பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள்

காற்றினால் பரவும் நோய்த்தொற்றுகள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சின்னம்மை (Vericella) (Zoster)

தீவிரமாக, அதிகப்படியாக, தொற்றக்கூடிய ஒரு நோய், இது வெரிசெல்லா சோஸ்டர் மூலம் பரவக்கூடும்.

நோய் பரப்பும் நுண்ணுயிர்: வெரிசெல்லா சாஸ்டர் வைரஸ்

நோய் முற்றும் காலம் 14 - 16 நாட்கள், சில சயமங்களில் 10 - 21 நாட்கள்

பரவும் விதம் : சிதறல் வகை நோய்த்தொற்று

அறிகுறிகள்

1. நோய் முற்றிய நிலை : மிதமான காய்ச்சல், வலி, நீர்க்கட்டு மற்றும் சில்லிட்டுப் போதல்

2. இராப்டிவ் நிலை: குழந்தைகளுக்கு கொப்பளங்கள் தென்படும், அதோடு காய்ச்சல் இருக்கும்

a. பகிர்வு: கொப்பளங்கள் கழுத்துப் பகுதியிலும், அதனை தொடர்ந்து முகம், கை, கால்களில் காணப்படும்.

b. வேகமாக பரிணாம வளர்ச்சி : மிக விரைவில் கொப்பளங்கள் தென்படும். மெக்குடில், பேப்யுல், வெசிக்குல், ஸ்கேப்

C. .ப்லியோ மார்பிசம் : ஒரே நேரத்தில் கொப்பளங்கள் தொடர்ந்து எல்லா படிவத்திலும் காணப்படும்.

d. காய்ச்சல் (இலேசான காய்ச்சல், உடல் தளர்ச்சியும் ஏற்படும்.

தடுப்பு நடவடிக்கைகள்:

1. கொப்பளங்கள் தோன்றிய 6 நாட்களுக்கு பிறகு அறிவித்தல் மற்றும் தனித்து வைக்க வேண்டும்.

2. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மூக்கில், தொண்டையில் காணப்படும் ஒழுக்குகளை தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்.

பல ஆன்டி வைரஸ் மருந்து நோய்களை பாதுகாக்க ஏசைச்ளோவர், விலாசைக்ளோவர் பெமிசைக்ளோவிர் மற்றும் போஸ்கார்டெம் கொடுக்க வேண்டும், சிஸ்டமிக் நோய்களையும், அதன் வளர்ச்சிகளையும் என்சைக்ளோவிர் தடுக்கும்.

நேரடித் தடுப்பு முறை:

அம்மை குத்துதல் (வெரிசெல்லா ஜோஸ்டர் இமினோகுளோபின்) நோய்த்தொற்று உடையவரின் பாதுகாப்பிற்கு 72 மணி நேரத்தில் வெரிசெல்லா சாஸ்டர் இமினோகுளோபின் கொடுத்தால் தடுக்க முடியும்,

VZI (VaricellaZoster Immunoglobulin) 72 மணி நேரத்திற்குள் கொடுத்தல் :

நோய் எதிர்க்கும் சக்தியை, குறைக்கக் கூடிய சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களுக்கு சின்னம்மை நோயை தடுக்கலாம்.

HIV/AIDS ஹெச்.ஐ.வி / மற்றும் எய்ட்ஸ் : சந்தேகிக்கப்பட்ட நபர்களை முக்கியமாக கர்ப்பிணி தாய்மார்களை கவனித்தல்.

வாக்சின்ஸ்: குழந்தைகளுக்கு வெரிசெல்லா வைரஸ் வாக்சின்ஸ் 12 - 18 மாதத்தில் கொடுத்தால் சின்னம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

சிகிச்சை (தனிப்பட்ட முறையில் சிறப்பு சிகிச்சை இல்லை)

சிக்கல்கள் :

இரத்த ஒழுக்கு, நிமோனியா, மூளையில் ஏற்படும் தொற்று, தீவிர மூளை நோய்த்தொற்று, வெரிசெல்லா நிமோனியா, தாய்மார்கள் முக்கியமாக கர்ப்பிணி தாய்கள், பிறப்பில் குறைபாடு, கைகால் வளர்ச்சியில் குறைபாடு, தலை சிறியதாக காணப்படுதல், குறைமாத குழந்தை, கண்ணில் பூ விழுதல், மூளை இதய செயலிழப்பு

தட்டம்மை

ரூபியோலா குழந்தைகளிடையே தீவிரமாகவும், அதிகமாகவும் பரவும் நோய்த்தொற்றாகும். இது ஒரு வகை மிக்சொ வைரஸினால் பரவக் கூடும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : RNA பேராமிக்சோ வைரஸ் பரவும் விதம் : சிதறல் வகை நோய்த்தொற்று, நேரடித் தொடர்பு

நோய் முற்றும் காலம் :

காய்ச்சல் - 10 நாட்களில் ஏற்படும்

கொப்பளங்கள் - 7 நாட்களில் சிவந்த நிலையில் ஏற்படும்

அறிகுறிகள் : 3 பிரிவுகள் உண்டு (அ) நிலைகள் உண்டு .

1.புரோட்ரோமல் படிவம், 2. இரட்டிவ் படிவம் , 3. தட்டம்மை ஏற்பட்டபின் படிவம்

புரோட்ரோமல் நிலை : நோய்த்தொற்று 10 நாட்களில் இருந்து தொடங்கி 14 நாட்கள் வரை நீடிக்கும். நீர்க்கட்டு, தும்மல், மூக்கில் ஒழுக்கு, இருமல், கண்கள் சிவந்து காணப்படுதல்

கண்களிலிருந்து நீர்க்கசிவு, பார்வை குறைபாடு வாந்தி, பேதி (அ) இரண்டு தினங்களில் கொப்புளங்களில் புள்ளிகள் தெரிய ஆரம்பித்தல் கன்னங்களின் உட்புறம் தென்படும். நுண்ணிய நீலம் கலந்த வெண்புள்ளிகள் முகத்திலும், நெற்றியிலும் கொப்புளங்கள் முழு உடம்புக்கும் பரவுகின்றன.

இரேட்டிவ் நிலை : கொப்பளங்கள் மிகவும் அதிகமான வகையில் பரவி, காதுக்கு பின்புறம், பரவி, சில மணி நேரம் நீடித்து கொப்பளங்கள் முகம் மற்றும் கழுத்து மற்றும் உடல் முழுவதும் மற்றும் 2 to 3 நாட்களுக்கு பின் கை, கால்களில் தென்படும்.

தட்டம்மை ஏற்பட்டபின் நிலை : தட்டம்மையானது குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும் போதும், மற்றும் பலவீனமாக இருக்கும் போது பல நாட்கள் நீடிக்கும். குணமடையக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு மற்றும் நாட்பட்ட நிலையில் இருக்கும் போது நோய்க்காலம் பாதிப்பு ஏற்பட்டு, மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாகவும் கூட, வைரஸினால் ஊட்டசத்து நிலை, மெட்டபாலிக் நிலை, திசுக்களின் கழிவு நிலை இருக்கக் கூடும். மேலும் வளர்ச்சி குறைவு மற்றும் பேதி, கான்கிரம் ஒரிஸ், பையோஜெனிக் நோய்த் தொற்று, கான்டிடியாசிஸ். மற்றும் நுரையீரல் காசநோய் பாதிப்பு இருக்கக் கூடும்.

சிக்கல்கள் : பேதி, நிமோனியா (சுவாச சம்பந்தப்பட்ட சிக்கல்கள்), நடுச்செவியில் நோய்த்தொற்று ஏற்படும். மற்றும் நரம்பு சம்பந்தபட்ட சிக்கல்கள் வலிப்பு, மூளையில் நோய்த்தொற்று, சப் - தீவிர - க்கிளிரோசின் மற்றும் பான் மூளைத்தொற்று ஏற்படும்.

தட்டம்மை தடுப்பு நடவடிக்கைகள்

a) முக்கியமான வழிமுறைகளை மேற்கொள்ளுதல் 100% நோய்த்தடுப்பு கைப்பற்றுதல் வேண்டும்.

b) வருங்கால குழந்தை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.

தட்டம்மை தடுப்பூசி : ஆக்டிவ் நோய்த்தடுப்பு தட்டம்மை நோயை தடுக்கலாம். உறைந்த மற்றும் உலர்ந்த நிலையில் தடுப்பூசி இருக்க வேண்டும். 2 - 8 C வரை தடுப்பூசியினை சேமித்து வைக்க வேண்டும். குழந்தையின் 9வது மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் தடுப்பு நடவடிக்கை பரிந்துரைத்த தடுப்பு ஊசி வழங்கப்பட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை : கீழ்க்கண்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.

a) தனித்துவைத்தல் - 7 நாட்கள்

b) தொடர்பு ஏற்பட்ட 2 நாட்களுக்குள் நோய்த் தடுப்பு தரவேண்டும். தடுப்பூசி தரமுடியாத நிலையல் 3-4 நாட்களுக்குள் இமினோகுளோபிலின் தர வேண்டும்.

c) கொள்ளை நோயாக இருந்தால் உடனடியாக தடுப்பூசி ஆரம்ப நிலையில் தரவேண்டும்.

புட்டாளம்மை

புட்டாளம்மை என்பது தீவிர நோய்த்தொற்று உள்ள நோய், இது வைரஸ் நோய்த்தொற்று, பொதுவாக குளிர்க்காலத்தில் பரவக் கூடும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: RNA வைரஸ் ஜீனஸ் ரூபெல்லா வைரஸ், குடும்பம் - பேராமிக்சோவைரிடே.

பரவும் விதம் : முக்கியமாக சிதறல் வகை நோய்த்தொற்று மற்றும் நேரடித் தொடர்பு, தொற்றுள்ள நபர் மூலம்.

நோய் முற்றும் காலம் :2 - 3 வாரங்கள்

அறிகுறிகள்

1. முதலில் பரோட்டிட் சுரப்பியில் வீக்கம் காணப்படுதல்.

2. வலி,

3. வாயை திறக்கும் போதும் உணவு உண்ணும் போதும் வலியை உணர்தல்

4. காய்ச்சல்

5 தலைவலி

சிக்கல்கள்

நரம்பு கோளாறுகள், தலை பெரிதாக இருத்தல், மூளையில் ஏற்படும் தொற்று, மூளையில் நச்சுத்தன்மை, முக திமிர்வாதம்

தடுப்பு முறைகள் : வாக்சினேஷன் அதிகப்படியான வீரியம் உடைய தடுப்பூசியினை கொடுத்தால் புட்டாளம்மையை தடுக்கலாம். ஓரே ஒரு தவணை 0.5 தசை வழியாக குறிப்பிட்ட இமினோகுளோபின் கொடுக்கும் போது நோயை பாதுகாக்கலாம்.

தடுப்பு நடவடிக்கை : முதலில் பரிசோதனை செய்து நோயை அறியும் போது, நோய்த் தொற்று இருப்பதை தெரிந்து சிகிச்சை அளிக்கலாம்.

நீண்ட கால நோய் முற்றும் காலம் இருப்பின் சில நோயாளிகளை பரவும் நிலையையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்க்கொள்வது கடினம்.

நோயாளியை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல் அவசியம்.

இன்புளுயன்சா

இது பொதுவாக ஃபுளு என்றும் கூறலாம். இது சுவாசப் பாதையை தடை செய்யக் கூடிய தீவிர நோய்த் தொற்றாகும், இன்புளுன்சா வைரஸ் மூலம் பரவக் கூடும். இவை மிகவும் வேகமாக பரவக்கூடியது.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : இன்புளுயன்சா வைரஸ் நான்கு வகைகள் A,B,C,D தும்மல், இருமல் (அ) வைரஸ் கிருமிகள் தொண்டையிலிருந்து, சுவாசப் பாதையில் நுழைய வாய்ப்புகள் அதிகம்.

நோய் முற்றும் காலம் : 18 - 72 மணி நோய்கள்

அறிகுறிகள் : வைரஸ் நுழைந்தவுடன் சுவாசம் பாதையை பாதித்து நெக்ரோசிஸ் திசுக்களை அழித்தல் மற்றும் எபிதீலிய செல்களையும் அழித்து, மூச்சுக் குழலை பாதித்து, அவை தொடர்ந்து பாக்டீரியா நோய்த்தொற்று உண்டாக்கி விடும். காய்ச்சல், சில்லிட்டுப்போதல், வலி, இருமல், பொதுவான பலவினம் இவையெல்லாம் வைரஸினால் பரவும்.

தடுப்பு நடவடிக்கை : பரவலாக பயன்படுத்தக் கூடிய, பாதுகாக்கக் கூடிய இன்புளுயன்சா வாக்கினை பயன்படுத்தி, இன்புளுயன்சா நோயை முழுமையாக பாதுகாக்க முடியாது. இரண்டு தவணைகள் 1 மி.லி./10 நாட்கள் கொடுக்க வேண்டும். முதல் தவணை நோய் ஏற்படுவதற்கு முன் கொடுக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள் : இன்புளுயன்சா நோயை தடுப்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ஏனெனில் அவை மிகவும் வேகமாக பரவக் கூடியது. அது மட்டுமல்லாமல் இதுவரை சக்திவாய்ந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளியை தனிமைப்படுத்துதல் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.

ஆண்டி வைரஸ் மருந்துகள் : ஒரு தவணை 100 மி.கி. அமன்டடைன் (அ) ரிமன்டடைன் இரு தடவை ஒரு நாளைக்கு 3-5 நாளைக்கு கொடுக்கவேண்டும். இந்த மருந்துகளை 24 - 48 மணி நேரத்திற்குள்ளாக நோய்க் காலம் தொடங்கும் போது ஆரம்பித்து விட வேண்டும்.

சிக்கல்கள்: நிமோனியா:

தொண்டை அடைப்பான்

இது தீவிர நோய்த்தொற்றுள்ள நோயாகும். டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக் கூடும். இவை அதிகமாக தொண்டை, டான்சில்ஸ், குரல்வளை (அ) மூக்கு பாதிக்கக்கூடும். காற்றுப் பாதையிலுள்ள சாம்பல் நிற வெள்ளை படலத்தை அதிக அளவு தாக்கி பரவக் கூடும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: கார்னி பாக்டீரியம் டிப்தீரியா. மேலும் டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக்கூடும்.

பரவும் விதம் : சிதறல் வகை, நேரடித் தொடர்பு, சந்தேகிக்கப்பட்ட நபர், தோலில் காணப்படும் நீர்த்துளிகள் காரணமாக பரவும்.

நோய் முற்றும் காலம் : 2 - 6 நாட்கள்

அறிகுறிகள் : சுவாசப் பாதையில் தொண்டைப் புண், குரலில் மாற்றம், மூக்கிலிருந்து வெளியாகும் நீர்த்துளிகள், விழுங்குதலில் சிரமம், காய்ச்சல், குரலில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காரணி ஸ்டீம் - சத்தத்துடன் கூடிய சுவாசம் மூச்சுத்திணறல்.

சிகிச்சை : டிப்திரியா ஆன்டிடாக்சின் 10,000 - 80,000 கொடுக்க வேண்டும். படுக்கறையில் ஓய்வு முக்கியமாக இதய கோளாறை தடுக்கும். மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை தேவைப்படும் (சுவாசத்தடை ஏற்பட்டால்)

தடுப்பு நடவடிக்கை : DPT வாக்சின் (முத்தடுப்பு ஊசி) குழந்தைகளுக்கு BCG - 6வது வாரத்தில் கொடுக்கவேண்டும். DPT வாக்சின் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி நோயைத் தடுக்கும். குழந்தைகளுக்கு வாக்சின் உடன், இளம்பிள்ளை வாத தடுப்பு ஊசி, மற்றும் ஊக்குவிக்கும் தவணை 0.5 mlDPT 1 1/2 to 2 yrs வருடத்தில் தொடர்ந்து DT 5 - 6 வருடத்தில் கொடுக்க வேண்டும்.

தடுப்பு முறை:

1. பாதிப்பு உள்ளானவர்கள் : கேஸியர் மற்றும் நோய் சுமக்கும் மனிதர்கள்

a. ஆரம்பநிலையில் குறைத்தல் : நுண்ணுயிரி சோதனை செய்தல்

ஸ்வாப்ஸ் தொண்டையிலும் மற்றும் மூக்கில் காணப்படும் ஒழுக்குகளில் நுண்ணுயிரி சோதனை செய்யப்பட்டு, அதில் டிப்தீரியா பேசில்லை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும்.

b. தனித்து வைத்தல்

சந்தேகித்த உடனே நோயாளிகளை தனித்து வைத்தல். மருத்துவமனையில் 14 நாட்கள் தங்க வைத்தல் வேண்டும். .

c. சிகிச்சை

தாமதம் செய்யாமல் டிப்திரியா ஆன்டிடாக்சின் கொடுக்க வேண்டும். இரும்பு (அ) சிரைவழி திரவம் 20,000 1,00,000 மிகவும் அதிகமாக பாதித்து இருக்கும் நோயாளிக்கு அளிக்க வேண்டும்.

நோய் சுமக்கும் மனிதர்களை 10 நாட்கள் வாய் வழியாக எரித்தோமைசின் கொடுக்க வேண்டும்.

2. தொடர்பு - சிறப்பு கவனம் தேவை :

தொண்டை ஸ்வாப்ஸ் எடுக்க வேண்டும். பாக்டீயோலாஜிகல் சரிவிலைன்ஸ் - மூடிய தொற்றுள்ள நபருக்கு பல வாரங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

சமுதாயம்: ஆக்டிவ் நோய்த்தடுப்பு மற்றும் டிப்தீரியா டாக்சைடு. முத்தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படாமல் இருந்தால், 500 to 1000 I.Vஒரு தவணை டிப்திரியா ஆன்டிடாக்கின் கொடுக்க வேண்டும்.

சிக்கல்கள் :

நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு - மூளை வேக்காடு.

நீடித்த வலிப்பு சிசுக்களுக்கு ஏற்படக்கூடிய வலிப்பு

கக்குவான் இருமல்

சுவாசப் பாதையை பாதிக்கும் அதிகப்படியான நோய்த் தொற்று. இது 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கக்குவான் இருமல் பாசில்லைசினால் பரவக் கூடும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி : (போர்னடெல்லா பெர்டுஸ்) கக்குவான் இருமல் பாசில்லை.

பரவும் விதம் : நேரடித் தொடர்பு - சிதறல் வகை

மறைமுகத் தொடர்வு - பொருட்களின் மூலம் பரவும்,

நோய் முற்றும் காலம் 7 to 14 நாட்கள் / 3 வாரங்கள்

அறிகுறிகள்

மிதமான காய்ச்சல், நீர்க்கட்டு, மற்றும் ஒழுகுகின்ற மூக்கு, எரிச்சலுள்ள இருமல் 1 அல்லது 2 வாரங்கள் வரை இருக்கும்.

தடுப்பு நடவடிக்கை :

பாதிப்பு உள்ளானவர்கள் மற்றும் தொடர்பு உள்ளானவர்களை தனித்து வைத்தல், ஆரம்ப நிலையில் நோயை கண்டுபிடித்தல்,

ஒழுக்குகள் (மூக்கு, தொண்டை) - ஆரம்ப நிலையில் ஒழுக்குகளை பரிசோதனைக்கு அனுப்பப்ட வேண்டும்.

ஆக்டிவேஷன் நோய்த்தடுப்பு: முத்தடுப்பு தடுப்பு மருந்து அளிக்க வேண்டும் (DPT Vaccine)

மெனிங்கோ காக்கல் மெனிஞ்சைட்டிஸ்

தீவிரமாக, தொற்றக் கூடிய மூளை தண்டுவட காய்ச்சல் ஆகும். இது நைசிரியா மெனிஞ்சைட்டிஸ் மூலம் பரவும். சாதாரணமாக தலைவலி, வாந்தி மற்றும் கழுத்து நெருக்கம் மற்றும் கோமா நிலை - சில மணி நேரம் நோய்கள் நீடிக்கும்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: நைசிரியா மெனிஞ்சைட்டிஸ் நுண்கிருமியின் மூலம் பரவும்.

பரவும் விதம் : சிதறல் வகை, வாய் தொண்டைப் பகுதியில் அதிகமாக பரவக்கூடும்.

நோய் முற்றும் காலம் : 3 - 4 சில வகைகளுக்கு 2- 10 நாட்கள்.

அறிகுறிகள் :

உடனடியாக அறிகுறிகள் தென்படும். தலைவலி, காய்ச்ல், குமட்டல், வாந்தி, போட்டோபோபியர், கழுத்து நெருக்கம், நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும்.

தடுப்பு பராமரிப்பு :

a நோய்த்தடுப்பு, நோய் சுமக்கும் மனிதர்கள் மற்றும் நேரடி, மறைமுக தொடர்புகள்

b. கேசஸ் ; ஆன்டிபயாடிக் 95% கொடுத்தால் பாதுகாப்பு அளிக்கலாம். பென்சிலின் கொடுத்தல் வேண்டும்.

C. தொடர்பு: மறைமுகத் தொடர்புள்ள நோயாளிகளுக்கு அதிகமாக நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

d. வேதியியல் பொருட்களை கொண்டு தடுத்தல்

மாஸ் மெடிகேஷன் - அதிக பெருக்கம் உள்ள மக்களிடத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை.

மாஸ் ஹிமோ புரோபிலேக்சிஸ் குறைத்து, சுகாதார பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளித்தல் மாஸ் சிகிச்சை அளிக்கும் போது மூளை வேக்காடு நோய்களுக்கான பரவும் முறைகளை உடனடியாக தடுக்கலாம்.

e. வாக்சின்ஸ்: தொற்றுள்ள நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு வாக்சீன் அளித்தல், மருந்துகள் பைவேலன்ட் (அ) டெட்ராவேலன்ட்

f. சுற்றுப்புறசூழலை பாதுகாத்தல் : நல்ல வீடுகளை அமைத்தல், அதிக நெருக்கடியை தடுத்தல்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.2
வேல் Oct 12, 2019 11:20 PM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top