பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பித்தக் கற்கள்

பித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

பித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.

ஈரல் மற்றும் பித்தப்பாதை

பித்தப் பாதையானது பித்தத்தினைக் கடத்துகின்ற தொழிலைச் செய்கிறது. பித்தமானது ஈரலில் உருவாக்கப்படுகின்றது. பின்னர் பித்தப்பாதையில் சேமிக்கப்பட்டு தேவையேற்படின் பித்தக் குழாயினுடு முன்சிறுகுடலை அடைகிறது. பித்தக் குழாயானது பித்தக்கற்களினால் அடைப்புக்கு உட்படுமாயின் பித்தச் சுற்றோட்டம் தடுக்கப்டுவதனால் பித்தக் குழாயினுள் பித்தம் தி தேங்குகின்றது. உடலில் பித்தத்தின் அளவு கூடுவதனால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது ஜான்டிஸ் என அழைக்கப்படும்.

பித்தமானது சிறிகுடலை அடைந்ததும் அங்கு காணப்டும் கொழுப்புவகை உணவுகளை  குழம்புகளாக அதாவது சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கிறது. இதன் மூலம் கொழுப்புப் பதார்த்தங்கள் சமிபாடைந்து அகத்துறிஞ்சப் படுகின்றது.

பித்தப்பாதையில் ஏதாவது நோய்கள் ஏற்படுமாயின் அதனால் உண்டாகும் நோவு வயிற்றின் மெல் பகுதியில் வலியாக உணரப்படும்.

பித்தக்கற்களில் பலவகையுண்டு. பெரும்பாலான கற்கள் கொலஸ்ரோல் மற்றும் பித்தப் பொருட்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. பித்தக் கற்களின் அளவு மற்றும் அவை காணப்படும் இடம் (பித்தப்பையா? பித்தக் குழாயா?) என்பவற்றைப் பொறுத்து ஏற்படும் நோய்குணங்குறிகள் வேறுபடும்.

ஆதாரம் : ஆரோக்கியதகவல்

3.32608695652
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top