பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளவயது நீரிழிவு

இளவயது நீரிழிவு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இளவயது நீரிழிவு (Juvinile Diabetes)

இளவயது நீரிழிவு அல்லது வகை 1 நீரிழிவு என்பது பெரும்பாலும் சிறுவர்களில் மற்றும் இளைஞர்களில் ஏற்படுகின்றது. இதில் சதையி இன்சுலின் சுரப்பை நிறுத்துவதால் குருதிக்குளுக்கோசின் அளவு உயர்ந்து காணப்படும். குருதிக் குளுக்கோசைக் கட்டுப்படுத்துவதற்கு ஆகார உணவு, இன்சுலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் நீரிழிவினால் ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பதற்காகவும் முன் நிவாரணங்கள் எடுக்கப்படுகின்றன.

நீரிழிவு என்றால் என்ன ?

நீரிழிவு என்பது குருதிக்குளுக்கோசின் அளவு சாதாரண மட்டத்திலும் உயர்ந்து காணப்படுவதாகும் இதனை வகை 1, வகை 2 என வகைப்படுத்த முடியும்.

குருதிக் குளுக்கோசும் இன்சுலினும்

உணவுக்கால்வாய்த் தொகுதியில் உணவு சமிபாடடைந்ததும் பல வகையான வெல்லங்களாக  மாற்றப்படுகின்றது. இதில் பிரதான வெல்லமான குளுக்கோசு குருதியில் அகத்துறிஞ்சப்பட்டு கல அனுசேபத்தில் பயன்படுத்தப்படுவதன் மூலம் உடற்றொழிற்பாட்டுக்கான சக்தியை வழங்குகின்றது. நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு குருதிக் குளுக்கோசு மட்டம் சமநிலையில் பேணப்பட வேண்டும்.

உணவின் பிற்பாடு குருதிக் குளுக்கோசு அதிகரிக்கும் போது சதையியிலிருந்து இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கப்பட வேண்டும். இது குருதியிலுள்ள குளுக்கோசினை கலத்திற்குள் கடத்த உதவி செய்வதன் மூலம் சக்தியை பிறப்பிக்கவோ அல்லது சக்தியை கிளைக்கோஜன் அல்லது கொழுப்பாக சேமிக்கவோ உதவுகின்றது. குருதிக் குளுக்கோசின் அளவு குறையும்போது இன்சுலின் சுரப்பு குறைவடைவதோடு சேமிக்கப்பட்ட கிளைக்கோஜன், கொழுப்புக்களை மீண்டும் குளுக்கோசாக மாற்ற உதவுகிறது. இவ்வாறு சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவில் காணப்படாமையோ அல்லது அவை கலத்தில் தொழிற்பட முடியாத நிலையோ நீரிழிவு ஏற்பட வழிவகுக்கின்றது.

ஆதாரம் : ஆரோக்கியதளம்

3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top