பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருக்கள்

மருக்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

  • ஒற்றையாகவோ பலவாகவோ மிருதுவாக காலிபிளவர் பூ போன்ற அமைப்பில் உள்ள வளர்ச்சிகளுக்கு மருக்கள் என்று பெயர்.
  • இவை ஆண் பெண் இருபாலருக்கும் ஆசனவாய் பிறப்புறுப்பு மற்றும் வாயின் உட்பகுதியைச்சுற்றி தோன்றும்

தடுப்பு முறை

  • சிகிச்சை முழுமையாக முடியும்வரை மற்றும் அனைத்து மருக்களும் முழுமையாக மறையும் வரை நோயாளி எந்த வகையான உடலுறவிலும் ஈடுபடக்கூடாது. உடலுறவை முழுமையாக தவிர்க்க இயலாதவர்கள் ஆசன வாய் வாய்வழி மற்றும் இனஉறுப்பு வழி என்ற அனைத்து வகை உடலுறவுக்கும் முறையாக ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்ள வேண்டும்.
  • துணைவர் கருவுற்றிருந்தால் அதை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் துணைவருக்கு சிகிச்சையளிப்பது மூலம் பிறக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காக்க முடியும்.

சிகிச்சை

  • நோயாளியும் உடலுறவுத்துணைவரும் முறையாக முழுமையாக சிகிச்சை எடுப்பதன் மூலம் இதை குணப்படுத்த முடியும்.
  • போடோ ஃ பிலின் மருந்தை இரணம் ஆறும் வரை ஒவ்வொரு வாரமும் தடவ வேண்டும்.
  • சில மருக்களுக்கு தீய்த்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

விளைவுகள்

  • பெண்களுக்கு மருக்களால் கருப்பை வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது
  • கர்ப்பிணி பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மருக்கள் பிரசவ நேரத்தில் குழந்தைக்கும் தொற்றும் ஆபத்து உள்ளது.

எச்சரிக்கை

போடோஃபிலின் மருந்து கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல. எனவே சிகிச்சைக்கு முன் நோயாளியோ அல்லது நோயாளியின் துணைவரோ கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை கேட்டு அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.04651162791
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top