অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

அறிமுகம்

ஒருவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் மற்றும் உள பிரச்சினைகளுக்கு ஆளான பின்னும் தொடர்ந்து மது அருந்தி வருவதே குடிப்பழக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் குடிப்பழக்கவழக்கம் (குடிப்பது அல்ல) பிரச்சினைகளைத் தருமானால் அது தவறான மதுப்பழக்கம் என்று கூறப்படும்.

இப்பிரச்சினைகள், மது நஞ்சாதல், கல்லீரல்நோய், பணிசெய்ய இயலாமை, சமூகத்தோடு கூடிவாழ முடியாமை, தீங்கான பழக்கவழக்கம் (வன்முறை, காலித்தனம்) போன்ற பல தீமைதரும் உடல், உள, சமூகப்பொருளாதாரப் பாதிப்புகளுக்கு வழிகோலும்.

இது பாலினம் சார்ந்த (gender related) நோய் அல்ல.

நோயறிகுறிகள்

குடிப்பழக்கத்திற்கும் தவறான குடிப்பழக்க வழக்கத்திற்கும் ஆளானவர்கள்:

  • குடிபழக்கத்தால் ஏற்படும் தீமைகளை அறிந்தபின்னும் தொடர்ந்து குடிப்பார்கள்
  • தனியாகக் குடிப்பார்கள்
  • குடிப்பதைக் குறித்து கேட்டால் பகைமை பாராட்டுவார்கள்
  • குடிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது
  • குடிப்பதற்கு சமாதானம் கூறுவார்கள்
  • பணியைக், கல்வியைப் புறக்கணிப்பார்கள் அல்லது குடிப்பதால் செயல்திறன் குறையும்
  • மதுவின் காரணத்தால் செயல்பாடுகளில் பங்கேற்க மாட்டார்கள்
  • பெரும்பாலான நாட்களைக் கடத்தவே மது அருந்த வேண்டிய நிலை ஏற்படும்
  • குடிப்பதை யாராவது தடுக்க முனைந்தால் வெறியடைவார்கள்

மேலும் உடல் பிரச்சினைகளும் உருவாகும். குடிகாரர்கள் தொல்லைதரும் மனம் இருளாதல் என்னும் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படுவார்கள். கல்லீரலில் எரிச்சலும் உணவுமண்டலத்தில் அழற்சியும் ஏற்படுவதால் குடிகாரர்களால் குறைவாகவே உண்ண முடியும். இதனால் நெஞ்செரிச்சலும் குமட்டலும் உண்டாகும்.
எச்சரிக்கும் அடையாளங்கள் பேச்சுக்குழறலும் மதுநெடியும் ஆகும்.
முன்கோபம், எரிச்சல், அமைதியிழத்தல் ஆகியவை குடிகாரர்கள் குடிக்காவிடில் ஏற்படும் நோயறிகுறிகளாகும்.

நோய் கண்டறிதல்

மருத்துவர், உடல் பரிசோதனை செய்து நோயாளியின் மருத்துவ, குடும்ப வரலாறு, மதுபயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி கேட்பார்.

ஒருவர் குடிபழக்கத்துக்கு அடிமையானவரா இல்லையா என்பதைக் கண்டறியும் சோதனைகள்:

  • இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவு
  • முழு இரத்த எண்ணிக்கை
  • கல்லீரல் செயல்பாடு சோதனை
  • மக்னீசியம் இரத்த சோதனை

நோய் மேலாண்மை

ஒருவர் எந்த அளவுக்குக் குடிக்கிறார் என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்க முடியும். மேலும் செய்யக்கூடிய மருத்துவம் வருமாறு:

  • குடியை நிறுத்த வைத்தல் –– ஒருவர் பாதுகாப்பான முறையில் குடியை நிறுத்த மருத்துவரோ அல்லது மருத்துவப் பணியாளரோ உதவிசெய்தல். மருந்துகளின் மூலமாகவோ அல்லது படிப்படியாகவோ சிறிது சிறிதாக மதுவின் அளவைக் குறைக்க உதவுதல். இதன் மூலம் குடியை விடும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறைக்கப்படும்.
  • ஆலோசனை –– இதில் சுய உதவிக் குழுக்களும் புலனுணர்வுசார் நடத்தை சிகிச்சை (cognitive behavioral therapy (CBT) போன்ற முறைகளும் இடம்பெறும்.
  • மருந்து –– ஒருவர் குடியை விட இரண்டு முக்கிய வகையான மருந்துகள் உண்டு. முதலாவது, குடியை விடும்போது எழும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக. இது குறைந்த காலத்திற்கு படிப்படியாக அளவு குறைக்கப்பட்டு கொடுக்கப்படும்.

இம்முறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்து குளோடியாசாப்பாக்சைட் (லிப்ரியம்) [chlodiazapoxide (Librium)]. இரண்டாவது மருந்து குடிக்க வேண்டிய உந்துதலைத் தடுப்பதாகும். இதற்குப் பரவலாக பயன்படுத்தப் படுவது அகேம்ப்ரோசேட்டும் (acamprosate) நல்டிரக்சோனும் (naltrexone) ஆகும். இவை குறிப்பிட்ட அளவில் பொதுவாக 6-12 மாதங்களுக்குத் தரப்படும்.

கேள்வி பதில்கள்

மது, போதை போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்?

  • கண்கள் சிவப்பாதல்: கடைகளில் வாங்கி அடிக்கடி சொட்டுமருந்துகளைப் பயன்படுத்துவதால் அதிகமாகக் களைப்படைவது போன்ற உடல்நலப் பிரச்சினைகளை இளைஞர்கள் அடிக்கடி கூறுவர்.
  • கல்வியில் ஆர்வம் இனமையைக் காணலாம். இதனால் மதிப்பெண்கள் குறையும்.
  • வேதிப்பொருட்கள் தோய்ந்த கந்தல் அல்லது காகிதம்: போதைப் பொருள் ஆவி உள்ளெடுப்பதற்கு ஆதாரம்.
  • ஆடையில், கைகளில், முகத்தில் உள்ள கறைகள்

மதுவினால் இளைஞர்களுக்கு ஏற்படும் குறுகிய கால பக்க விளைவுகள் எவை?

  • ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் மந்த செயல்பாடு
  • மன ஒருமை குறைவு
  • குமட்டலும் வாந்தியும்
  • உடல் சிவந்து தோன்றுதல்
  • கண் மயங்கலும் பேச்சு குழறலும்
  • கடுமையான மனநிலை: உ-ம்: முரட்டுத்தனம், வெறி, மனவழுத்தம்
  • தலைவலி
  • மன இருள்

தொடர்ந்து நீண்டநாள் மதுவைப் பருகிவருவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் எவை?

  • நீண்ட நாள் மது அருந்தி வருவதால் கல்லீரல் இழைநார், புற்றுநோய்கள் [(குறிப்பாக வாய், தொண்டை, குரல் வளை, இரைப்பை, குடல் (ஆண்கள்) மார்பகம் (பெண்கள்)] உண்டாகின்றன.
  • மாரடைப்பு, இரத்த அழுத்தம் உட்பட பல இதய, இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
  • மதுவை சார்ந்திருத்தல்
  • கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் சமயத்திலும் மது எடுப்பதால் குழந்தை பாதிக்கப்படுகிறது.
  • தோல் பிரச்சினைகள்
  • பாலியல் பலவீனம், கருவுறுதல் ஆகிய இனப்பெருக்க செயல்பாடுகளில் பிரச்சினைகள்.
  • மன ஒருமைப்பாடு, ஞாபகப் பிரச்சினைகள்
  • மனவழுத்தம்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/26/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate