பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வலியுடன் விரைவீக்கம் ஒத்த வகை நோய்கள்

வலியுடன் விரைவீக்கம் ஒத்த வகை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

 • வலியுடன் விரை வீக்கம் ஆண்களிடம் காணப்படும் ஒத்தவகை நோய் அறிகுறியாகும்.
 • நோயாளி விரையில் வலியுடன் வீக்கம் இருப்பதாக கூறுவார் சிலசமயம் பிறப்புறுப்பில் கசிவும் இருப்பதாக கூறுவார். கசிவு பெரும்பாலும் கொழகொழப்பாகவும் நீர்த்த வகையிலும் மிக குறைவான அளவுடன் இருக்கும்.
 • சிறுநீர்கழிக்க கடினமாகவும் எரிச்சலும் இருக்கும்
 • ஆணுகுறி விரைப்படையும் போதும் உடலுறவின்போதும் வலி இருக்கும்

பரவும் முறை

 • இந்த ஒத்த வகை நோய் அறிகுறிகள் கோனோரியா க்ளாமிடியா ட்ரைக்கோமோனாஸ் பாக்டீரியல் வஜினோசிஸ் மற்றும் காண்டிடொசிஸ் ஆகியவற்றால் ஏற்படும்.
 • இது சிறுநீர்த்தாரை அழற்சி ஒத்த வகை நோய்கள் சிகிச்சையளிக்கப்படாததால் அல்லது முழுமையாக சிகிச்சையளிக்கப்படாததால் ஏற்படும் விளைவாகும்.

சிகிச்சை

 • வலியுடன் விரை வீக்கம் முழுமையாக குணமாக வேண்டும் என்றால் நோயாளி மற்றும் அவர் துணைவர் முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளரின் நேரடி கண்காணிப்பில் மருந்து உட்கொள்ள வேண்டும் (நேரடியாக கண்காணித்து வழங்கப்படும் சிகிச்சை - குறைந்த காலம்)
 • பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிக நீருடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்
 • நோயாளி சாப்பிட்ட மருந்தில் ஏதாவது தொந்தரவு இருந்தாலோ அறிகுறிகள் மறையாமல் இருந்தாலோ உடனே சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டும்
 • முழுமையாக சிகிச்சை முடியும் வரை யாருக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க நோயாளி யாருடனும் உடலுறவு கொள்ளக்கூடாது ( சிகிச்சை முடிந்து 7 நாட்களுக்கு). அத்துடன் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க அவரது துணைவர் சிகிச்சை முடிக்கும் வரை (சிகிச்சை முடிந்து 7 நாட்களுக்கு). அவருடன் உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்றால் நோயாளி ஒவ்வொரு உடலுறவுக்கும் முறையாக தொடர்ந்து ஆணுறை பயன்படுத்த வேண்டும் (பிறப்பு வாய்வழி ஆசனவாய்வழி அல்லது வாய்வழி எந்தவகை உடலுறவாக இருந்தாலும்).
 • நோயாளி 7ம் நாள் சிகிச்சை மையத்திற்கு தொடர் கண்காணிப்புக்கு வர வேண்டும்.

மருந்து

 • அசித்ரோமைசின் (1 கிராம்) – ஒரே முறை ஒரு நாள் மட்டும்
 • செஃபிக்சிம் (400 மில்லி கிராம்) – ஒரே முறை ஒரு நாள் மட்டும்

விளைவுகள்

முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக சிகிச்சை எடுத்தாலோ வலியுள்ள விரைவீக்கம் சிறுநீர்தாரை சுருங்குவதற்கு காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும்.

துணைவரைபரிந்துரை செய்தல்

நோயாளி கடந்த இரண்டு மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்களுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

2.86538461538
மணிகண்டன் Dec 05, 2017 09:21 PM

இதை எத்தனை மாதங்களில் சரியாக்க வேண்டும்

பிரசாந்த் Feb 06, 2017 04:59 PM

விரைவீக்கம் சிறியதாக இருந்தால் குழந்தை பிறக்குமா

ராமன் Dec 31, 2016 11:00 AM

சிகிச்சைக்ககான முகவரி

kumaran.m Dec 15, 2016 04:24 PM

இதை எத்தனை மாதங்களுக்குள் சரி செய்ய முடியும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top