பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கவனிக்கவேண்டிய 14 அறிகுறிகள்

உடலில் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று மக்களிடையே சளி, காய்ச்சல் போல மிக சாதாரணமாக ஏற்பட கூடிய நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. மேலும், இதே வகையில் புற்றுநோய் அபாயம் அதிகரித்துக் கொண்டிருந்தால், வரும் 2035-ம் ஆண்டில் உலகில் 24 மில்லியன் மக்கள் இந்த அபாயகரமான நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

இனிமேல், இது போன்ற அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட்டால் அதை சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து இருமல்

இருமல், காலநிலை மாற்றத்தின் போது ஏற்படும் மிகச் சிறிய உடல்நல பாதிப்பு தான். ஆனால், தொடர்ந்து எந்த காரணமும் இன்றி இருமல் வந்துக் கொண்டே இருந்தால் அது நுரையீரல் / தொண்டை / தைராய்டு புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

திடீர் உடல் எடை குறைவு

உடல் எடை திடீரென குறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன. தைராய்டு பிரச்சனை இருந்தாலும் கூட உடல் எடையில் குறைவு ஏற்படும். ஆனால், சரியான காரணங்கள் இன்றி திடீரென 4.5 கிலோ வரை உடல் எடை குறைவு ஏற்படுவது புற்றுநோய் அபாயத்தின் முதல் அறிகுறி. இது வயிறு / நுரையீரல் / கணையம் / உணவுக் குழாய் புற்றுநோயாக இருக்கலாம்.

மார்பு பகுதியில் மாற்றங்கள்

மார்பக புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் மட்டும் ஏற்படுவதல்ல, இது ஆண்களுக்கும் கூட ஏற்படும். உங்கள் மார்பு பகுதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது கொப்பளம் போன்று தோன்றுவது, வீக்கம், நிறம் மங்குதல் போன்றவை ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரில் மாற்றம்

எல்லாருக்குமே சிறுநீரில் அவ்வப்போது நிறம் மாறுதல் ஏற்படுவது சகஜம். ஆனால், நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறுநீர் நிறம் மாறியே வெளிப்படுதல் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.

நிணநீர் கணுக்கள் வீக்கம்

கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் நிணநீர் கணுக்கள் இருக்கும். சளி, காய்ச்சல் உண்டாகும், சில சமயங்களில் இவற்றில் வீக்கம் தென்படும், ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த வீக்கம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

சருமத்தின் நிறம் மாறுதல்

உங்கள் சருமத்தில் நிறம் மாறுதல், தடிப்பு, மச்சம் போன்ற புள்ளிகள் உருவாதல் போன்றவை ஸ்கின் கேன்சர் அறிகுறிகள் ஆகும்.

இதழ்

உங்கள் இதழில் சிவப்பு / வெள்ளை நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். முக்கியமாக புகை மற்றும் புகையிலை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும்.

களைப்பு / சோர்வு

நாள் முழுதும் வேலை செய்தால் சற்று சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், தொடர்ந்து களைப்பாகவே உணர்தல் புற்றுநோய்க்கான ஓர் அறிகுறி என கூறுகின்றனர். மேலும், இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்களில் தாக்கம் அல்லது எண்ணிக்கையில் ஏறக்குறைய இருந்தாலும் கூட உடல் சோர்வு ஏற்படலாம்.

வயிறு வீக்கம் (பெண்கள்)

காரணமின்றி திடீரென வயிறு வீங்குதல் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இவ்வாறு ஏற்படும் போது முதுகு, இடுப்பு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குடல் இயக்கத்தில் கோளாறுகள் போன்றவையும் கூட ஏற்படலாம்.

தொடர்ந்து இடுப்பு / முதுகு வலி (ஆண்கள்)

தொடர்ந்து முதுகு வலி இருந்துக் கொண்டே இருப்பது தண்டுவடம் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறி. மேலும், ஒருவேளை பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் கூட இவ்வாறு தொடர்ந்து முதுகு வலி ஏற்படலாம்.

இரத்தப்போக்கு (பெண்கள்)

மாதவிடாய் காலத்தில் இன்றி, வேறு நாட்களிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அது ஏதேனும் நோய் தொற்று அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.

இடுப்பு பகுதியில் மாற்றம் (ஆண்கள்)

இடுப்பு பகுதியில் கட்டி / கடினமாக உணர்தல் போன்றவை விதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை இது தொடர்ந்து இருந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

இடுப்பு / வயிறு பகுதியில் வலி (பெண்கள்)

இடுப்பு / வயிறு பகுதியில் பெண்களுக்கு வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், அது கருப்பை புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். அல்லது இது சிறுநீர் தொற்று, வயிறு வீக்கம் ஏற்பட்டால் கூட உண்டாகும்.

இடுப்பு / தொடையில் வலி (ஆண்கள்)

முதுகு வலி மட்டுமின்றி, புரோஸ்டேட் / விதை புற்றுநோய் ஏற்பட்டால் இடுப்பு, தொடை பகுதிகளில் கூட அடிக்கடி வலி எடுக்கும்.

ஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்

2.96774193548
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Sreedhish sreevidhya May 15, 2018 02:49 PM

கழுத்தை சுற்றி வீக்கம் வர காரணம்
௭ன்ன

நந்தினி Mar 22, 2018 04:44 PM

ஓகே சார் அப்போ இந்த அறிகுறி தான் காரணம் சொல்லுறீங்க இத வச்சி கன்வே பண்ணிக்கணும் .ஓகே தங்களுக்கு நன்றி

மருதபாண்டி Oct 17, 2017 07:52 PM

நிணநீர் கடுப்பு என்பது என்ன

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top