பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரகங்களும் அவற்றின் செயல்பாடுகளும்

சிறுநீரகங்களும் அவற்றின் செயல்பாடுகளும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் உறுப்புக்களிலேயே மிகமிக முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும் சிறுநீரகம். அவை பழுதடைந்து போனால் உடலுக்கு தீவிரமான தீங்கு ஏற்பட்டு மரணம் கூட விளையலாம். அதன் அமைப்போ மிகவும் சிக்கல் வாய்ந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடும் மிகவும் ஆழம் வாய்ந்த சிக்கல்கள் கொண்டது.

அவற்றின் செயல்பாடுகளாவன: அவை இரண்டும் மிக முக்கியமான செயல்பாடுகள் ஆகும். விஷத்தன்மை கொண்டதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதுமான திரவங்களை அகற்றி நீரின் சமநிலையைப் பாதுகாத்து, தாது உப்புக்கள், மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் பாதுகாத்து வருகின்றன.

சிறுநீரகங்களின் அமைப்பு

விஷத் தன்மை கொண்ட கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரகங்கள், சிறுநீரை உருவாக்குகின்றன. அப்படி சிறுநீரகங்களில் உருவான சிறுநீரானது யுரீட்டர் எனும் சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்ப் பைகளுக்குச் செல்கிறது. இறுதியில் குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

* மிகப்பெரும்பான்மையோர் (ஆணோ அல்லது பெண்ணோ) இருசிறுநீரகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

* அடிவயிற்றுக்கு சற்று மேலும் முதுகெலும்பின் இரு பக்கங்களுக்கு ஒன்றாக இவை இருக்கின்றன.

* சிறுநீரகங்களாவன அடிவயிற்றின் ஆழ்ப்பகுதியில் உள்ளே அமைக்கப்பட்டிருப்பதால், சாதாரணமாக அவை இருப்பதை உணர முடியாது.

* சிறுநீரகங்கள் ஒரு ஜோடி அவரைக் கொட்டைகள் போல இருக்கும். பெரியோர்களுக்கு, ஒரு சிறுநீரகம் சுமார் 10செ.மி. நீளம் இருக்கும். 6 செ.மி. அகலம் இருக்கும் மற்றும் 4 செ.மி. கனம் இருக்கும். சுமார் 150 லிருந்து 170 கிராம்கள் எடை கொண்டது.

* சிறுநீரகங்களில் உருவான சிறுநீர், சிறுநீர்ப்பையை குழாய்கள் மூலம் சென்று அடைகிறது. அந்தக் குழாய் சுமார் 25 செ.மி. நீளமுடைய ஒன்றாகும். அதன்வழியாகவே சிறுநீர்செல்கிறது. தனிச்சிறப்பு குணமுடைய தசைகளால் அவை உருவானவை.

* சிறுநீர்ப் பையானது ஒரு வெற்றிடமாக இருக்கும். அங்கம் தசைகளால் ஆனது அடிவயிற்றுக்கு கீழும் பின்புறமும் அமைந்திருக்கின்றன.

* வயதானவர்களுக்கு இந்த சிறுநீர்ப் பையானது சுமார் 400 லிருந்து 500 மி.லி. வரை சிறுநீரைச் சேகரித்து வைக்கும். அந்தப் பை நிரம்பியவுடன், சம்பந்தப் பட்டவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

* சிறுநீர் அந்தயுரீத்ரா எனும் குழாய்கள் வழியே வெளிவருகிறது. பெண்களுக்கு இந்த குழாய் சற்று சிறியதாக இருக்கும். ஆண்களுக்கு அதைவிட நீளமாக இருக்கும்.

சிறுநீரகங்கள் உடலுக்கு ஏன் தேவை?

* ஒவ்வொரு நாளும் நாம் வித விதமான உணவு வகைகளை உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு அளவு உண்கிறோம்.

* நாம் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு, உப்புக்களின் அளவு மற்றும் அமிலங்களின் அளவுகளும் அன்றாடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றன.

* தொடர்ச்சியாக இடைவிடாது உணவுப் பொருளை சக்தியாக மாற்றும் பணியானது விஷத்தன்மை கொண்டபொருட்களை அனவரதமும் உற்பத்தி செய்தவண்ணம் இருக்கிறது.

* இந்த செயல்பாடுகள் எல்லாமாகச்சேர்ந்து, உடலில் இருக்கும் திரவத்தின் அளவையும், மின்சாரம் பாயும் திரவ ஊடகங்களின் அளவையும் அமிலங்களின் அளவையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. தேவையற்ற கழிவுப்பொருட்கள் கொண்டுவரும் விஷத்தன்மை சில சமயங்களில் எல்லையற்றுப்போகலாம்.

* சிறுநீரகங்கள் உடலிலிருந்து விஷம் தங்கியுள்ள அமிலங்களையும் தீய திரவங்களையும் அகற்றுகின்றன. அவை செய்யும் மிக மிக முக்கியமான சுத்திகரிப்பு தொழில் இதுவாகும். அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதே சமயத்தில் மின்சாரம் பாயும் திரவங்களையும், அமிலங்களின் அளவையும் சமநிலைப் படுத்திக் கொண்டே செல்கிறது.

சிறுநீரகங்களின் செயல்பாடுகள் என்ன?

சிறுநீரகங்களின் மிக முக்கியமான செயல்பாடு சிறுநீரை உருவாக்கி இரத்தத்தை சுத்திகரிப்பதாகும் அவை கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. உபரியாகவும் வீண் பொருட்களாகவும் உடலில் தங்கி விடும் உப்புக்கலையும் இதர இரசாயனங்களையும் அவை வெளியேற்றி விடுகின்றன. சிறுநீரகங்களின் முக்கியமான வேலைகள் கீழ்க்கண்ட வகையில் சித்தரிக்கப்படுகின்றன

கழிவுப் பொருட்களை அகற்றுதல்

சிறுநீரகங்களின் மிக முக்கியமான வேலையானது உடலுக்குள் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஆகும். நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து இருக்கிறது. புரதமானது உடல் வளர்ச்சிக்கும் உடலை அவ்வப்போது புதுப்பிக்கவும் தேவைப்படுகிறது. ஆனால் அப்படி புரதத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ளும்பொழுது, கழிவுப் பொருட்களை உருவாக்கி விடுகிறது. இந்த கழிவுப்பொருட்கள் உடலில் சேரச்சேர விஷத்தன்மை கூடுகிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி கழிவுப் பொருட்களையும் வடிகட்டி சிறுநீருடன் வெளியேற்றி விடுகிறது.


கழிவு நீக்க மண்டலம்

கிரியட்டினைனும் யூரியா எனும் இரு உப்புக்களும் கழிவுப் பொருட்களிலேயே மிக முக்கியமானவை. அவை உடலில் இருக்கும் அளவை எளிதாக அளந்து விடலாம். இரத்தத்தில் அவை இருக்கும் அளவே சிறுநீரகங்களின் வேலைத் திறனைக் காட்டுகிறது. இரு சிறுநீரகங்களும் பழுதாகிவிடும்பொழுது, இரத்தத்தில் இருக்கும் மேற்கண்ட இரு உப்புக்களின் அளவு மிக அதிகமாகி விடுகிறது

உபரியான தேவையற்ற திரவங்களை வெளியேற்றுவது

சிறுநீரகங்களின் இரண்டாவது முக்கிய செயல்பாடு உடலில் தேவையற்று உபரியாகத் தங்கி விடும் நீரை சிறுநீராக மாற்றி வெளியேற்றுவது ஆகும். தேவையான அளவே உடலில் நீரை வைத்துக் கொள்ள உதவுவதாகும். இப்படித்தான் நீரின் சமநிலையை சிறுநீரகங்கள் பாதுகாத்துவருகின்றன.

சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்பொழுது, அவையால் உபரியான நீரை வெளியேற்ற முடிவதில்லை. அப்படியே உடலிலேயே தங்கி விடும் நீரானது உடலை வீங்கச்செய்துவிடுகிறது.

சமநிலைக்கு மேல் இருக்கும் தாதுப்பொருட்களும் இரசாயனப் பொருட்களும்

சமநிலைக்கு மேல் இருக்கும் தாதுப்பொருட்களும் இரசாயனப் பொருட்களும் உடலிலேயே தங்கிவிடும். சிறுநீரகங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான செயல்பாடு என்னவென்றால், உடலில் தங்கிவிடும் தாதுப் பொருட்கள், அதாவது பொட்டாசியம், ஹைட்ரஜன், ஃபாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை அகற்றுவதாகும். அப்படி அகற்றி உடலில் உள்ள திரவங்களின் அளவை சீராக்கிக் கொண்டே இருக்கிறது.

உடலில் இருக்கும் சோடியத்தின் அளவு மாறினால், நினைவுநிலை பாதிக்கும். பொட்டாசியத்தின் அளவு மாறினால் இதயம் துடிக்கும் வேகத்தில் மாறுதலைக் கொண்டு வரும் மற்றும் தசைகளின் இயக்கங்களிலும் வேறுபாடுகளைக் கொண்டு வரும். கால்வியம் மற்றும் ஃபாஸ்பரத்தின் சரியான அளவுகள் வைக்கப்படுதல் உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கிய நிலைக்கு அவசியம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

சிறுநீரகங்களின் வித விதமான ஹார்மோன்கள் GarriGstsipsar. (renin, angiotensin, aldosterone, prostaglandin) உடலில் இருக்கும் நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுப் படுத்துகின்றன. இந்த செயல்பாடுதான் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவற்றின் சமநிலை மாறினால், உடலின் இரத்த அழுத்தம் கூடுகிறது.

இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்தல்

எரித்ரோபோய்டின் எனும் வளரூக்கி இயக்குநீர் (Hormone) சிறுநீரகங்களில் உற்பத்தி செய்யப் படுகிறது. அது இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய தூண்டுகின்றன. சிறுநீரகங்கள் பழுதடையும்பொழுது மேற்கண்ட பொருளின் உற்பத்திக்கும் பங்கம் ஏற்படுகிறது. அதுவே இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவை பாதித்துக் குறைக்கிறது. அப்படிப்பட்ட குறைவான உற்பத்தியால், ஹீமோக்ளோபினின் அளவு கூடுவதே இல்லை. எவ்வளவுதான் இரும்புச் சத்தும் விட்டமின்களும் உள்ள மருந்துகளைச் சாப்பிட்டாலும் ஹீமோக்ளோபினின் அளவு கூடுவதில்லை.

ஆரோக்கியம் மிகுந்த எலும்புகளை உருவாக்குதல்

சிறுநீரகங்கள் விட்டமின் டி-யை அதன் செயல்மிக்க வடிவில் மாற்றித் தருகிறது. அதுவே உணவில் இருக்கும் கால்வியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. எலும்பின் வளர்ச்சியைக் கண்காணிக்கிறது. பற்களின் வளர்ச்சியைக் கண்காணித்து பற்களை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. விட்டமின் டி குறைந்து சிறுநீரகங்கள் பழுதடைந்தால், எலும்புகளின் வளர்ச்சியும் குன்றுகிறது. அவை நலிவடைந்து விடுகின்றன. சிறுவர்களுக்கு ஏற்படும் வளர்ச்சி பின் தங்கி விடுதலே சிறுநீரகங்களின் பழுதின் அறிகுறியாகும்.

இரத்தம் எப்படி சுத்திகரிக்கப்பட்டு சிறுநீர் உருவாகிறது?

இரத்தத்தை சுத்திகரிக்கும்பொழுது சிறுநீரகங்கள் தேவையான பொருட்களை எல்லாம் தம்மிடத்தே தங்க வைத்து விடுகின்றன தேவைக்குத் தகுந்தாற்போல் உபரியான திரவங்களையும், தாதுப் பொருட்களையும் மற்றும் கழிவுப் பொருட்களையும் நீக்கி விடுகின்றன. சிக்கல் மிகுந்த இந்த செயல்பாட்டைப்பற்றி அல்லது பேரதிசயம் மிக்க இந்த செயல்பாட்டைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

* உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் 1200 மி.லி. அளவு இரத்தம் இரு சிறுநீரகங்களுக்குள் வருகிறது. அவை சுத்திகரிப்புக்காக அங்கு வருகின்றன. இது இருதயத்திலிருந்து வெளியாகும் இரத்தத்தின் அளவில் 20 சதவீதமாகும். ஆகவே ஒவ்வொரு நாளும் 1700 லிட்டர் அளவு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

* இந்த சுத்திகரிப்பு சிறு சிறு அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மிகச்சிறிய அளவான வடிகட்டிகள் இதைச் செய்கின்றன. அந்த வடிகட்டிகளுக்குப் பெயர் நெஃப்ரான்கள் ஆகும்.

* ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 1 மில்லியன் நெஃப்ரான்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நெஃப்ரானும் க்ளோமெருலஸ்ஸாலும் ட்யூபூல்ஸ்களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

* இந்த மேற்கண்ட க்ளோமெருலஸ் என்பவை சிறு சிறு வடிகட்டிகள். அவற்றில் மிக மிகச் சிறிய துளைகள் உண்டு. அவை முறையாகப் பிரித்துப் பிரித்து வடிகட்டும். நீரும் சிறு பொருட்கலும் எளிதாக அவற்றின் மூலம் பிரிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மிகப் பெரிய அளவில் உள்ள இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ப்ளேட்டுலட்டுக்கள், புரதம் போன்றவை அவற்றின் வழியே செல்ல முடியாது. ஆகவே ஆரோக்கியமுடைய வயதானவர்களுக்கு பெரிய வடிவில் உள்ள பொருட்களை சிறுநீரில் காண முடியாது.

* சிறுநீரை சுத்திகரிக்கும் செயலில் முதல் படியானது இந்த க்ளோமெருலஸ்ஸில் நடக்கிறது. அங்குதான் சுமார் 125 மி.லி. அளவு ஒவ்வொரு நிமிடமும் சிறுநீர் வடிகட்டப்படுகிறது. 24 மணி நேரத்திற்குள் 180 லிட்டர் சிறுநீர் உற்பத்தி செய்து விடப்படுகிறது! இது ஒரு பேராச்சரியமான செயல்பாடு. அவற்றில் கழிவுப் பொருட்கள் தாதுப் பொருட்கள் மற்றும் விஷப் பொருட்கள் மட்டுமல்லாமல், க்ளூகோஸ் போன்ற உபயோகமான பொருட்களும் உள்ளன.

* சிறுநீரகங்கள் மீண்டும் உடலிலேயே சேர்த்துக் கொள்ளும் வேலையையும் செய்கின்றன. அதை பெரும் அறிவார்த்தம் நிரம்பிய அக்கறையுடன் செய்கின்றன. ட்யூபூல்ஸ்களை வந்தடையும் 180 லிட்டர் திரவத்தில் 99 சதவீதம் பிரித்துப் பிரித்து வடிகட்டப்படுகின்றன மீதமுள்ள 1 சதவீத திரவமே சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இந்த அறிவு மிக்க செயல்பாட்டினால், எல்லாவிதமான அவசியமான பொருட்களும் 178 லிட்டர் திரவமும் ட்யூபூல்களினால் உட்கிரகிக்கப்படுகின்றன. இவை எல்லாம் 1 லிருந்து 2 லிட்டர் நீரிலிருந்து எடுக்கப் படுகின்றன. அவற்றுடன் கழிவு பொருட்களும், உபரியானதாதுப் பொருட்களும் மற்றும் இதர தீய பொருட்களும் கலந்திருக்கின்றன.

* சிறுநீரகங்களால் உருவாக்கப்பட்ட சிறுநீரானது, யுரீட்டருக்குள் பாய்கிறது. சிறுநீர்ப் பை வழியாக இறுதியல் யுரீத்ரா மூலம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடைய ஒரு மனிதரின் சிறுநீரின் கன அளவில் மாறுதல் காணப்படுமா?

ஆமாம். நீரின் உட்கொள்ளப்படும் அளவு மற்றும் காற்றின் வெப்ப நிலை போன்ற அம்சங்கள் அந்த கன அளவைத் தீர்மானிக்கின்றன.

உட்கொள்ளப்படும் நீரின் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் திண்மை மிக்கதாக இருக்கும். அதன் கன அளவு குறைவாக இருக்கும். (சுமார் 500 மி.லி.) ஆனால் ஒருவர் நிரம்ப நீர் குடித்தால், அல்லது உட்கொள்ளப்பட்டால், உருவாகும் சிறுநீரின் அளவு அதிகமாகும்.

கோடைகாலத்தில் வியர்வை மிகுதியின் காரணமாக சிறுநீரின் கன அளவு குறையும். குளிர்காலத்தில் அதற்கு மாறுபட்ட நிலைமை இருக்கும். குறைந்தகாற்று வெப்பநிலை, வியர்வை இல்லாமை போன்ற காரணத்தால் சிறுநீர் அதிகமாகச்சுரக்கும்.

சிறுநீரகங்களின் செயல்பாட்டின் பிரதான அம்சமே கழிவுப் பொருட்களையும் தீயவை உருவாக்கும் பொருட்களை நீக்குவதாகும். உபரியான நீரின் அளவு சிறுநீரில் சேராமல் தடுப்பதாகும்

* சாதாரண அளவே நீரைப் பருகும் ஒரு நபருக்கு உருவாகும் சிறுநீரின் அளவு 500மி.லி.க்கு குறைவாக இருந்தால் அல்லது 3000 மிலி.க்கு அதிகமாக இருந்தால் உடனே சிறுநீரகங்களை பரிசோதிக்க வேண்டும் என்பதற்கு அது அறிகுறியாகும். சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil/Default.aspx

3.11538461538
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top