பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காது-மூக்கு-தொண்டை / கார்னிபாக்டீரியம் டிப்தீரியே - நுண்ணுயிரிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கார்னிபாக்டீரியம் டிப்தீரியே - நுண்ணுயிரிகள்

கார்னிபாக்டீரியம் டிப்தீரியே - நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பண்புகள் மற்றும் நோய் தாக்கம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

கார்னிபாக்டீரியம் இனப்பிரிவு அதிக எண்ணிக்கையில் உயிரிகளை கொண்டுள்ளது. மனிதனுக்கு நோய் விளைவிக்கும் முக்கிய நுண்ணுயிரி கார்னிபாக்டீரியம் டிப்தீரியே ஆகும். இந்த இனப் பிரிவு, அழுகிய பொருளில் வாழ்வன, கேடுவிளைவிக்காதவை (harmless saprophytes) அதிக அளவில் சீழ் உறைகளில் காணப்படுவனவற்றையும் கொண்டுள்ளது. டிப்தீரியா என்பது மனிதனிடம் காணப்படும் தொற்று, இது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவனுக்கு எளிதாக பரவக் கூடியது. நோய்க்கிருமியுடைய மனிதன் பிறருடன் மிக நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு கொள்ளும்போது சுலபமாக பரவி விடக்கூடியது. இந்நோய் உயிரி மனிதரிடத்தில் இருக்கும். சக்திவாய்ந்த வெளி நோய் நச்சு உண்டு பண்ணி டிப்தீரியா நோயை ஏற்படுத்துவது கார்னி பாக்டீரியம் டிப்தீரியேவாகும். குறிப்பிட்ட நோய் நச்சு எதிர்பொருள் இரத்தத்தில் இருந்தால், அது நச்சுவை செயல் இழக்கச் செய்து தனிமனிதனுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை அளிக்கிறது.

கா. டிப்தீரியே : இது மெல்லிய கிராம் பாசிடிவ் குச்சி. இது அமிலத்திடத்தன்மை வண்ண மேற்காதது (non acid fast). ஸ்போர் உருவாக்காத 0.5- அகலம் X 1.5-5.4 நீளத்துடன் இருக்கும். சாயமேற்றப்பட்ட படர்வில் தனி உயிரி ஒன்றுக்கு ஒன்று கூர்மை கோணங்களில் V & L வடிவங்களில் அல்லது சீன எழுத்து உருவாதல் போன்று அமைந்து இருக்கும். இது வடிவம் மாறக்கூடிய (pleomorphic) தடி (Club shaped) வடிவத்துடன், மணி கோர்க்கப்பட்ட நிலையில் காணப்படும். ஏனெனில் இதில் மாறுப்பட்ட காலங்களில் நிகழும் நிற மாற்ற குறுமணிகள் (metachromatic granules) கொண்டிருப்பதால் ஆகும்.

வளர்ச்சிப் பண்புகள்

இது திரவ ஊடகத்தில் மெழுகு போன்ற மென்தோல் உருவாக்கும், மிகச் சிறிய சாம்பல் வெள்ளை நிற மினு மினுப்பான கூட்டங்களுடன் லோஃப்ளர்ஸ் திரள் ஆன ஊநீர் ஊடகத்தில் காணப்படும். டெலூரைட் உள்ள இரத்த அகார் ஊடகத்தில், கூட்டங்கள் சாம்பலில் இருந்து கறுப்புடன் இருக்கும் ஏனெனில், டெலுரைட், அணுக்களின் உள்ளே டெலுரியமாக குறைக்கப்படுகிறது.

மூன்று வகையான கா.டிப்தீரியோக்களும் குறிப்பிட்ட தோற்றம் கொண்டிருக்கும்.

  1. கிரேவிஸ் வகை இரத்த அணுக்களை அழிக்காமல் பெரிய, சாம்பல் நிற, ஒழுங்கற்ற, வரிவரிப் பள்ளமாய் தொகுதிகளை உருவாக்கும்.
  2. மைட்டிஸ் வகை இரத்த அணு அழித்து சிறிய, கருமை நிற, வழுவழுப்பாய், பளபளப்பாய் குவிந்த தொகுதிகளை உருவாக்கும்.
  3. இடைப்பட்ட இரத்த அணு (Inter medius) இரத்த அணுவை அழிக்காத சிறு கூட்டங்கள் அதாவது முதல் இருவகைகளுக்கும் இடைப்பட்டதை உருவாக்கும். திரவ ஊடகத்தில் கிரேவிஸ் மெல்லிய மென் தோல் உருவாக்கும். மைட்டிஸ் ஊடுபரவி செல்லும் இடைப்பட்டவகை அடியில் படிந்து விடும்.

நோய்த் தோற்றம்

கா.டிப்தீரியே என்பது சுவாசக் குழாய், காயங்களில் மற்றும் நோயில் இருந்து மீள்பவரிடம் காணப்படும் சாதாரண நுண்ணியிரியாகும். இது, ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவர்க்கு நீர்த்திவாலைகள் மூலமாக பரவுகிறது. சளி சவ்வு உறைகளில் மற்றும் தோல் உராய்வுகளில் வளரும். நோய் நச்சை உருவாக்கும் சிறு சிற்றினம் (Strains), நோய் நச்சினை உருவாக்கி சுற்றுப்புறங்களில் வெளியேற்றுகின்றன. இவை பின் உடலில் உறிஞ்சப்படுகிறது. நோய் நச்சு இரு பகுதிகளைக் கொண்டது, பகுதி B, பகுதி Aவை செல்லிற்குள் எடுத்துச் செல்கிறது. புரோட்டீன் உற்பத்தியில் உதவும் ஒரு பொருளை (EF2) பகுதி A செயலிழக்கச் செய்கிறது, மற்றும் செல்லின் புரத இணைப்பாக்கம் நிறுத்தப்படுகிறது. டிப்தீரியா என்பது கடுமையான, வெளிப்படையான தொற்று நோய். இது உடல் முழுதும் பரவாத குறிப்பிட்ட உறுப்பின் பகுதியை தொற்றக்கூடியது. இது, சுவாசக் குழாயின் மேல் பகுதியில் தொற்றை உண்டாக்கும். மற்றும் உடல் அமைப்பு முழுதும் நோய் நச்சுத்தன்மையின் விளைவுகளால் பாதிக்கப்படுகிறது. டிப்தீரியாவில் இரு வளர்ச்சி நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலையில் குறிப்பிட்ட உறுப்பை பாதிக்கும் மிகக் கடுமையான, தொண்டை அழற்சியை ஏற்படுத்தும். இந்நிலையில் கடினமான சவ்வு உரையானது மூச்சுக் காற்று செல்லும் பாதையில், தொண்டையில் உருவாகி மூச்சுத்திணரலை ஏற்படுத்தும். அடுத்த நிலையில் சார்ந்த வளர்ச்சிப்படியில், (systenic phase) புற நச்சு உடல் முழுவதும் பரவி ஓம்புனரின் இருதயம் மற்றும் புற நரம்புகள் முதலியவற்றின் திசுக்களைப் பாதிக்கும்.

நோய்க்குறியியல்

சளிச்சவ்வு உறையால் நோய் வெளி நச்சு உறிஞ்சப்பட்டு, எப்பிதீலியம் அழிவிற்கு வழி வகுத்துவிடும். மேலும், அழற்சியின் விளைவு ஏற்பட ஆரம்பிக்கும். அழுகிய எப்பிதீலியம், ஃபைபிரின் மீதும் வெள்ளை, சிவப்பு ரத்த அணுக்கள் மீதும் உள் ஊன்றப்படுகிறது. ஒரு சாம்பல் நிற "போலி-உறை" சாதாரணமாக உள்நாக்கு, தொண்டை அல்லது குரல்வளை, மேல் உருவாகும். இந்த உறையில் எந்த வகையான கிழிசல் ஏற்பட்டாலும், இரத்தக் கசிவு ஏற்படும்.

இந்த நுண்ணுயிர்கள் தொடர்ந்து நோய் வெளி நச்சுப்பொருளை உறையின் உள்ளே உற்பத்தி செய்யும். இந்நோய் நச்சுப்பொருள் அதிக சேதம் விளைவித்து, அழுகுதலை இதயத்தசை, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் அட்ரினல்களில் ஏற்படுத்தி, சில சமயங்களில் அழுகுதலுடன் இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இந்நோய் நச்சு நரம்பு சேதம் ஏற்படுத்தி, அதன் விளைவாக பக்கவாதத்தை மேல் வாய்ப் பகுதியிலும், கண் தசைகள் மற்றும் கை, கால்கள் தசைகளிலும் ஏற்படுத்தும்.

மருத்துவ ரீதியாக வெளிப்படுத்திக் காட்டுதல்

கா. டிப்தீரியே என்பது பொதுவாக படையெடுத்து தாக்கக்கூடிய உயிரி அல்ல. மருத்துவ வெளிப்பாடுகள் டிப்தீரியா நோய் வெளி நச்சுப் பொருள் உண்டாக்கும், குறிப்பிட்ட உறுப்பு மற்றும் உடல் அமைப்பு முழுதும் சார்ந்த இரண்டு விளைவுகளுடன் தொடர்புடையது ஆகும். இந்நோய் நச்சு, குறிப்பிட்ட உறுப்பின் திசு அழிவுக்கும், உறை உருவாகுதலுக்கும் காரணமாகிறது. டிப்தீரியா என்பது பல வகையான மருத்துவ அறிகுறிகளுடன் கூடிய பிரிவுகளை, நோய் தாக்கப்பட்ட பகுதியினைச் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது.

சுவாச உறுப்பு டிப்தீரியா

கா. டிப்தீரியே சுவாச குழாயின் மேற் பகுதியில் ஆரம்பத்தில் தொற்று ஏற்படுத்தி, அங்கு உயிரி சளிச் சவ்வின் மேல் மூக்கு, தொண்டைப் பகுதியில் கூட்டமாக இருந்து, இரத்தப் பிரவாகத்தில் சேராமல், பெருகிவிடும். வழக்கமாக, 2-5 நாட்கள் நோய் வெம்மைப்பருவத்திற்கு பிறகு, நோயானது சோர்வு, வரண்ட கரகரப்பான தொண்டை, பசிச்சுவையின்மை மற்றும் காய்ச்சலுடன் படிப்படியாக உருவாகிறது.

உடலில் குறிப்பிட்ட உறுப்பு பகுதியில், நோய் நச்சுப் பொருள் திசு அழுகுதலை ஏற்படுத்தி, வெள்ளை அணுவின் எதிர்ச்செயலைத் தூண்டுகிறது. மற்றும் கடினமான ஒட்டு பண்புடன் போலி உறையை உண்டாக்குகிறது. இது, ஃபைபிரின், இறந்த அணுக்கள் மற்றும் பாக்டீரியாக்களின் கலவையால் உருவாகிறது. இந்த உறையானது கடினமான இறுக்கமாக ஒட்டி இருக்கும், மேலும், இவ்வுறையை பிரிக்கவோ, எடுக்கவோ முயன்றால் இரத்தக்கசிவு ஏற்படும்.

தொண்டையில் ஏற்படும் டிப்தீரியா :

முதலில் போலி உறையானது வழக்கமாக உள் நாக்கின் மீது அல்லது தொண்டையின் மேற்பகுதியில் உருவாக ஆரம்பிக்கும். பல கடுமையான நோயாளிகளில், தொண்டையின் சுவரின் வாய் அறை மேல் வாய் ஆகியன மீது மெதுவாக பரவி நுரையீரல் காற்றுகுழாய் வரைக்கும் நீடிக்கும். இதுவே தொண்டைப்பகுதி டிப்தீரியா ஆகும்.

குரல்வளை டிப்தீரியா :

போலி உறை வளர்ந்து பரவும் போது நோயாளிகளுக்கு குறிப்பிடும் படியான தாடையின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு உருவாகும். மற்றும் முன்புற கழுத்துப் பகுதியில் நிணநீர் தேக்க வீக்கம் ஏற்பட்டு, "காளை கழுத்துத் தோற்ற" பண்பினை வெளிப்படுத்துகிறது. பல கடுமையாகத் தாக்கப்பட்ட நோயாளிகளில் நீர்த்தேக்கம் ஆனது காரை எலும்பு வரை நீண்டு மார்பு வரை, செந்தடிப்புடன் (erythema) விரிவடைகிறது. குரல்வளை டிப்தீரியா என்பது போலி உறை விரிவின் விளைவாக ஏற்படுகிறது. இது தொண்டை கரகரப்பு, கரகரப்பொலி மூச்சுத் திணறல், மற்றும் காற்றுப் பாதையில் தடை ஆகியவற்றோடு தோன்றும்.

உடல் மண்டலம் முழுவதும் சார்ந்த விளைவு :

போதுமான நோய் நச்சுப் பொருள் இரத்த ஓட்டத்தை அடைந்து, கடுமையான ஆற்றல் இழப்பு, தோல் வெளிறிப் போதல், அதிகமான நாடித்துடிப்பு, அரைமயக்கம், மற்றும் ஆழ் மயக்க நிலை ஆகியவை ஏற்பட்டு நோய் நிலைமை மேலும் அதிகமாகலாம். இது போன்று விளைவுகள் அறிகுறி தோன்ற ஆரம்பித்து ஒரு வாரத்தில் இறப்பு நேரிடலாம். ஊறிஞ்சப்பட்ட நோய் நச்சுப் பொருள், காலம் தாழ்ந்த சேதத்தை உறிஞ்சப்பட்ட இடத்தில் இருந்து தூரமான உறுப்புப்பகுதிகளில் ஏற்படுத்தும். மிக அதிகமாக பாதிக்கப்படுவது இதயம் மற்றும் மண்டை நரம்புகள் ஆகும். இச்சிக்கல்கள் நோய் தோன்றிய முதல் 12 வாரங்களில் ஏற்படும்.

தோலைச் சார்ந்த டிப்தீரியா

இது எப்போதுமே முந்தைய காயத்துடன் துணையான தொற்றாக, தோன்றும். முதல் நிலை தோல் சார்ந்த டிப்தீரியா தொட்டால் பொறுக்காத கொப்புளம் போல் ஆரம்பித்து பெரிதாகி உறையுடன் கூடிய முட்டை வடிவ துளையிடப்பட்ட புண் நீர்த்தேக்கத்தோடு கூடிய சுருட்டப்பட்ட விளிம்புகளைக் கொண்டதாகக் காணப்படும், தோல் தொற்றுக்கள் நோய் கடுமை நிலைகளில் பல வேறுபாடுகள் கொண்டுள்ளது. ஆனால் நோய் நச்சுத்தன்மையால் ஏற்படும் கடுமையான சிக்கல்கள் வழக்கமாக காணப்படாதவை ஆகும்.

உடல் முழுதும் பரவாமல், குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் தொற்றுக்கள்

  • டிப்தீரியே குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெண்பாற் கருவாய் அழற்சி, கண் இமை வெண்படல அழற்சி, மற்றும் முதல்நிலை அல்லது இரண்டாம் நிலை செவி அழற்சி, நலிந்த தடையொலி (otitis [media) போன்றவற்றை உண்டாக்கும்.
  • டிப்தீரியே உண்டாக்கும் நோய் குறி இல்லாத (Asymptomatic) மூக்கு, தொண்டை தொற்று, மருத்துவ நோயை விட அதிக அளவில் காணப்படுகிறது. நோயற்ற கடத்தி நிலை சராசரியாக 10 நாட்கள் நீண்டு இருக்கும், நாள்பட்ட நோயற்ற கடத்தி நிலை, உயிரியை 6 அல்லது மேற்பட்ட மாதங்களுக்கும் மேல் தன்னிடத்தில் இருந்து வெளிச் செலுத்திக் கொண்டிருக்கும்.
  • நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை நோயற்ற கடத்தி, உயிரியை வெளிக் கொட்டுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நன்கு உதவுகிறது.

டிப்தீரியாவை பரிசோதனைக் கூடத்தில் கண்டறிதல்

ஆய்வுப் பொருட்கள்

வீக்கம் உள்ள தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் உருவான உறைகளில் இருந்து துடைத்து எடுத்து சேகரிக்கப்பட்ட பஞ்சு குச்சிகள் ஆய்வுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மூக்குப்பகுதியில் துடைத்து எடுக்கப்பட்டவைகள் தொற்றுக்களை சுமக்கும் நோயற்ற கடத்திகளா என்று சோதிக்கப்படுகிறது. காயங்களில் உள்ள பொருட்கள் துடைத்தோ அல்லது உறிஞ்சியோ எடுக்கப்படுகிறது. எடுக்கும்போது சாதாரண தோல் வாழ் நுண்ணுயிரியைத் தவிர்த்து கவனமாக எடுக்கப்படுகிறது. ஆய்வுப் பொருளானது உடனடியாக பரிசோதனை கூடம் கொண்டு வந்து சரியான வளர்தளத்தில் செலுத்தப்பட்டு (inoculated) எடுத்துச் செல்லப்படுகிறது.

கா. டிப்தீரியோவுக்கான ஆய்வுப்பொருட்கள்

இரத்த அகார் தட்டில் சிறு கோடுகள் (Streak) இடப்படுகின்றன. அதோடு ஹாய்லேஸ் வளர்தளம், சிஸ்டின்-டெலுரைட் அகார் அல்லது மாறுபட்ட டின்ஸ்டேல் வளர் தளம் போன்ற டெலுரைட் கொண்ட வளர்தளங்களில் சிறு கோடுகள் இடப்படுகிறது. இவை தேர்வு செய்யவும் மாறுபடுத்திப் பார்க்கவும் உதவுகிறது. டெலுரைட் அநேகமான மூக்கு தொண்டை வாழ் சாதாரண உயிரிகள் வளர்வதை தடுக்கிறது. மற்றும் கா. டிப்தீரியே டெலுரைட் உப்பை கருப்பு நிற டெலுரியமாகக் குறைக்கும் அசாதாரண திறன் உள்ளது. மேலும், கருப்பு நிற டெலுரியம் கூட்டத்தையும் கருப்பு நிறமாக ஆக்கிவிடும்.

ஒரு லோஃப்ளர் ஊநீர் சரிவு வளர்தளத்தில் செலுத்த (inoculate) வேண்டும். ஏனெனில், டிப்தீரியே மிக வேகமாக கொழுப்பு அதிகமுள்ள இந்த வளர்தளத்தில் வளரும். இதில் வளர்ந்த கூட்டங்களை கிராம் சாயமிட்டு காணலாம் மற்றும் கூட்டங்களாக லோஃப்ளர் வளர்தளத்தில் வளர்ந்த கூட்டங்களில், மெட்டாகுரோமாட்டிக் குருமணிகள் தெளிவாகத் தெரியும். தனியாகப் பிரித்து வளர்த்த பிறகு, கா. டிப்தீரியேலை கண்டறிவது கடினமானது அல்ல. கா. டிப்தீரியேவை, பிற காரினிபாக்டீரியா மற்றும் காரினிபார்ம் உயிரிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய முக்கியமான சோதனைகளாவன: கேட்டலேஸ், யூரியேஸ், பைராசின்-அமிடேஸ் ஆகியன தயாரித்தல், நைட்ரேட் குறைப்பு, குளுக்கோஸ், சுக்ரோஸ், மானோஸ், சைலோஸ், மற்றும் மால்டோஸ் நொதித்தல், மற்றும் ஸ்டார்ச், கிளிசரால் உபயோகிக்கப்படுதல் ஆகும்.

நச்சுத்தன்மை விளைதலை சோதித்துப் பார்த்தல்

நச்சுத்தன்மை உருவாதல் என்பதை கினியா பன்றி குறிப்பிட்ட நோயால் இறக்கும் விதத்தை சோதிப்பதன் மூலம் முடிவு செய்யலாம், இதில் நோய் நச்சுப் பொருள் கொண்ட சிற்றினம் (Strain) கினியா பன்றிகளுக்குள் ஊசிமூலம் செலுத்தப்படும் போது, விலங்குகள் 24 முதல் 48 மணி நேரத்தில் கொல்லப்படுகின்றன. மற்றொரு தரமான உடலுக்கு வெளியே செய்யப்படும் சோதனை, எலக்ஸ்ஸின் நோய் தடுப்பு ஆற்றல் படிவுப் பொருள் எடைப்பண்பு மதிப்பீடு ஆகும்.

சமீப கால வளர்ச்சியில் டிப்தீரியாவை கண்டறிய நச்சுத்தன்மை ஜீன்களை கண்டு பிடிக்க பாலிமெரேஸ் சங்கிலி மறுவினையை (PCR) sensitivity) உள்ளதா என்று தோல் அல்லது விளி வெண்படலம் சோதனை மூலம் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் (நோயாளிகளில்) நோய் நச்சு தொடர்ந்து உருவாவதைத் தடுப்பதற்கு நோயாளிகளுக்கு நோய் தடுக்கும் மருந்துகளான பென்சிலின் அல்லது எரித்ரோமைசின் கொடுக்க வேண்டும்.

நோய்தடுப்பு முறை அளிக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் :

  • டிப்தீரியே பெற்றிருத்தல்
  • தொண்டையில் நிலைநாட்டுதல்
  • தொண்டையில் பல்கி பெருகுதல் (உறை உருவாதல்)
  • நோய் நச்சு தயாரித்தல்

இந்த PCR சோதனை என்பது நச்சுத்தன்மை ஜீனின் 0.9 kb துண்டம் அதிகமாக்கப்படுகிறது.

டிப்தீரியா தடுப்பு முறைகள்

ஏற்கெனவே பார்த்தபடி, டிப்தீரியா என்பது மனிதனிடம் காணப்படும். நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு பரவக்கூடிய தொற்று ஆகும். நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான தொடர்பினால், நோய் உயிரியை சுமந்து கொண்டுள்ள மனிதரிடம் இருந்து பரவுதல் எளிதாக நடைபெறுகிறது. இந்நோய் உயிரியை நோய் தாக்குதலுக்கு ஆட்பட்ட மனிதன் தேறி வரும் போது சுமந்து செல்கிறான். அவன் தேறிவரும் கடத்தியாக இருக்கிறான்.

டிப்தீரியாவை ஏற்படுத்தும் பாக்டீரியா கார்னி.பாக்டீரியம் டிப்தீரியே வால் கிரியையினால் ஆற்றல் மிகுந்த நோய் நச்சு உண்டாக்கப்பட்டு, டிப்தீரியா நோய் ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள நோய்நச்சு எதிர் பொருள் குறிப்பிட்ட நச்சு விளைவைத் தடுப்பதே டிப்தீரியா நோயின் தடுப்பாற்றல் ஆகும்.

ஆதாரத்தில் இருந்து எளிதில் பாதிப்படையக் கூடிய ஓம்புனருக்கு நோய் பரவுதலை தடுத்தல் :

ஆதாரம் என்பது

  • தொற்றுடைய தனிநபர்
  • நோயிலிருந்து மீண்டு கிருமியை சுமந்து கொண்டு இருப்பவர். தொற்றினை தவிர்க்க ஆதார தொற்றுடைய நபருடன் தொடர்பு வைப்பதை தவிர்த்து நோயினின்று பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • எளிதில் பாதிப்படையக் கூடிய ஓம்புனருக்கு நோய் உயிரி நிலைநாட்டுதலை தடுத்தல் ஓம்புனர், தொற்றுடைய நபர் அல்லது நோயினின்று தேறி தொற்றை சுமந்து கொண்டு இருப்பவருடன் தொடர்பு கொண்டது தெரிந்த பிறகு, மருந்து கொடுத்து, திசுக்களில் நோய்க் கிருமிகள் நிலைநாட்டுதலை தடுக்க வேண்டும்.
  • குறியிலக்கு செல்களில் தாக்கி வினைபுரியும் நோய்நச்சை தவிர்த்தல்
  • நோய்க்கிருமி திசுக்களில் நிலைநாட்டியதும் நோய் நச்சு உருவாகுதலை எதிர்பார்த்து எதிர்நோய்நச்சு சிகிச்சை மூலம் நோய்நச்சால் விளையும் சேதத்தைத் தடுக்க வேண்டும்.
  • எதிர்நோய் நச்சு விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படுகிறது. (குதிரைகள், முயல்கள், ஆடுகள்) 20,000 அல்லது 1 லட்சம் யூனிட்டுகள் கொண்ட அளவை தசையினுள் அல்லது இரத்தத்தில் ஊசிமூலம் செலுத்த வேண்டும்.

எளிதில் பாதிப்படையக்கூடிய ஊட்டுயிர்க்கு பரவுதல்

  • நோய் உயிரிகளை சுமக்கும் நிலையில் நிலைநாட்டலை தடுத்தல்
  • நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்போது, அவர்கள் நோய் உயிரிகளை சுமக்கும் நிலைக்கு ஆளாக மாட்டார்கள்.
  • நோய்த் தடுப்பு ஊசி போடுவதால் நோய்த்தடை காப்புக்குட்பட்ட நபர்களாதல்
  • சிறு குழந்தைகள் DPT மூலமாக நோய்த் தடை காப்புக்குட்பட வேண்டும். இதன் காரணமாக போதுமான நோய் எதிர் நச்சு ஊநீரில் உருவாகும். நோய்நச்சு, பார்மலினால் செயலிழக்கச் செய்யப்பட்டு டாக்ஸாய்டு ஆகிறது.
  • டாக்ஸாய்டானது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு மேல் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு டிப்தீரியா டாக்ஸாய்டு, டெட்டன்ஸ் டாக்ஸாய்டு மற்றும் பொடுசிஸ் நோய்த் தடுப்பு மருந்து மூன்றும் சேர்க்கப்பட்டு DPT தயாரிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு நிலைமை சோதித்தல்

  • ஒரு ஷிக் சோதனை மூலம் தனிநபரின் நோய் தடுப்பாற்றல் நிலையை அறிந்து கொள்ள முடியும்.
  • தேவையெனில் துணை உந்து (Booster) அளவு கூறு (dose) டாக்ஸாய்டு கொடுக்கப்படலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

  1. டிப்தீரியா என்ற தொற்று மனிதனிடம் காணப்படுவது ஆகும். இது நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு பரவக்கூடியது மிக நெருக்கமான, தொடர்பை உயிரியை சுமந்து கொண்டிருப்பவருடன் கொண்டு இருந்தால் பரவுதல் மிக எளிதாகி விடுகிறது.
  2. நோயினின்று மீண்டு, நோய்க்கிருமியை சுமந்து கொண்டு இருப்பவர் இந்த நோயை பரப்பலாம், காரினி பாக்டீரியம் டிப்தீரியேவின் ஆற்றல் மிக்க நோய் நச்சு கிரியையால் டிப்தீரியா ஏற்படுகிறது. குறிப்பிட்ட நச்சு விளைவைத் தடுப்பதைச் சார்ந்து டிப்தீரியா நோய் தடுப்பாற்றல் அமையும்.
  3. குழந்தைகள் DPT மூலம் நோய் தடுப்பு செய்து இருக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top