பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சைனுஸைடிஸ் (புரையழற்சி)

சைனுஸைடிஸினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றி விவரித்துள்ளனர்.

சைனஸ்

சைனஸ் என்பது மூக்கைச் சுற்றி உள்ள முக எலும்புகளுக்குள் இருக்கும் ஈரப்பசை நிறைந்த காற்றறைகளாகும். மூக்கு மற்றும் வாயின் உட்சுவரை மூடியுள்ள மியூகஸ் மெம்பரேன் எனப்படும் சவ்வைப் போலவே, சைனஸ்களின் உட்சுவரும் மூடப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு சளி, ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை ஏற்படும்போது, சைனஸ் திசுக்கள், மியூகஸ் (கோழை அல்லது சளி) திரவத்தினை அதிகளவு சுரக்கச் செய்து வீக்கமடைகிறது. சைனஸ்களிலிருந்து திரவம் வெளியேறும் வடிகுழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், சைனஸ் திசுக்கள் சுரக்கும் மியூகஸ் திரவம் சைனஸ்களில் சிக்கி, தங்கி விடுகிறது. இப்பகுதிகளில் பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் வளருவதால், சைனுசைடிஸ் எனப்படும் புரையழற்சி ஏற்படுகிறது.

அறிகுறிகள்

சைனுஸைடிஸினால் பல்வேறு வயதினரில் வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படுகிறது.

  • சிறுபிள்ளைகளில், சளி, ஜலதோஷம் போன்றவற்றின் அறிகுறிகளான மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் மற்றும் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, ஜலதோஷம் ஏற்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படின், இது சைனுஸைடிஸ் மற்றும் பிற நோய்களான ப்ராங்கைடிஸ் (மூச்சுக்குழலழற்சி), நிமோனியா (சளிக்காய்ச்சல்) அல்லது காதுகளில் நோய்தொற்று போன்றவைக்கான அறிகுறியாகும்.
  • வயது வந்தவர்களில், அதிகமாக காணப்படும் சைனுஸைடிஸின் அறிகுறிகள், சளியின் அறிகுறி ஏற்பட்டு ஏழு நாட்கள் ஆன பிறகும் நீங்காமல் காணப்படும் பகல் நேர வறண்ட இருமல், காய்ச்சல், மோசமான மூச்சுத்திணறல், பல் வலி, காது வலி மற்றும்  முகத்தின் திசிக்கள் மென்மையாக காணப்படுதல் போன்றவையாகும். கண்டறியக்கூடிய பிற அறிகுறிகள் ஆவன, வயிற்றுப் புரட்டு (கோளாறு), குமட்டல், தலைவலி மற்றும் கண்களின் பின்புறம் வலி ஏற்படுதல் போன்றவைகளாகும்.

மேற்கொள்ள எளிய ஆலோசனைகள்

  • சைனுஸைடிஸ் என்பது பொதுவாக ஏற்படக்கூடியது மற்றும் சுலபமாக குணமாக்கப்படக் கூடியது. குழந்தைக்கு சளி மற்றும் அதின் அறிகுறிகள் 10 நாட்களுக்கு மேற்பட்டு இருப்பின், அல்லது சளி பிற அறிகுறிகள் ஏற்பட்ட 7 நாட்களுக்குப் பின் காய்ச்சல் ஏற்படின், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைனுஸைடிஸ் ஏற்படுத்தும் சூழலையும் மற்றும் பொருளையும் தவிர்க்க முயல வேண்டும்.
3.05882352941
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top