অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

உங்கள் பற்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் பற்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பல்லின் அமைப்பு.


ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள்ளது – கிரீடம் மற்றும் வேர். கிரீடம் தான் நீங்கள் பார்க்ககூடிய பல்லின் பாகம், வேர் என்பது ஈறுகளின் அடியில் ஒளிந்திருக்கும். பல்லின் மொத்த நீளத்தில் 2/3 பாகம் வேர் தான். பெரியவர்ககளுக்கு

ஒவ்வொரு பல்லும் நான்கு வேவ்வேறு விதமான திசுக்களால் உருவாக்கப்பட்டது.

  1. எனாமல் தான் தாங்கும் சக்தியுடைய, வெள்ளை நிற மேல்புறம். எனாமல், உணவை மெல்லும் போது ஏற்படும் தேய்மானத்திலிருந்து பற்களைப் பாதுகாக்கிறது.
  2. டெண்டின் பற்களின் எனாமலுக்கு ஆதரவு அளிக்கிறது. இது எனாமலை விட மிருதுவான, மஞ்சள் நிரமான எலும்பு போன்ற பொருள். பற்களின் உள்ளே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நமக்கு தெரிவிக்கும் நரம்பு இதனுள் உள்ளது.
  3. பல்ப் என்பது பல்லின் நடுவில் உள்ளது. இது இரத்த மற்றும் லிம்ப் நாளங்கள், மற்றும் நரம்பு நாடிகள் உள்ள மிருதுவான திசுவாகும். பல்ப் மூலமாகத்தான் பற்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கின்றது. மேலும் இதன் மூலம் தான் பற்கள் மூளைக்கு செய்திகளை அனுப்புகின்றது.
  4. சிமென்டம் என்பது பல்லின்வேரின் அதிகபட்ச இடத்தை மூடும் பொருள் ஆகும். இது தான் பல்லை தாடை எலும்புகளுடன் இணைக்க உதவுகிறது. பெரியோடாண்டல் சவ்வு எனப்படும் பஞ்சு போன்ற பரப்பு தாடை எலும்பிற்கும் சிமென்டத்திற்கும் இடையில் உள்ளது. இவை இரண்டையும் இணைக்க இது உதவுகிறது.

கேள்வி பதில்கள்

பற்களின் பயன்கள் என்ன?

தாடை எலும்புகளின் பிடிமானத்தில் தான் பற்கள் உள்ளன. பற்கள் இருந்தால் தான், பேசும் சொற்களை நன்கு உச்சரிக்க முடியும். பற்களால் தான், உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். முகத்தில் பற்கள் இருந்தால் தான், அழகாக தெரிவோம்.

செயற்கை பற்கள் யாருக்கெல்லாம் கட்டப்படுகின்றன?

மிகவும் பாதிக்கப்பட்ட பல்லை எடுத்துவிட்டு செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. புற்றுநோய் அறுவை சிகிச்சையால் தாடையை இழந்தோருக்கு, செயற்கை பற்களைக் கொண்ட பிளாஸ்டிக் தாடைகள் பொருத்தப்பட்டு, செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. செயற்கை பற்களை உபயோகிப்பவர்களுக்கு

மருத்துவரின் அறிவரைகள் என்ன?

செயற்கை பற்கள் பொருத்தியவுடன், பிறரோடு பேசும் போது, சிரமமாக இருக்கும். இப்பற்கள் பழகும் வரை, இரவிலும் அணிய வேண்டும்; பழகியவுடன் இரவில் தவிர்த்துவிடலாம். சிகிச்சைக்கு பின், தொடக்க காலத்தில் மென்மையான உணவுகளையே உண்ண வேண்டும். அதே போல் முன்பற்களால் உணவை கடித்து உண்ணும் பழக்கம் கூடாது. காரணம், அப்பற்கள் இடம் மாறி பிடிப்பை இழக்க நேரிடும்.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate