பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை

ஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மேலாண்மை

இது பால்வினை நோய் சிகிச்சையில் செயல்படுத்தப்படும் ஒரு பொது சுகாதார அணுகுமுறையாகும். இது உலக சுகாதார நிறுவனத்தால் ஆதரிக்கப்படுகிறது. இந்த அணுகு முறையில் மருத்துவ சேவை வழங்குபவர் நோயாளி கூறும் அறிகுறிகள் மற்றும் நோயாளியை பரிசோதித்து கண்டறிந்த அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒத்த வகை நோய் குறி தொகுப்புகளின் அடிப்படையில் அனைத்து அல்லது மிகப்பொதுவான நோய்க்கு சிகிச்சையளிப்பார். இதற்கு என்ன பொருள்? மருத்துவ சேவை வழங்குபவர் இவ்வாறு ஒரே வகை நோய்க்குறி தொகுப்பு சிகிச்சை பற்றிய பயிற்சி பெற்றிருப்பார். எனவே நோயாளி அவரை சந்திக்கும் முதல் அமர்விலேயே உடனடியாக சிகிச்சை பெற்றுச் செல்வதற்கு உதவமுடியும். நோயாளி ஆய்வக பரிசோதனை முடிவுக்கு காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

நன்மைகள்

 • நோயாளி தன்னை துன்புறுத்தும் அறிகுறிகளிலிருந்து விரைவாக விடுபட இயலும்
 • உடலுறவுத் துணைவருக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமான சூழ்நிலையில் அதற்கான கால நேரத்தை குறைக்க முடியும் (அதாவது நோயாளி கிருமியை பரப்புபவராக இல்லாமல் இருக்க உதவ முடியும்)
 • நோயாளி மீண்டும் வராமலிருக்க முடிவு செய்யும் சூழ்நிலையை தவிர்க்கலாம் இது பாரம்பரிய சிகிச்சை முறையிலிருந்து வேறுபட்டது.

இதற்கு முன்னர் நாம் கல்லீரல் அழற்சி பி மற்றும் கிரந்தி என்று ஒருசில பால்வினை நோய்களின் பெயர்களை குறிப்பிட்டோம். ஒரே வகை நோய்க்குறி தொகுப்பு முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவசேவகர் வெள்ளைப்படுதல் சார்ந்த ஒத்தவகை நோய்க்குறிகள் அல்லது அடிவயிற்று வலி சார்ந்த ஒத்தவகை நோய்க்குறிகள் என்று வகைப்படுத்துவார். அடுத்ததாக நாம் சில பொதுவான ஒத்தவகை நோய்க்குறிகளை ஆய்வு செய்வோம். ஒத்தவகை ஆய்வுக்குறிகளை ஆய்வு செய்யும்போது அவற்றை குணப்படுத்த பயன்படுத்தக்கூடிய வண்ணக் குறியீடுள்ள மருந்துப்பைகளையும் பார்ப்போம். அவற்றை கவனிக்கும்போது நாம் கீழ்க்குறிப்பிட்டுள்ள சிகிச்சை தொடர்பான தகவல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிகிச்சை

 • பயிற்சி பெற்ற மருத்துவரிடம் பெற வேண்டும்
 • குறிப்பிட்ட காலம் வரை உட்கொள்ள வேண்டும்
 • குறிப்பிட்ட அளவுள்ள மருந்துகளை உட்கொள்ள வேண்டும்
 • உடலுறவுத்துணைவருக்கும் கொடுக்க வேண்டும்
 • சிகிச்சை மேற்கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்த வேண்டும்

சிறுநீர்த்தாரை கசிவு ஒத்தவகை நோய்கள்

 • சிறுநீர்த்தாரை கசிவு நோய் அறிகுறிகள் ஆண்களிடம் காணப்படுகிறது
 • கசிவு ஆண்குறி வழியாக ஏற்படுகிறது. கசிவு சீழாகவோ சளி போன்றோ இருக்கலாம்.
 • அளவு பொங்கி வழிவது போன்றோ மிதமாகவோ இருக்கலாம்
 • இத்துடன் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அசௌகரியம் இருக்கும்
 • ஆண்குறி விரைப்படையும்போது அல்லது உடலுறவின்போது வலி இருக்கும்

பரவும் முறை

இந்த ஒத்த வகை நோய் அறிகுறிகள் கோனோரியா, க்ளாமிடியா, ட்ரைக்கோமோனாஸ், பாக்டீரியல் வஜினோசிஸ் மற்றும் காண்டிடொசிஸ் ஆகியவற்றால் ஏற்படும் 4 நோயாளி நோய்த்தொற்றுள்ள துணைவரிடம் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் இந்த தொற்றுகள் ஏற்பட்டிருக்கும். இது பாதுகாப்பற்ற பிறப்புறுப்பு வழி, வாய்வழி அல்லது ஆசனவாய்வழி உடலுறவின் மூலம் பெண் அல்லது ஆண் துணைவரிடமிருந்து பரவியிருக்கலாம்

கோனோரியா, க்ளாமிடியா மற்றும் அல்லது ட்ரைக்கோமோனாஸ் ஆகியவற்றால் தொற்றுக்காளான துணைவர் நோய் அறிகுறியுடனோ அறிகுறி இல்லாமலோ இருக்கலாம்.

நோய்த்தடுப்பு

 • நோயாளி முழுமையாக சிகிச்சை முடியும் வரை மற்றும் வெள்ளை கசிவு முழுமையாக நிற்கும் வரையாருடனும் உடலுறவு கொள்ளக்கூடாது. உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்றால் நோயாளி ஒவ்வொரு உடலுறவுக்கும் முறையாக தொடர்ந்து ஆணுறை பயன்படுத்த வேண்டும்.
 • துணைவர் கர்ப்பமாக இருந்தால் நோயாளி அதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் துணைவருக்கு முறையாக சிகிச்சை அளித்து நோய்த்தொற்று பிறக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்க முடியும்.

சிகிச்சை

 • சிறுநீர்த்தாரை கசிவு நோய் அறிகுறிகளை நோயாளி மற்றும் அவர் துணைவர் முறையான மற்றும் முழுமையான சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.
 • இதற்கான சிகிச்சையை சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளரின் முன்னிலையில் எடுக்க வேண்டும்.
 • இதற்கு கொடுக்கப்படும் மருந்துடன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்

மருந்து

அசித்ரோமைசின் (1கிராம்) – ஒரே வேளை ஒரு நாள் மட்டும், செஃபிக்சிம் (400 மிகி) - ஒரே வேளை ஒரு நாள் மட்டும்

விளைவுகள்

 • சிகிச்சையளிக்காவிட்டால் விரைப்பகுதி வீக்கமடையவும் சிறுநீர்த்தாரை குறுகலாகவும் வாய்ப்புள்ளது.
 • மலட்டுத்தன்மை ஏற்படலாம்
 • இந்த நோய் பெண்களிடமும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மிக அரிதாக இந்த தொற்று உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது
 • நோயாளி கொனோரியா மற்றும் க்ளாமிடியா ஆகிய நோய்களை கர்ப்பிணி துணைவருக்கு பரப்பினால் அது பிரசவ நேரத்தில் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் கண் பார்வையை பாதித்து பார்வையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

துணைவரைபரிந்துரை செய்தல்

நோயாளி கடந்த ஒரு மாதத்தில் தொடர்பு கொண்ட உடலுறவுத் துணைவர்களுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை:

ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம்

2.98780487805
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top