பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீரினால் பரவும் நோய்கள்

நீரினால் பரவும் நோய்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தீவிர பேதி நோய், கல்லீரல் சுழற்சி, காலரா, டைப்பாய்ட்டு காய்ச்சல் இவையெல்லாம். முக்கியமாக நீரினால் பரவும் நோய்களாகும்.

 • டைப்பாய்டு காய்ச்சலை பரப்பக் கூடிய நுண்ணுயிரி சாலமொனெல்லா டைபி; பரவும் விதம்: மலம், வாய் வழியாக; டைப்பாய்டு காய்ச்சலின் சிக்கல் - குடலில் ஓட்டை விழுதல்.
 • காலரா - தீவிர தொற்றுள்ள நோயாகும். பரப்பக்கூடிய நுண்ணுயிரி விப்ரியோ காலரா - பரவும் விதம் - வாய் - மலம் வழியாக; காலரா நோய் அறிவிக்கக்கூடியது. மற்றம் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்காவிடில் திடீரென்று இறப்பு ஏற்படும்.
 • கல்லீரல் சுழற்சி என்பது கல்லீரலை பாதிக்கும் ஆரம்ப நிலை அறிகுறியாகும் நோய் பரப்பும் நுண்ணுயிரி - ஹெப்படைட்டிஸ் A வைரஸ்; பரவும் விதம் - மலம் வாய் நேரடித் தொடர்பு; நோய் முற்றும் காலம்:15 - 50 நாட்கள் சாதாரணமாக 28 நாட்கள்
 • தீவிர பேதி நோய் என்பது தீவிர (அ) நாட்பட்ட நிலையாகும் 24hrs நேரத்தில் 3 தடவைக்கு மேலாக மலம் கழித்தல். வாய் வழியாக நீரேற்றும் சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டும் (நீரற்ற நிலைக்கு)
 • இளம்பிள்ளை வாதம் என்பது தீவிர வைரஸ் நோய்தொற்றாகும். இது போலியோ வைரஸினால் பரவக் கூடியது. கால் துவலை நிலை ஏற்படும். (8 நாள்); பரப்பும் நுண்ணுயிரி போலியோ வைரஸ் (டைப் I/II மற்றும் III); பரவும் விதம் மலம் வாய், மற்றும் சளித்துளிகள் மூலம்.
 • உணவு நச்சடைதல் தீவிர குடல் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றாகும். இது அழுக்கடைந்த உணவு (அ) நீர், வேதியியல் (அ) டாக்சின்ஸ் (அ) உயிர் வாழக்கூடிய பாக்டீரியா இவைகளின் மூலம் பரவும்.
 • கொக்கிப் புழு - நாட்பட்ட சிறுகுடலை தாக்கும் நோய். நோய் பரப்பும் நுண்ணுயிரி என்சைக்லோடோமா டியோடினே நேகாட்டர் அமீரிகனஸ்.
 • ஆஸ்காரியாசிஸ் என்பது பொதுவாக புழு, பூச்சிகளால் தாக்கும் நோயாகும். இது ஆஸ்காரியாசிஸ் லம்பிகாய்ட்ஸ் மூலம் பரவும்.
 • நாடாப்புழு விலங்கினத்திலிருந்து நன்கு சமைக்கப்படாத இறைச்சியின் மூலம் வரக்கூடியது. பரவும் விதம் - வாய் - மலம் ஒட்டுண்ணிகள் மற்றும் பல.
 • சின்னம்மை (அ) வேரிசெல்லா என்பது தீவிர தொற்றுள்ள நோய் பரவும் - விதம் வேரிசெல்லா வைரஸ். அறிகுறிகள் : கொப்பளங்கள் தென்படும், காய்ச்சல், உடல்நலக் குறைவு,
 • புட்டாளம்மை என்பது பரோட்டிட் சுரப்பி வீக்கம் அடைதல்.
 • இன்புளுயன்சா : நபர் - நபர் சளித்துளிகள் மூலம், சிதறல் வகை நியூக்ஸி பேசும் போது தும்பும் போது இரும்பும் போது பரவும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.11764705882
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top