অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சின்னம்மை

சின்னம்மை

சின்னம்மை

சின்னம்மை (chickenpox), அல்லது பயற்றம்மை என்பது நீர்க்கோளவான் சின்னம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸின் (VZV) மூல தொற்றின் காரணத்தினால் ஏற்படும் அதிகமான தொற்றும் பண்புடைய உடல்நலக் குறைவாகும். இது பொதுவாக தோல் கொப்புள விசிற்பாக இரண்டு அல்லது மூன்று முறைகளில் தென்பட ஆரம்பிக்கும். முக்கியமாக இது கைகளில் ஏற்படுவதற்கு பதிலாக உடம்பிலும் தலையிலும் ஏற்பட்டு அரிக்கும் தன்மையுடைய பழுக்காத அம்மைவடுக்களாகிறது. பெரும்பாலான பகுதிகளில் திறந்திருக்கும் கொப்புளங்கள் தழும்புகளை ஏற்படுத்தாமல் குணமாகிவிடும்.

சின்னம்மையின் நோய்காப்புக் காலம் 10 லிருந்து 21 நாட்களாகும். இது நோயுற்ற ஒருவர் தும்முவதினாலும் இருமுவதினாலும் சுலபமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. இது விசிற்பிலிருந்து வரும் நீர்கசிவு மற்றவர்கள் மேல் நேரடியாக படுவதினாலும் பரவுகிறது. வழக்கமாக மூலத்தொற்று ஏற்பட்டதற்கு பின்பு வாழ்நாள் முழுவதும் சின்னம்மை நிகழ்வுகள் மறுபடியும் ஏற்படாமல் இருக்கத் நோய்த் தடுப்பாற்றல் கிடைக்கிறது.

சின்னம்மை மிகவும் அரிதாக உயிர்சேதத்தை ஏற்படுத்தலாம். எனினும், பொதுவாக வயதுவந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை விட வயதுவந்த ஆண்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். கர்ப்பிணி மற்றும் அடக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பை உடையவர்களுக்கு இந்த நோய் தீவிரம் அடையும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. ஒரு பொதுவான தாமதமாக எற்படக்கூடிய பிரச்சினை ஒன்றுள்ளது. சின்னம்மையின் ஆரம்ப கால நிகழ்வின் பத்தாண்டுகளுக்குப் பிறகு நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸ் மீண்டும் செயல்படத் துவங்குவதன் காரணத்தினால் சின்னம்மையில் தாக்கம் ஏற்பட்டிருந்தவர்களுக்கு குளிர் நடுக்கம் (உடல் நடுக்கம்) ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மனித உயிரினம் அல்லாத உயர் விலங்கினங்களுக்கும் சின்னம்மை ஏற்பட்டிருப்பது அறியப்பட்டுள்ளது. இவற்றில் சிம்பான்ஸிகள்[1] மற்றும் கொரில்லா குரங்குகள் ஆகியவையும் அடங்கும்.

குறிகளும் அறிகுறிகளும்

சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் நோய் பரவலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபர் விசிற்பு தென்படுவதற்கு முன்னதாக இருக்கும் முதல் ஐந்து நாட்களில் நோய் தொற்றை மற்றவர்களுக்கு ஏற்படுத்தலாம். எல்லா கொப்புளங்களும் பொருக்காக மாறும் நேரம் வரை நோய் தொற்றும் காலம் தொடரும். இது ஏற்பட 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.[4] தொற்றுடைய நபரிடமிருந்து ஒருவருக்கு தொடுதல் தொடர்பு ஏற்பட்ட 10 லிருந்து 21 நாட்களுக்குப் பிறகே அது சின்னம்மையாக மாறுகிறது.

சின்னம்மைப் புண்கள் (கொப்புளங்கள்) இரண்டிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் சிவப்பு கொப்புளங்களாக ஆரம்பிக்கும். இது சீரற்ற வடிவத்தில் (ஒரு "ரோஜா இதழ் "போல) ஏற்படும். சிவந்திருக்கும் பகுதியின் மேல் மெல்லிய தோலுடன் தெளிவான கொப்புளம் (ஒரு "பனித் துளி") போன்று உருவாகும். "ரோஜா இதழின் மேலிருக்கும் பனி துளி" போன்ற புண் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக இருக்கிறது. சுமார் 8லிருந்து 12 மணி நேரங்களுக்குப் பிறகு கொப்புளத்தில் இருக்கும் நீர் மங்கலாகி (பழுத்து) கொப்புளம் உடைந்து நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும். கொப்புளத்தில் இருக்கும் நீர் மிகவும் நோய்த்தொற்றுடையதாக இருக்கிறது. ஆனால் கொப்புளம் உடைந்து நீர் வெளியான பிறகு அந்த புண் தொற்றாக கருதப்படுவதில்லை. வழக்கமாக புண்ணின் புக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஏழு நாட்களில் ஒரு புண் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புது புது புண்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும். அதனால் ஒரு வாரத்திற்கு முன்னதாக புதிய புண்கள் உருவாவது நின்றுவிட்டு உடம்பில் உள்ள எல்லா புண்களும் புக்காக மாறும் வரை குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது.

நோய் தொற்றுடைய நபருடன் தொடுதல் தொடர்புக் கொண்டால் தான் நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தான் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரிவதற்கு முன்னதாகவே அதாவது சிரங்குகள் உருவாவதற்கு முன்னதாகவே அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவலாம். சிரங்குகள் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பிருக்கும் நாளிலிருந்து எல்லா சிரங்குகளும் புக்காக மாறும் வரை, வழக்கமாக சிரங்கு ஆரம்பித்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை அவர்கள் நோய் தொற்றை மற்றவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

கர்ப்பிணி மற்றும் பிறந்த குழந்தைக்கு இருக்கும் நோய்த் தொற்று

கர்ப்பிணிகளுக்கு நோய்த்தடுப்பாற்றல் அல்லது ஏற்கனவே ஏற்பட்ட நோய்த்தொற்றின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி நஞ்சுக்கொடி வழியாக உருப்பெற்றக் கருவிற்கு அனுப்பப்படுகிறது.

சின்னம்மை தடுப்பாற்றல் கொண்ட பெண்களுக்கு மறுபடியும் நோய்த் தொற்று ஏற்படாது. கர்ப்பக் காலத்தில் அவர்களுக்கோ அவர்களுடைய குழந்தைக்கோ நோய்த்தொற்று ஏற்படும் என்று பயப்படவேண்டிய அவசியமில்லை.

நீர்க்கோளவான் சின்னம்மை நோய்த்தொற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவதனால் அது நஞ்சுக்கொடி வழியாக உருப்பெற்ற கருவை தொற்றடையச் செய்து வைரஸ் சார்ந்த பரவுதலாக மாறலாம். இந்த நோய்த்தொற்று கருவளர் காலத்தின் முதல் 28 வாரங்களில் ஏற்பட்டால் உருப்பெற்றக் கரு நீர்க்கோளவான் சின்னம்மை நோய்க் குறித்தொகுப்பாக மாறலாம் (பிறப்புடன் அமைந்த நீர்க்கோளவான் சின்னம்மை நோய்க் குறித்தொகுப்பு என்றும் அழைக்கப்படும்)[சான்று தேவை]. உருப்பெற்ற கருவில் இந்த தாக்கம் ஏற்படுவதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் வளர்ச்சியடையாத கால் மற்றும் கை விரல்களிலிருந்து மலவாய் சார்ந்த பகுதி மற்றும் நீர்ப்பை வரை கடுமையான வடிவக்கேடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகளில் உள்ளடங்கியவை

மூளையில் ஏற்படும் பாதிப்பு: மூளையழற்சி, சிறிய தலை, நீர் மண்டை மடைமை, மூளை வளர்ச்சிக்குறை

கண்ணில் ஏற்படும் பாதிப்பு

விழித் தண்டு, விழி மூடி, மற்றும் லென்ஸ் கொப்புளங்கள், குறுகிய கண், விழிப்புரைகள், காரிய ரெட்டினா வழல், கண்ணின் செயல்திறன் இழப்பு

மற்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட சீர்குலைவு: மைய நரம்பு மண்டலம் மற்றும் இடைதிருக முதுகுத் தண்டிற்கு சேதம் ஏற்படுத்துதல், நரம்புக்கட்டளை/உணர்வுத்திறன் போதாமல் இருத்தல், ஆழமான தசைநாண் தளர்ச்சி எதிர்வினைகள் இல்லாமை, ஒருங்கற்ற கண்  பார்வை/ஹார்னரின் நோய் குறித்தொகுப்பு

உடம்பில் ஏற்படும் பாதிப்பு

மேல்/கீழ் முனையுறுப்புகளின் குறை வளர்ச்சி, ஆசன வாய் மற்றும் நீர்ப்பை சுருக்குத்தசை செயல் பிறழ்ச்சி

தோல் சீர்குலைவுகள்

(தழும்பு) தோல் புண்கள் , தாழ்நிறமேற்றம் ஆகியவையாகும்.

கருவளர் காலத்தில் அல்லது குழந்தை பிறந்த உடனேயே வரும் நோய்த் தொற்று "பிறப்புக்குப் பிறகு வரும் நீர்க்கோளவான் சின்னம்மை " என்றழைக்கப்படுகிறது.[9] கர்ப்ப காலத்தில் தாய்க்கு வரும் நோய்த்தொற்றினால் கருக்காலம் நிறைவடையும் நாட்களுக்கு முன்னதாகவே (40 வாரத்துக்குள் குழந்தைப் பிறத்தல்) குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைப் பிறப்பிற்கு 7 நாட்களுக்கு முன்பிலிருந்து குழந்தைப் பிறந்த பிறகு உள்ள 7 நாட்கள் வரைக்கும் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிகமான ஆபத்து இருக்கிறது. நோய் தொற்றுடைய உடன்பிறந்தவர்களிடமிருந்தோ மற்ற தொடர்புகள் மூலமாகவோ குழந்தைக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தாய்க்கு நோய் தடுப்பாற்றல் இருந்தால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நோயின் அறிகுறிகள் இருக்கும் பிறந்த குழந்தைக்கு நுரையீரல் அழற்சி மற்றும் நோயின் மற்ற கடுமையான சிக்கல்கள் ஏற்பட அதிகமான ஆபத்து இருக்கிறது.

உடல் இயக்க நோய்க்குறி இயல்

நோய்த் தொற்றுடையவரிடமிருந்து காற்று வழியே பரவும் சுவாச சிறு துளிகளை மூச்சோடு இழுத்தலின் காரணத்தினால் வழக்கமாக சின்னம்மை ஏற்படுகிறது. நோய்த்தொற்றுடைய ஒரு குழந்தையின் மூலம் பல மாணவர்களுக்கு பள்ளியில் சின்னம்மை நோய் வெகு சீக்கிரமாகப் பரவ வாய்ப்பிருக்கிறது. இது VZV இன் மிகவும் அதிகமாக நோயைப் பரவவைக்கும் பண்பாகும். சின்னம்மையின் குறிப்பிடத்தக்க கொப்புளங்களில் அதிகமான வைரஸ் சார்ந்த வேதியல் வினையூக்கிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது; ஆபத்து குறைவாக இருந்தாலும், இப்படிப்பட்ட கொப்புளங்களை நேரடியாகத் தொடுதலின் காரணத்தினாலும் வைரஸ் சார்ந்த நோய்த் தொற்றுப் பரவ வாய்ப்பிருக்கிறது.

ஆரம்ப கட்டமாக, தூய்மையற்ற சுவாச சிறு துளிகளை மூச்சுடன் சேர்ந்து உள்ளிழுத்த பிறகு, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்றின் 2 முதல் 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்டப் பகுதியில் உள்ள வடிநர்க்கணுக்களில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 முதல் 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். உடம்பின் உட்புற உறுப்புகளில் வைரஸ் சார்ந்த பாதிப்பு இரண்டாம் கட்டமாக நடைபெறும். குறிப்பாக கல்லீரல் மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பிறகு, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 14 முதல் 16 நாட்களில் உயர் நிலை இரத்த நச்சுயிரி பெருக்கம் (இரத்தத்தில் நச்சுயிரி இன்னும் அதிகமாகப் பெருகும்) ஏற்படும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேற்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் VZV நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு VZV நோய்த்தொற்று ஏற்படுவதனால் நோய் எதிர்ப்புப் புரதம் G (IgG), நோய் எதிர்ப்புப் புரதம் M (IgM), மற்றும் நோய் எதிர்ப்புப் புரதம் A (IgA) நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றின் உற்பத்தி தொடங்குகிறது; IgG எதிர்பொருட்கள் வாழ்நாள் முழுவதும் உடலில் தங்கி தடுப்பாற்றலுக்கு உதவி செய்கிறது. முதல்நிலை நீர்க்கோளவான் சின்னம்மை நோய்த்தொற்றின் காலத்தையும் அதனுடைய நோக்கத்தையும் வரையறுப்பதில் அணுக்கள் மூலமாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் பதில்வினைகளும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. முதல்நிலை நோய்த்தொற்றுக்குப் பிறகு, அந்தந்தப் பகுதியில் உள்ள உணர் நரம்புகளில் மென் சவ்வு சார்ந்த மற்றும் மேற்தோலிற்குரியப் புண்களை VZV பரப்புவதாகக் கருதப்படுகிறது. உணர் நரம்புகளின் முதுகுப்புற நரம்பு முடிச்சு உயிரணுக்களில் VZV அப்படியே ஒடுங்கி செயலின்றி இருந்துவிடுகிறது. VZVயின் மறு செயலாற்றலினால் அக்கி அம்மையின் மருத்துவ ரீதியான தனித்துவமான நோய்க்குறித்தொகுப்பு ஏற்படுகிறது. (அதாவது குளிர் நடுக்கம் (உடல் நடுக்கம்) மற்றும் சிலநேரங்களில் ராம்சே ஹண்ட் நோய்குறித்தொகுப்பு வகை II ஆகியவை இதில் அடங்கும்.

அறுதியிடல்

சின்னம்மை மற்றும் சின்னம்மையின் ஆரம்பக்கால விசிற்பு: தலை கைகால் தவிர்த்து உடலின் மற்ற பகுதியில் விசிற்புகள் ஏற்படுதல் சின்னம்மையின் பண்பாகும்.

நீர்க்கோளவான் சின்னம்மையின் அறுதியிடல் பெரும்பாலும் மருத்துவமனையில் செய்யப்படும். நோய் எதிர்ப்புத்திறன் அளிக்கப்படாத ஒரு நபருக்கு பொதுவாக முன்னரே குறிப்பிடத் தகுந்தல்லாத அல்லது "அறிகுறிக் கொப்புளம்", தென்படக்கூடிய விசிற்புகள் "அதிகமான இடங்களில் பரவி" இருத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் வழக்கமாக மேற்கொண்டு எந்தவித ஆய்வும் செய்யப்பட மாட்டாது.

கொப்புளங்களுள் இருக்கும் திரவத்தைப் பரிசோதித்தல் அல்லது ஒரு துல்லியமானத் தடுப்பாற்றல் ரீதியான பதில்வினையின் அத்தாட்சிக்காக இரத்தப் பரிசோதனை செய்தல் ஆகியவை அறுதியிடலை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்டு செய்யப்படும் ஆய்வாகும். ட்ஸாங்க் ஸ்மியர் மூலம் தோல்கொப்புள திரவம் ஆய்வு செய்யப்படும் அல்லது நேரடி ஒளிரும் எதிர்ப்பொருள் என்ற ஆய்வுக்கூடப் பரிசோதனை செய்யப்படும். திரவம் "பண்படுத்தப்படவும்" செய்யப்படலாம். அதாவது, திரவ மாதிரியிலிருக்கும் வைரஸை வளர வைக்க முயற்சிகள் எடுக்கப்படும். கடும் நோய்த்தொற்று (IgM) அல்லது முன்பு ஏற்பட்ட நோய்த்தொற்றின் பதில்வினை மற்றும் அதற்கு பிறகு வரும் தடுப்பாற்றலைக் (IgG) கண்டறிவதற்காக இரத்த பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்பநிலை தாய்வழித் தொற்றுக்கு பிறகு 5 வாரங்கள் கழித்து கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுதியிடல் செய்யப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் உருப்பெற்ற கருவின் நீர்க்கோளவான் சின்னம்மை நோய்த்தொற்று அறுதியிடல் செவியுணரா ஒலியைப் பயன்படுத்தி செய்யப்படலாம். உருப்பெற்றக்கரு நீர்க்கோளவான் நோய்குறித்தொகுப்பு குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை விட பனிக்குடத் துளைப்பு செயல்முறையின் காரணத்தினால் தானாகவே கருச்சிதைவுறும் ஆபத்து அதிகமாக இருப்பதால் தாயின் அமனியனுக்குரிய திரவத்தில் PCR (DNA) பரிசோதனையும் செய்யப்படலாம்.

தடுப்பு முறைகள்

1974 ஆம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்புமருந்து முதன் முதலாக மிச்சாக்கி டாகஹாஷி என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்க ஒன்றியத்தில் கிடைக்கப்பெற்றது. சில நாடுகளில் ஆரம்பப்பள்ளியில் குழந்தைகள் சேரும் முன்னர், நீர்க்கோளவான் சின்னம்மைத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நோய்த்தடுப்புத் திறன் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதிற்கும் பாதுகாப்பு அளிக்காது. அதனால் ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தடுப்புமருந்து அளித்தல் அவசியமாக இருக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தில் வழக்கமாக பிரசவத்திற்கு முன்னதாக இருக்கும் பராமரிப்பு செயல்களில் ஒன்றாக நோய் வரலாறு இல்லாத இல்லாத பெண்களுக்கு நீர்க்கோளவான் எதிர்பொருள்கள் அளவிடப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் எல்லா தேசிய ஆரோக்கிய சேவை பணியாளர்களின் நோய்த்தடுப்பாற்றலும் வரையறுக்கப்பட்டது மற்றும் நோய்த்தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கும் நோயாளியுடன் நேரடி தொடர்புடையவர்களுக்கும் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

மற்றபடி ஐக்கிய இராச்சியத்தில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நீர்க்கோளவான் சின்னம்மைக்கு எதிரான நோய்த் தடுப்பு மருந்து கொடுத்தல் வழக்கத்தில் இல்லை. ஏனெனில் வயது வந்தவர்களில் அதிகமானவருக்கு குளிர் நடுக்கம் (உடல் நடுக்கம்) ஏற்பட்டுவிடும் என்ற பயம், எல்லா மக்களுக்கும் தடுப்புமருந்து அளிக்கப்படும் வரை இருந்தது. குழந்தைப் பருவத்தில் சின்னம்மை நோய்த்தொற்று ஏற்பட்ட பெரியவர்கள் எப்போதாவது சின்னம்மை வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் (எடுத்துக்காட்டாக, அவர்களுடைக் குழந்தைகளின் மூலம்) அவர்களின் பிற்கால வாழ்க்கையில் குளிர் நடுக்கம் ஏற்பட குறைவாகவே வாய்ப்பிருக்கிறது. இதற்கு காரணம், நோய்க்கு உட்படுதல் ஒரு தடுப்புமருந்து செயலூக்கியாக செயல்புரிகிறது.

சிகிச்சை

தோல் எரிச்சல் நீக்க மருந்தை(கலமின் திரவ மருந்து) உடலின் மேலே தடவுவதனால் உள்ள பயன்களை மதிப்பீடு செய்த மருத்துவ ஆய்வுகள் இல்லாமல் இருந்தாலும் துத்தநாக ஆக்ஸைடு கொண்டு செய்யப்படும் தடுப்பு மருந்து மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் சிகிச்சைகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் நன்றாகச் செயல்புரிகிறது.[15] இரண்டாம் முறை நுண்மப் பீடிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உடலை ஆரோக்கியமான சூழலில் பராமரிப்பதும், தினமும் தோலை வெந்நீரினால் சுத்தம் செய்தலும் முக்கியமாக இருக்கிறது. சொறிதலும் உயர்நிலை நோய்த்தொற்றின் ஆபத்தை அதிகரிக்கலாம். தண்ணீரில் சிறிய அளவு புளிக்காடி சேர்த்துக் கொள்ளுதலும் சில நேரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

சின்னம்மையின் அறிகுறிகளிலிருந்து விடுப்படுவதற்காக, சொறிதலை தவிர்க்கும் க்ரீம் மற்றும் திரவ மருந்துகளைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றார்கள். ஹட்ரோகார்டிசோன் என்ற க்ரீம் பயன்படுத்துவதற்கு சிறந்த மருந்தாகும். இந்த திரவ மருந்துகளை முகத்திலோ கண்களுக்கு அருகாமையிலோ பயன்படுத்துதல் கூடாது. ஓட்ஸ் குளியல் கூட சிரமங்களைக் குறைக்கலாம்.

குழந்தைகள்

விசிற்பு ஏற்பட்ட 24 மணி நேரங்களுக்குள் வாய்வழி அசிக்ளோவர் கொடுக்க ஆரம்பிப்பதனால் அறிகுறிகள் கொள்வதை ஒரு நாள் மட்டும் குறைக்க முடியும். ஆனால் சிக்கல்களை தீர்ப்பதில் அதற்கு எந்த பங்கும் இல்லை. தற்போது, பொதுவாக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவர்களுக்கு அசிக்ளோவர் பயன்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை. (அதாவது, வேறு வகையில் நோய் எதிர்ப்புக் குறைபாடு இல்லாத ஆரோக்கியமானவர்கள் அல்லது தடுப்பாற்றலடக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பவர்கள்).

வயது வந்தவர்கள்

மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் வயதுவந்தவர்களுக்கு நோய்த்தொற்று மிகவும் கடுமையாகவும் நன்கு செயல்புரிவதாகவும் இருக்கும்; வைரஸ் எதிர்ப்பி மருந்துகள் (எ.கா. அசிக்ளோவர்) சிகிச்சையை எடுத்துக்கொள்ளுதல் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. விசிற்பு ஆரம்பித்து அதிகபட்ச நேரம் 28 முதல் 48 மணி நேரங்களுக்குள் இந்த சிகிச்சை ஆரம்பிக்கப்படவேண்டும்.[சான்று தேவை] தாழ்த் தடுப்பாற்றல் அமைப்பு அல்லது படர்ந்திருக்கும் அரிக்கும் தோலழற்சி உடைய எந்த வயது நோயாளிகளுக்கும் மிகவும் கடுமையான நோய் தாக்கம் ஏற்படும் ஆபத்திருக்கிறது. அவர்கள் வைரஸ் நோய் எதிர்ப்பி மருந்துகளுடனும் சிகிச்சையளிக்கப்படுவார்கள். அமெரிக்க ஒன்றியத்தில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாக இருந்தாலும் கூட சின்னம்மை நோயினால் இறந்தவர்களில் 55 சதவீதம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.[சான்று தேவை]

சின்னம்மை வந்த போது இருந்த 16 வயதுடைய ஒருவரின் முதுகு.

சிறப்பு மக்கள்தொகை

"ஆபத்தில் இருக்கும்" மக்களுக்கு நீர்க்கோளவான் சின்னம்மையின் தாக்கம் ஏற்படலாம் என்பது உறுதிசெய்யப்பட்டவர் எனில் (தடுப்பாற்றலடக்கப்பட்டவர்கள், கர்ப்பமாக இருக்கும் சீரோனெகட்டிவ் பெண்கள், பிறந்த குழந்தைகள்) நீர்க்கோளவான் சின்னம்மை குழல் நோய் அமைப்பு எதிர்ப்புப் புரதம் நோயின் அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கொடுக்கப்படலாம். சில விஷயங்களில் இது உண்மையானதாக இருக்காது.

முன் கணிப்பு

நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸ் ஏற்படுத்தும் தென்படக்கூடிய கொப்புளங்களின் கால அளவு குழந்தைகளுக்கு வழக்கமாக 4 முதல் 7 நாட்களாக வித்தியாசப்படுகின்றது. 5வது நாளுக்குப் பிறகு புதிதாக தென்படக்கூடிய கொப்புளங்கள் குறைய ஆரம்பித்துவிடும். இளம் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய்த்தொற்று லேசானதாக இருக்கும். சோடியம் பைக்கார்பனேட் குளியல்கள் அல்லது இரத்தமின்தடை மருந்துகளுடன் நோய்குறி ரீதியான சிகிச்சைகளை எடுப்பதனால் அரிப்பு ஏற்படுத்துவதைக் குறைக்கலாம்.[21] பாரசிட்டமால் (உடல் வெப்பநிலை குறைக்க உதவும் மருந்து) (அசிடமினோஃபென்) காய்ச்சலைக் குறைப்பதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வலி நீக்க மருந்து (ஆஸ்பிரின்) அல்லது ஆஸ்பிரின் இருக்கும் மற்ற பொருட்களை சின்னம்மை நோய் இருக்கும் குழந்தைகளுக்கு (அல்லது வைரஸினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கக்கூடிய உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் காய்ச்சல் எதுவாக இருந்தாலும்) கொடுக்கப்படல் கூடாது. ஏனென்றால் இது கடுமையான மற்றும் உயிர் சேதத்தை விளைவிக்கக்கூடிய ரெயேவின் நோய் குறித்தொகுப்பு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

நோயின் நிகழ்வு பொதுவாக மிகவும் குறைவானதாக இருப்பினும், வயது வந்தோர்களுக்கு இந்த நோய் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். வயது வந்தவர்களுக்கு நோய்த்தொற்று நுரையீரல் அழற்சி, ஈரல் அழற்சி மற்றும் மூளையழற்சி ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படுவதனால் நோயுற்ற விகிதமும் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, சின்னம்மை நோய் தாக்கம் இருக்கும் 10% கர்ப்பிணிகளுக்கு நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது. கருவளர் காலத்திற்கு பிறகு நோய் தீவிரம் அடைய ஆரம்பிக்கிறது. ஐக்கிய இராச்சியம் மற்றும் வேல்ஸில் சின்னம்மையினால் ஏற்பட்ட இறப்புகளில் 75% இறப்புகள் வயது வந்தவர்களாக இருந்தார்கள்.

அக்கி அம்மை யால் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பினும் மூளையில் ஏற்படும் கட்டி அல்லது மூளையழற்சி குறை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இறக்க செய்யும் திசுப்படல அழற்சியும் கூட அரிதாக ஏற்படக்கூடிய சிக்கலாக இருக்கிறது.

தோல் புண்களின் உயர்நிலை நுண்மப் பீடிப்பு நோய் சிரங்கு, உயிரணு அழற்சி மற்றும் செஞ்சருமம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இது ஆரோக்கியமான குழந்தைகளில் காணப்படும் மிகவும் பொதுவான சிக்கலாகும். பரவிய முதல்நிலை நீர்க்கோளவான் சின்னம்மை நோய்த்தொற்று பொதுவாக பாதிப்படைந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டவர்களிடம் அல்லது வயதுவந்தவர்களிடம் காணப்படுகிறது. இதனுடைய நோய்பாதிப்பு நிலை அதிகமாக இருக்கலாம். நீர்க்கோளவான் சின்னம்மை நுரையீரல் அழற்சியின் நோயாளிகள் 90% வயதுவந்தவர்களிடையே தான் ஏற்படுகிறது. பரவிய சின்னம்மையின் மிகவும் அரிதான சிக்கல்களில் இதயதசையழல், ஈரல் அழற்சி, மற்றும் குளோமருல நீரகவழல் ஆகியவையும் அடங்கும்.

ஆரோக்கியமான குழந்தைகளும் வயதுவந்தவர்களும் இரத்த இழப்புச் சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பினும் பாதிப்படைந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு அல்லது தடுப்பாற்றலடக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் (இரத்த இழப்பு சோகை) மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது. ஐந்து பெரிய மருத்துவ அறிகுறிகள் விவரிக்கப்பட்டுள்ளன: காய்ச்சலுக்குரிய தோலடிக் குருதிக்கசிவு, தோலடிக் குருதிக்கசிவுடன் கூடிய புற்றுப்பண்புடைய சின்னம்மை, நோய்த்தொற்றுக்குப்பிறகு ஏற்படும் தோலடிக் குருதிக்கசிவு, தோலடிக் குருதிக்கசிவு ஃபுல்மினன்ஸ் மற்றும் அனஃபைலாக்டாய்டு தோலடிக் குருதிக்கசிவு. இந்த அறிகுறிகள் பல்வேறு வகைகளாக இருக்கின்றன. நோய்குறித்தொகுப்புகளில் சிறந்ததான காய்ச்சலுக்குரிய தோலடிக் குருதிக்கசிவில் சிக்கலில்லாத விளைவுகள் இருக்கின்றன. இதற்கு முரணாக, தோலடிக் குருதிக்கசிவுடன் இருக்கும் புற்றுப்பண்புடைய சின்னம்மை மிகவும் கடுமையான மருத்துவ நிலையாகும். இந்த நோயினால் இறந்தவர்களின் இறப்பு விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இரத்த இழப்புச் சோகை சின்னம்மை நோய்க்குறித்தொகுப்புகள் எதனால் ஏற்படுகிறது என்பது இன்னும் தெரியவில்லை.

புறப்பரவியல்

முதல்நிலை நீர்க்கோளவான் சின்னம்மை ஒர் உட்பரவுநோயாகும் (ஆண்டு முழுவதும் தோன்றும் நோயாகும்). நீர்க்கோளவான் சின்னம்மை ஆண்டு முழுவதும் காணப்படும் நோயாகும். ஆனால் இது குளிர்காலத்திலும் வசந்தகாலத்தின் ஆரம்பத்திலும் பொதுவாக அதிக அளவில் காணப்படுகிறது. இது குடல் அதி நுண்ணுயிரிகள் போலல்லாமல் தட்டம்மை மற்றும் உருபெல்லா ஆகியவற்றைப் போலவே நீர்க்கோளவான் சின்னம்மையும் சுவாசப்பாதை வழியாகவே முக்கியமாகப் பரவுகிறது என்ற கருத்தை ஆதரிக்கிறது. இதற்கு முரணாக, அக்கி, அம்மை பொன்றவை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியற்றும் சீராகவும் பரவுகிறது. குழந்தைப்பருவத்தின் முதல்நிலை நோய்களில் நீர்க்கோளவான் சின்னம்மை நோயும் ஒன்றாகும். 4 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது. உருபெல்லாவைப் போன்றே குறிப்பாக இது புகுமுகப் பள்ளியில் ஏற்படுகிறது. நீர்க்கோளவான் சின்னம்மை மிகவும் அதிகமான தொற்றுப்பண்புடைய நோயாகும். நெருக்கமான தொடர்புகளின் மூலம் ஏற்படும் நோய்த்தொற்று விகிதம் 90% ஆகும். வயதிற்கு வருவதற்கு முன்னதாகவே பலருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் இளம் வயதுவந்தோர்களில் 10% மக்கள் இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனினும் இந்த வகையான நோய்த்தொற்று உலகம் முழுவதும் காணப்படுவதில்லை. எ.கா கிராமப்புற இந்தியாவில் இந்த நோய் அதிகமாக வயதுவந்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் சராசரி வயது 23.4 ஆக இருக்கிறது. இந்திய குழந்தைகளுக்கு ஏற்படும் மற்ற சுவாசத்திற்குரிய வைரசுகளின் தாக்கங்களே இதற்கு காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

வரலாற்று ரீதியாக நீர்க்கோளவான் சின்னம்மை புகுமுகப் பள்ளி குழந்தைகளையும் பள்ளிக்கு செல்லும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளையும் அதிகமாக பாதிக்கிறது. குழந்தைகளை விட வயதுவந்தவர்களுக்கு அம்மை அடையாளங்கள் கருமையாகவும் தழும்புகள் மிகவும் பெரியதாகவும் இருக்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate