பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - தொற்றுநோய்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் - தொற்றுநோய்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மனிதத் தொற்றுநோய்களுடன் இணைத்து எண்ணும் அனைத்து ஸ்ட்ரெப்டோகாக்கையும், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் என்டிரோகாக்கஸ் இனத்தைச் சார்ந்ததாகும். சங்கிலித்தொடர் மற்றும் இணைகளாக வளரும் ஸ்ட்ரெப்டோகாக்கை பூஜ்யத்தை விடப் பெரிதான காக்கையாகும்.

பீட்டா இரத்த அணு அழிப்பு (Beta haemolysis)

கூட்டத்தைச் சுற்றி முழுமையாக தெளிந்த இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் உண்டாக்கும் தெளிவு, பீட்டா இரத்த அணு அழிப்பு என்று பெயர் பெறும். இது நுண்ணுயிர் நச்சினால் உண்டாவதாகும்.

ஸ்ட்ரெப். பயோஜீன்ஸ் ஸ்ட்ரெட் அகலாக்டியே மற்றும் ஸ்ட்ரெப். ஈக்குவிசிமிலஸ் பீட்டா இரத்த அணு அழிப்பை உருவாக்கும்.

காமா இரத்த அணு அழிப்பு (Gamma haemolysis)

கூட்டத்தைச் சுற்றி ஊடகத்தில் (medium) எவ்வித மாற்றமும் இல்லாத பொழுது அல்லது நிற மாற்றம் discoloration மற்றும் இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறா நிலை ஏற்படுவதை காமா இரத்த அணு அழிப்பு என்று கூறலாம்.

ஸ்ட்ரெப் சலைவேரியஸ் மற்றும் ஸ்ட்ரெப். மயூட்டன்ஸ் இரத்த அணு அழிப்பை உண்டாக்காது.

வகைப்படுத்துதல்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் இனத்தில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மிக முக்கியமானதும் கோழைப் படலத்தில் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை வாழக்கூடியதுமான சவ்வின் கூட்டு வாழ்வு உயிரிகள் இனப்பகுப்பு ஸ்ட்ரெப்டோகாக்கஸில் உள்ளன. ஏறத்தாழ 40 (நாற்பது) சிற்றினங்கள் உண்டு. நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் தன்மை மற்றும் பிற இயல்பான பண்புகளின் அடிப்படையைக் கொண்டு இது ஆறு குழுக்களாகப் பகுக்கப்பெறும்.

  1. சீழ் உண்டாக்கும் குழு : நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் - ஸ்ட்ரெப். பயோஜீன்ஸ், ஸ்டரெப். அகலாக்டியே மற்றும் ஸ்ட்ரெப் ஈக்குஸ்சிமிலிஸ்.
  2. மைடிஸ் குழு: வாயிலும் தொண்டையிலும் கூட்டு வாழ்கை வாழ்வன. ஸ்ட்ரெப். நிமோனியே இக்குழுவைச் சார்ந்த நோய் விளைக்கும் நுண்ணுயிரியாகும்.
  3. ஏஞ்சினோசஸ் குழு : மனிதனின் வாய்க்குழியில் இயல்பாக இருக்கும். ஸ்ட்ரெப். ஏஞ்சினோசஸ் இக்குழுவிலடங்கும்.
  4. சலைவேரியஸ் குழு: மனிதனின் வாயில் சாதாரண பாக்டீரியாக்களாக இருக்கும். (உ.தா.) ஸ்ட்ரெப். சலைவேரியஸ்.
  5. மனிதனின் பெருங்குடலில் போவிஸ் குழு உள்ளது.
  6. மனித மற்றும் விலங்கினங்களின் பற்பரப்பில் மயூட்டன்ஸ் குழு குடியேறும். இவை கேரிஸ் எனப்படும் பற்சிதைவு நோயோடு தொடர்புடையவையாகும்.

இரத்த அணுக்களை அழிக்கும் (Hemolytic) செயல்பாடுகள்

இரத்த அகாரில் வளரும்பொழுது, கூட்டத்தைச் சுற்றி பலவகைப்பட்ட இரத்த அணு அழிப்பை ஸ்ட்ரெப்டோகாக்கை காட்டும்.

ஆல்ஃபா இரத்த அணு அழிப்பு (Alpha haemolysis) :

பச்சை நிறத்துடனும் மற்றும் இரத்தச் சிவப்பணுக்களின் செல்சுவர் பழுதுபடாமலும் பாக்டீரிய தொகுதியைச் சுற்றிய பகுதியில் தெளிந்த இரத்தம் உள்ள பொழுது, நிகழும் இரத்த அணு அழிப்பு, ஆல்ஃபா இரத்த அணு அழிப்பு என்று அழைக்கப்பெறும்.

ஸ்ட்ரெப். நிமோனியே, ஸ்ட்ரெப். மைடிஸ், ஸ்ட்ரெட் ஒராலிஸ் மற்றும் ஸ்ட்ரெப். ஏஞ்சினோசஸ், ஆல்பா இரத்த அணு அழிப்பைக் காட்டும். ஆல்பா இரத்த அணு அழிப்பு நுண்ணுயிர் நச்சினால் அல்ல. சிவப்பு ஹீமோகுளோபினை பச்சை ஹீமோகுளோபினாக ஹைடரஜன் பெராக்சைடு (H0) மாற்றுவதால் ஆகும்.

லான்ஸ்ஃபீல்ட் குழு பிரித்தல்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் செல்சுவரின் மேல் உள்ள பாலிசாக்கரைடின் அடிப்படையில், ரெபேக்கா லான்ஸ்ஃபீல்ட் என்பவர், ஊநீரியல் (Serology) வகைப்படுத்துதல் மூலம் ஸ்டரெப்டோகாக்கையை பல குழுக்களாகப் பிரித்தார். அந்த பாலிசாக்கரைடு குழு பாலிசாக்கரைடு என்று அழைக்கப்பட்டது. அது வெவ்வேறு ஸ்ட்ரெப்டோகாக்கஸ்ஸின் குழுக்களைக் கண்டறிந்தது. அதற்கு குழு A, B, C, D என்று பெயர் தரப்பட்டது.

நோய் விளைவிக்கும் காரணிகள் (Pathogenic attributes)

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ் அநேக வீரிய தொற்றுக் காரணிகளை உண்டு பண்ணுகிறது. இவ்வீரிய தொற்றுக் காரணிகள் திசுக்களில் ஒட்டிக் கொள்ளச் செய்வதுடன் ஓம்புனரின் தற்காப்பை உடைத்துச் செல்வதற்கும், திசுக்களில் அழிவை உண்டாக்கவும் உதவுகின்றன. எல்லா வீரிய காரணிகளும், எல்லா ஸ்ட்ரெப்டோகாக்கஸின் சில சிற்றினங்களிலும் எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தப் படுவதில்லை. இதனால் நோய் வெளிப்பாட்டிலும் வேறுபாடுகள் காணப்படும். பின் வரும் படத்தில் ஸ்ட்ரெப்டோகாக்கஸின் உடலில் எந்த இடத்தில் என்ன வீரிய காரணிகள் உள்ளன என்பதைக் காணலாம்.

Adhesion

ஓம்புனரின் செல்களில் ப்பைபுரோனெக்டின் என்ற கூட்டமைப்பு ஒரு புரதத்தைப் பெற்றுள்ளது. இவ்விறு ப்பைபுரோனெக்டினும், அப்-புரதமும் இணைகின்றன. இதனால் முதலில் ஒட்டுதல் ஏற்படுகிறது. பின்னர் ஸ்ட்ரெப்டோகாக்கை செல் உள்ளே சென்றடைகிறது.

புரதங்கள்

M புரதம், சைட்டோபிளாஸ்மிக் உறையில் பற்றிக்கொண்டு இருக்கும். M புரதம் செல்சுவர் வழியாக வெளியே மயிரிழைகளாக செல்லின் மேற்புறத்தில் நீட்டிக்கொண்டு காணப்படும். உயிரிகள் ஓம்புனரின் செல்களுடன் ஒட்டிக்கொண்டு, செல் விழுங்குதல் ஏற்படுவதை தடுக்க M புரதம் உதவுகிறது. M புரதங்களின் நோய் எதிர்ப்பொருள், ஸ்ட்ரெப்டோகாக்கையில் உள்ள குறிப்பிட்ட M புரதங்களை தடுக்கும் ஆற்றலை அளிக்கிறது. எவ்வாறாயினும், பல வேறுபாடுகள் கொண்ட பல்வேறு M புரதங்கள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட பல்வேறு M புரதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதலால், ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் பல்வேறு M புரதம் கொண்ட ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ் தொற்றால் பாதிப்பு அடைகிறான்.

M போன்ற புரதம்

M போன்ற புரதம் உரு வடிவமைப்பில் M புரதத்துடன் தொடர்புடையது. இது செல் விழுங்குதலைத் தடுக்கும் செயல்பாடு உடையது. இது பல்வேறு சீரம் புரதங்களான பிப்ரினோஜன், பிளாஸ்மினோஜன், ஆல்புமின், IgG, IgAa, மேக்ரோகுளோபுலின், இணைவள நிறைவு மண்டல (Complement) H ஆக்க கூறு முதலியவைகளை இறுகப்பற்றி இணைக்கும். இந்த பாக்டீரியாக்கள் ஆதாரமான புரதத்தால் மூடியிருப்பதால், இவை அனைத்தும் ஒன்றாக குழுமியிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

உறை (Capsule)

சில ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்கள் உறை உருவாக்குகின்றன. இவ்வுறைகள் ஹையலூரோனிக் அமிலத்தால் செய்யப்பட்டுள்ளது. உறைகள் வீரிய காரணிகள் ஆகும். உறைகள் செல்விழுங்குதலை எதிர்க்கும் செயல்பாடு உடையது. உறை ஒம்புனரின் ஆதார புரதத்தின் இணைப்புத் திசுவில் உள்ள ஹையலூரோனிக் அமிலத்தைப் போன்று ஒத்து இருக்கும் காரணத்தால், பாக்டீரியாக்கள் உரு மறைத்துக் கொண்டு, நோய் எதிர் தாக்குதலைத் தவிர்க்கின்றன.

என்சைம்கள் : C5a பெப்டிடேஸ்

  • இணைவள் நிறைவு மண்டலத்தின் அங்கமாக உள்ள C5a என்பது இணைவள் நிறைவு செயல்பாட்டின் போது உருவாக்கப்படுகிறது. இது C5a பிளவுறச் செய்து, செயலிழக்கச் செய்து விடுவதால், விழுங்கும் செல்கள் கவரப்படுவதில்லை.
  • ஹையலூரோனிடேஸ் : ஸ்ட்ரெப்டோ.பையோஜீன்ஸ்கள், ஹையலூரோனிடேஸ் நொதியை தயாரிக்கிறது. இது இணைவுத்திசுவிலுள்ள ஹையலூரோனிக் அமிலம் என்னும் சிமெண்ட் பொருளின் தரத்தினை குறைவு பெறச் செய்கிறது. இதுவே, திசுக்களில் தொற்று பரவுவதற்கு உகந்ததாகிறது.
  • ஸ்ட்ரெப்டோகைனேஸ் : ஸ்ட்ரெப்டோகைனேஸ் என்பது ஃபைப்ரினோலைசின் என்றும் கூறப்படுகிறது. இது திசுக்களில் உயிர்கள் வேகமாக பரவுவதற்கு உதவுகிறது. இது அனைத்து ஸ்ட்ரெப்டோ.பையோஜீன்ஸ் சிற்றினங்களாலும் தயாரிக்கப்படுகிறது. இது ப்ளாஸ்மினோஜனை, பிளாஸ்மின் ஆக மாற்றி, பிளாஸ்மினை ஈடுபடுத்தி ஃபைப்ரின் தடையரண் உருவாதலை தடை செய்து, தொடர்ந்து பரவுகிறது.
  • லிப்டோபுரோட்டினேஸ் : இந்த நொதி ஒளி ஊடுருவா ஆக்கக்கூறு (opacity factor) என்று கூறப்படுகிறது. இது ஒளி ஊடுருவா தன்மையை சீரம் உள்ள ஊடகத்தில் ஏற்பட வைக்கிறது. இது முக்கியமாக தோல் தொற்றுக்களை ஏற்படுத்தும் ஸெட்ரெப்டோ.பயோஜீன்களால் உருவாக்கப்படுகிறது.
  • டீ ஆக்ஸிரைபோநியூக்ளியேஸ் (DNAse) : நான்கு வேறுபட்ட DNAஸ்களை ஸ்ட்ரெப்டோ.பயோஜீன்ஸ்கள் உருவாக்குகின்றன. அவைகள் DNAஸ் A, B, C மற்றும் D என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்நொதிகள் ஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தை நீர்க்கச் செய்கிறது. பசை தன்மையுடைய கசியும் பொருட்களை திரவ நிலைக்கு மாற்றி பரவச் செய்வதில் DNAஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஸ்ட்ரெப்டோலைசின்கள்

ஸ்ட்ரெப்டோ. பயோஜீன்ஸ்கள் இரு வேறுபட்ட வகையான ஸ்ட்ரெப்டோலைசின்களை உருவாக்குகின்றன. ஒன்று பிராணவாயுவால் நிலை மாற்றமடையக்கூடிய ஸ்ட்ரெப்டோ லைசின் மற்றொன்று சீரத்தில் கரையும் ஸ்ட்ரெப்டோலைசின் ஆகும். இவ்விரு ஸ்ட்ரெப்போலைசின்களும் இரத்த சிவப்பு அணுக்களை உடைக்கின்றன.

நோய்த்தோற்ற வகை மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தவைகள்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்றுக்களில் பல்வேறு மாறுபட்ட பண்புகளையுடைய நோய் உருவாக்க நிலைகளை காணலாம். தொற்றின் வெளிப்பாடு மற்றும் நோய்களின் தன்மையானது தொற்று நோயின் உயிரிகள், தொற்றும் வழி மற்றும் ஓம்புனரின் உயிர்களின் எதிர்ச்செயல் ஆகியனவற்றின் பண்புகளை சார்ந்துள்ளது. தொற்றுக்கள் பல்வேறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோய்கள்

முன்தொண்டை அழற்சி (Pharyngitis)

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்களால் ஏற்படும் மிகப் பொதுவான தொற்று முன் தொண்டை அழற்சி ஆகும். திடீரென தோன்றும் தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி ஆகியன இதன் அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இந்நுண்கிருமியால் தாக்கப்பட்ட 2-4 நாட்களில் தோன்றும். தொண்டையின் பின்பக்கம் பாதிப்படைகிறது. அடிநாசதை (Tonsil) பெரிதாகி சாம்பல் வெள்ளை நிறமாக மேற்புறத்தில் வெளிப்பாடு தெரியும். தொண்டையைச் சுற்றியுள்ள வீக்கத்தின் காரணமாக கழுத்தைச் சார்ந்த நிணநீர் முடிச்சுக்கள் பெரிதாகிவிடும். அவ்வப்போது அடிநாசதை சார்ந்த சீழ்க்கட்டு உருவாகும்.

செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் (Scarlet fever)

சில ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்களின் சிறு சிற்றினங்கள் (strains) பைரோஜெனிக் வெளிநோய் நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த சிறு சிற்றினங்கள் தொற்றுக்களை ஏற்படுத்தும்போது பரவலான எரித்திமேட்டஸ் வேனற்கட்டிகள் தோலிலும் சளிச்சவ்வு உறையிலும் உருவாகும். இந்நிலைக்கு செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் அல்லது ஸ்கார்லேன்டினா என்று பெயர். முன் தொண்டை அழற்சி தோன்றிய 1-2 நாட்களில் வேனற்கட்டிகள் போன்ற முதல் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையில் மார்பின் மேல்பகுதியில் உருவாகி, பிறகு கை, கால்களுக்கு பரவுகிறது.

தோல் தொற்றுக்கள்

  1. கொப்புளத் தொற்றுவகை அல்லது பையோடெர்மா (Impetigo orPyoderma) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் பலவகையான தோல் தொற்றுக்களை உருவாக்கலாம்.
  2. கொப்புளத் தொற்று வகை என்பது மேற்புறத்தில் மட்டுமுள்ள இட எல்லைக்குட்பட்ட தோல் தொற்று ஆகும். இது முக்கியமாக குழந்தைகளிடையே காணப்படுகிறது.
  3. திறந்த பகுதிகளான முகம், கை, கால்களை பாதிக்கிறது. ஆரம்பத்தில் தெளிவான சிறு கொப்புளங்கள் தோன்றி, சில நாட்களில் சீழ் நிரப்பப்பட்டு காணப்படும். பிந்திய நிலையில், சொரிவதன் விளைவாக பரவுதலை காணலாம்.
  4. அக்கி (Erysipelas) புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சி (Cellulitis)

இது மேற்புறத்தில் மட்டும் உள்ள தோலின் அடுக்குகளில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். பரவலான தோலின் செந்நிறம், எல்லைக்குட்படுத்தப்பட்ட பகுதியில் வலி, பகுதியில் நிணநீர் முடிச்சுக்கள் பெருத்து இருப்பது மற்றும் காய்ச்சல் ஆகிய பண்புகளுடன் இந்த தொற்று தோன்றும். சரியாக சிகிச்சை எடுக்காவிடில், இந்த தொற்று இரத்தப் ஓட்டத்தை அடைந்து, உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.

மென் திசுக்களில் நுழைந்து தாக்கும் தொற்று (Invasive Soft tissue infection)

சில நேரங்களில் ஸ்ட்ரெப்டோ. பையோஜீன்ஸ்கள் உடலின் உள் உறுப்பு வடிவமைப்புகளை அடைந்து, மென் திசுக்களில் தொற்றை உண்டாக்குகிறது. தசைநார் அழுகல், ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி, மற்றும் பேறுகால காய்ச்சல் போன்றவைகள் பேக்டீரியாவுடன் தொடர்புடைய சில தொற்றுக்கள் ஆகும்.

தசைநார் அழுகல் (Necrotizing fascitis)

இத்தொற்று, தொடர்ந்து கொழுப்பு மற்றும் தசைநார் சூழ் தசைப்பட்டை அழிவினை ஏற்படுத்தும். சிறு காயத்திற்குப் பின் தோலின் வழியாக இத்திசுக்களை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் அடைகிறது. ஆனால் மிகக் குறைவான தொற்றின் பின் அறிகுறிகளையே தோல் வெளிப்படுத்திக் காட்டும். கடுமையான உள் அதிர்ச்சி மற்றும் பொதுவான உடல் அழிவு, ஏற்படுவது மிக வேகமாக இருக்கும். இது சாதாரண எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களையும் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்ட நபர்களையும் பாதிக்கும். இச் சமயங்களில் ஸ்ட்ரெப்டோகாக்கையை இரத்தம், கொப்புளங்களின் நீர் மற்றும் தொற்று உள்ள பகுதியில் ஊடக வளர்ச்சி மூலம் தனியாக பிரித்து விடலாம்.

ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (Streptococcal toxic shock syndrome)

இது கடுமையான, திடீரென தாக்கும் நோய் ஆகும். தசைநார் அழற்சி ஏற்பட்ட நோயாளிகளிடையே தோன்றும் அல்லது மென் திசுக்களில் நுழைந்து தாக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கல் தொற்றுடன் உள்ள நோயாளிகளிடையே தோன்றும். இரத்தத்தில் நச்சுப்பொருட்கள் வெளியிடப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. மருத்துவ அறிகுறிகள் ஸ்டபைலோகாக்கல் TSSஐப் போல ஒத்து இருக்கும். காய்ச்சல், உடல்சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் உடலின் அநேக பகுதிகளில் தட்டையான கட்டி காணப்படும்.

பேறுகால காய்ச்சல் (Puerperal sepsis)

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெப்டோகாக்கை கருப்பையை அடைந்தால் பேறுகால காய்ச்சல் உருவாகும். கருப்பையின் உட்பகுதியில் இருந்து ஸ்ட்ரெப்டோகாக்கை இரத்தத்தை அடைந்து, நோய் ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சிகிச்சை (Antibiotics) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்நிலை அபூர்வமாக ஏற்படுகிறது. வழக்கமாக ஏற்படும் சுவாச தொற்றுக்களுக்குப்பிறகு, ருமாட்டிக் இருதய நோய் மிக பொதுவாகவே காணப்படுகிறது.

கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் (AGN)

இந்த நிலை ஸ்ட்ரெப்டோகாக்கல் தொற்றுக்கள் ஏற்பட்ட 3 வாரங்களுக்குபின் ஏற்படும். இது ஒரு சில M ஆன்டிஜெனிக் வகைகளோடு தொடர்புடையதாக இருக்கும், குறிப்பாக 2,4,12,49. சில சில சிற்றினங்கள் நெஃப்ரிடோஜெனிக்காக இருக்கும். க்ளோமருலார் அடித்தட்டு உறையின் மேல் உள்ள ஆன்டிஜென் ஆன்டிபாடி கூட்டுக்களானது. க்ளோமருலார் நெஃப்ரைட்டிஸ்ஸை ஏற்படுத்துகிறது. கடுமையான நெஃப்ரைட்டிஸ்ஸில், இரத்தம் மற்றும் புரதம் சிறுநீரில் காணப்படுகிறது. நீர்த்தேக்கம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் யூரியா நைட்ரஜன் தேக்கமும் ஏற்படுகிறது. ஊநீரில் இணை நிறைவு (complement) பொருட்களின் அளவு நிலையும் மிகக் குறைந்து காணப்படும். சில நோயாளிகள் இறக்க நேரிடலாம். சிலருக்கு நாட்பட்ட குளோமருல்லோ நெஃப்ரைட்டிஸ் உருவாக சிறுநீரகம் முழுவதுமாக செயல்படாத நிலை ஏற்படும். அதிகமான நோயாளிகள் பூரணமாக குணம் அடைவார்கள்.

ருமாட்டிக் காய்ச்சல்

இளம் வயதினரிடையே ஏற்படும் ருமாடிக் காய்ச்சலே இருதய நோய் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் அழற்சி, மற்றும் மூட்டுக்கள் வீக்கம் (arthritis) இதய அழற்சி (கார்டிட்டிஸ்), மத்திய நரம்பு மண்டல பாதிப்பு (கோரியா), தோல் (எரிதிமா மார்ஜினேட்டம்) அல்லது தோலின் கீழ் முடிச்சுக்கள் போன்றவை ஏற்படும். அநேக மூட்டுகளில் அழற்சி காணப்படுகிறது. கார்டைட்டிஸ் என்பது மிகவும் அபாயமான நிலைமை. ஏனெனில், இந்நிலை நிரந்தரமாக இருதய வால்வுகளுக்கு சேதம் விளைவித்துவிடும். ருமாட்டிக் காய்ச்சல், தன்னுடல் தாக்கு (autoimmune) விளைவு கொண்டது.

ருமாட்டிக் காய்ச்சலின் நோய்த் தோற்ற வகை

  1. ஸ்ட்ரெப்டோகாக்கஸின் பொருள்கள் அல்லது அது உருவாக்கும், சுரக்கும் பொருள்கள் திசுக்களை அல்லது இதயத்தை சேதப்படுத்துகின்றன. (உதாரணம்) ஸ்ட்ரெப்டோ லைசின் இதயத்தைச் சேதப்படுத்தலாம்.
  2. ஆன்டிஜன் எதிர்பொருள் கூட்டுகள் (antiger-antibody complexes) ஊநீர் நோயில் (serum sickness) நடப்பதுபோல் நோய் உண்டாக்கலாம்.
  3. ஸ்ட்ரெப்டோகாக்கஸின் மூலக்கூறுகள் ஓம்புனரின் மூலக் கூறுகளைப் போல் ஒத்திருப்பதால் ஏற்படும் தன்னுடல் தாக்குதலின் (autoimmunity) விளைவு

சீழ்வைப்பு அல்லாத நோயின் பின் ஏற்படும் நலிவு நிலை அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கல் நோயின் பின் விளைவுகள்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்களின் தொற்றுக்களால் ஏற்படும் நோயின் பின் விளைவான நலிவு நிலையில் இரு அபாயகரமான நோய்கள் ஏற்படும். கடுமையான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் தொற்றினைப் பின்பற்றி 1-4 வாரங்கள் வெளித் தெரியாத மறைந்த காலமாக இருக்கும். இக்காலத்திற்கு பிறகு உடனடித் தூண்டுதலான சிறு நீரக வீக்கம் அல்லது ருமாட்டிக் காய்ச்சல் உருவாகும். இந்த நிலைமைகள் நேரடியாக ஸ்ட்ரெப்டோகாக்கஸ்ஸின் விளைவாக ஏற்படாது. ஆனால் (ஸ்ட்ரெப்டோக் காக்கஸ்சுக்கு எதிராக) அதிகப்படியான புறந்தூண்டுதல் (Hyper Sensitivity) ஏற்படுவதால் இந்நிலை ஏற்படும். தோல் தொற்றுக்களுக்குப் பிறகு நெஃப்ரைட்டிஸ் பல்வேறு ஸ்டெப்டோகாக்கஸின் செல் கூறுகள் மனித உடல் திசுக் கூறுகள் போல் ஒப்புப் போலி (mimic) யாக காணப்படுகிறது. இதனால் ஸ்ட்ரெப்டோகாக்கசுக்கு எதிராக எதிர்ப்பொருள் உருவாகும் போது அவை ஸ்ட்ரெப்டோகாக்கசுக்கு எதிராக செயல்படும் அதே நேரத்தில் தன் உடல் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. இந்த குறுக்கு விளைவுகளால் (cross-reactivity) தன்னுடல் தாக்கு நோய் அழிவு (autoimmune damage) உண்டாகிறது. இந்த குறுக்கு விளைவுகள் ஸ்ட்ரெப்டோகாக்கஸின் புரதத்திற்கும், உறை ஆன்டிஜென்களுக்கும், குழு கார்போ ஹைட்ரேட்டுகளுக்கும் மற்றும் மனித உடலின் இதயம், தோல், மூட்டுகள், மூளைத் திசுக்களின் கூறுகளுக்கும் இடையில் ஏற்படுகின்றன. இரத்தத்தில் இந்த குறுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் எதிர்ப்பொருள் காணப்படுகின்றன.

குறுக்க விளைவுகள்

மயோசின், ட்ரோப்போ மயோசின், லமினின், மற்றும் கெரடின். இவை மனித உடலோடு சம்மந்தப்பட்டவை. N.குளுகோசமைனுடைய கூட்டுப் பொருள் ஸ்ட்ரெப்டோகாக்கஸோடு சம்பந்தப்பட்டவை. அடிக்கடி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்று ஏற்பட்டால் ருமாட்டிக் இதய நோய்த் தாக்கம் கடுமையானதாகக் காணப்படும்.

கொள்ளை நோயியல்

தொண்டை அழற்சி மற்றும் சுவாச மண்டல தொற்று நோய்கள்

பிரிவு-A ஸ்ட்ரெப்டோகாக்கை, சுவாச மண்டலம் அல்லது உமிழ்நீர்த் துளிகள் வழியாக வழக்கமாக ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொண்டை அழற்சி கொள்ளை நோயானது உணவு அல்லது பானங்களில் தூய்மைக்கேடுகளால் விளைவிக்கப்படுவதாக சான்றுடன் கூறப்பட்டுள்ளது. பரவலாக பாஸ்டுறைசேஷன் செய்யப்படுவதால் பாலில் ஏற்படுகிற தூய்மைக்கேடு மற்றும் தொற்று அதிக அளவில் குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. உணவின் மூலம் பரவும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்றிற்கு மிக அதிகமாக, சுவாச உறுப்பின் தொற்றினால் ஏற்படும் சுரப்பு நீர் மூலம் உணவில் தூய்மை கேடு ஏற்படுகிறது என்ற எண்ணம் உள்ள போதிலும், உணவைக் கையாள்பவரின் தோல் தொற்றினால் விளையும் தூய்மைக் கேடு முக்கியமான ஆதாரமாக இருக்கலாம். துணிகளில், படுக்கையில் அல்லது தூசியில் உள்ள ஸ்ட்ரெப்டோகாக்கை தொண்டை அழற்சியை ஏற்படுத்துவதில் பங்கு அதிகம் வகிப்பதில்லை. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சூழல்களான பள்ளிகள், ராணுவ முகாம்கள் மற்றும் குளிர் கால பருவங்களில் உட்புற சூழ் நிலைகள், ஸ்ட்ரெப்டோகாக்கை பரவுதலுக்கு அனுகூலமாக அமைகிறது.

ஸ்கார்லெட் காய்ச்சல் நோய் ஏற்படுவது தொண்டை அழற்சி நோய் எங்கும் பரவுதலுக்கு இணை ஒத்த தொடர்புடையது. இது நோய் நச்சு - உருவாக்கும் ஸ்ட்ரெப்போகாக்கஸ் பயோ ஜீன்களின் சிறு சிற்றினங்களால் உண்டாகிறது.

கடுமையான ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ்

கடுமையான ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் சீழ்வைப்பு அல்லாத நோயின் பின் ஏற்படும் நலிவு நிலையாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் மூலம் ஏற்படும் தொற்று ஆகும். ருமாட்டிக்காய்ச்சல் ஸ்ட்ரெப்டோகாக்கல் தொண்டை அழற்சியை தொடர்ந்து ஏற்படுமேயன்றி, தோலுக்கு அடியே ஏற்படும் தொற்றால் அல்ல. ஆனால் குளோமருல்லோ நெப்ரைட்டிஸ் என்பது தோல் அல்லது தொண்டை தொற்றினை தொடர்ந்து ஏற்படும்.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீன்ஸ்கள் தொற்றினை கண்டறிய ஆய்வக பரிசோதனைகள்

தொற்று ஏற்பட்டுள்ள பகுதியைப் பொறுத்து ஆய்வுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆய்வுப் பொருட்களுள் தொண்டையில் கசிவு நீர்மம் அல்லது தோலில் ஒற்றி துடைத்து எடுக்கப்பட்ட பஞ்சு குச்சி, சீழ், ரத்தம், பெருமூளைத் தண்டுவடநீர் ஆகியன அடங்கும்.

பண்படுத்துதல் மற்றும் கண்டறிதல்

ஸ்ட்ரெப்டோகாக்கைக்கு முதல்நிலை ஊடகமாக இரத்த அகார் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப நிலையில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் அதன் இரத்த அணு அழிவு செயல்பாட்டின் மூலமாக கண்டறியப்பட்டது.

இந்த கூட்டங்கள் 1 மி.மி. விட்டத்துடன், நிறமிகள் இன்றி காணப்படுகின்றன. இது காட்டலேஸ் இல்லாதது கிராம் சாய மூட்டலில், கிராம் பாஸிடிவ் சங்கிலி தொடர்களைக் கொண்ட வட்டகாக்கைகள் ஆகும். ஸ்ட்ரெப்போ. பையோஜீன்ஸ்கள், மிகக் குறைந்த அளவு பேசிட்ராசினால் அழிவுறும் (0.4 மைக்ரோகிராம் டிஸ்க்). இந்த சிறப்பினங்களை குழு கார்போஹைட்ரேட்டை சீராலஜிக்கல் ஆய்வினால், கண்டறிவதன் மூலம் கண்டறியலாம். இதற்காக தனிவகை கட்டாய எதிர்பொருள் கொண்டு (specific antiserurm) வீழ்ப்படிவு அல்லது துணை திரட்சி சோதனை செய்யப்படுகிறது.

உடற்காப்பு மூலம் சோதித்தல் :

உடற்காப்பு எதிர்பொருள்கள், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோ ஜீன்ஸ்களின் உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோயின் பின் விளைவில் உயர்ந்து காணப்படுகிறது. ருமாட்டிக் காய்ச்சல் நோய் பாதிப்படைந்தவர்களில் ஸ்ட்ரெப்டோலைசின் எதிர்பொருள் உயர்த்தப்டுகிறது. அதிகரிக்கப்பட்ட அளவுகளில் ஊநீர் எதிர்பொருள்கள் ஸ்ட்ரெப்போகாக்காஸ் ஹையாலுரோனிடேஸ் மற்றும் DNA ஸ் B க்களுக்கு எதிராக காணப்படுகிறது. கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸில், உயர்த்தப்பட்ட DNA ஸ் காணப்படுவதில்லை. ஆனால் உயர்ந்த நிலைகளில் எதிர் ஸ்ட்ரெப்போகாக்கஸ் DNA ஸ் B காணப்படுகிறது.

வரம்புக்கு உட்பட்ட மற்றும் வரம்புக்கு உட்படாத நோய்களை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றன. இந்த உயிரி பல்வேறு வகையான நோய்விளைவிக்கும் நுண்ணியிர் இயல் பண்புகள் ஆன மேற்புற புரதங்கள் மற்றும் நொதிகளைக் கொண்டு இருக்கும். வரம்புக்கு உட்பட்ட நோய்களான தொண்டை அழற்சி, ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் தோல் தொற்றுக்களையும், வரம்புக்கு உட்படாத நோய்களான கடுமையான குளோமருலோ நெஃப்ரைட்டிஸ் மற்றும் ருமாட்டிக் காய்ச்சலையும் இந்த உயிரி ஏற்படுத்துகிறது.

சிகிச்சை

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்கள் பெனிசிலினாலும், அநேக நோய்க் கிருமி கொல்லிகளாலும் எளிதில் பாதிப்படையயும். பென்சிலினுக்கு அதிக கூர் உணர்வு உள்ள வேளைகளில், எரித்ரோமைசின் மருந்து வழக்கமாக இரண்டாவது தேர்வாக கொடுக்கப்டும்.

10 நாட்கள் சிகிச்சையில் தொற்றால் பாதிப்படைந்த பகுதியில் இருந்து ஸ்ட்ரெப்டோகாக்கை அகற்றப்பட்டு விடும்.

தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் :

தோல் தொற்றுடன் கூடிய ஸ்ட்ரெப்டோ காக்கஸ் பையோ ஜீன்ஸ்கள், மோசமான சுகாதார நிலைமையுடன் தொடர்புடையது. இதனை தரமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தவிர்க்க முடியும்.

நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்

  1. ஸ்ட்ரெப்டோகாக்கை ரத்த அகாரில் வளரும்போது பல்வேறு வகையான இரத்த அணு அழிப்பை ஏற்படுத்தும்.
  2. பீட்டா ஹீமோலிட்டிக் ஸ்ட்ரெப்போ காக்கை மிக முக்கியமானவை, ஏனெனில் இவை, பல்வேறு வகையான தசை நார் அழுகல் நிலையில், சேதம் அடைந்த திசுவை அகற்ற இன்றியமையாதது.
  3. ஏனெனில், நோய்க்கிருமி கொல்லிகள், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊடுருவுதல் மிகவும் கடினம்.
  4. இந்த நிலைமையில் க்ளின்டாமைசின், பென்சிலினை விட விரும்பப்படுகிறது.
  5. இது புறநச்சையும் புரத உற்பத்தியையும் தடுக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

1.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top