பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்நார் தொடர்பான நோய்கள்

கல்நார் தொடர்பான நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார், இயற்கையாகக் காணப்படும் நார்ப்பொருள் தாதுக்களின் ஒரு தொகுதி ஆகும். இது கட்டிடங்களில் மின்கடத்தாப் பொருளாக வணிக ரீதியாக பயன்படுத்தப் படுகிறது.  மேலும்,  கூரை ஓடுகள், நீர்த்தடங்கள், தீயணைப்புப் போர்வைகள், கிளச் மற்றும் பிரேக் லைனிங், தானியங்கி காஸ்கெட்டுகள் மற்றும் பேடுகள் போன்றவற்றிலும் கூட்டுப்பொருட்களாகப் பயன்படுத்தப் படுகிறது. கல்நாரால் மனிதர்களுக்குப் புற்று நோய் மற்றும் நீடித்த சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.

அனைத்து வகையான கல்நார்களும் (கிரிசோடைல், குரோசிடோலைட், அமோசைட், டிரெமோலைட், ஆக்டினோலைட், ஆந்தோஃபைலைட்) பயன்படுத்தப்படுகின்றன.  இதன் இழுவிசை வலு, வெப்பம் அரிதில் கடத்தும் தன்மை, வேதியல் தாக்குதலைத் தடுக்கும் ஆற்றல் போன்றவற்றின் காரணமாகவே இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கல்நார் தாதுக்கள் சிலிக்கேட் கூட்டுப் பொருட்கள்  ஆகும். அவை தங்கள் மூலக்கூறு அமைப்பில் சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்றன.

கல்நாரின் அனைத்து வகையும் புற்றுநோய் உண்டாக்கும் இயல்பைக் கொண்டவை.  கல்நார் (கிரிசோடைல் உட்பட) நுரையீரல், மூச்சுக்குழல், கர்ப்பப்பை, இடைத்தோல் புற்றை உருவாக்குகிறது. நுரையீரல்நார் நோய் மற்றும் தொண்டை – நுரையீரல் படல அடைப்பு, தடிப்பு மற்றும் கசிவையும் ஏற்படுத்துகிறது.

பணித்தல சூழலில் காற்றிலுள்ள நார்ப்பொருளை சுவாசிப்பது, கல்நாரைக் கையாளும் தொழிற்சாலைகளைச் சூழ்ந்துள்ள காற்றை உள்ளிழுப்பது, கட்டிடங்களில் பயன்படுத்தப்படுள்ள உடையும் தன்மை கொண்ட கல்நாரோடு தொடர்பு கொள்ளும் காற்று ஆகியவற்றால் கல்நார் பாதிப்பு உண்டாகிறது.

உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரப்படி உலக அளவில் பணித் தலத்தில் 125 மில்லியன் (12.5.கோடி) மக்கள் கல்நாரால் பாதிப்படைந்து உள்ளனர். பணித்தள பாதிப்பால் ஏற்படும்  கல்நார்ப் புற்று,  புறத்தோல் புற்று, கல்நார் நோய் ஆகியவற்றால் ஆண்டுதோறும் குறைந்தது 107 000 மக்கள் மரணம் அடைகின்றனர்.  பணித்தலப் புற்று நோயில் 50 % கல்நார் புற்றாகும். வீடுகளில் உள்ள கல்நாரால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.

கல்நார் பாதிப்போடு புகையிலைப் புகையும் சேர்ந்தால் புற்றுக்கான சாத்தியக் கூறு அதிகரிக்கிறது. புகைத்தல் அதிகமானால் ஆபத்தும் அதிகம்.

ஆசிய நாடுகளில் இன்னும் கல்நார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கல்நார்ப் படிவு காணப்படுகிறது. இந்தியா ஆண்டுதோறும்  1.25 லட்சம் டன் கல்நாரைக் கையாளுகிறது. இதில் 1.00 லட்சம் டன் ஏற்றுமதி ஆகிறது.  சிமெண்ட் ஆலைகள், துணியாலைகள், கல்நார் சுரங்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் பணித்தலப் பாதிப்பு உண்டாகிறது. இவற்றில் தேசிய பணித்தல நல நிறுவனம் (NIOH) சூழல் மற்றும் இடம்சார் ஆய்வுகளை மேற்கொண்டு கீழ்வருவனவற்றைக் கண்டறிந்தது:

 • நான்கு சிமெண்ட் ஆலைகளில் பணிபுரிபவர்களிடம் காணப்படும் (அகமதாபாத், ஐதராபாத், கோயம்புத்தூர், மும்பை)  கல்நார் நுரையீரல் நோயின் விகிதம் 3-5 %.
 • கல்நார் துணியாலைகளில் 10 ஆண்டுகளில்  பணிபுரிந்த தொழிலாளர்களிடம் காணப்படும் கல்நார் நுரையீரல் நோய் விகிதம் 9 % ஆகும். இது  அறிவிக்கப்பட்ட 20  ஆண்டுகள் சராசரி விகிதத்துக்கு முரண்பாடாக உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் கல்நார் பாதிப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும் (216-418 நார்கள்/மி.லி. அனுமதிக்கப்பட்ட வரையறையான 2 நார்கள் / மில்லி லிட்டரோடு ஒப்பிடும்போது).
 • சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலைகளில் ஒட்டுமொத்த கல்நார்நோய் பாதிப்பு முறையே 3% மற்றும் 21% ஆகும். கல்நார் சுரங்கங்களில் இரு இடங்களில் காற்றில் உள்ள கல்நர் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருந்தது. பதப்படுத்தும் ஆலைகளில் சராசரி கல்நார் அளவு 45 நார்கள்/மி.லிட்டரில் இருந்து 244 நார்கள்/மி.லிட்டராக இருந்தது.

1990-ன் ஆரம்பங்களிலேயே கல்நார் பயன்பாட்டைத்  தடைப்படுத்திய நாடுகளிலும் கூட கல்நார் சார் நோய்கள் இன்னும் கூடுதலாகி வருகின்றன. இந்நோய்களின் உள்ளுறை காலம் மிக அதிகம்.  இதனால் கல்நாரை தடைபடுத்தி வெகுகாலம் ஆனபின்னும் இந்நோயால் ஏற்படும் மரணங்கள் கூடுதலாகி வருகின்றன. கல்நாரை பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியாது. உ.சு.நி. உலக தொழிலாளர் நிறுவனம் எந்தப் பாதுகாப்பு எல்லையையும் வரையறுக்கவில்லை.

நோயறிகுறிகள்

கல்நாரை தொடர்ந்து சுவாசித்து வந்தால் கல்நார்நோய், நுரையீரல் படல அடைப்பு மற்றும் தடுப்பு மற்றும் கசிவுக் கோளாறுகள் உண்டாகும். பணித்தல பாதிப்பு, சூழல் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஆபத்துள்ள யாவரும் அறிகுறிகள் இன்றியும் மருத்துவரை அணுக வேண்டும்.  பல ஆண்டுகள் கழித்தே கல்நார் நோய் அறிகுறிகள் வெளிப்படும். அவை:

 • மூச்சடைப்பு, இழுப்பு அல்லது தொண்டை கரகரப்பு
 • தொடர் இருமல் நாட்பட அதிகரிக்கும்
 • சளியில் இரத்தம்
 • நெஞ்சில் இறுக்கம் அல்லது வலி
 • விழுங்குவதில் சிரமம்
 • கழுத்து அல்லது முக வீக்கம்
 • பசியின்மை
 • எடை இழப்பு
 • களைப்பும் இரத்தச்சோகையும்

கல்நார் நேரடிப் பாதிப்பில் இருந்துப் பணியாளரை அகற்றினாலும் நோய் வளரும். அதிகரித்த நிலையில் விரல் நகம் இடுக்கம், வேதனை மற்றும் நீலம்பாய்தல் உருவாகலாம்.

காரணங்கள்

கிரிசோடைல், அமோசைட், குரோசிடோலைட், டிரெமோலைட், ஆந்தோஃபைலைட்,  ஆக்டினோலைட் ஆகிய ஆறு வகையான கல்நார்கள் உள்ளன. வணிக ரீதியான வகைகள் அனைத்தும் புற்றுநோய்த் தூண்டிகளே.

முக்கியமாகப் பணிசூழல் அல்லது சுற்றுப்புறக் காற்றில் அல்லது கல்நார் பயன்படுத்தப்பட்ட வீடுகளில் அல்லது கட்டிடங்களின் காற்றில்  உள்ள நார்ப்பொருளை சுவாசிப்பதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. உடையும் தன்மை கொண்ட கல்நார்கள் பராமரிப்பு, மாற்றுதல், அகற்றுதல் அல்லது அழித்தலின் போது பாதிப்பைத் தொடர்ந்து அளிக்கும். பேரிடர்களின் போது கட்டிடங்கள் சிதைவடைவதாலும் பாதிப்பு ஏற்படும்.

இயறகை நிகழ்வுகளாலும் மனித செயல்பாடுகள் மூலமும் நிலத்திற்குள்ளும் நிலத்தடி நீருக்குள்ளும் கல்நார் புகலாம். கல்நார் கழிவுகளால் மண் மாசுறலாம்.

பணிச்சூழல் பாதிப்பு – கல்நார் பொதிகளை மறுபொதியிடல், பிற பொருட்களோடு கல்நாரைக் கலத்தல், வெட்டும் கருவிகளால் கல்நார்ப் பொருட்களை வெட்டுதல் ஆகியவற்றால் அதிகமான பாதிப்பு உண்டாகும். கல்நார் கொண்ட பொருட்களை பொருத்துதலும் வாகனங்களைப் பராமரித்தலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுமக்களுக்குப் பாதிப்பு: சுவசிப்பும் உள்ளெடுப்புமே  கல்நார் பாதிப்பு ஏற்படும் முக்கிய வழிகள். புகைக்காதவர்களுக்குக் கல்நார் கொண்ட வெளிப்புற  மற்றும் குறைந்த அளவு  அகக்காற்றை  சுவாசிப்பதின் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது (கல்நார் ஆலையின் பணியாளர் மற்றும் ஆலைக்கு  அருகில் வசிப்போர்). கல்நாரால் மாசுற்ற குடிநீராலும் பாதிப்பு ஏற்படலாம்.

கட்டுமான நடவடிக்கைகளாலும், கட்டிடக் கழிவை (உடைந்த கல்நார்க் கூரை ஓடு) முறையற்ற முறையில் கழிப்பதாலும் பெரும்பானமை பொதுமக்கள் கல்நார் நோயால் பாதிக்கப்படலாம்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன உராய்வுகளால் சுற்றுப்புறக் காற்றில் கல்நார்ப்பொருள் அடர்த்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கல்நார் சார் நோய் ஆபத்தைக் கூட்டும் காரணிகள்:

 • அளவு (தனிநபரைப் பாதிக்கும் கல்நார் அளவு)
 • காலம் (எவ்வளவு கலம் பாதிப்புக்குள்ளானார்)
 • கல்நாரின் வடிவம், அளவு மற்றும் வேதியல் சேர்மானம்.
 • பாதிப்பை உருவாக்கிய மூலஆதாரம்
 • புகைத்தல், முன்னரே பாதித்த நுரையீரல் நோய் போன்ற தனிநபர் ஆபத்துக் காரணிகள்

நோய்கண்டறிதல்

கீழ்க்காணும் சோதனைகளோடு முழு உடல் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது:

 • காற்றை வெளியேற்றும் திறனும் சுவாசக் கொள்ளளவும் குறைந்திருப்பதை நுரையீரல் சோதனை காட்டுகிறது.
 • சளி சோதனை: கல்நார்ப் பொருளைக் காட்டும்.
 • மார்பு எக்ஸ்-கதிர்- நுரையீரல் களத்தின் கீழ்ப்பகுதியில் மூன்றில் இரு பகுதி நில-கண்ணாடி தோற்றத்தைக் காட்டும்.
 • நுரையீரல் படலக் கசிவு, தடிமன், திரட்சியைக் கண்டறிய  கேளாஒலி பயன்படும்.
 • நுரையீரல் கணினி வரைவியல்.
 • மூச்சுக்குழல்மானி.
 • நுரையீரல் திசுஆய்வு

நோய் மேலாண்மை

கல்நார் தொடர்பான நோய்களுக்குக் குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் பரிந்துரைக்கப்படவில்லை.

புகைத்தலை நிறுத்தவும், தொடர்ந்து கல்நார் பாதிப்புக்கு உடபடாமல் இருப்பதும் அறிவுரையாகக் கூறப்படுகிறது.

நச்சுக்காய்ச்சல்  மற்றும் நிமோகாக்கல் நிமோனியா தடுப்புமருந்து, நுரையீரல் தொற்று எதிர் நுண்ணுயிர் சிகிச்சை மற்றும் உயிர்வளி பயன்பாடு ஆகியவை கல்நார்நோய் சிகிச்சையில் அடங்கும்.

நுரையீரல் மற்றும் மேல்தோல் புற்று கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆதரவுப் பராமரிப்பும்,  அறுவை, கதிர்வீச்சு மற்றும் வேதியற் சிகிச்சை அடங்கிய பன்மாதிரி சிகிச்சையும் கொண்ட பல்துறை அணுகுமுறை  புற்றுநோய் நேர்வுகளுக்குத் தேவை.

சிக்கல்கள்

கல்நார் தொடர்பான நோய் நிரலில் அடங்குவன:

 • நுரையீரல் படலத் தீங்கற்ற கசிவு -  அசாதாரணமான அளவுக்கு நுரையீரல் படலங்களுக்கு இடையில் நீர்மத் தேக்கம்.
 • நுரையீரல் படல அடைப்பு – சுண்ணாம்புப் படிவு உருவாதல்
 • நுரையீரல் படலத் தடிப்பு
 • உருண்டை சுவாசக் காற்றரை சுருக்கம் – நுரையீரல் சுருக்கம் வடுவுற்ற படல திசுக்களுக்கு அடுத்து உருவாதல்.
 • கல்நார் நோய்-நுரையீரல் திசுக்கள் வடுவுறலும் அழற்சியுறலும்.  நுரையீரல் சுருங்கி விரிவதை இது தடுக்கிறது.
 • இடைத்தோல் புற்று- நுரையீரல் மற்றும் வயிற்று உள்படலப் புற்று.
 • நுரையீரல் புற்று - நீண்ட காலத்திற்கு அதிக அளவில் கல்நார் பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு இது பொதுவாக ஏற்படுகிறது.
 • கருப்பைப்புற்று- கல்நாரால் பாதிப்படைந்த பெண்களுக்கு இப்புற்று ஏற்படுவதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
 • தொண்டைப்புற்று

தடுப்புமுறை

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாளர்கள் பணிச்சூழலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்:

 • சுவாசப் பாதிப்பு: சுவாசப் பாதுகாப்பு, தூய காற்று, ஓய்வு ஆகியவற்றால் தடுக்கலாம்.
 • தோல்: பாதுகாப்பு கையுறை, காப்பு ஆடைகள் ஆகியவற்றல் தோல் பாதிப்பைத் தடுக்கலாம். மாசடைந்த ஆடைகளை மாற்றி தோலை அதிகமான நீரால் கழுவ்வும் அல்லது குளிக்கவும்.
 • கண்கள்: காப்புக் கண்ணாடிகள் அணிந்து கண்களைப் பாதுகாப்பதோடு சுவாசப் பாதுகாப்பையும் மேற்கொள்ள வேண்டும். கண்களில் துகள் விழுந்தால் தண்ணீரால் பல நிமிடம் கழுவி (முடிந்தால் தொடுவில்லையைக் கழற்றிவிடவும்) மருத்துவ உதவியை நாடவும்.
 • உள்ளெடுப்பு: பணி நேரத்தில் உண்ணுவதையுக் குடிப்பதையும் தவிர்க்கவும். சாப்பிடும் முன் கை/வாய் கழுவவும்
 • புகைக்காதீர்
 • பருவகால பழம்/காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்.

பணித்தலத்தில் தடுப்புமுறைகள்:

 • கல்நாருக்குப் பதிலாக ஆபத்து குறைந்த பொருட்களைப் பயன்படுத்தவும்.
 • தூசித் தடுப்பு நடவடிக்கைகள்
 • பணியளர்களுக்குப் பணியிடத்தைச் சுழற்சியில் அளித்தல்
 • காற்றோட்ட வசதி
 • பணியாளர்களுக்குத் தொடர் மருத்துவ சோதனை
 • பணியாளர்களுக்குக் கல்நார் சார் நோய்கள் பற்றிய  விழிப்புணர்வும் சுகாதாரக் கல்வியும்.
 • ஆரோக்கிய வாழ்க்கை முறையை பணியாளர்களுக்கு ஊக்குவித்தல்

பின்வரும் பொதுசுக்காதார நடவடிக்கைகளை உசுநி பரிந்துரைத்துள்ளது:

 • அனைத்து வகையான கல்நாரையும் பயன்படுத்துவதை நிறுத்துவதே கல்நார் சார் நோய்களைத் தடுக்கும் சிறந்த வழி.
 • கல்நாருக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்றைப் பயன்படுத்துவதற்கான தீர்வு பற்றிய தகவலை அளித்து அதற்கான மலிவான தொழிற்நுட்பத்தை உருவாக்குதல்.
 • கல்நாரை அகற்றும் போது கல்நார் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • கல்நார் சார் நோய்களை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் சேவைகளை மேம்படுத்துதல்.
 • கடந்த காலத்தில் அல்லது தற்போது கல்நார் பாதிப்புக்கு உள்ளான/உள்ளாகும் மக்களைப் பற்றிய பதிவை உருவாக்கி பாதிக்கப்பட்ட பணியாளருக்கு மருத்துவக் கண்காணிப்பை வழங்குதல்.
 • கல்நார் கொண்ட பொருட்களோடு தொடர்புடைய ஆபத்தைப் பற்றிய தகவலை அளித்து விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் கல்நார்க் கழிவுகளை ஆபத்தான கழிவுகளாகக் கையாள வைத்தல்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.0625
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top