பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பல் ஈறு ரணம்

இத்தலைப்பில் பல் ஈறு ரணம் மற்றும் அதன் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பல் ஈறு ரணம் என்பது சாதாரனமான மற்றும் மிதமான ஈறுரல் ரணமாகும். (பெரியோடாண்டல்). இதனால் ஈறுகளில் வீக்கம் உண்டாகும் (இன்ப்லமேஷன்). பல் ஈறு ரணம் மிகவும் மிதமானதாக இருக்கும்பொழுது உங்களால் இந்த நோய் இருப்பதையே அறியாமல் கூடஇருக்ககூடும். ஆனால் பல் ஈறு ரணத்தின் தீவிரத்தை புரிந்து அதற்கான சிகிச்சை எடுத்துகொள்வது முக்கியமாகும். ஏனெனில் இந்த நோய் மேலும் தீவிரமான ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

உங்கள் ஈறுகள் வீக்கம் அடைந்திருந்தாலோ அல்லது பற்களை துலக்கும்போது இரத்தகசிவு இருந்தாலோ உங்களுக்கு பல் ஈறு ரணம் ஏற்பட்டிருக்கலாம். பல் ஈறு ரணம் உண்டாவதற்கான மிகவும் பொதுவான காரணம் சுகாதாரமற்ற வாய் பகுதி ஆகும் . தினமும் பல் துலக்குவதும் மற்றும் பல் இடுக்குகளை சுத்தம் செய்தல் போன்ற நல்ல வாய் சுகாதார முறைகளால் பல் ஈறு ரணம் உண்டாவதை தவிர்க்க உதவும்.

அறிகுறிகள்

ஆரோக்கியமான ஈறுகள்

பல் ஈறு ரணம்

கீழ்கண்டவைகள் பல் ஈறு ரணத்திற்கான அறிகுறிகளாக இருக்கலாம்

  1. வீங்கிய ஈறுகள்
  2. மிருதுவான ஈறுகள்
  3. சில சமயம் தொட்டால் வலிக்கும் ஈறுகள்
  4. வாய் துர்நாற்றம்
  5. உங்கள் ஈறுகளின் நிறம் ஆரோக்கியமான இளம்சிவப்பு நிறத்திலிருந்து மங்கிய சிவப்பு நிறமாக மாறுவது.

பல் ஈறு ரணம் வலி இல்லாமல் இருப்பதினால் உங்களை அறியாமலேயே பல் ஈறு ரணத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் பல்துலக்கியில் இளம்சிவப்பு நிறம் படிந்திருப்பதை கவனிக்கும்போதே ஏதோ தவறாக இருக்கிறதென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது லேசாக தொடும்போதே ஈறுகளில் இரத்தகசிவு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

எப்போழுது பல் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்?

ஆரோக்கியமான ஈறுகள் திடமாகவும் மற்றும் மங்கிய இளம்சிவப்பு நிறமாகவும் இருக்கும். உங்கள் ஈறுகள் வீங்கியும், மங்கிய சிவப்பு நிறமாகவும் மற்றும் எளிதாக இரத்த கசிவு வருவதாகவும் இருந்தால், பல் மருத்துவரை நாடவேண்டும். எவ்வளவு விரைவாக இதை கவனிக்கின்றீர்களோ, அந்தளவு நீங்கள் பல் ஈறு ரணத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய முடியும். மேலும் இது தீவிர பிரச்சினையாக மாறுவதையும் தவிர்க்கலாம்.

கேள்வி பதில்கள்

ஈறு பாதிப்பை எவ்வாறு அறிவது?

ஈறு நோய் உள்ளவர்கள், அதன் பாதிப்பை தெரிந்து கொள்ள முடியாததால், நோய் முற்றிய பின், மிகவும் பாதிப்படைகின்றனர். ஏனெனில், தொடக்க காலத்தில் ஈறு நோயானது எவ்வித அறிகுறியும் இல்லாமல் வளர்ந்துவரும்.

பற்களை இழப்பதற்கான மூலக்காரணங்கள்?

பற்சொத்தை. இப்பாதிப்பு ஏற்பட்டால் சில பற்களை மட்டுமே இழக்க நேரிடும். ஆனால், ஈறு நோய் ஏற்பட்டால், அனைத்துப் பற்களையும் இழக்க நேரிடும்.

பல் பாதிப்பு வந்தால் சிறுநீரகங்கள் பாதிப்படையுமா?

நோய் தாக்கிய பல் திசுக்களில் காணப்படும் நுண்ணுயிரிகளை, சிறுநீரக பரிசோதனையில், வளர் பொருள் மூலம் சிறுநீரகங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியும். இதன் மூலம் பல் பாதிக்கப்பட்டால், சிறுநீரகங்களும் பாதிப்படையும் என்பது உறுதியாகிறது.

2.85964912281
Nithya Apr 21, 2017 02:25 PM

Hi,
I'm 25 years old...I have same problem teethla blood varuthu. Teath fullah gems Maria ullathu 4 years iruku...Na oil pulling try pannitu iruken ithula cure aakumah

இஸ்மாயீல் Jun 25, 2015 02:09 AM

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
எனக்கு பல வருடங்களாக பல் ஈருகளிலிருந்து இரத்தம் சாதாரணமாக வருகிறது 2,3 நிமிடங்கள் வாய் கொப்பளித்தால்தான் இரத்தம் நிற்கிறது பல வகை பேஸ்ட்களை பயன் படுத்தினேன் ஒரு பலனும் இல்லை இதை சரிசெய்வதற்கு ஏதும் உண்டா?
எனக்கு வயது 37
நன்றி........!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top