பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம் / சிறுநீரகம் பற்றிய குறிப்புகள் / நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கான உணவு முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கான உணவு முறைகள்

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கான உணவு முறைகள்

உணவு முறை

ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் 1.0-3.0 மி.கி) உணவு முறைகளில் பெரிய மாற்றம் இருக்காது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், கை, கால்களில் நீர் கோர்ப்பு ஆகியன இருந்தால் உணவில் உப்பு, நீர் ஆகியன குறைக்கப்படும்.

இரண்டாம் கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 3.0-6.0)புரதச்சத்து உப்பு குறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படும்.

உங்களுடைய சிறுநீரின் அளவு மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைப் பொறுத்து நீரின் அளவும், பொட்டாசியம் உள்ள உணவுகளின் அளவும் பரிந்துரைக்கப்படும்.

கடைசி நிலை சிறுநீரக செயலிழப்பில் (கிரியேட்டினின் அளவு 6 மி.கி.க்கு மேல்) பொதுவாக உப்பு, பொட்டாசியம், புரதம், குறைந்த உணவு பரிந்துரைக்கப்படும். இரத்தத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கொலெஸ்டிரால் இவற்றின் அளவைப் பொறுத்து அவற்றிக்கான உணவு ஆலோசனையும் வழங்கப்படும்.

நீங்கள் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய ஆரம்பிக்கும் போது சில வகை உணவுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதிக புரதம், கூடுதல் நீர், ஆகியன பரிந்துரைக்கப்படும்.

இது தவிர உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்திருந்தால் சர்க்கரைக்கான உணவுக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இந்த உணவுக் கட்டுப்பாடுகள் மிகப் பெருமளவில் நீக்கப்படும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான உணவுக் குறிப்புகளை அதற்குரிய பகுதிகளில் நீங்கள் காணலாம்.

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குறைவாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகத்தின் வேலைப் பளுவைக் குறைக்க உணவில் புரதச்சத்தினை குறைவாக உண்ண வேண்டும். உதாரணமாக பருப்புப் பொருட்கள், அசைவ உணவு வகைகள். ஆனால் முழுவதுமாக இல்லாமல் சாப்பிடக் கூடாது அப்படிச் சாப்பிட்டால் எடை மிகக் குறைந்து விடும். எடை, இரத்தத்தில் அல்புமின் சத்து குறைவாக உள்ள சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு புரதம் அதிக அளவு கூட எடுத்துக் கொள்ள வேண்டி வரும். உங்களுக்கு சரியான புரத உணவுகளைப் பற்றி உங்கள் சீறுநீரக மருத்துவர் விளக்கமளிப்பார்.

மேலும் உடல் எடை குறையாமல் இருக்க கலோரிகள் உள்ள உணவுகளை குறைவில்லாமல் சாப்பிட வேண்டும். சமையலில் உப்பு சேர்க்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு உப்பு சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சிறுநீரக செயலிழப்பு நோயாளிக்கும் பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும். இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு உப்பு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூட அறிவுறுத்தப்படலாம். சிறுநீரக செயலிழப்பில் இரத்தத்தில் சேரும் யூரியா போன்ற கழிவு உப்புகளும் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சாதா உப்பும் ஒன்றல்ல. எனவே உப்பே சேர்க்காமல் சாப்பிட்டால் இரத்தத்தில் உப்புக்கள் குறைந்து விடாது. உணவில் உப்பைக் குறைப்பது தாகம் இரத்த அழுத்தம் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும்.

சிறுநீர் போகும் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவை மருத்துவர் சொல்லும் அளவிற்கு குடிக்கலாம். பொதுவாக ஒருவர் ஒரு நாளில் கழிக்கும் சிறுநீரின் அளவுடன் 500 மி.லி நீர் சேர்த்துக் குடிக்கலாம். உடலில் நீர் கோர்ப்பு உள்ளவர்கள் சீறுநீர் எவ்வளவு போனாலும் நீர் 500-1,000 மி.லி மட்டுமே குடிக்க வேண்டும். இந்த நீர் என்பதில் குடிக்கும் நீர், தவிர மற்ற திரவ உணவுகளான மோர், பால், காப்பீ, டீ, ரசம், நீர் அதிகம் உள்ள பழங்களான தர்பூசணி ஐஸ்கிரீம் போன்றவையும் அடங்கும்.

முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் என்ற இராசயனத்தின் அளவை கட்டுப்படுத்த முடியாது. இதனுடைய அளவு சற்றே அதிகமானாலும் அது இதயத்தின் துடிப்பை பாதித்து உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே பொட்டாசியம் அதிகம் உள்ள பழங்கள் போன்றவை உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பயிறு வகைகள் இவற்றில் பொட்டாசியம் அதிகம் இருப்பினும் இவைகளை அதிக நீரில் வேக வைத்து உபரி நீரை வடிகட்டி விடுவதால் பொட்டாசியம் நீக்கப்பட்டு விடுகின்றது.

அனைத்து உணவு வகைகளையும் உப்பு சேர்க்காமல் சமைக்கவும். பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவு உப்பை அவ்வுணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நாளைய பாலின் அளவு 300 மி.லி மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

அசைவம் சாப்பிடுவர்கள் வாரத்தில் 1-2 முறை 50கி கோழி அல்லது மீன் அல்லது முட்டை வெள்ளைக்கரு சாப்பிடலாம். குழம்பாகவோ அல்லது மைக்ரோவேவ் ஓவனில் பேக் செய்தோ அல்லது க்ரில் செய்தோ(தந்தூரி வகை) சாப்பிடலாம்.

பொதுவாக எண்ணையின் அளவை மிகக் குறைவாக உபயோகிக்கவும். எண்ணையில் பொறித்த பண்டங்கள் (உதா:சிக்கன் 65, பூரி,முறுக்கு,சீடை) ஆகியவற்றை தவிர்க்கவும்.

உப்பு குறைக்கப்பட்ட உணவு முறைகள்

சாப்பாட்டு உப்பான சோடியம் க்ளோரைடு என்பதும் கிட்னி ஃபெயில்யரில் இரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா முதலான விஷக்கழிவு உப்புகளும் ஒன்றல்ல. உணவில் உப்பைக் குறைப்பது தாகம், இரத்த அழுத்தம் மூச்சுத்திணறல் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

கீழ்கண்ட உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் இருப்பதால் அறவே தவிர்க்கவும்.

 • உப்பு, இந்துப்பு, வருத்த உப்பு, லோனா உப்பு போன்ற அனைத்து வகை உப்புக்களும்.
 • பேக்கிங் பவுடர்
 • பேக்கிங் சோடா
 • டின்னில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள்
 • கடைகளில் விற்கப்படும் ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ் (பாலாடைக்கட்டி-பன்னீர்),
 • வெண்ணை (வீட்டிலேயே உப்பு சேர்க்காமல் செய்யும் பாலாடைக்கட்டி(காட்டேஜ் சீஸ்) உபயோகிக்கலாம்.)
 • ஈஸ்ட் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்
 • அப்பளம், வடகம், ஊறுகாய், வற்றல், கருவாடு, உப்புக் கண்டம், மோர் மிளகாய்.
 • குளிர் பானங்கள், சோடா, பெப்சி, பேன்டா, தம்ஸ்-அப் முதலானவை
 • சூப்புகள், சாஸ் வகைகள்
 • பூஸ்ட், காம்ப்ளான், போர்ன்விட்டா, சாக்லேட் சேர்ந்த பானங்கள்
 • அஜினோ மோட்டொ சேர்த்து செய்யப்படும் சைனீஸ் உணவு வகைகள்
 • பொரி, கார்ன் ஃப்ளேக்ஸ், பாப் கார்ன்,
 • பேக்கரிப் பொருட்கள்-கேக், ரொட்டி பன் முதலானவை
 • உணவை சமைக்கும் போது உப்பு சேர்க்காமல் சமைத்து பின்னர்
 • உப்பை மட்டும் விரும்பும் உணவுகளில் சேர்த்து கொள்ளவும்.
 • பொட்டாசியம் உப்பு குறைக்கப்பட்ட உணவுத் திட்டம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்
 • பழங்கள், பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, குளிர்பானங்கள் இளநீர்
 • ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா,காம்ப்ளான்,பூஸ்ட் போன்ற ஆரோக்ய பானங்கள் ஜாம், ஜெல்லி,சாஸ் போன்றவை உலர்ந்த பழங்கள்(திராட்சை,அத்திப்பழம்,பேரீச்சம்பழம் போன்றவை)
 • கொட்டை வகைகள் (முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவை)
 • புதினா,வெங்காய மற்றும் தேங்காய் சட்னி
 • பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்கள்
 • சாக்லேட், கோகோ சிக்கரி(இன்ஸ்டன்ட் காபி) கலந்த உணவுப் பொருட்கள் சாஸ் மற்றும் டின்னில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

குறிப்பு -1

ஆப்பிள்,அன்னாசி,கொய்யா,பப்பாளி மற்றும் பேரிக்காய் ஆகிய பழங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவு சிலருக்கு மட்டும் (அதிக பட்ச அளவு 100கி) வாரம் 2-3 முறை உண்ணலாம்.

காய்கறிகளை தோல்சீவி அதிக தண்ணீரில் நன்கு வேக வைத்து தண்ணீரை வடித்து மீண்டும் சமைத்து உண்ணவும்.

குறிப்பு -2

காய்கறி,கீரைகள் அவற்றின் பொட்டாசியம் அளவை பொருத்து 3 குழுமங்களாக பிரிக்கப்படுகின்றன.

முதல் குழுமத்தில் உள்ளவற்றை 1-2 கப் தினமும் பயன்படுத்தலாம். 2ஆம் மற்றும் 3ஆம் குழும காய்கறிகளை பொட்டாசியம் நீக்கிய பிறகே குறைவாக பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர்

3.22033898305
மு த்தம்மாள் Oct 28, 2019 07:29 PM

பாம்பு கடித்து டயாலிசிஸ் 3முறை செய்துள்ளேம் யூரியா 47 கிரியாட்டின்1.4 ஆனதும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் ஆனால் இப்போது வாந்தி இடுப்பில் இருந்து கால் வலி வருகிறது ஏதாவது பிரச்சினை வருமா பிளீஸ் சார்

Anonymous Apr 23, 2019 09:11 PM

இரத்தத்தில் ,யூரியா,பொட்டாசியம் அளவை குறைக்கும் இயற்கை மருத்துவம் பற்றி கூறவும்

சவரியம்மாள் Sep 20, 2018 07:29 AM

உப்பு சத்து உள்ளவங்க இந்து உப்பு சாப்பிடலாமா

பா.கோமதி Aug 26, 2018 05:13 PM

இந்துப்பு சேர்க்கலாம் முன்னேறம் தெரியும். கிரியாட்டின் அளவைக் குறைக்க சீரகம் சோம்பு காய்ந்த வாழை இலை (பொடியாக நறுக்கியது) அனைத்தையும் ௧௦௦. மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்கு வததும் அதனுடன் வாழைத்தண்டு சாறு சேர்த்து தினமும் காலையும் மாலையும் குடித்து வரலாம்.

குமாரசாமி Jun 12, 2018 05:12 PM

கிட்னி பெயிலியர் 6வருடம் ஆகிறது இந்துப்பு சாப்பிட்டால் இனி சரியாகுமா

புஷ்பராஜ் Mar 09, 2018 09:36 AM

எனக்கு கிரியாட் டின் அளவு 12ஆக உள்ளது தங்களது ஆலோசனை தேவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top