অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கியூ-காய்ச்சல்

கியூ-காய்ச்சல்

அறிமுகம்

டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.

நோயிறிகுறிகள்

நோயரும்புகாலம் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது வெளிப்படும்.

  • காய்ச்சல்
  • உடல்சோர்வு
  • அதிக வியர்வை
  • கடும் தலைவலி
  • தசைவலி
  • மூட்டு வலி
  • பசியின்மை
  • மேல் மூச்சு மண்டலக் கோளாறுகள்
  • வறட்டு இருமல்
  • நுரையீரல் படல வலி
  • குளிர்
  • மனக்குழப்பம்
  • குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. இந்தக் காய்ச்சல் ஏறக்குறைய 7-14 நாட்கள் நீடிக்கும்.

காரணங்கள்

காக்சில்லா புர்னெத்தி பாக்டீரியாவால் (அல்லது c- புர்னெத்தி) கியூ-காய்ச்சல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுள்ள விலங்குகளினால் பொதுவாக இந்நோய் பரவுகிறது.

பரவலாக பாதிக்கப்படுவதும், மனிதர்களுக்கு ஆபத்தானதுமான விலங்குகள்:

  • செம்மறி ஆடுகள்
  • மாடுகள்
  • வெள்ளாடுகள்
  • நாய், பூனை, கினிப்பன்றிகள் போன்ற வீட்டு விலங்குகள்

நோய்கண்டறிதல்

இரத்தப்பரிசோதனை மூலம் கியூ-காய்ச்சலைக் கண்டறியலாம்.

இரத்தப்பரிசோதனை: கியூ-காய்ச்சலை உருவாக்கும் புர்னெத்தி பாக்டீரியா இரத்தத்தில் இருந்தால் நோய்த்தடுப்பு மண்டலம் எதிர்பொருட்களை உண்டாக்கும்

நோய்மேலாண்மை

டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate