பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஹெர்பிஸ் (அஃகி)

ஜெனிடல் ஹெர்பிஸ் என்றால் என்ன, அதன் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறை பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

ஜெனிடல் ஹெர்பிஸ் (பாலுறுப்பில் ஏற்படும் அஃகி) என்றால் என்ன?

ஜெனிடல் ஹெர்பிஸ் என்பது, ஹெர்பிஸ் சிம்ளக்ஸ் வைரஸ்கள் டைப்-1 (எச்.எஸ்.வி-1) மற்றும் டைப்-2 (எச்.எஸ்.வி-2) எனப்படும் வைரஸ் நோய் கிருமிகளால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.

மக்களுக்கு ஜெனிடல் ஹெர்பிஸ் எப்படி ஏற்படுகிறது?

எச்.எஸ்.வி-2 நோய்தொற்று கண்ட நபருடன் பாலுறவு வைத்துக்கொள்வதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோயின் அடையாளமாக எந்த புண்ணும் இல்லாமல் இருந்து, தனக்கு இந்நோயுள்ளது என்பதை அறியாமல் இருக்கும் பெண் அல்லது ஆணிடமிருந்து, இந்நோய் இவர்களுடன் பாலுறவு கொள்பவர்களுக்கு பரவுகிறது.

ஜெனிடல் ஹெர்பிஸ்-ன் அறிகுறிகள் யாவை?

எச்.எஸ்.வி 2 நோய்தொற்று கண்ட பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இவ்வகை நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். இவ்வைரஸ் நோய்கிருமியின் தொற்று ஏற்பட்ட 2 வாரங்களுக்குள், இந்நோயின் அறிகுறிகள் முதலில் ஏற்படும். இந்நோயினால் ஏற்படும் புண்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் சுகமாகி விடும். நோயின் அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், அவை தனிதன்மையுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொப்புளங்கள் பாலுறுப்புகளின் மேலோ அல்லது அவற்றை சுற்றியோ அல்லது குதத்தை சுற்றியே தோன்றும். இக்கொப்புளங்கள் உடைந்து புண்களை ஏற்படுத்தும். இப்புண்கள் முதல்முறை ஏற்படும்போது 2 முதல் 4 வாரங்களில் சுகமாகிவிடும். இந்நோய் முதல் முறை ஏற்பட்ட பின், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து, முன்போலவே கொப்புளங்கள் ஏற்படும். ஆனால், இது பெரும்பாலும் குறைந்த பாதிப்புண்டாக்கும் மற்றும் முதல் முறையைவிட குறுகிய கால்த்திற்கே  காணப்படும். இந்நோய்தொற்று உடலில் காலவரையின்றி தங்கியிருக்கும். இந்நோய் ஏற்படும் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்குள் குறைந்து விடும். மற்ற அடையாளங்களாவன, ப்ளு போன்று காய்ச்சல் மற்றும் சுரப்பிகள் வீக்கமடைதல் ஆகும்.

ஹெர்பிஸ்-க்கு சிகிச்சை உள்ளதா?

ஹெர்பிஸ்-ஐ குணப்படுத்த சிகிச்சை கிடையாது. ஆனால் வைரஸ்-ஐ எதிர்க்கும் மருந்துகளை உட்கொள்ளும்போது, இந்நோயின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் வருவதை தடுத்துக்காக்கிறது.

ஹெர்பிஸ் ஏற்படுவதை தடுத்துகாப்பது எப்படி?

ஜெனடல் ஹெர்பிஸ் முதலிய அனைத்து பால்வினை நோயும் ஏற்படாமல் தவிர்க்க, தகாத பாலுறவுகளுக்கு விலகியிருப்பதே தகுந்த நம்பத்தக்க வழியாகும்.

2.98888888889
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Sunshine May 25, 2015 04:23 PM

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top