பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

க்ளமிடியா

க்ளமிடியா நோயின் அடையாளங்கள் மற்றும் தடுப்பு முறைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

க்ளமிடியா என்றால் என்ன?

க்ளமிடியா என்பது க்ளமிடியா ட்ராகோமடிஸ் என்னும் பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய ஒரு பால்வினை நோய் ஆகும். இந்நோய் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும்.

மக்களுக்கு க்ளமிடியா எப்படி ஏற்படுகிறது?

பெண் உறுப்பு, குதம் அல்லது வாயின் வழியாக பாலுறவு கொள்ளும் போது க்ளமிடியா நோய் பரவுகிறது. க்ளமிடியா நோய் தொற்று கொண்ட பெண்ணிடமிருந்து, அப்பெண்ணிற்கு பெண் உறுப்பு வழியாக பிறக்கும் குழந்தைக்கு பரவக்கூடும். பாலுறவில் ஈடுபடும் எந்த ஒரு நபருக்கும் க்ளமிடியா நோய் தொற்று ஏற்படலாம்.

க்ளமிடியா-வின் நோய் அடையாளங்கள் யாவை?

க்ளமிடியா நோய் தொற்று, பெண்களில், கருப்பையின் கழுத்து மற்றும் மூத்திரக்குழாய் போன்ற பகுதிகளில் முதலில் ஏற்படுகிறது. இந்நோய் உள்ள பெண்களில், மூத்திரம் கழிக்கும் போது பெண்குறியிலிருந்து இயல்புக்கு மாறாக கசிவும், எரிச்சல் உணர்வும் ஏற்படும். இந்நோய் தொற்று, கருப்பையின் கழுத்துப்பகுதியிலிருந்து பெல்லோபியன் டியூப்களுக்கு (பெல்லோபியன் டியூப்-முட்டையை கருவகத்திலிருந்து கருப்பைக்கு கடத்தும் குழாய் வடிவிலான அமைப்பு) பரவும்போதும் கூட சில பெண்களுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதில்லை. மற்ற பெண்களில் அடிவயிற்றில் வலி, கீழ்முதுகுப்பகுதியில் வலி, குமட்டல், காய்ச்சல், பாலுறவு கொள்ளும் போது வலி ஏற்படுதல் அல்லது மாதவிடாய் காலங்களுக்கு இடையில் இரத்தப்போக்கு போன்றவை இருக்கும்.

இந்நோயின் அறிகுறிகள் உள்ள ஆண்களில் மூத்திரம் கழிக்கும் போது ஆண்குறியிலிருந்து இரத்தம், சீழ் வெளியேறுதல் மற்றும் எரிச்சல் உணர்வு இருக்கும். ஆண்களில் ஆண்குறியைச் சுற்றிலும் எரிச்சல் மற்றும் அறிப்பு இருக்கும்.

க்ளமிடியா நோய்க்கு சிகிச்சை அளிக்காத நிலையில் என்ன சிக்கல்களை விளைவிக்கும்?

சிகிச்சை அளிக்காவிட்டால், க்ளமிடியா நோய் தொற்றானது இனப்பெருக்க மற்றும் பிற சுகாதார கேடுகளை குறுகிய காலங்களுக்கு மற்றும் நீண்ட காலங்களுக்கு விளைவிக்கும். பெண்களில் சிகிச்சை அளிக்காத நிலையில், இந்நோய் கருப்பை அல்லது பெல்லோபியன் டியூபிற்கு பரவும் மற்றும் வேறு பல நோய்களை ஏற்படுத்தும். க்ளமிடியா நோய் தொற்று கண்ட பெண்களுக்கு எச்.ஐ.வி நோய் தொற்றக்கூடிய சாத்தியம் 5 மடங்கு அதிகமாகும். ஆண்களில் இது போன்ற சிக்கல்கள் என்பது அரிதானது.

க்ளமிடியா வராமல் தடுத்து காப்பது எப்படி?

தகாத பாலுறவுகளுக்கு விலகியிருப்பது பால்வினை நோய் வராமல் தவிர்க்கும் நம்பகத்தகுந்த வழியாகும்.

3.01086956522
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top