অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நாள்பட்ட சிறுநீரக நோய் : காரணங்கள்

நாள்பட்ட சிறுநீரக நோய் : காரணங்கள்

நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு மருத்துவத்தில் குணப்படுத்தும் வழியே கிடையாது. உலகெங்கிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால், புகைக்கும் பழக்கம் ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவது, இந்நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன?

பல மாதங்களுக்கு,  தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத வகையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர்.  இரத்த பரிசோதனைகளின் பொழுது, சீரம் கிரியேட்டினைனின் மதிப்பு உயர்ந்து வருவதும், சோனாகிராஃபி பரிசோதனைகளில் இரு சிறுநீரகங்களின் தோற்றமும் சிறியவையாக சுருங்கி காணப்படுவதும் இந்த நோயை சுட்டிக்காட்டுகிறது.

முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease) என்றால் என்ன?

முற்றிய மிக மோசமான நிலையை இந்த நோய் தொடும் பொழுது,  “முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney டிசீஸ்)” என்றழைப்பர். சிறுநீரக செயல்பாடு 10 சதவீதமே இருக்கும். இதை வழக்கமான வழிமுறைகளில் குணப்படுத்த முடியாது. டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகங்களை பொருத்துதல் போன்றவற்றையே கையாள வேண்டும்.

இந்நோய் எப்படி ஏற்படுகிறது?

இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இரு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். மொத்தமாக நோயாளிகளில் 2/3 பங்கு இவ்வகைக் காரணங்களால் தாக்கப்படுகிறார்கள்.

சில முக்கிய காரணங்களாவன:

1. நீரிழிவு நோய் : இது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணமாகும். சராசரியாக மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 – 40 சதவீதம் நோயாளிக்கு இந்நோயினாலேயே ஏற்பட்டு விடுகிறது.

2. உயர் இரத்த அழுத்தம் : முறையாக இரத்த அழுத்தம் கவனிக்கப்படா விட்டால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். மொத்த நோயாளிகளில், 30 சதவீதம் இக்காரணத்தினால் தாக்கப் பட்டிருப்பது தெரிய வருகிறது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், உயர்இரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடுகளை மேலும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3. க்ளோமெருலோ நெஃப்ரிடிஸ் (glomerulonephritis) : சிறுநீரகத்தில் விக்கம் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் இந்நோய் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

4. பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் (Polycystic kidney disease) : இது இருசிறுநீரகங்களிலும் வேண்டாத சதைவளர்ச்சியை ஏற்படுத்தும் பொதுவான மற்றும் பாரம்பரிய தாக்கமாகும்.

5. இதர காரணங்கள். சிறுநீரக வயது முதிர்தல், சிறுநீர் பாதையில் கற்கள், பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகி விடுதல், மருந்துகள் அல்லது விஷப் பொருட்களால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுதல் மற்றும் (குழந்தைகளுக்கு) அடிக்கடி ஏற்படும் தொற்று போன்றவற்றால் தாக்கப்படுவது.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/chapter/612

கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate