பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்

எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள் பற்றிய குறிப்புகள்

எச்.ஐ.வி

எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும். இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். எச்.ஐ.வி நோய் உள்ளதா என்று சோதனை செய்யச் செல்வதே சற்றே சங்கோஜத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும், வேறு பல வழிமுறைகளிலும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும். இன்றைய அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் செய்யும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும். எச்.ஐ.வி-யின் அறிகுறிகள் அதன் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அமைகின்றன. இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர் தன்னிடமிருந்து, மற்றவர்களுக்கு தன்னுடைய உடலின் நீர்மங்களை கொடுப்பதன் மூலம் இந்நோய் பல்கிப் பெருகவும் காரணமாக இருப்பதால், உடனடியாக எச்.ஐ.வி-க்கு முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னர் வெளிவரும். நீங்கள் எச்.ஐ.வி தொற்று உள்ளதாக சந்தேகப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது உத்தமம். எச்.ஐ.வி, அதன் சிகிச்சை முறை மற்றும் காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக எய்ட்ஸ் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கே எச்.ஐ.வி-யின் சில ஆரம்ப கால அறிகுறிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள்

1. எடை குறைதல்

உங்கள் உடல் எடையில் வேகமான மாற்றங்கள் - அதாவது வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்து வந்தால், நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

2. தொடர்ந்த இருமல்

தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.

3. நகம் சொல்லும் கதை

எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில் கண்டறிய முடியும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்ளவும்.

4. களைப்பு

நாட்களின் பெரும்பாலான நேரங்கள் நீங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும். எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது.

5. தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

உங்களுடைய தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கவொண்ணாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிதான். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உலக எய்ட்ஸ் தினங்களில் எய்ட்ஸ் தொடர்பான உண்மைகளும், விளக்கங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன.

6. தலைவலி

தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

7. தோலை கவனியுங்கள்

எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன. எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.

ஒவ்வொரு ஆண்டும் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்பு குறித்த தகவல்களும், நுட்ப கணக்கீடுகளும் திறனுடன் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம். அறிவோம், வளர்வோம்

ஆதாரம் : கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம்,

3.13157894737
ரா. பாபு Jun 22, 2016 08:20 PM

உண்மை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top