অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தொண்டையில் வரும் தொந்தரவுகள்

தொண்டையில் வரும் தொந்தரவுகள்

தொண்டை நோய்கள்

  1. தொண்டை புண், கரகரப்பு (Sore throat)
  2. டான்சிலைட்டீஸ் (Tonsillitis)
  3. அடினாய்ட் அழற்சி (Inflammation of Adenoid)
  4. குரல் வளை பாதிப்புகள்
  5. குரல் நாண்கள் பாதிப்பு
  6. குறட்டை

தொண்டைபுண், கரகரப்பு, (தொண்டை கட்டு Sore throat) (Pharyngitis)

  • தொண்டையின் அழற்சி தொண்டை கரகரப்பை உண்டாக்கும் Pharyngitis - ன் முக்கால்வாசி நேரங்களில் டான்சிலைட்டீஸம் கூட வரும். பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் காரணமாகலாம். மீதி நேரங்களில் பாக்டீரியா, பூஞ்சனங்களால் ஏற்படும். சில நேரங்களில் சுற்றுப்புற சூழ்நிலை நச்சுகள், ரசாயன பொருட்கள் காரணமாகலாம்.
  • வைரஸ் தாக்குதலில் தொண்டையில் வலி ஏற்படலாம். சுரப்பிகளின் வீக்கமும், ஜுரமும் இருக்கும். ஹெர்பஸ் வைரஸ் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அம்மை நோய்கள், சில நேரங்களில் தொண்டைப் புண்ணுடன் தொடங்கும்.
  • பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டிருந்தால், சுரப்பிகளின் வீக்கம், சிவந்து போன தொண்டை, நல்ல ஜுரம், அதீத தசை – எலும்பு வலிகள் இருக்கும். இரண்டு சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஒன்று ரூமாடிக் ஜுரம் (Rheumatic fever) மற்றொன்று சிறுநீரக அழற்சி.
  • ஆயுர்வேதம் தொண்டை பாதிப்பு, தவறான உணவுப் பழக்கத்தால் உண்டானது என்கிறது. கபதோஷ பாதிப்புகள், ‘ஜில்’ என்று குளிர்ந்த உணவுகள், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள் (புளி, அன்னாசி, தயிர், புளிப்பான மோர், அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் – இவை தொண்டையை பாதிக்கும்.
  • சாராயம், வேளைக்கு சாப்பிடாதது, விருத்தாஹாரங்கள் (ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாத உணவுகள் – உதாரணமாக மீனுடன் பால், வாழைப்பழத்துடன் தயிர்) இவையெல்லாம் தொண்டையை பாதிக்கும்.
  • புகையிலை (குட்கா போன்றவை) தொண்டை பாதிப்புககு ஓரு முக்கிய காரணம்.

டான்சிலைடீஸ் Pharyngitis கூட வருவது டான்சிலைடீஸ். இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று என்று கூட கூறலாம். டான்சிலைடீஸ் பெரும்பாலும் சிறுவர்களை தாக்குகிறது. Pharynx எனும் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்களின் அழற்சி, தொற்று டான்சிலைட்டீஸ். இதை ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். டான்சில்கள் தொற்றுகளை தாங்கள் ஏற்றுக் கொண்டு, பெரிதாக பரவாமல் காக்கின்றன. பெரிதாக ஜலதோஷம், ஜுரம் ஏற்படும் முன் தொண்டை பாதிப்புகள் (தொண்டை கட்டுதல், வலி) உண்டாவது டான்சில்கள் முதலில் செயல்படுவது தான் காரணம். முன்பெல்லாம் சிறுவர்களை அடிக்கடி  Tonsillitis  தாக்குவதை தவிர்க்க டான்சில்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுவது வழக்கமாக இருந்தது. அதனால் எந்த வித பயனும் இல்லை. மாறாக டான்சில் இல்லாவிட்டாலும் தொற்றுகள் அதிகமாகின்றன என்பது தெரிய வந்தால் இப்போது டான்சில்களை எடுப்பதில்லை.

அறிகுறிகள்

கிட்டத்தட்ட புண்பட்ட தொண்டை போல் தான், தொண்டை வலி, குறிப்பாக உணவை முழுங்குவதில் கடினம், வலி. குளிர் சுரம், சிவந்து, வீங்கிய டான்சில்ஸ், சில நேரங்களில் காது வலி முதலியன.

தொண்டை பாதிப்புக்களை தடுக்கும் உணவுகள்

  • தானியங்கள் – கோதுமை, பார்லி மக்காச்சோளம்
  • காய்கறி – வெண்டைக்காய், கத்தரிக்காய்
  • திரவியங்கள் - புடலங்காய், வெந்தயம், பூண்டு, மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பாகற்காய் முருங்கை இலைகள், பட்டாணி, கிழங்கு வகைகள், மிளகாய்
  • பருப்புகள் – பயத்தம் பருப்பு கொள்ளு
  • மாமிசம் வறுத்த சிக்கன், மட்டன் (கீமா) முயல் மாமிசம் செம்மறியாட்டு மாமிசம், மீன்
  • பழங்கள் தவிர்க்கவும் – உலர் திராட்சை, பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்னாசி, நாவல் பழம், பலாபழம், திராட்சை- இதர புளிப்பான பழங்கள்,
  • பால் பால் சார்ந்த உணவுகள் – சூடான பசும் பால், நெய், ஆட்டுப்பால் தயிர், மோர்.
  • நீர் – வெதுவெதுப்பான நீர், துளசி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு சேர்ந்த மூலிகை நீர் தண்ணீர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர்
  • இதர – தேன், குங்குமப்பூ, தேஜ்பத்தா, இலவங்கம், எள், தனியா, சீரகம், பெருங்காயம், சர்க்கரையில் வறுத்த பொரித்த உணவுகள், அப்பளம், புளி, அக்ரூட், மசாலா உணவுகள், ஐஸ்கிரீம்.

ஸ்வர பேதம் (Hoarseness) (Laryngitis)

ஸ்வர பேதம் என்பது தொண்டை கரகரப்பு, பேச முடியாமல் போவதை குறிக்கும். குரல் வளைகள் தொற்று நோயில் பீடிக்கப்படுவதால் குரல் குழப்பு ஏற்படும்.

குரல் பாதிப்பு (Laryn gitis) ஏற்பட காரணங்கள்

  • வைரஸ் (அ) பாக்டீரியா தொற்றால் ஏற்படலாம். இந்த தொற்று ஏற்பட ஜலதோஷம் காரணமாகலாம்.
  • புகை பிடித்தல், புகையிலை உபயோகம், மது அருந்துதல் முதலியன.
  • அளவுக்கு மீறி பேசுவது, கத்திப் பேசுவது, குரலை அதிகம் உபயோகிப்பது (உதாரணம் – பாடகர்கள்)
  • அமில எதுகலிப்பு – வயிற்றிலுள்ள அமிலம் மேலேறி உணவுக்குழாயை தாண்டி குரல் வளையை தாக்குதல்.
  • இந்த நிலை உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல் இல்லாமல் போகலாம். தொண்டை அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு, சளி தொண்டையில் தேங்கி நிற்பது போன்ற உணர்வுகள் இருக்கும்.
  • சுற்றுப்புற சூழ்நிலை மாசுகள் ஒவ்வாமை (Allergy) முதுமை முதலியன.

அறிகுறிகள்

  1. பேசுவதில் சிரமம், வலி, முழுங்குவதில் சிரமம், வலி, இருமல், ஜுரம் உண்டாகலாம். மலச்சிக்கல் ஏற்படலாம்.
  2. குரல் மாறிப் போதல்

வீட்டு வைத்தியம்

  • புகைப்பதை நிறுத்தவும். காஃபின் (Caffeine) உள்ள காப்பி, தேநீர் போன்றவற்றை தவிர்க்கவும்.
  • தொண்டைக்கு (குரலுக்கு) ஒய்வு கொடுக்கவும்.
  • நீராவி பிடித்தல், இதற்கான வெந்நீரில் யூகலிப்டஸ் எண்ணெய், சில சொட்டுக்கள் சேர்க்கலாம்.

ஆயுர்வேத அணுகுமுறை

  • வாத, பித்த, கப தோஷங்கள் தீவிரமடைந்தால் குரல் வளையில் தங்கி இந்த தோஷங்கள் குரலை கெடுக்கும். ஆறுவகை தொண்டை கரகரப்பு ஆயுர் வேதத்தில் சொல்லப்படுகிறது. வாதம், பித்தம், கபம் மூன்று தோஷமும் சேர்ந்த பாதிப்பு ( சன்னி பாதா), க்ஷயாஜா (க்ஷய ரோகம்). மேதாஜ (கொழுப்பு திசுக்கள் பாதிப்பு)
  • வாததோஷம் – நோயாளிகள் வாயில் இந்துப்பு + எள் கலந்த கலவையை அடக்கிக் கொள்ள வேண்டும். வெல்லம், நெய் கலந்த அரிசி உணவை உண்ண வேண்டும். குடிப்பதற்கு வெது வெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும்.
  • பித்த தோஷம் – நோயாளி வாயில் நெய்யையும் தேனையும் வைத்துக் கொள்ள வேண்டும். நெய் உண்ண வேண்டும். பிறகு பால் குடிக்க வேண்டும்.

சிகிச்சை முறை

  1. உப்பு கலந்த சுடுநீரை வாயில் வைத்து கொப்பளிப்பது வழக்கமான முறை. இத்துடன் வேல மரப்பட்டையின் பொடியை சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. ஒரு டீஸ்பூன் கஸ்தூரி வேலம் எண்ணெயை ஒரு கப் வெத வெதப்பான நீரில் கலந்து கொப்பளிக்கலாம்.
  2. ஒரு கப் சூடான பாலில் கருமிளகு பொடி, சர்க்கரை (தே வையானால்) சேர்த்து கலக்கி தினமும் இரு வேளை குடித்து வரவும்.
  3. சூடான ஒத்தடம் (தொண்டைக்கு) கொடுக்கலாம்.
  4. அதிமதுரப் பொடி, வசம்புப் பொடி ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வரலாம்.
  5. துளசி சாற்றை 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் குழைத்து தினம் 3 (அ) 4 வேளை சாப்பிடலாம்.
  6. தாளிசாதி சூரணம் லவங்காதி வடீ போன்ற நல்ல மருந்துகள் ஆயுர் வேதத்தில் உள்ளன. கதிராதி வடீயை வாயில் வைத்து சப்பி சாப்பிட வேண்டும்.

பத்தியம்

  1. இஞ்சி, கருமிளகு, உப்பு, பூண்டு, உலர்ந்த திராட்சை மற்றும் நெய் – ஸ்வரபேதத்திற்கு ஏற்றவைகள்.
  2. குளிர்ந்த பானங்கள், தயிர், கொழுப்புகளை தவிர்க்கவும்.
  3. கத்திப் பேச வேண்டாம்.

ஆதாரம் : கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate