்டைபோடுபவராகவும், கிளர்ச்சியுற்றவராகவும் மாறுவார். சீஸர்ஸ்சும் அசாதரணமாக காணப்படும். கொஞ்ச கொஞ்சமாக சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு வந்து தள்ளப்படலாம்.

ஒரு எலக்ட்ரோ என்செபலோகிராம் (மூளை மின்னலை பதிவுக்கருவி) (மூளை, தண்டுவடம், மற்றும் நரம்பு கோளாறுகளில் நோய் நாடல் ஊடாய்வு: எலக்ட்ரோ என்செலோகிராபி - மூளை மின்னலை வரைவியல்) ஆரம்ப என்செபலோபதியினை ஊடாய்வு செய்ய உதவும். மிதமான என்செபாலோபதி நோய் நிலைகளில் கூட, மூளை மின்னலை பதிவுக்கருவி மின்னலை வரைவு வேகம் குறைந்த மூளை மின்னலைப் பதிவுகளை காண்பிக்கும். இரத்த சோதனைகள் பொதுவாக இரத்தத்தில் அதிகளவு அம்மோனியாவை காண்பிக்கும்.

சிகிச்சை முறை.

ஒரு மருத்துவர் நோய் தொற்று அல்லது ஒரு மருந்து போன்ற என்செபலோபதியை அதிகரிக்கும் காரணிகளை நீக்க பார்ப்பார். மருத்துவர் அந்நபரின் உணவை கட்டுபடுத்துவதன் மூலம குடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கவும் முயற்சிப்பார். உணவில் புரதம் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும் போது முக்கிய சக்திபொருளாக இருக்கும் வண்ணம் மாவு பொருட்களை (கார்போஹைட்ரேட்ஸ்) வாய் அல்லது இரத்தத்தின் மூலம் செலுத்தப்படும். பின்னர் மருத்துவர் உணவில் விலங்கு புரதத்தினை விட (இறைச்சி) தாவரப்புரதத்தினை (சோயா புரதம்) அதிகரித்து தேவையான புரத்தினை அளித்து என்செபலோபதியினை மோசமடையச் செய்யாமல் கட்டுப்படுத்துவார்.

அதிக நார்சத்து கொண்ட காய்கறி உணவு, உணவானது ஜீரண மண்டலவழியாக மிக வேகமாக கடக்கச் செய்து குடலில் ஏற்டும் அமிலத்தன்மையை சரிசெய்கிறது. அதன்மூலம் அம்மோனியா இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது. செயற்கை சர்க்கரையை (லாக்டுலோஸ்) வாய்வழியாக எடுத்துக்கொள்வது மேற்கூறியது போன்று பயனுள்ளது. இது குடலில் அமிலத்தன்மையை சரிசெய்கிறது மற்றும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இது உணவு ஜீரண மண்டலத்தை கடந்து செல்லும் வேகத்தை அதிகரிக்கிறது. குடலை சுத்தம் செய்யும் எனிமாவும் கொடுக்கலாம். சிலசமயங்களில் லாக்டோஸ்சை பொறுத்துக்கொள்வதில் கடினமுள்ளவர்களுக்கு வாய்வழியாக ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்படும்.

சிகிச்சையினால் அநேக வேலைகளில் ஹிபாடிக் என்செபலோபதி திருப்பமடையலாம். திருப்பமடையகூடிய காரணிகளால் ஏற்படும் ஹிபாடிக் என்செபலோபதி, உண்மையில் பரிபூரணமாக மீள்வது என்பது சாத்தியமே. நீண்டகால ஈரல் நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு பிறகு எதிர்காலத்தில் மீண்டும் இந்நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். திடீரென ஏற்படும் ஈரல் கோளாரினால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் சுமார் 80% சதவீதத்தினர் தீவிர சிகிச்சைக்கு எடுத்துக்கொண்ட போதிலும் இறக்க நேரிடலாம்.

Source:MERCK

ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ என்பது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோய்.
காரணங்கள்
ஹபடைடிஸ் ஏ அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் வழியாக, ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கி பழகுவதினால் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஹபடைடிஸ் ஏ வைரஸ், நோய்கண்ட நபருக்கு, நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்களில் முன் மற்றும் பாதிப்புகண்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. பொதுவான ஹ்படைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி. ஆகும். ஹபடைடிஸ் ஏ என்பது மிக குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

  • மஞ்சள் காமாலை
  • உடல் சோர்வு
  • பசியின்மை
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • மிதமான காய்ச்சல்
  • வெளிர்ந்த அல்லது களிமண் நிறத்தில் மலம் கழித்தல்
  • கருமையான சிறுநீர் கழித்தல்
  • உடல் ழுமுவதும் ஏற்படும் அரிப்பு தன்மை

தடுப்பு முறைகள்:

  • ஹபடைடிஸ் பாதிக்கப்பட்ட நபர் மிகத்தூய்மையாக இருத்தல் அவசியம். அவரது ரத்தம்,மலம், உடல் வியர்வை போன்றவற்றை சுத்தம் செய்த பின்னர் சோப்பு கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள் வேண்டும்.
  • கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை கழுவி சுத்தம் செய்தல் வேண்டும்.
  • கலப்படமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதை தவிர்த்திடல் வேண்டும்.
  • ஹபடைடிஸ் ஏ நோய் எதிர்க்கும் தடுப்பூசிகள் கிடைக்கினறன. தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்ட ஆறிலிருந்து பணிரெண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும்

தடுப்பூசி யார் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்??

  • ஹ‎படைடிஸ் ஏ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.
  • நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி வைரஸ் நோய் தொற்று கண்டவர்கள்.

ஹபடைடிஸ் ஏ பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

ஹபடைடிஸ் பி

ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர்.

ஹபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்புன் இருக்கும். ஹபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம், ஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை. இவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து பிறருக்கு பரவச்செய்கின்றனர். இவ்வகை நோய்கண்ட நபரில், கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய்.

காரணங்கள்

ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.
  • சுகாதார பாதுகாப்பு மையங்களில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.
  • நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்வதால்
  • நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்கு செலுத்துவதின் மூலம்
  • ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது
  • நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.
  • நோய் கண்ட தாய்மூலம் , இந்நோயினை குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறதுஅல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது.

அறிகுறிகள்

  • சோர்வு உடலநலம் குன்றுதல்.
  • மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல்
  • குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுவலி
  • மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.

தடுப்பு முறைகள்

  • இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்
  • தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்
  • குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு நோய் (சிர்ரோஸிஸ்)

சிர்ரோஸிஸ் என்பது கல்லீரலை பாதிக்கும் நோய். நாட்பட்ட கல்லீரல் நோய் காணப்படும்போது சிர்ரோஸிஸ் தோன்றுகிறது. இதன் விளைவாக கல்லீரலில் வடுக்காயங்கள் மற்றும் செயலற்ற தன்மை ஏற்படும். இதனால் அடிக்கடி வயிற்றுப் பகுதியில் நீர் சேர்தல் (அசைடிஸ்), ரத்தம் உறைதலால் ஏற்படும் குறைபாடுகள் (கோயாகிலோபதி), கல்லீரல் ரத்த நாளங்களில் ஏற்படும் உயர் அழுத்தம் போன்றவை ஏற்படும்

காரணங்கள்
சிர்ரோஸிஸ் நாட்பட்ட கல்லீரல் பாதிப்பால் ஏற்படக்கூடியது.

அறிகுறிகள்

  • வயிற்றுப் பகுதியில் நீர் சேர்தல் (அசைடிஸ்)
  • கால்களில வீக்கம் ஏற்படுதல்
  • இரத்தவாந்தி
  • குழப்பமான மனநிலை
  • மஞ்சள் காமாலை
  • தோலின் மேல் சிறிய சிவப்பு நிற சிலந்திவடிவான இரத்த நாளங்கள் தோன்றுதல்
  • உடல் பலவீனம்
  • உடல் எடை இழப்பு
  • குமட்டல் மற்றும் வாந்தி

சிர்ரோஸிஸ்ஸிற்கான பிற அறிகுறிகள்:

  • அன்றாடம் கழிக்கும் சிறுநீரின் அளவு குறைதல்.
  • உடல் முமுவதும் வீக்கமடைதல்.
  • வெளிர்ந்த அல்லது கருமையான நிறத்தில் மலம் கழித்தல்.
  • மூக்கு அல்லது பல் ஈறு பகுதியில் இரத்தம் வடிதல்.
  • கைனிகோம்தாஸ்டியா பெண்களின் மார்பகங்கள் போல் ஆண்களுக்கும் ஏற்படுதல்.
  • வயிற்று வலி
  • வயிற்று அஜீரணக்கோளாறு
  • காய்ச்சல்

தடுப்பு முறைகள்

  • மது அருந்துதலை தவிர்த்தல்
  • இரத்தத்தில் செலுத்தும் மருந்து வகைகளை தவிர்ப்பதின் மூலம் (அல்லது சுத்தமான ஊசிகளை பயன்படுத்தவும் மற்றும் ஊசிகளை மற்றவருடன் ஒருபொழதும் பகிர்ந்து கொள்ளாதிருத்தல்). இதனால் ஹ்‎படைடிஸ் பி மற்றும் சி போன்ற கல்லீரல் வியாதிகளையும் குறைக்கலாம்

கல்லீரல் பாதிப்பு நோய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

ஒட்டுண்ணியால் ஏற்படும் கல்லீரல் நோய் (அமீபிக் லிவர் ஆப்ஸிஸ்)

அமீபிக் லிவர் அப்ஸிஸ் என்பது எண்டமீபா ‎ஹிஸ்டோலிடிகா எனும் ஒட்டுண்ணியால், கல்லீரலில் ஏற்படும் நோய். இதில் கல்லீரல் வீ’ககம் கண்டு, சீழ் வைத்து, கட்டிகள் தோன்றும்

காரணங்கள்
அமீபிக் லிவர் அப்ஸிஸ் என்பது எண்டமீபா ‎ஹிஸ்டோலிடிகா எனும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இவ்வகை உயிரிகள் இரத்தத்தின் மூலமாக கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மலத்தில் உள்ள ஒட்டுண்ணி முட்டைகளினால் கலப்பட உணவு அல்லது தூய்மையற்ற தண்ணீரை உட்கொள்ளும்போதும், மலப்பொருட்களை உரமாக பயன்படுத்தும் போதும், மற்றும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும்போதும் இவ்வகை ஒட்டுண்ணிகள் மற்றவர்களுக்கு பரவுகிறது.

நோயை அதிகரிக்கக் ‏‏கூடிய காரணிகள்
ஊட்டச்சத்து குறைவு, வயது முதிர்வு, மகப்பேறு காலம், ஸ்டிராய்டுகளை பயன்படுத்துதல், புற்று நோய், நோய் எதிர்ப்பு தன்மை குறைபாடு, போதை பழக்கம், ஓரினச் சேர்க்கை குறிப்பாக ஆண்களில்

அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • வயிற்றுப்பகுதியில் வலி தோன்றும் குறிப்பாக வலது பக்கத்தின் மேற்பகுதியில் வலி காணப்படும். வலி கடுமையாகவும் தொடர்ந்தும் அல்லது குத்துவலிபோல் காணப்படலாம்
  • பொதுவான அசவுகரியங்கள் அல்லது உடல்சுகவீனம்
  • வியர்வை கொட்டுதல்
  • சீதளம்
  • பசியின்மை
  • உடல் எடை இழப்பு
  • பேதி
  • காமலை நோய் (மஞ்சள்)
  • மூட்டு வலி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate